சனாதன தர்மம் / ஹிந்து மதம்

சனாதன தர்மம் என்றால் மாறாதது நிலையானதுமான தர்மம் எனப் பொருள்,  இதன் பொருள் ஆழமானது.

இது பற்றிய கொஞ்சம் ஆழமான புரிதல் அவசியம், இது பற்றி தெரிய ஸ்ருதி ஸ்மிருதி எனும் இரு தத்துவங்களுக்கான புரிதலும் அவசியம்.

ஸ்ருதி என்பது மாறாதது; ஸ்ம்ருதி என்பது மாற கூடியது. அதாவது காலத்துக்கும் மாறாதது ஸ்ருதி, காலம்தோறும் மாறிவருவது ஸ்ம்ருதி.

இந்த பிரபஞ்சமும்,  பூமி ,  சூரியன்,  மழை, வெயில்,  உயிர்கள்,  மரம் செடிகொடிகள்,  மானிட உடல், வாழ்வு, வாழ்வின் தேவைகள் ஒருகாலமும் மாறாதவை. இவை ஆதாரம் எனும் ஸ்ருதி.

நாடுகளின் எல்லைகள், மக்களின் வாழ்க்கைமுறை, அவ்வப்போது வரும் சிந்தனை மாற்றம், அதற்கேற்ற சட்டதிட்டமெல்லாம் ஸ்ம்ருதிகள்

ஒரு காலத்தில் மன்னராட்சி பின் மக்களாட்சி என காலம் காலமாக மாறிவரும்போது அதற்கேற்ற சட்டங்கள் விதிகள் மாறும் அது ஸ்ம்ருதி.

ஆனால் இந்த பிரபஞ்சத்துக்கான சில விதிகள் மாறாது அதுதான் ஸ்ருதி.

இப்படி மாறக் கூடியவை மாறாதவை எல்லாம் கலந்து சில விஷயங்கள் மாறும். பிரபஞ்ச விதிகள் மாறாது என தொகுத்து வழங்கப்பட்ட வழிமுறைதான், தர்மம்தான் சனாதான தர்மம்.  தர்மம் என்றால் வாழும் முறை மானிடன் பின்பற்ற வேண்டிய முறை எனப் பொருள்.

அது பிரபஞ்ச இயக்கம் முதல் மானிட வாழ்வியல் வரை கவனித்துப் பார்த்து எதெல்லாம் நிலையானது என்பதை அறிந்து எதெல்லாம் மாறும் என்பதையும் அறிந்து விதிகளை வகுத்தத.

மொத்தமாக இதெல்லாம் எக்காலமும் உண்டு எனச் சொல்லி அது மானிடருக்கு கொடுத்தது,  இந்து ஞானியர் அதை தொகுத்துத் தந்தார்கள்.

இது இன்னும் புரியாவிட்டால் இப்படி சொல்லலாம்.

கீதையின் போதனை நான்வகை வர்ணம் நானே படைத்தேன் என்பது, அதற்காக நான்கு சாதிகளே எப்போதும் இருக்கும், சாதியினை பின்பற்றி தீரவேண்டும் என்பதல்ல விஷயம்.

சிந்திப்போர்,  வியாபாரிகள்,  போர் வீரர்கள், உழைக்கும் மக்கள் என நான்வகை மக்கள் மானிடம் உள்ள காலம் வரை இருப்பார்கள். அது மாறாது.  இந்த நான்வகை தொழிலில் எது ஒருவருக்கு சிறப்பாக வருமோ அவர் அந்தப் பிரிவில் சேர்ந்து கொள்ளலாம். அது மாறும் என்றது சனாதன தர்மம்.

ஆணும் பெண்ணுமாக மானிடர் வருவார்கள்; பின் அவர்கள் கலந்து சந்ததி வளர்ப்பார்கள். அது மாறாது. ஆனால் அந்த வாழ்க்கைக்கான வசதிகள் மாறலாம் என்றது சனாதன தர்மம்.

மானுடன் சிந்திக்க தெரிந்தவன்; அவன் வசதியாக வாழ பல வழிகளில் மாறுவான், வாழ்க்கை தேவைகளுக்கு ஏற்ப அவன் வாழ்வு மாறும். ஆனால், அவனால் மீறமுடியாதது மாற்ற முடியாதது அவன் ஆயுள், அவன் இறப்பு, அவன் வயது என்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவானது. அது மாறாதது என்பதும் சனாதன தர்மம்.

அது மானிடனின் மனதைக் கூர்ந்து படித்தது, காலம் தோறும் அவன் சிந்தை எப்படியெல்லாம் மாறும் என்பதை கவனித்து மானுடம் மானுடனாக வாழ, அவன் நிம்மதியிலும் அன்பிலும் வாழ, அப்படியே வாழ்ந்து அவன் ஆன்மா இறைபதம் அடைய அது வழிகாட்டியது.

அந்த வழியால் அவனும் நல்லபடியாக வாழ்ந்தான்,  இந்த சமூகமும் நல்லபடியாக வாழ்ந்தது.

அது இந்த தேசம் முழுக்க வாழும் தர்மத்தை போதித்தது, எதனை பின்பற்றினால் ஒரு சமூகம் நிம்மதியாக வாழமுடியும் என்பதைச் சொன்னது.

பிரபஞ்ச ரகசியங்களை வேதமாகச் சொன்னது,  அந்த வேத தத்துவங்களை இதிகாசம், புராணம் எனச் சொல்லித் தந்தது.

பெரும் பெரும் தத்துவங்களை மானிடரின் வாழ்வியலோடு கலந்து அவர்களை நலமாக வளமாக வாழசெய்தது.

அந்த வாழ்வில்தான் அந்த சனாதனம் கொடுத்த வாழ்வில்தான் இந்த இந்துஸ்தானம் உலக நாடுகளிலே தனி முத்திரை பதித்த நாடாக இருந்தது.

இந்த வாழ்க்கைமுறை அதிசயமானது, அது தான தர்மங்களை ஊக்குவிப்பது, சமூகத்தை அன்பிலும் சகோதரத்திலும் கொண்டு செல்வது.

அது பெண்களை தனி இடத்தில் வைத்துக் கொண்டாடியது.  பெண்ணே வாழ்வின் அடிப்படை தத்துவம். அவளாலேயே எல்லாம் படைக்கப்படும் என வழிகாட்டி அவளை தெய்வ ஸ்தானத்துக்கு வைத்தது.

ஆறுகளை கொண்டாடியது, பசுக்களை கொண்டாடியது, பிரபஞ்ச சக்திகளை மானுடன் எப்படி பெறுவது என்பதை சொல்லிக் கொடுத்தது.

நோய் தீர்க்கும் வழிகளை, பணம் வரும் வழிகளை போதித்தது.  ஆனால் வரும் பணம் எப்படி எல்லோரையும் வாழ வைக்க வேண்டும் என்பதையும் சொன்னது.

காலையில் எழுந்து எப்படி நாளை தொடங்க வேண்டும் என்பது முதல் எப்படி உண்ண வேண்டும், உறங்க வேண்டும்,  விரதமிருக்க வேண்டும் என போதித்த தர்மம் அது.

கல்வி, குடும்பம், சமூகம், அரசன், வரி, படை, போர், பக்தி என எல்லாவற்றுக்கும் இலக்கணம் வகுத்த மதம் அது.

இதனாலேயே ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற்றான்,  நலம் பெற்றான், சமூகம் சிறந்தது, இந்துஸ்தானம் பெரும் இடத்தைப் பெற்றது.

அதன் ஆரோக்கிய போதனையால் மக்கள் தொகை செழித்தது, அதன் சமூக போதனையால் இங்கு அக்காலத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை.

தெய்வத்தின் போதனையால் அது அன்னதானம், பசிபோக்குதல், உடைதானம் எனச் சொல்லி எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கும்படி பார்த்தது.

தெய்வத்துக்கு கோவில், தெய்வத்துக்கு தேர்,  தெய்வத்துக்கு விளைச்சல், தெய்வத்துக்கு கலை என மக்களை கூர் தீட்டி, அவர்கள் சிந்தனையினை வளர வைத்து அது நாடெங்கும் கலைகளாக, செல்வமாக, போர் வெற்றிகளாக கொண்டாட வைத்த மதம் அது.

சனாதான தர்மமே இந்துஸ்தானத்தை கல்வி,  செல்வம்,  அறிவு என எல்லாவற்றிலும் உலகின் உன்னத நாடாக மாற்றியது.

எந்த சனாதனவாதியும், எந்த இந்துவும், இந்த நாட்டைவிட்டு வெளியே செல்ல அவசியமில்லாதபடி அது எல்லோருக்கும் எல்லாம் கொடுத்தது.

மற்ற நாடுகள்தான் தேடித் தேடி வந்தார்கள்.

யுவான் சுவாங் போன்றோர் கல்வி தேடி வந்தார்கள், அலெக்ஸாண்டர் போன்றோர் படையோடு வந்தார்கள்,  இயன்றவரை போராடித் தோற்று திரும்பி இந்துஸ்தானம் கிரேக்கரை விட பெரும் கல்வி, ஞானம், ஆன்மீகம், அறிவு கொண்ட நாடு; சனாதான தர்மம் அதை அவர்களுக்கு கொடுத்தது என சொல்லித் திரும்பிச் சென்று அந்த வேதனையில் செத்தே போனான் அலெக்ஸாண்டர்.

அவனுக்கு பின் ஆளாளுக்கு புக முயன்றார்கள் முடியவில்லை.

ஆனால் இந்து சனாதானம் பற்றி அடிப்படை அறிவில்லாதவனும், இந்த தர்மம் குலைந்தால் என்னாகும்,  கீதையின் போதனை இல்லாவிட்டால் வேதம் இல்லாவிட்டால் என்னாகும் எனத் தெரியாத புத்தன் இந்நாட்டை குழப்பினான்.

வேதமும், சனாதான தர்மமும் இல்லா அன்பான உலகம் சாத்தியம், போர் தேவையில்லை எனக் குழப்பினான்.

மானுடன் ஒரு பிராணி அவன் கஷ்டபட்டு வாழ்வதுதான் முறை, எல்லா விலங்கும் இங்கே போராடி சில விஷயங்களை அடைவது போல அறிவோ, ஆரோக்கியமோ, காவலோ பெற அவன் போராட வேண்டும்,  அப்படி சனாதனம் பக்தி என பல விஷயங்களை போதித்தது.

அந்த போதனை அவசியமில்லை என எளிதான வழிகாட்டி மக்களை குழப்பினான் அவன் குழப்பலில் தேசம் குலைந்தது.

இந்த பலவீனத்தில்தான் ஆப்கானியர் பாய்ந்தனர்,  அவர்கள் மூர்க்கமாக தந்திரமாக பாய ஒரே காரணம் அவர்கள் பவுத்தர்கள் அல்ல‌.

அசோக மன்னன் பவுத்தத்தில் வீழ்ந்ததே தேசம் சீர்கெட்டு போக வழி

பின் ஆளாளுக்கு வந்து அடித்தார்கள்,  அவர்கள் சரியாகத்தான் இருந்தார்கள். சனாதான தர்மம் ஒன்றுதான் இந்நாட்டை வாழ வைக்கின்றது என்பதில் சரியாக இருந்தார்கள்.

முதலில் பசுமாட்டில் பால்கறப்பது போல தேன் கூட்டில் தேன் எடுப்பது போலத்தான் ஆண்டார்கள், சனாதானம் அழிந்துவிட்டால் இங்கே சுரண்ட ஒன்றுமில்லை அது வீழ வீழ எழும் தன்மை கொண்ட சமூகம் என்பதை உணர்ந்து சுரண்டிகொண்டு இங்கே வாழ்ந்தார்கள்

தாஜ்மஹால் , மயிலாசனம் எல்லாம் உருவானது என்றால் அது ஆப்கானிஸ்தானின் தர்மம் கொடுத்த செல்வமல்ல, இந்த சனாதான தர்ம பூமி கொடுத்த பெரும் செல்வம்

ஆனால் அவுரங்கசீப் போன்றோர் அதை உணர தவறியபோது சிவாஜி போன்றோர் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியவைத்தார்கள்

ஒரு மலைவாசி சிறுவனான வீரசிவாஜி மாபெரும் சாம்ராஜ்யத்தை சனாதான தர்மம் ஒன்றாலே கட்டி எழுப்பினான் அதன் சக்தியினை காட்டினான்

அவனே சனாதான தர்மம் எத்தைய வாழ்வியல் நெறி அதனால் எவ்வளவு பெரும் சாதனைகளை செய்யமுடியும் என காட்டினான்

அவன் சித்தாந்தம் கொடுத்த எழுச்சியிலே மொகலாயம் முடிந்தது ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி வந்தது

பிரிட்டிசாரும் இந்நாடு செல்வத்தில் மிதக்க இந்து சனாதான தர்மமே பெரும் காரணம் என்பதை அறிந்து அதனை ரகசியமாக கண்காணித்தார்கள், அதில் கைவைத்தால் நாம் அழிவோம் என்பதை தெரிந்தே இருந்தார்கள்

இந்நாட்டின் சக்தி அப்படி

எனினும் விடைபெறும் காலத்தில் அஞ்சினார்கள், இவர்களை விட்டுசென்றால் சின்னஞ்சிறிய தீவான பிரிட்டனை தேடி வந்து தாக்குவார்கள் என அஞ்சி இரண்டாக பிரித்து போட்டு சென்றான்

இங்கேதான் இந்த காலத்துக்கு பின்புதான் தான் யாரென சனாதான தர்மம் காட்டிற்று

இந்துக்கள் ஆண்டவரை உலகின் உன்னதமான தேசமான இத்தேசம் அன்னியர் ஆட்சியில் தரித்திரமானது

மீண்டும் இந்துக்கள் ஆளவந்தபோது மறுபடியும் இதோ எழுந்து நிற்கின்றது, இதுதான் சனாதன தர்ம வெற்றி

ஆம் வெறும் 75 ஆண்டுகளிலே அந்த தர்மம் இன்று பாரதத்தை உலகின் ஐந்தாம் பொருளாதார பலமான நாடாக, உலகின் 4நான்காம் சக்திமிக்க நாடாக நிறுத்தியிருக்கின்றது

எப்படி இது சாத்தியம்? பாகிஸ்தானும் வங்கதேசமும் இந்திய மண்ணாக இருந்தும் இந்தியா மட்டும் எப்படி சாதித்தது என்றால் அதுதான் சனாதான தர்மம்

இந்தியரின் வாழ்க்கை முறை அப்படியானது அது தன்னையும் நலமாகவும் பலமாகவும் வாழவைத்து சமூகத்தையும் பலமாக வாழவைக்கும் ஒரு உன்னத வாழ்க்கை முறை

அதன் ஆன்மீகமும் அந்த மதத்தின் சமூகவியலும் வாழ்க்கைமுறையும் அப்படி ஞானமாக வடிவமைக்கபட்டிருகின்றது

காலத்துக்கும் பொருந்தும் வழிகளை அது போதித்தது, எது மாறாதது எது மாறும் என்பதை சொல்லி மானிடர் வாழ்வுக்கு நல்வழி காட்டிற்று

இதனாலே இந்தியா இன்று உலகின் மகா முக்கிய நாடாக மாறி நிற்கின்றது

உலகில் எங்கும் காணமுடிய தர்மம் இது, அழகான உன்னதமான வாழ்க்கை முறை இது

இதனை உதயநிதியார்க்கு புரியும்படி, அந்த இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் எளிதாக சொல்லலாம்

இந்து அறநிலையதுறையின் பிடியில் இருந்து ஆலயங்களை இந்துக்களிடம் ஒப்படையுங்கள் போதும்

இந்த காலைநேர உணவுதிட்டம், மதிய உணவு, கல்வி பணி உள்ளிட்ட எல்லாவற்றையும் இந்து ஆலயங்களே பார்த்துகொள்ளும்

அந்த டெப்பாசிட் செய்யபட்ட தங்கத்தை கொடுத்துவிட்டால் போதும் அதன் வட்டியிலே ஊரெல்லாம் சாலைகள், மின்வசதி பொதுவிட வசதியெல்லாம் செய்வார்கள்

அதுதான் அக்காலத்திலே நடந்தது

தெய்வத்தின் பெயரால் மக்கள் வறுமையின்றி, பசியின்றி வாழவும் எல்லோரும் எல்லாமும் பெறவும் வழிசெய்தமதம் அது

பக்தியின் பெயரால் எல்லோரையும் வாழவைத்த அதன் பெருமை டாஸ்மாக் சரக்கு வருமானத்தில் குழந்தைகளுக்கு உணவிட கிளம்பும் பலருக்கு தெரியாது அல்லது புரியாது

இந்துமதம் வாழ வாழ தேசம் வாழும், அப்படித்தான் அந்த காலத்தில் தெய்வத்தை முன்னிறுத்தி இந்த தேசம் வாழ்வாங்கு வாழ்ந்தது

அதன் அடையாளம்தான் கோவிலாக , ஞான நூல்களாக , வேதங்களாக எஞ்சி நிறிகின்றது

சனாதான தர்மம் ஏன் வாழவேண்டும், அதனை அதன் போக்கில் வாழவிட்டால் என்னாகும் என்பதற்கு அந்த இந்து ஆலயங்களை இந்துக்களிடம் கொடுத்துவிடுங்கள் போதும்

கொஞ்ச நாளிலே தமிழக அரசின் கடன்களை அது அடைத்துகாட்டும், பிச்சைக்காரர்களை ஒழித்துகாட்டும், மாகாணத்தை மாபெரும் இடத்துக்கு உயர்த்திகாட்டும்

60 வருடமாக திராவிடம் தோற்றுவிட்டதல்லவா? ஒரு 10 வருடம் இந்து ஆலயங்களை இந்துக்களிடம் கொடுத்துபாருங்கள், அந்த வாழ்வியலை பின்பற்ற விட்டுபாருங்கள்

அப்போதுதான் தெரியும் சனாதான தர்மம் ஏன் அவசியம் என்பது

இங்கு கோவில்கள்தான் வழிகாட்டின, கோவில்கள்தா ன்மக்களை சனாதான தர்ம வழியில் இயக்கிகாட்டின, அந்த வாழ்வியலில்தான் இது பொன்குவியும் தேசமாய் இருந்தது

அன்று இலவச அரிசி இல்லை, இலவச உணவு என அரசு இல்லை, சமபந்தி என எதுவும் அரசு செய்யவில்லை, எல்லாமே இந்து ஆலயங்களே செய்தன‌

அது பசிபோக்கியது, அது குடியிருக்க நிலம் கொடுத்தது, அது உழைக்க வழி சொன்னது, வழிபோக்கனும் இலவசமாக தங்கி செல்ல சத்திரம் தந்தது

இந்துமதம் என்பது தெய்வத்தின் பெயரால் சமத்துவம் சொன்ன மதம் , அது சமூக நீதியினை என்றோ காட்டியமதம்

உலக மதங்களிலே அடிமைமுறை இல்லா சமத்துவமதம் அதுதான், வேறு எந்த மதத்தை உங்களால் காட்டமுடியும்?

இன்றும் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா மேல்நாடுகளுக்கும் எல்லா நாட்டு மக்களும் செல்கின்றார்கள் ஆனால் சனாதனதர்ம வழி இந்துக்கள் மட்டும் தொழில் நிறுவணம், அரசியல், விஞ்ஞானம் என எல்லா துறையிலும் மேல்நாட்டில் முத்திரை பதிக்கின்றார்களே எப்படி?

இந்துக்கள் வாழும் இடத்தில் மட்டும் அமைதி நிலவுகின்றது என அமெரிக்க அரசியல் வாதிகளும் ஐரோப்பிய அரசியல்வாதிகளும் சொல்கின்றார்களே அதன் பொருள் என்ன?

நல்ல இந்துவுக்கு வெறுக்க தெரியாது, பழிக்க தெரியாது, அன்பு ஒன்றே அம்மதத்தின் ஆதாரம், தெய்வத்தின் பெயரால் உழைத்து ஊருக்கே கொடுட்துவிட்டு செல்பவன் பெயரே இந்து

எல்லா ஆட்சிமுறையும் வாழ்க்கை முறையும் பரிசீலித்துபார்த்து உலகம் நொந்து கிடக்கின்றது, மேற்கு மதவாதிகள் ஆட்சி சரியில்லை, மன்னராட்சி சரியில்லை, கம்யூனிசமும் சரியில்லை, ஏகாதிபத்ய முதலாளித்துவ வாழ்க்கையும் சரியில்லை,பவுத்தமும் வறுமையே கொடுக்கின்றது என ஒவ்வொரு வாழ்க்கை முறையினையும் பரிசீலித்து தோற்ற உலகம் இந்துமததை நோக்கி புன்னகைக்கின்றது

நல்ல வாழ்வும், அமைதியும்,நிம்மதியும், உண்மையான சமூக நோக்கும், அன்பும் , மானிட பண்பும் கொண்ட மதம் இந்துமதம் அவர்கள் த்ர்மமே வாழ்வியலுக்கு உகந்த தர்மம் என ஏற்றுகொள்கின்றார்கள்

ஐரோப்பா வேகமாக சனாதான தர்மம் பக்கம் சாயவும் அமெரிக்காவில் இந்துமதம் வேகமாக நிலைக்கவும் இதுதான் காரணம்

வாழும்முறை ஆட்சி முறைகளில் சிறந்தது சனாதான தர்மம் என ஓடிவந்து நிற்கின்றார்கள்

தமிழக திராவிட சிந்தனையாளர்களே

ஊழல் இல்லா சமூகத்தை உங்களால் படைக்கமுடியாது, தெய்வத்தின் பெயரால் சனாதான தர்மம் அதை செய்யும்

ஏழை வறுமை, செல்வம் என்பது எக்காலமு உள்ள விதி அதை மாற்ற்முடியாது, காலம் உள்ள காலம் வறை ஒரு பக்கம் வறுமையும் ஒருபக்கம் செழுமையும் இருக்கும் இது மானிட விதி

இதனை மாற்றுவேன் என கிளம்பிய புத்தன் முதல் மார்க்ஸ் லெனின் வரை தோற்றார்களே தவிர வென்றவர்களே இல்லை

கருணாநிதியின் பிச்சைக்காரர் ஒழிப்பே தோற்றுபோன ஒன்றுதான், அதுதான் மானுடம்

இதையெல்லாம் உங்களால் ஒரு காலமும் ஒழிக்கமுடியாது, சனாதான தர்மம் ஒன்றுதான் அதை ஒழித்துகாட்டும் அதன் ஞானம் அப்படி, மானிட அறிவினை விட பெரும் தெய்வீக ஞானத்தால் உருவான தர்மம் அதை செய்யும

சமத்துவம், சமூகநீதி, ஏற்றதாழ்வினை போக்கும் சக்தி சனாதான தர்மத்துக்கு மட்டும்தான் உண்டு

ஒரு வாதத்துக்கு கேட்கின்றொம், இதெல்லாம் அரசால் ஒழிக்க கூடியது என்றால் ஏன் சுல்தானாலும், பிரிட்டிசாரார்லும், காங்கிரஸாலும் , திமுகவினராலும் முடியவில்லை?

பதில் உண்டா? யாரிடமுமில்லை மர்க்கஸும் லெனினும் ரஷ்ய ஸ்டாலினுமே தோற்று ஓடிய விஷயம் இது, மானிட சக்திக்கு அப்பாற்பட்டது

ஒன்றைமட்டும் சொல்லிகொள்கின்றோம்

சுவாமி விவேகானந்தர் ஐரோப்பிய மதமாற்றிகளை பற்றி சொன்னதை சொல்கின்றோம்

“ஓ ஐரோப்பியரே, ஆயிரம் கைகள் கொண்ட ராவணாலும் அசைக்கமுடியா கயிலாயத்தை நீர் அசைத்து பார்ப்பீரோ, அண்டவெளி எங்கும் ஆண்ட அசுரராலும் பெறமுடியா வெற்றியினை நீர் பெறுவீரோ, பெறறாலும் நிலைப்பிரோ

ஒரு காலமும் நடக்காது”

அதேதான், ஆனானபட்ட புத்தன் , சமணர், கிரேக்கர், ஆப்கானியர், ஐரோப்பியர் என யார் யாரோ வந்து கொஞ்சமும் தொட்டுபார்க்கமுடியாமல் தோற்றோடிய இடத்தில் , மாபெரும் சக்கரவர்த்திகளும் சக்திமிக்க சுல்தான்களுமே வெல்லமுடியா இந்த சனாதன தர்மத்தை , தேர்தல் தோறும்வாக்கு பிச்சை கேட்டு தெருதெருவாய் அலையும் ஒரு கூட்டம் அசைக்கமுடியும் என கருதினால்

அது கடல் நீரை சிப்பியில் அள்ளி கிணற்றிலிட்டு கட்லை வற்றவைக்கும் முயற்சியன்றி வேறல்ல,

அந்த முழு பைத்தியகாரதனமான கோமாளிதனத்தை தொடர்வதாக இருந்தால் கடைசியில் தோற்றோடி வரலாற்றின் எதிர்கால பக்கங்களில் மிக மிக மோசமான பக்கத்தை பதிவு செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதே அர்த்தம்

ஆக தமிழக ஆளும் அரசியல்வாதிகளே சனாதானம் என்றால் என்ன என கேளுங்கள் சொல்லி தருகின்றோம்

அதை செயல்முறை விளக்கமாக காட்டவேண்டும் என்றால் , சனாதான தர்மம் என்பது மானிடனை வாழ்வாங்கு வாழவைக்கும் சூட்சுமம், என்பதை

புரியாவிட்டால் இந்து ஆலயங்களில் இருந்து வெளியேறிக் காட்டுங்கள்.

இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, நகைகளை எல்லாம் கொடுத்துவிட்டு அதன் சொத்துக்களயெல்லாம் சனாதனவாதிகளிடம் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள்

சனாதானம் என்றால் என்ன என்பதை, இந்துக்களின் வாழ்வியல் எவ்வளவு உயர்ந்தது? எவ்வளவு சமூகநோக்கு கொண்டது என்பதை இந்த பக்தி மிகுந்த சனாதான தர்ம இந்த சமூகம் காட்டும்,

உங்கள் போலி கொள்கையும் ஏமாற்று அரசியலும் செய்யமுடியாதை நொடியில் அது செய்துகாட்டும், எல்லோரையும் அது வாழவைக்கும்

அது உங்களையும் மன்னித்து வாழவைக்கும் இது சத்தியம்.