நாதுராம் கோட்சே
//ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா?
5 கோடி இஸ்லாமியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை//
———————————-
அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது
பஞ்சாபிய எல்லையும் வங்க எல்லையும் கோரமாக எரிந்தது, எரிந்தது என்பதை விட இந்துக்கள் எரிந்தனர் அவர்கள் சொத்துக்கள் எரிந்தது, இந்து பெண்களெல்லாம் கற்பிழந்து சாவை பெற்றுகொண்டும் ஓடிகொண்டுமிருந்தனர்
தனக்கு அள்ள அள்ள செல்வத்தை வழங்கிய இந்தியா தன் கையினை விட்டு போகும் வெறுப்பில் பிரிட்டிசார் செய்த சதி அது
நிச்சயம் இரு நாடுகளும் பிரிந்து ஒரு அரசு உருவாவது வரை ஆட்சியில் இருந்த பிரிட்டிஷாஏ அமைதிக்கு பொறுப்பு, ஆனால் ஆளவந்த நரிகள் இங்கு கலவரத்தை உருவாக்கிவிட்டு ரசித்து கொண்டே கப்பல் ஏறினார்கள்
தேசம் அழுது கொண்டிருந்தது, ஒரு முனைகளில் ரத்த ஆற்றில் எறிந்துகொண்டிருந்தது, ஒருபக்கம் இந்திய பிரிவினைகளின் சோக நினைவுகளில் மூழ்கி கிடந்தது
எப்படி பிரிந்தது தேசம்?
1906ல் கல்கத்தா பக்கம் ஒரு நவாப் முஸ்லீம் கட்சியினை தொடங்கி இஸ்லாமியர் நலம் காக்க போகின்றேன் என்றார், ஒரு அரசனே கட்சி தொடங்கிய விசித்திரம் அப்பொழுதுதான் நடந்தது
இதற்கு அடுத்துத்தான் இந்து மகா சபை உருவானது
இந்துமகா சபை இத்தேசத்தை பிரிய சொல்லவில்லை, இங்கு எல்லோரும் வாழலாம் அவரவர் மதம் பின்பற்றி அமைதியாக வாழலாம் என்றுதான் சொன்னது
ஆனால் 1940களில் ஜின்னாவின் பிடிவாதம் அதிகமானது, அதை ரசித்து மவுனமாக ஊக்குவித்தான் பிரிட்டிஷ்காரன் . காந்தி ஜின்னா விஷயத்தில் மிகவும் அடக்கி வாசித்தார்
சாதி ஒழிப்பு இன்னும் பல விஷயங்களை ஒழித்த காந்தி, பிரிவினை ஒழிப்பு என வாயே திறக்கவில்லை, அது ஏன் என்பது தெரியவில்லை
ஒரு கட்டத்தில் இஸ்லாமியருக்கு தனிநாடு எனும் மனநிலைக்கு காந்தி வந்திருந்தார். அவர் என்ன வருவது? பிரிட்டிசார் முடிவினை அவர் ஏற்கும் நிர்பந்தம் இருந்தது
இந்திய சுதந்திரத்தின் நாட்கள் நெருங்கின
காந்தியினை மீறி அல்லது கொஞ்சமும் மதிக்காமல் நேரடி நடவடிக்கை என ஜின்னா 1945களில் இந்தியாவினை எரிய வைத்தார், நாடெங்கும் கலவரமும் கொள்ளைகளும் பெருகின. இந்துக்கள் நிலை மோசமானது
காந்தி அப்பொழுது பெரிய எதிர்வினை ஆற்றவில்லை, அவரின் மிக மோசமான செயலான இளம்பெண்களுடன் பிரம்மசரிய ஆராய்ச்சி எல்லாம் அப்பொழுதுதான் நடந்தது
அவரின் தனிபட்ட விஷயம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் தேசம் எரிய ஆரம்பித்த காலங்களில் தேசம் நம்பிய ஒரு தலைவன் பெரிதும் எதிர்வினை ஆற்றவில்லை
ஆம் 1945க்கும் 1947க்கு இடையேயான காலங்கள் பதற்றம் மிகுந்தவை. தேசம் பிரிய கூடாது என ஒரு கூட்டம் மன்றாடியது
ஒரு கூட்டம் இது சமயசார்பற்ற தேசமாக இருக்கட்டும் பிரிவினை வேண்டாம் என கதறியது
ஜின்னாவே ஆங்கிலேயன் வரும் முன் இங்கு மத கலவரம் உண்டா? சாதி கலவரம் உண்டா? அரச சண்டை உண்டே தவிர மக்கள் சண்டை எங்கே இருந்தது என கதறியது
ஜின்னாவிடம் பதில் இல்லை
பலுசிஸ்தானில் இருந்து கான் அப்துல் கபார்கான் கதறினார், ஜின்னா எனும் ஓநாயிடம் எங்களை விட்டுவிடாதீர்கள் காந்தி என எல்லை காந்தி அழுது கொண்டிருந்தான்
காந்தி யாருக்கும் பதில் சொல்லவில்லை
எப்படியோ அகில இந்திய அடையாளமாக பிரிட்டிஷார் அங்கீகரித்த பிரதிநியான காந்தியின் அமைதி இந்தியர்களுக்கு பேரதிர்ச்சி
பட்டேல் போன்றோருக்கு காந்தியின் அமைதி கோபத்தை ஏற்படுத்தினாலும் அன்றைய இந்தியாவில் காந்தியினை தவிர அகில இந்திய அடையாளமில்ல்லை, நேரு அடுத்த இடத்தில் இருந்தார்
தேசம் அதிர்ந்து நின்றது, காந்தி பிரிட்டிசாரால் உருவாக்கபட்ட பிம்பம் என்பது அப்பொழுதுதான் பட்டவர்த்னமாக தெரிந்தது
ஏன் பகத்சிங் முதல் வ.உசி வரை காந்தி கைவிட்டார், நேதாஜியினை ஏன் விரட்டினார் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது
காந்தியின் அஹிம்சைக்கு பின் பிரிட்டிசார் அசிங்கமாக சிரித்தது மாயமாக தெரிந்தது, காந்தியின் ராம் ராம் வார்த்தைக்கு பின் இருந்த பசப்புதனமும் இந்நாடு இந்துத்வாவினை இழந்து நாசமாக போகட்டும் என்ற வன்மம் இருப்பதும் தெரிந்தது
ராம் ராம் என்றவர் ராமன் நாட்டுக்கு எதிராய் இருந்தது ஏன்? மதமாற்ற வந்தவர்களுக்கு ஆதரவாக பேசி கொண்டிருந்தது ஏன்?
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, ஆனால் இந்தியா ஐரோப்பிய பாணி நாடாக இருக்கலாம் என்பது காந்தியின் விருப்பம் என்பதை சமூகம் உணர்ந்து தேசம் அதிர்ச்சியில் உறைந்தது
இவரையா நம்பினோம், இந்த மனிதரையா கொண்டாடினோம் என இந்தியர் மனம் உடைந்து அழுத காலம் அது
பிரிட்டிசாரை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் எங்கே? பிரிட்டிசார் சொன்னபடி ஆட்டம் போடும் காந்தி எங்கே? என கதறிகொண்டிருந்தது இந்தியர் மனம்
1947 நெருங்கிற்று, ரத்த ஆறும் கடும் நெருப்பும் எல்லையில் பெரிதாக தொடங்கின, இந்து பெண்கள் கற்பிழந்து கதறி கொண்டிருந்தனர்
காந்தி அப்பொழுதும் ஆட்டுபாலும் ஆராய்ச்சியும் அஹிம்சையுமாக பேசி கொண்டிருந்தார்
பிரிவினை உறுதியானது, காந்தி பாகிஸ்தான் எனும் நாட்டை அங்கீகரித்து கையொப்பமிட்டார், ஆம் அவர் ஒப்புதல் வழங்கினார்
அவர் அனுமதியின்றி தேசம் பிரிந்திருக்காது
தேசம் பிரிவது தங்கள் உடலில் இருந்து அங்கம் வெட்டபடுவது போன்றது என்பதை உணர்ந்த இந்தியர் அழுதனர், பாகிஸ்தானில் இருந்து கூட அழுதனர்
ஆம் நாடு கேட்டது சிறிய கூட்டமே பெரும்பாலான மக்கள் இந்தியர்களாகவே இருந்தனர்
காந்தி ஒப்புகொண்ட இன்னொரு விஷயம் நேதாஜி இந்தியா வந்தால் பிடித்து கொடுப்போம் எனும் ஒப்பந்தம், இதை கேள்விபட்டுத்தான் தற்கொலை செய்தார் நேதாஜி
நேதாஜி அபிமானிகள் காந்தி என்றாலே கொதிக்க தொடங்கினர், துப்பாகியோடு அலைந்தார்கள்
காந்தியிடம் இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கோரிக்கைகள் வைத்தது அதில் தவறு இருப்பதாக சொல்லமுடியாது
ஆம் காந்தி தேசபிரிவினைக்கு ஆதரவளித்தீர் சரி தொலையட்டும், அது இஸ்லாமிய குடியரசு என்றால் இந்து இந்துஸ்தானம் அல்லவா? அதையாவது செய்யும்
காந்தி அதை மறுத்து இது சமயசார்பற்ற நாடு என்றார், நேரு அதில் உறுதியாக இருந்தார்
இந்துக்கள் முகம் சுருங்கி போயிற்று, இனி தங்களுக்கு யாரும் இல்லை என்பதை உணர்ந்தனர். காந்தியும் நேருவும் பாகிஸ்தானை உருவாக்கி கொடுத்து மீதி இருக்கும் இந்தியாவிலும் இந்து அடையாளத்தை அழிக்க துணிந்துவிட்டது புரிந்தது
கூடுதலாக ஐரோப்ப்பிய மதமாற்றிகள் இங்கு தங்கியிருக்க உத்தரவிட்டார் நேரு, இது இன்னும் வலியினை கூட்டிற்று
காந்தி இதையும் தடுக்கவில்லை
சுமார் 3 கோடி இந்துக்கள் பாதிக்கபட்டு பல லட்சம் இந்துக்கள் செத்தனர், இந்து பெண்கள் கற்பிழந்து வந்தபொழுது இந்து இளைஞர்கள் கொதித்தபொழுது காந்தி சொன்னார்
“அப்பெண்கள் உடலால் கெட்டவர்கள், இந்து இளைஞர்கள் பெருந்தன்மையாக அவர்களை திருமணம் செய்ய வேண்டும்”
அப்பொழுதும் கற்பழித்தவனை சொல்ல அவருக்கு ஒரு வார்த்தை வரவில்லை, அதுவரை ஒரே இந்தியாவாக இருந்தை மதத்தின் பெயரால் கோடிட்டு கற்பத்த கொடூரத்தை அவர் கண்டிக்கவில்லை
கூடுதலாக இந்தியா மேல் போர் தொடுத்து இஸ்லாமிய சமஸ்தானங்களை பாகிஸ்தானோடு சேர்ப்போம் என மிரட்டியது பாகிஸ்தான்
இங்கிருந்த சில இஸ்லாமிய சமஸ்தானமும் அதற்கு தயாராய் இருந்தது
இந்நிலையில்தான் 50 கோடி பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டும் என குரல் எழுப்பினார் காந்தி
இந்துக்கள் கொதித்தனர், எச்சரித்தனர் காந்தி அசரவில்லை கொடுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
அப்படி கொடுத்தால் பாகிஸ்தான் இந்தியாமேல் படை எடுக்கும் என எச்சரித்தும் அவர் கேட்கவில்லை, அன்று 50 கோடி என்பது இன்று லட்சகணக்கான கோடிகளுக்கு சமம்
காந்தியினை கொல்ல நேதாஜி வீரர்கள் குறி வைத்தனர், இந்து இளைஞர்கள் குறி வைத்தனர், இனி இவர் இருந்தால் தேசம் இன்னும் நாசமாகும் என சமூகம் நம்பிற்று
கூடுதலாக இந்தியாவில் கோவா, பாண்டிசேரியில் பிரான்சுக்காரர் இருக்க காந்தி சம்மதித்தார், இதற்கா சுதந்திர போராட்டம் என கேட்டாலும் அவரிடம் பதில் இல்லை
எவனை தலைவன் என நம்பினோமோ அவனே தேசத்தினை கூறுபோட்டு அலங்கோலபடுத்தி அதை வியாக்கினம் செய்ததை காணபொறுக்கா கூட்டம் களமிறங்கிற்று
காந்தி மேல் பல கொலைமுயற்சிகள் நடந்தன
அதில் கடைசியாக வென்றான் கோட்சே.
கோட்சே கொன்றான் சந்தேகமில்லை, ஆனால் தப்பி ஓடவில்லை சயனைடு கடிக்கவில்லை மாறாக அங்கேயே நின்றான்
நீதிமன்றத்தில் தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான், அவன் மறுக்கவில்லை, வழக்கறிஞர் வைக்கவில்லை, தண்டனை வேண்டாம் என சொல்லவில்லை
எனக்கொரு தாய் உண்டு அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும் என கெஞ்சவில்லை
காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும், எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும், இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி என்பதையும் அவரின் அரசியல் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி நிலவவிடாது என்பதை தெளிவாக சொன்னான்.
ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா? 5 கோடி பாகிஸ்தானியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை
அந்த சபையே மவுனித்து நின்றது
கோட்சே தெளிவாக பேசினான் அது பல பக்கங்களுக்கான விளக்கம், ஆம் இந்துக்களின் பிரதிநிதியாக வலியினை சொல்லிவிட்டு தூக்குமேடை நோக்கி சென்றான்
இன்று (15 / 11 ) கோட்சே தூக்கிலிடபட்ட நாள்
நிச்சயம் அவன் செய்தது கொலை அதற்கான தண்டனையினை அவன் பெற்றான். ஆனால் பிரிட்டிசாரிடம் இருந்து ஆட்சி பிரிட்டிசாரின் ரகசிய பிரதிநிதிகளுக்கு கைமாறி இத்தேசம் இரண்டாம் அடிமையாக சிக்கியபொழுது முதல் போரை அவனே தொடங்கி வைத்தான்
அதுதான் இன்று மோடி தலமையில் தனிபெரும் இந்தியாவாக வலுவாக நிற்கின்றது
காஷ்மீர் இந்தியவோடு இருக்கின்றது, ராமர்கோவில் மீட்கபட்டிருக்கின்றது , காசி சீர் செய்யபட்டிருக்கின்றது
சீனா கட்டுபடுத்தபட்டிருக்கின்றது, தேசம் முழுக்க இந்து எழுச்சியும் தேசபற்றும் பெருகிகொண்டிருகின்றது
இக்காட்சியினை 1947லே கனவு கண்டவன் கோட்சே
கோட்சேவினை நாம் நியாயபடுத்தவில்லை, அவன் கொல்லாவிட்டாலும் காந்தியினை கொல்ல இன்னும் பலர் தயாராக இருந்தார்கள்
கோட்சே வழக்கில் மர்மமும் உண்டு, அவன் இஸ்மாயில் என கையில் பச்சை குத்தி கொண்டான் என்பதெல்லாம் பொய்
காந்தி சுடபட்டதும் ரேடியோ காந்தியினை கொன்றவன் இஸ்லாமியன் அல்ல என அலறியது, காரணம் இங்கு தேசபிரிவினையில் காந்திமேல் கொந்தளிப்பு அப்படி இருந்தது
அப்பொழுதும் இங்கு இஸ்லாமியரை காக்கவே காங்கிரஸ் பாடுபட்டது, ஆம் கலவரம் வந்து இந்துக்கள் இஸ்லாமியரை அடித்துவிட கூடாது என முந்தி கொண்டது
பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் காந்தியால் கொடுக்கபட்டபின்னும் அவரை கொல்ல எந்த இஸ்லாமியனுக்கும் அவசியமே இல்லை
கோட்சே இஸ்மாயில் என பச்சை குத்தி கொண்டான் என்பது பொய், ஆம் அதன் பின் அவன் நீதிமன்றம் நின்றான், மரண தண்டனை கைதியின் உடல் அங்கத்தை ஆவணபடுதுவார்கள்
அதில் பச்சை குத்தல் சமாச்சாரம் இல்லவே இல்லை, குத்தியிருந்தால் நிச்சயம் அது குறிக்கபட்டிருக்கும்
கோட்சே இங்கு கொடியவனோ மாபெரும் குற்றவாளியோ அல்ல, ஒரு நல்ல இந்தியனுக்கு இந்துவுக்கு என்ன கோபம் வருமோ அதுதான் அவனுக்கும் வந்தது
அவன் இந்துக்களின் பிரதிநிதியாக, பஞ்சாபிலும் வங்கத்திலும் செத்த கோடிகணக்கான இந்துக்களின் ஆன்மாவாக, கற்பிழந்த ஏகபட்ட இந்து பெண்களின் மானமுள்ள சகோதரனாக அதை செய்தான்
நிச்சயம் அவன் இல்லாவிட்டாலும் வெகுசில நாட்களில் இன்னும் வேறு யாராவது காந்தியினை கொன்றிருப்பார்கள், அவர் ஏற்படுத்தி இருந்த வெறுப்பு அப்படி
ஆனால் ஒரு தவறு நடந்தேறிற்று
காந்திக்கு அப்பொழுது 78 வயதாகி இருந்தது, மக்களிடம் பெரும் அதிருப்தியினை சம்பாதித்தார் காந்தி
அவரின் இஸ்லாமிய பாசமும், கடைசி கால காம ஆராய்ச்சியும் மக்களிடம் அவரின் தோற்றத்தை காரி துப்ப வைத்திருந்தது
ராம் ராம் என பேசியதெல்லாம் பொய், நடிப்பு, பசப்புதனம். அப்படி அவரின் ராம பக்தி உண்மையென்றால் ஏன் இத்தேசம் இந்துதேசம் என அறிவிக்க தயக்கம் என்றெல்லாம் கேள்வி எழுந்தது
காந்தியின் முகமூடி கிழிந்து தொங்கியது
1920களின் ஆக்ரோஷமான இந்திய போராட்டத்தை அழிக்க பிரிட்டிசாரால் உருவாக்கபட்ட கைகூலி காந்தி எனும் கருத்து உண்மை என்பதை தேசம் உணர்ந்தது
78 வயதான காந்தி அப்படியே அவமானத்தால் செத்திருப்பார், தேசம் தூற்றி விரட்டி அடித்திருக்கும்
ஆனால் கோட்சே அவரை தேசபிதாவாக்கிவிட்டு சென்றுவிட்டான்
கோட்சே தன்னை அறியாமல் செய்த பெரும் தவறு அது, தானாக செத்திருக்க வேண்டிய காந்தியினை அல்லது பிடித்து தள்ளினாலே செத்திருக்க வேண்டிய காந்தியினை கொன்று அவன் பழி ஏற்றான்
அந்த பழியினை காங்கிரஸ் நுட்பமாக பயன்படுத்தி இந்துமகா சபை, ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றை மதவாத சக்தி என சொல்லி காட்சியினை மாற்றியது
அடுத்த 17 ஆண்டுகளுக்கு நேரு பெரும் சக்தியாக இருக்கவும் , ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றின் எழுச்சி முளையிலே அடக்கவும் இதுதான் காரணம்
திராவிடமெல்லாம் தெற்கே எழும்ப இதுதான் காரணம்
ஆனால் பொய்கள் நெடுங்காலம் நிலைக்காதல்லவா? நேரு வெகுவிரைவிலே சிக்கினார் காஷ்மீரிய இஸ்லாமிய பாசம், பாகிஸ்தானுடன் கள்ளகாதல் என நாடகமாடி ஒருவித இந்திய ஐரோப்பியனாக வாழ்ந்த நேருவினை செருப்பால் அடித்தது சீனா
சுதந்திரம் பெற்றபின்னும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் படம் இந்திய பார்லிமென்டில் இருப்பதா? இதென்ன மானங்கெட்ட தனம் என சொல்லி சூ என் லாய் கேட்டபொழுது நேருவின் நாட்டுபற்று வாய்விட்டு சிரித்தது
ஆம், இதெல்லாம் இந்துமகா சபையும் ஆர்.எஸ்.எஸும் கேட்ட வார்த்தைகள் ஆனால் சீனன் கேட்டபொழுதுதான் நேருவின் புகழ் சந்தி சிரித்தது
எனினும் நேருவிற்கு பின் சாஸ்திரி நல்ல பிரதமராய் இருந்தார், இந்திராவும் நல்ல தலைவராக சரியானவர் ஆனால் கடைசிவரை இந்தியர்கள் மனநிலை உணராதவராக இருந்தார்
வேறுவழியின்றி அவரை தேசம் ஆதரித்தது, அதிலும் தனக்கான முடிவினை தானே தேடி கொண்டார்
நிச்சயம் சீக்கியர்களின் சில கோரிக்கைகளை அவர் ஆதரித்திருக்க வேண்டும், ஆம் காந்தியிடமும் நேருவிடம் மன்றாடியதைத்தான் சீக்கியர் இந்திராவிடமும் கேட்டனர், ஆனால் மதம் என ஒருவார்த்தையில் அவர்களை விரட்டினார் இந்திரா
விளைவு பிந்த்ரன்வாலேயினை அவரே உருவாக்கினார், அவனின் அடிபொடிகள் இந்திராவினை முடித்தன
இதன் பின்பு பாஜக வளர்ந்து இன்று மிகபெரும் சக்தியாக ஆட்சியில் இருக்கின்றது
ஆக கோட்சே என்பவன் செய்த கொலையால் இங்கு இந்துதர்மமும் வலுவான தலைவன் வர கிட்டதட்ட 70 ஆண்டுகள் ஆகிவிட்டன
இதுதான் துயரம் மாபெரும் இந்திய சோகம்
1950களில் இருந்த இந்திய தேசிய எழுத்தாளர்கள் சொல்வது இதுதான்
“காந்தி அதற்குமேலும் இருந்திருந்தால் மிகபெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்திருப்பார், கோட்சே என்ன? பாரதியும் நேதாஜியும் உயிரோடு இருந்திருந்தால் கோட்சேவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது”
இன்னும் ஒரு ஆன்மீக மடாதிபதி அழகாக சொன்னார்
“வெள்ளையன் நம்மை சாம பேத தான தண்டம் எனும் வகையால் நுட்பமாக பிரித்து ஆண்டு கொண்டிருந்தான்
நம் பாரத இந்துதர்ம படி பக்தி,அறிவு,ரவுத்திரம், ஒற்றுமை, உழைப்பு இவற்றை கொண்டே அவனை விரட்டி இருக்க வேண்டும்
சுருக்கமாக சொன்னால் பிராமண, வைசிக, சத்திரிய,சூத்திர எனும் அந்த ஒற்றுமை கொண்டே நாம் அவரவர் கடமையினை செய்து வெள்ளையனை விரட்டி இருக்க வேண்டும்
வ.உ.சி ஒரு வைசிகனாக தன் கடமையினை செய்தார் காந்திக்கு பொறுக்கவில்லை. வாஞ்சிநாதன் முதல் நேதாஜி வரை சத்திரிய கடமையினை செய்தார்கள் காந்திக்கு பொறுக்கவில்லை
பகத்சிங் சூத்திரர் எனும் உழைக்கும் மக்களை திரட்டினால் காட்சி மாறும் என நம்பினான், சில கம்யூனிஸ்டுகளும் நம்பினர் அதுவும் காந்திக்கு பொறுக்கவில்லை
மாறாக அஹிம்சை எனும் ஒரு சாதுவின் குணத்தை தேசமெல்லாம் திணித்தார். அது வெறும் ஆன்மீகம் ஒரு சாமியாருக்கு இருக்க வேண்டிய குணம்
அதை ஆட்சிக்கு கொண்டுவந்து வலுகட்டாயமாக அவர் அரசியலில் திணித்ததே தேசம் பிரியவும், மாபெரும் அழிவுகள் ஏற்படவும் காரணம்
ஆம் அவரின் அஹிம்சை பாகிஸ்தான் பிரிவதை கூட தடுக்க வலுவற்றதாய் இருந்தது, இதை உணர்ந்து அவரே மெல்ல செத்து கொண்டிருந்தார், அதை கோட்சே அவசரபட்டு முடித்து வைத்தான்”
ஆம் காந்தியினை வாழவிட்டு மனதால் கொன்றிருக்க வேண்டும் அதைவிட பெரும் தண்டனை இருந்திருக்க முடியாது, அவ்வகையில் கோட்சே காந்திக்கு மிகபெரும் உதவி செய்தான்
ஆக வரலாற்றை எப்படி புரட்டினாலும் காந்தி மரியாதையாக சாக, இன்னும் புகழோடு இருக்க பெரும் உதவி செய்த காந்தியவாதிதான் கோட்சே என்றுதான் முடிகின்றது.