விவேக் ராமசாமி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான காட்சிகள் தொடங்கிவிட்டன , குடியரசு கட்சியின் பிரமுகரும் இந்திய வம்சாவளி இந்துவுமான விவேக் ராமசாமியின் பிரச்சாரமும் அவரின் பதில்களும் கவனிக்கபடுகின்றன‌

அந்நேரம் இந்துமதம் எனக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்தது, உலகமும் சமூகமும் நல்லவழியில் வாழ அங்கு பல கருத்துக்கள் உண்டு போதனைகள் உண்டு என அவர் சொல்லியிருப்பது கவனம் பெறுகின்றது

ஏன் அப்படி சொன்னார் விவேக் ராமசாமி?

ஒவ்வொரு நாட்டு தேர்தலிலும் அந்நாட்டு மக்கள் வேட்பாளருக்கு சில தகுதிகளை கவனிப்பார்கள், உதாரணமாக இஸ்ரேல் பிரதமர் வேட்பாளர் என்றால் ராணுவத்தில் சாதித்திருக்கவேண்டும், உளவு படை அனுபவம் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்

ஐரோப்பாவில் தங்கள் பிரதமர் தனிபட்ட பொருளாதார கொள்கை இதர சமூக பொறுப்புக்களை கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்

பாகிஸ்தானில் அவர்கள் வேட்பாளர் முழு காஷ்மீரையும் மீட்டு டெல்லிவரை வரவேண்டும் என்பது ஒரு கனவு, இலங்கையில் பவுத்தம் காக்கபடவேண்டும் என்பது விதி

ஜப்பான் மக்கள் யார் கடும் உழைப்பாளியோ , உழைப்பில் அவர் முன் அனுபவம் எதுவோ அதை குறித்தே முடிவு செய்வார்கள்

சீனாவில் இதெல்லாம் அவசியமில்லை கம்யூனிஸ்டு கட்சியில் யார் பலரை மிரட்டமுடியுமோ அவர்தான் அதிபர்

ரஷ்யாவில் புட்டீன் ஒரு தேர்தலை நடத்துவார், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரே அமர்ந்துகொள்வார், யாரும் கேட்கமாட்டார்கள் கேட்டால் இருக்கமாட்டார்கள்

இப்படிபட்ட உலகில் அமெரிக்க மக்கள் தங்கள் அதிபருக்கு பல தகுதிகள் இருக்கவேண்டும் என எதிர்பார்பார்கள், முதலாவது பொய் சொல்ல கூடாது, ஊழல் கூடாது, பல சமூக சர்ச்சைகள் எதுவும் இருக்க கூடாது, எல்லோரையும் அரவணைத்து செல்லும் சமூகத்தின் முன்மாதிரியாய் அதே நேரம் தைரியமும் ஆற்றலும் கொண்ட தலைவனாய் இருத்தல் வேண்டும் என பல விஷயங்களை நோக்குவார்கள்

அங்கேதான் நான் ஒரு இந்து, நல்ல வழியில் வழிநடத்தபட்ட இந்து என கம்பீரமாக சொல்கின்றார், விவேக் அதன் அர்த்தம் இதைவிட என்ன தகுதி வேண்டும் என்பது

ஒருவகையில் நீங்களே கவனித்தால் தெரியும், நல்ல இந்து என தன்னை அடையாளபடுத்திகொண்ட தலைவன் எல்லா இடங்களிலுமே ஒரு ஒழுக்கமும் தனித்துவமும் கொண்டு நிற்பான்

வீரசிவாஜி முதல் பலரை வரலாற்றில் காணமுடியும், விவேகானந்தர் போன்ற துறவிகளை ஆன்மீகத்தில் காணமுடியும்

அய்யா பசும்பொன் தேவர் போன்ற மாவீர மகான்களை அரசியலில் காணமுடியும்

பெண்ணும் பொன்னும் போதையும் மிகுந்த சினிமா தொழிலில் கடைசிவரை அதன் ஒரு துளிகூட படாமல் சுத்தமாக வாழ்ந்து சென்ற சின்னப்ப தேவர் போன்றோரை காணமுடியும்

ஆம், இந்துமதம் அப்படி கட்டுகோப்பான மனிதர்களை உருவாக்கும், அது உலகுக்கும் தெரியும்

அமெரிக்கர்களுக்கு இளம் தலைவர் அவசியம், கென்னடிக்கு பின் துணிச்சலான இளம் தலைவர்கள் அங்கு வரவில்லை

இதனால் தகுதியான இளம் தலைவரை எதிர்பார்க்கின்றார்கள், அங்கேதான் விவேக் ராமசாமி கவனிக்கபடுகின்றார்

“அமெரிக்கர்களே, நான் இந்துமதத்தால் வளர்க்கபட்டவன் அதனால் நான் தனித்து ஒழுக்கமாக நிற்கின்றேன்” என அவர் சொல்லும்போது அத்தேசம் மவுனமாக தலையாட்டி ஒப்புகொள்கின்றது

அம்ரிக்காவுக்கு ஒரு இந்து வழிகாட்டுவான் என்றால் தயக்கமில்லை என தலையாட்டி அனுமதிக்கின்றது

ஏன் இப்படி சரியான நேரத்தில் சொன்னார் விவேக் ராம்சாமி?

அதுதான் உலக அரசியல், மிக சரியான இடத்தில் செய்யபடும் அரசியல்

உலகம் இப்போது மோடியினை உற்று கவனிக்கின்றது, தனக்கென எதுவுமில்லாமல் இந்திய திருநாட்டுக்கு ஒரு முனிவன் கோலத்தில் அவர் வழிகாட்டிகொண்டே உலக நலம் , உலக ஒற்றுமை, உலக அமைதி என போதிப்பதை அவதானிக்கின்றது

இந்துமதம் சரியான உலக தலைவர்களை உருவாக்கும் என்பதை மோடியில் காண்கின்றது, ரிஷி சுணக் வடிவில் இங்கிலாந்திலும் காண்கின்றது

சர்ச்சைகுரியவர் என்றாலும் காந்தி எனும் இந்துவுக்கு தங்கள் நாட்டில் சிலைவைத்த மக்கள் அவர்கள், அதனால் இந்து தலைவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கையும் அபிமானமும் அதிகம்

யாரையும் துன்புறுத்தாததும், யாரையும் வெறுக்காதததும், மதம் இனம் மொழி தாண்டி மனிதனை இந்த உலகை சார்ந்தவன் எனும் ஒரே நோக்கில் அணைத்து, உலக அமைதி, உலக மக்கள் என பேசும் ஒரே மதமான அம்மதம் அவர்களுக்கு பிடித்தமானது

அம்மதத்தால் ஒருகாலமும் சண்டையில்லை, சர்ச்சை இல்லை, தீவிரவாத குழப்பமில்லை, இந்துக்களிடம் மதநெறி உண்டே தவிர மதவெறி இல்லை, இந்துக்கள் இருக்குமிடம் அமைதியும் நலல் சூழலும் நிலவும் என்பதை அறிந்திருக்கின்றார்கள்

இந்துக்கள் நம்ப தகுந்தவர்கள் என்பதையும் உணர்கின்றார்கள், அந்த இந்துமதம் நலல் தலைவர்களை தருகின்றது என்பதை கூர்மையாக கவனிக்கின்றார்கள்

அப்படி ஒரு தலைவன் இந்து மகன் தங்களுக்கும் வந்தால் தடையேதுமில்லை , நல்ல இந்து அமெரிக்க வல்லரசுக்கு வழிகாட்டினால் நல்லது என வரவேற்கின்றது

விவேக் ராம்சாமிக்கு தமிழக அண்ணாமலை போல வயது 38, ஆனால் சட்டமும் பொருளாதாரமும் இதர படிப்புகளும் தனிபட்ட அறிவும் கொண்டு தனித்து நிற்கின்றார்

இவர் கேரள இந்து வம்சாவழி, பாலக்காட்டு பிராமணர் வகுப்பினை சார்ந்தவர்

எதிர்காலத்தில் நிச்சயம் அமெரிக்க அதிபராவார், கென்னடிக்கு பின் சரியான இளம் தலைவராக அமர்வார் என ஆருடங்கள் சொல்கின்றன, அமெரிக்காவின் பலமான யூத குழுக்களின் ஆதரவும் அவருக்கு உண்டு

அடுத்தவருட தேர்தல் விஷயமல்ல என்றாலும் எதிர்காலத்தில் அவருக்கு வாய்ப்பு உண்டு

அதே காலகட்டத்தில் இந்தியாவில் அண்ணாமலையும் பெரும் இடத்தில் நிச்சயம் அமர்ந்திருப்பார்

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா என இந்துக்களின் கொடி ஓங்கி பறக்கும் காலமிது, அது எதிர்காலத்தில் இன்னும் இன்னும் உயரபறப்பது உறுதி

இந்துக்களுக்கு ஒளிமயமான காலம் உருவாகிகொண்டிருப்பது தெரிகின்றது, இனி அம்மதம் பன்மடங்கு வேகமாக சீறி எழுந்து நிற்கும்

எதிர்காலத்தில் அங்கே இந்த விவேக் ராம்சாமி அதிபராக இருக்கும் நேரம் இந்தியாவில் அண்ணாமலை எனும் இந்து தமிழன் பிரதமராக இருக்கவும் காலம் வழி செய்யும்

நிச்சயம் அப்படி ஒரு காலம் வரும், எதிர்காலம் அந்த காட்சியினை காட்டும்

விவேக் ராம்சாமியினை நினைக்கும் போதெல்லாம் விவேகானந்தர் நினைவுக்கு வருவார், அதே அமெரிக்காவில் பசியோடும் பட்டினியோடும் கிழிந்த காவி உடையோடும் இந்துமதத்தை விதைக்க அவர்பட்டபாடு கொஞ்சமல்ல‌

அந்த தியாகம் இன்று வளர்ந்து நிற்கின்றது

அப்படியே அய்யா ஈரோட்டு ராம்சாமியும் நினைவுக்க்கு வருவார், அவரும் அவரைபோன்றோர் தொடங்கிய இடஒதுக்கீடும் இல்லையென்றால் இன்று பாலக்காடு பக்கம் அர்ச்சக்ராகவோ தர்பணத்துக்கு கூலிவாங்க வேண்டியராகவோ இருந்திருக்க வேண்டியவர் அமெரிக்க அதிபர் வாய்ப்புக்கு வரமுடியுமா?

எல்லாம் அய்யா ராம்சாமி வைக்கம் வரை சென்று பிராமணர்களை விரட்டி அடித்ததால் வந்தது

ஆக‌

அய்யா மட்டும் இல்லண்ணா…..