ஜெகதீஷ் சந்திரபோஸ்
ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை இந்துக்களின் ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, ஆன்மீகமும் அதன் தேடலும் பெருகியிருந்த அன்றைய வங்கம் அவரை அப்படி வித்தியாசமான விஞ்ஞானியாக உருவாக்கியிருந்தது
ஆனால் அவரின் ஒரு பக்கமும் அவரின் கோட்பாடும் மேற்குலக விஞ்ஞானத்தால் மறைக்கபட்டன அது இன்றுவரை தொடர்கின்றது
போஸின் கம்பியில்லா தகவல் தொடர்பு ஆராய்ச்சி கட்டுரையே மார்கோனி ரேடியோ கண்டுபிடிக்க அடிப்படையாய் இருந்தது, சரி போஸ் ஏன் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் தாவரவியலுக்கு வந்தார்?
முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ், இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது
அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார்
தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி கட்டுரைகளாக ஐரோப்பாவிலும் வந்தன, கண்டுகொள்வார் யாருமில்லை
இதனால் போஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டா இல்லையா எனும் ஆராய்ச்சிக்கு சென்றுவிட்டார்
போஸ் தன் வாழ்நாளில் மாபெரும் உண்மையினை இந்துமத சாயலில் சொல்லியிருந்தார். கீதை சொல்வதை அப்படியே சொல்லியிருந்தார்
இந்துமதம் சுருக்கமாக சொல்வது இதுதான் “இறைவன் எல்லா உயிரிலும் உண்டு அவன் தூணில் இருப்பான் ,துரும்பில், இருப்பான் .கல்லில் இருப்பான், கற்கண்டிலும் இருப்பான்”
போஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை கண்டறிந்தார், அது ஒன்றும் அதிசயமல்ல இந்து ஞானிகள் 6 வகை உயிர்களை வகைபடுத்தபடும் பொழுது தாவரங்களையும் ஒரு உயிராக கருதினர்.
ஆம், இந்த இந்து தர்மமும் ஞானமும் தாவரங்களுக்கு உயிர் உண்டு என என்றோ சொன்ன நிலையில் 18ம் நூற்றாண்டுவரை தாவரத்தை உயிரற்ற பொருளாகவே வைத்திருந்தது மேற்குலகம்
போஸ் அதை தாண்டி உலோகங்களுக்கும் உயிர்தன்மை உண்டு என சொன்னார், அதையும் தாண்டிய அவரின் ஆய்வு அதிசயிக்க வைத்தது
உயிர்தன்மையற்றதாக கருதபட்ட உலோகங்கள் போன்றவற்றையும் உயிர்தன்மையுள்ளவையான தாவரம் மற்றும் இதர உயிர்களுக்கும் பொதுவான விதி ஒன்றை கண்டறிய முயன்றார்
உயிருள்ளவை உயிரற்றவை என எல்லாமும் அந்த விதியில் அடக்கமுடியும் என கருதினார், அது இந்து மதத்தின் ஆதார விதியாய் இருந்தது
தோன்றுதல், களைத்தல், புத்துணர்வு கொள்ளல் ,மறைதல், மறுபடி தோன்றுதல் ஆகிய சுழற்சி மானிட இனத்திலும் விலங்கினத்திலும் தாவரங்களிடத்திலும் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு பொருளிலும் அசையும் அசையா பொருளிலும் உண்டு, உலோகமும் கல்லும் கூட அவற்றில் உண்டு என ஆய்வின் முடிவில் சொன்னார் போஸ்
ஆம் அதுதான் இறைவன் ஒவ்வொரு பொருளிலும் உள்ளான் எனும் இந்துக்களின் தத்துவம்
உலோகங்கள் உயிரற்றவை அல்ல, விஷேஷித்த சக்திகள் அவற்றில் செலுத்தபடும் பொழுது அவை பெரும் சக்தியும் மாற்றமும் கொடுக்கும் என்றார்
சித்தர்கள் சொல்லும் ரசவாதம் அதுவே
போஸின் கருத்துக்கள் மேற்குலகை புரட்டி போட்டன,
அவரின் கருத்துக்கள் உடல்கூறு, மனவியல் உட்ப்ட எல்லா துறைகளின் அடிநாதத்தையும் அசைத்தன
ஆனால் மேற்குல விஞ்ஞான பீடம் அவரை ஒரு இயற்பியலாளாரக நிற்க சொன்னது,
அவர் சொன்னதெல்லாம் சரியாய் இருந்தும் இந்திய விஞ்ஞானி இந்துக்களின் தொன்மை ஞானத்தை விஞ்ஞான உலகம் மேல் மழையாய் பொழிவதில் அவர்களுக்கு விருப்பமில்லை
உலகில் மறைக்கபட்ட விஞ்ஞானி போஸ், காரணம் அவர் மறைக்கபடாவிட்டால் பாரதத்தின் பெருமையும் பண்டைய அறிவும் வெளிபட்டு வெள்ளையனின் நவீன விஞ்ஞானத்தையே புரட்டி போட்டிருக்கும்
அந்த வாய்ப்பினை வெள்ளை விஞ்ஞான சமூகம் கொடுக்க விரும்பவில்லை
விளைவு போஸ் விலக்கிவைக்கபட்டார், அவரின் கம்பியில்லா தகவல் தொடர்பை மார்கோனி ரேடியோவாக்கினான் , இன்னும் யார் யாரெல்லாமோ எடுத்து என்னவெல்லாமோ செய்தார்கள்
தாவரங்கள் பக்கம் தன் ஆய்வினை திருப்பி அப்படியே இறந்தான் போஸ்
எனினும் போஸின் காலத்துக்கு பின்பு அணுகுண்டும் இன்னும் பிரமாண்டமான விஷயங்களும் உலோகம் மற்றும் சில காற்று வெற்றிட விஷயங்கள் ( கம்பிரசர் மோட்டார், புல்டோசர் போன்றவையின் ஆதார தத்துவம்) இவற்றை எல்லாம் விளங்கிய உலகம் போஸ் சொன்னதை மவுனமாக ஒப்புகொண்டது
ஆம் உலோகமும் இதர பொருளும் உயிரற்றவை அல்ல, அவற்றிலும் இயக்கம் உண்டு உயிர் உண்டு
அவைகளும் சக்தியோடு இருக்கின்றன, போஸ் சொன்ன மானிட தாவரவிதி அவைகளுக்கும் பொருந்தும் என்பதை மவுனமாக ஒப்புகொண்டது
உலோகத்தில் அணுக்கள் உண்டு, அவை இயங்குகின்றன, எலெக்ட்ரான்கள் சுழலுகின்றன,
இயக்கம் அணுவில் இருந்து அண்ட சக்திவரை உண்டு.
உலோகத்தில் இயங்கு சக்தி எனும் உயிர் உண்டு என மெதுவாக பின்னாளில் ஒப்புகொண்டது உலகம்
போஸ் எதை சொன்னான்? காணும் பொருளெல்லாம் இறைவன் வாழ்கின்றான் என இந்துமதம் சொன்னதை தன் ஆய்வின் மூலம் சொன்னான் அவ்வளவுதான்
சந்திரபோஸ் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்து தர்மத்தில் மூழ்கிய பக்திமிக்க விஞ்ஞானி
இன்று (23 / 11) அந்த மாபெரும் விஞ்ஞானி போஸின் பிறந்த நாள், இந்துமதம் எல்லா விஞ்ஞானத்துக்கும் ஆதரமாய் இருக்கின்றது என முதலில் சொல்லி நிரூபித்த அந்த மேதைக்கு பிறந்த நாள்
தாவரத்துக்கு மட்டுமல்ல கல்லுக்கும் உலோகத்துக்கும் மண்ணுக்கும் கூட உணர்வு உண்டு அதற்குள்ளும் உயிர் இயக்கம் உண்டு என முதலில் சொல்லி, எல்லா பொருளிலும் ஒரு சக்தி உண்டு, ஒரு இணைப்பு சங்கிலி உண்டு அதைத்தான் கடவுள் என சொன்ன அந்த மேதைக்கு பிறந்த நாள்
இந்தியாவின் தங்க மகனுக்கு, விஞ்ஞானத்தில் இந்திய ஞானம் சொன்ன தலைமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
( இந்திய மக்கள் தங்கள் குழந்தைகளை நல்ல இந்திய பாரம்பரியத்தில் வளர்த்தெடுத்தால் இம்மாதிரி மேதைகள் கிடைப்பார்கள், உலகம் அவர்களை கொண்டாடும் நாடும் நலம்பெறும்
கலாமும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் இந்திய ராணுவ காவல் தெய்வங்களும் அப்படி வந்தவர்களே,
இல்லை தானும் குழம்பி சமூகத்தையும் குழப்பி சமூக விரோதி அரசியல்வாதியாய் மாறும், நாட்டையும் சமூகத்தையும் நாசமாக்கி, சுய அறிவற்ற சிந்திக்க தெரியாத குவாட்டர் பிரியாணி தலைமுறையினை உருவாக்கும்
அதற்கு மேல் என்ன செய்வது என அவர்களுக்கும் தெரியாது பாவம்
நல்ல ஞானமரபில் இளம்வயதிலே பாரம்பரியங்களையும் மத அபிமானத்தினையும் வளர்த்தால் வருங்காலத்தில் ஆயிரம் ராமன்களையும் போஸ்களையும் சீனிவாச ராமானுஜத்தையும் இத்தேசம் பெறும்
அப்படி பெற்றுவிட கூடாது என்பதில்தான் சிலர் கண்ணும் கருத்துமாய் இருந்து சனாதான தர்மம், கோபுரம், கருவறை என சொல்லி மொத்த தலைமுறையினையும் மடத்தனமான தலைமுறையாய் மாற்ற கடும் உழைப்பில் இருக்கின்றார்கள்
அவர்களிடம் மகா எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும், அவர்கள் இந்நாட்டின் நலம்விரும்பிகளாய் இருக்கவே முடியாது, அவர்களிடமிருந்து இளம் தலைமுறையினை காக்க வேண்டியது நம் கடமை)
இது போன்ற இந்து மத தத்துவத்தையும், அறிவியலையும் கலந்த விஞ்ஞானியை அடைந்ததற்கு பாரதம் பெருமை கொள்கின்றது
பாரத நாட்டின் புகழ்மிக்க அறிவியல் அறிஞர்கள் பெயர்களைக் கூறுக என்று சொன்னால் அநேகமாக அனைவரும் முதலில் கூறும் பெயர் ஜெகதீஷ் சந்திர போஸ் என்றுதான் இருக்கும்.
இயற்பியல், உயிரியல், தாவிரவியல், உயிர் இயற்பியல் என்று அறிவியலின் பல்வேறு துறைகளில் வல்லுநராகவும், அதோடு வங்காள மொழியில் அறிவியல் சார்ந்து புனைகதைகளை எழுதும் துறையின் ஆரம்பகால எழுத்தாளராகவும் விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் மறக்க முடியாத மாமேதை
போஸின் ஆழ்ந்த அறிவினை தன் autobiography of an Yogi ( யோகியின் சுயசரிதை) நூலில் சுவாமி பரமஹம்ச யோகானந்தா மிக அழகாக சொல்லியிருப்பார், அதையெல்லாம் ஒவ்வொரு இந்துவும் அறித்திருதல் அவசியம்
இந்துமத அறிவியலை விளக்க பிறந்த அந்த விஞ்ஞானிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்