உலகம் எங்கும் பரவியிருந்த சநாதன ஞானம் – சாலமோன் அதற்கு ஒரு சான்று

இந்திய யூத தொடர்புகள் வரலாற்றில் மிக மிகப் பழமையானவை. யூத இனம் அன்றே அறிவைத் தேடிய இனம். எங்கெல்லாம் எதெல்லாம் சிறந்ததோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த இனம்.

அப்படிபட்ட இனம் அன்று பெரும் கலைகள், விஞ்ஞானம், மெய்யியல், ஆன்மீகம், தியானம் என பெரும் ஞானபூமியாக இருந்த ஹிமாசலத்துக்கு குறிப்பாக காஷ்மீரத்துக்கு அடிக்கடி வந்தார்கள்.

அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காஷ்மீரத்து இந்து ஞானம் மேற்காசியாவில் அலை மோதியது. இந்த தொடர்ச்சிதான் இயேசு பிறந்தபோது மூன்று இந்து ஞானியர் கிழக்கே இருந்து நட்சத்திரம் கண்டு செல்லும் அளவு நெருக்கமாக இருந்தது.

இயேசு பிறப்பதற்கு முன்பே இந்தத் தொடர்பு இருந்ததா என்றால் இருந்தது; மாமன்னன் சாலமோன் அதற்கு ஒரு சான்றாக இருந்தான்.

யூதர்களுக்கு எப்போதும் பெருமைமிகு அடையாளம் இயேசப்பா அல்ல. அவர்களின் பெருமை தாவீதும் அவர் மகன் சாலமோனும்.

அரசுக்கும் ஆட்சிக்கும் இந்த இருவரைத்தான் அவர்கள் கொண்டாடுவார்கள். சாலமோனே அவர்களுக்கு கோட்டை கட்டி ஆலயமும் கொடுத்த முதல் மன்னன்.

சாலமோன் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானவன், அவன் வாழ்வில் இந்துக்களின் சாயல் உண்டு, பல வகைகளில் உண்டு, ஜோதிட ரீதியாக இன்னும் உண்டு

ஜோதிடம் உண்மையா என்றால் உண்மை, ஆனால் ஒரே சிக்கல் மிக தேர்ந்த ஞானமிக்கவர்கள் அதை கணக்கிட வேண்டும்

ஏதோ ஜோதிட அறிவு இந்துக்களுக்கு மட்டுமானது என நினைத்தால், அது இந்துக்களின் மூடநம்பிக்கை என நினைத்தால் அதுதான் மகாமோசமான மூட நம்பிக்கை

மானிட இனத்தின் பகுத்தறிவு கொண்டு பார்த்தால் அது ஒரு அற்புதமான ரகசியமான அறிவு, எதிர்காலம் அறையினை திறந்து அறியும் கணக்கு சாவி

உலகம் முழுக்க அது பொதுவான விஷயமாக இருந்திருகின்றது, எகிப்தியர் ரோமர், கிரேக்கர், மெசபடோமியர் , சீன ஜப்பானியர் என யாரும் அதற்கு விதிவிலக்கு இல்லை

ஆப்ரிக்கரும் தென்ன்மெரிக்க மாயன்களும் அதில் கரை கண்டிருந்தனர்

அலெக்ஸாண்டர் படையெடுத்து கிளம்பும்பொழுது மன்னா இப்பொழுது நேரம் சரியில்லை, நீர் இக்காலம் கிளம்பினால் நிச்சயம் உயிரோடு மாசிடோனியா திரும்பமாட்டீர் என எச்சரித்தான் அவனின் அரண்மனை ஜோதிடன்

ஆனால் அதை மீறி கிளம்பினான் அலெக்ஸாண்டர் , அவன் திரும்பி கிரேக்கம் வரவில்லை

ஒன்றா இரண்டா சரித்திரம் முழுக்க சிதறி கிடக்கின்றது சான்றுகள்

சாலமோன் அரசன் அதில் கரைகண்டிருந்தான். இன்று யூதர் காட்டும் தாவீதின் நட்சத்திரம் அதாவது இஸ்ரேலிய கொடியில் இருப்பது உண்மையில் சாலமோன் உருவாக்கிய மாந்த்ரீக‌ எந்திரமே….

ரோமரின் அரசவையில் அக்காட்சி உண்டு, ஜூலியஸ் சீசர் வரலாற்றில் உண்டு, இயேசுவினை கொன்ற பிலாத்து மனைவி கூட ஜாதக ரீதியாக அவனை எச்சரித்தாள்

இயேசு பிறக்கும்பொழுது ஜாதகம் அறிந்தோர் வந்து பணிந்ததும், இயேசு இறக்கும்பொழுது முழு சூரியகிரகணம் வந்ததும் பைபிளிலே உண்டு

ஐரோப்பாவில் கிறிஸ்தவமும், அரேபியாவில் இஸ்லாமும் இந்த சாஸ்திரங்களை விரட்டினாலும் இந்தியாவில் அது இந்துக்களின் வழக்கமாக தொடர்ந்து வருகின்றது

யூத மதத்தில் கபாலா எனும் தனிபிரிவு ஜாதகத்துக்கானது, ஆனால் வெளியில் காட்டமாட்டார்கள் , இங்குள்ள அழிச்சாட்டிய கிறிஸ்தவ கும்பலுக்கு அது தெரியாது

இந்து பைரவ வழிபாடான , மண்டை ஓடு ஏந்தும் கபாலிகள் வகையான வழிபாடு அதே, காபலாம் என்பதே காபாலா என மருவிற்று, இன்றும் அவை ரகசியமாக அப்பக்கம் உண்டு

ஜாதகம் என்பது அந்நாளைய அறிவின் உச்சம், இந்துமதம் காத்துகொண்டிருக்கும் உலகின் பாரம்பரியம் அது

ஐரோப்பாவில் போப்பாண்டவரையும் மீறி ரகசியமாக ஜாதகம் கணித்தார்கள்

நாஸ்ட்ரடாமஸ் அப்படித்தான் உருவானான், பன்றிகுட்டி முதல் உலகநாடுகளின் ஜாதகம் வரை அவன் எழுதி வைத்தான்

அதில் ஒன்று கூட பொய்க்கவில்லை. அவ்வளவு பெரும் ஜாதக ஞானம் அவனுக்கு இருந்தது. இன்றளவும் அவன் ஆச்சரியமே

ஆம் போப்பாண்டவர் சொல்லி நடக்காத விஷயம் கூட அவன் ஜாதகம் பிரகாரம் நடந்தது

பிரான்சின் அந்த ஏழை ஜோசப்பின் ஜாதகம் அவள் அரசியாவாள் என்றும், அவளின் வாரிசுகள் ராஜவம்சமாக வாழும் என சொன்னது

அவள் நம்பவில்லை, அதுவும் விதவையானபின் சுத்தமாக நம்பவில்லை

ஆனால் நெப்போலியனை அவள் அடைந்தபிறகு ராணி அந்தஸ்து பெற்றாள், இன்றளவும் ஐரொப்பாவின் சில நாட்டு அரச குடும்பம் அவள் வாரிசுகளே. அவள் ஜாதகம் உண்மையாயிற்று.

ஜாதகம் எப்படி சாத்தியம்?

ஒரு காலத்தின் மானிட இனத்திற்கு மாபெரும் வானியல் அறிவு இருந்திருக்கின்றது, கிரக சஞ்சாரங்களும் இயக்கங்களும் துல்லியமாக தெரிந்திருக்கின்றது

அந்த சக்திகளும் கிரக நிலைப்பாடுகளும் மானிட சிந்தனையில் மாற்றம் விளைவிப்பதை உணர்ந்தார்கள், அதை ஆய்வுசெய்தும் இன்னும் சில விளங்கமுடியா ஞானத்த்துடன் அதை கணக்கீடாக செய்து வைத்தார்கள்

மானிட இனம் உலகில் பிரிந்து பலபாகம் சென்றாலும் அது தொடரபட்டது, இந்துக்கள் அந்த பல்லாண்டுகால தொடர்ச்சியினை இன்றுவரை செய்கின்றார்கள்

ஜாதகம் என்பது உண்மையில் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிறவி கடமை இருக்கின்றது, காந்திக்கும் உண்டு பின்லேடனுக்கும் உண்டு. கலாமுக்கும் உண்டு கருணாநிதிக்கும் உண்டு

எல்லோருக்கும் ஆன்மா ஒன்றே, உயிரும் ஒன்றே. ஆனால் அவனவனுக்கு குறிபிட்ட சிந்தனைகளையும் அவன் செல்லும் பாதையினையும் நிர்ணயிக்கும் சக்தி எது?

ஒருவனுக்கு வரும் சிந்தனையும், ஆற்றலும் திறமையும் இன்னொருவனுக்கு ஏன் வருவதில்லை?

ஒருவன் சாதிப்பதை ஏன் இன்னொருவன் சாதிப்பதில்லை?

நெப்போலியன் எப்படிஅப்படி உருவானான்? கோவிலில் மணி அடிக்க வேண்டிய ராமானுஜன் எப்படி கணித மேதையானான்

ஐன்ஸ்டீன் ஏன் இயற்பியலை அவ்வளவு நேசித்தான்? எடிசன் மட்டும் ஏன் மின்விளக்கு சாத்தியம் என நம்பினான்?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரசனை, தேடல், சிந்தனை ஏன்?

எவ்வளவு சிறந்தவர்கள் என்றாலும் சிலருக்குள் நட்பு கூட துளிர்க்காதது ஏன்? சில பொருந்தா நட்பு கூட குறிப்பாக ஜெயா சசிகலா போக உருவாவது ஏன்?

ஜாதகபிரகாரம் ராசி பொருத்தம் என்பது அதுதான்..

ஆயிரம் பேர் அனுதினமும் பிறந்து மறைந்தாலும் சிலர் மட்டும் ஒவ்வொரு துறையிலும் வரலாறாய் நின்றுவிடுவது ஏன்?

அங்குதான் கிரகபலன்கள் ஒருவனை வழிநடத்தி செல்வதாக ஜாதகம் சொல்கின்றது

ஒவ்வொருவன் விதியும் உலகின் இயக்கத்துக்கு ஒத்துழைக்கும்

கிளைவ் இந்தியாவினை வெல்லமுடியும் என நம்பினான், அவனுக்கு ஒத்துழைத்தது அவனோடு இருந்த சிப்பாய்களின் ஜாதக பலன்

ஆம் கிரகங்கள் என்பவையும் அவற்றின் பலனும் ஒருவன் இப்பூமியில் எதனை எல்லாம் சந்தித்து கடக்க வேண்டுமோ அவற்றுக்கு உதவிசெய்யும்

விதிக்கு அவை ஒத்துழைக்கும்,

விதியினை வகுப்பவன் யார்?

அதுதான் ஏக இறைவன், அவனே எல்லாவற்றுக்கும் காரண கர்த்தா

ஒருவன் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தபின்புதான். அந்த நொடியில் இருந்துதான் ஜாதகமும் கிரகங்களும் வேலை செய்ய தொடங்குகின்றன‌

அந்த நேரத்தில் அவன் பிறக்க வேண்டும் என ஒரு சக்தி முடிவு செய்கின்றது அல்லவா? அதுதான் இறைவன்

ஜாதகம் என்பது மிக சரியான கணக்கு, ஆனால் ஒருவனை எந்த நேரத்தில் மிக சரியாக அந்த கிரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஆண்டவன் கணக்கு

ராக்கெட் முதல் கட்டை வண்டிவரை கிரகபலன்கள் உண்டு, ராட்டினம் போலவும் உண்டு

அதில் மிக சரியாக அமரவைப்பவன் இறைவன், கிரகங்கள் அதன் பலனை அதன் போக்கில் செய்யும்

உலகெல்லாம் ஜாதக தத்துவம் சொல்லும் உண்மை இதுதான்

அந்த மாபெரும் பாரம்பரிய தத்துவத்தைத்தான் காலமாற்றத்திலும் போராடி காத்துகொண்டிருக்கின்றது இந்துமதம்

சில மருத்துவர்கள் போலி என்றால் மருத்துவமே போலி அல்ல அல்லவா? அப்படி சில போலிகள் வருவதால் ஜோசியம் ஒன்றும் போலி ஆகிவிடாது.

இந்துக்களின் நம்பிக்கை எல்லாம் ஆழகவனித்தால், உலகின் பல இனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அன்று உலகெல்லாம் இருந்த நம்பிக்கையின் தொடர்ச்சியே அன்றி வேறல்ல‌

அதை இந்த உலகில் அம்மதம் ஒன்றுதான் பாதுகாத்தும் வருகின்றது, அதுதான் உண்மையான‌ பகுத்தறிவு

அதை நம்பவில்லை என்பதுதான் மூடநம்பிக்கை.

விஞ்ஞானம் இப்பொழுதுதான் வானமேடையில் 9 கிரகம் உண்டென்றும், அவற்றின் ஈர்ப்புவிசை சில பாதிப்புகளை செய்வது உண்மை என்றும் சொல்கின்றது

அந்த ஈர்ப்பும் கதிர்வீச்சும் மானிட வாழ்வின் சிந்தனையில் பிரதிபலிக்கின்றது என அது ஓர்நாளில் நிச்சயம் சொல்லும்

அதை என்றோ சொல்லிவிட்டதுதான் ஜாதக சாஸ்திரங்கள்..

முருக வழிபாடு தமிழருக்கு மட்டுமானது அல்ல, முன்பு இமயமலையினை ஒட்டியிருக்கும் சீன திபெத் மங்கோலிய பகுதியில் எல்லாம் அது இருந்திருக்கின்றது, அகத்திய எனும் இயமலை ரிஷி தமிழகத்துக்கு வரும்பொழுது முருகவழிபாடு தொடங்கியிருக்கலாம்

முருகன் ஒரு தத்துவ அடையாளம்

அக்காலத்தில் அந்த அறுகோண நட்சத்திரம் ஒரு வெற்றியின் அடையாளமாக இருந்திருக்கின்றது, ஞானிகளும் ரிஷிகளும் அதில் ஏதோ சக்தியினை கண்டிருக்கின்றார்கள். முருகன் சிலையின் கரங்களில் அது அமையுமாறு அமைத்தார்கள்

நாள்தோறும் அதை வணங்க சொன்னார்கள்

யூதர்களின் மாமன்னன் சாலமோனுக்கு எல்லா ஞானமும் இருந்தது, ஜோதிட ஞானமும் இருந்தது அவன் இந்த கார்த்திகை நட்சத்திரம் எனும் முருகனின் அறுங்கோண வடிவினை தன் கொடியாக வைத்தான்

தன் வாளில் கூட அவன் அதை பதித்திருந்தான்

இன்றும் இஸ்ரேலின் கொடியில் இருப்பது முருகபெருமானின் நட்சத்திரமே

மற்றபடி பைபிளில் எங்காவது இல்லை யூதரின் தோராவில் எங்காவது அந்த நட்சத்திரம் உண்டா என்றால் இல்லை

அவர்களின் அடையாளமான விளக்குதூண் பழைய ஏற்பாட்டில் உண்டு, ஆனால் இந்த நட்சத்திரம் எந்த இடத்தில் உண்டு?

யூதர்களுக்கும் ஜாதகம் உண்டு, பண்டைய விஷயமாக‌ இருந்த ஜாதகத்தில் அபார நம்பிக்கை கொண்டிருந்த சாலமன் அந்த கார்த்திகை நட்சத்திரத்தை தன் அடையாளமாக வைத்திருந்தான் , அவன் அரச முத்திரை நாணயம் கொடி என எல்லாவற்றிலும் இருந்தது

ஆம் உலகெல்லாம் பரவி இருந்த இந்து மதத்தில் ஜாதகம் ஒரு அங்கம், அதை ஞானி சாலமோன் கற்று மாபெரும் ஞானியாக வீற்றிருந்தான்

இன்றுவரை மேற்காசிய‌ ஞானிகளில் பெரும் ஞானி அவனே, பெரும் சுகவாழ்வு வாழ்ந்தவனும் அவனே

ஆம் அவனுக்கு அறிவு இருந்தது, தேடி தேடி படித்தான். எல்லா அறிவார்ந்த‌ தேடலும் இந்துமதம் எனும் கடலை நோக்கித்தான் வரமுடியும், அள்ள அள்ள குறையா மாபெரும் சமுத்திரம் அது

அவன் இந்து தெய்வங்களை வணங்கியிருக்கின்றான், அவன் யூதருக்கு அமைத்த கோவில் கூட இந்துக்கள் ஆலய சாயலிலேதான் இருந்திருக்கின்றது

இந்தியாவில் இருந்து சந்தணம், மயிலறகு, குரங்கு என பலவற்றை வாங்கி மகிழ்ந்திருக்கின்றான், அவன் அரண்மனையெங்கும் சந்தணம் மணத்திருக்கின்றது

அவன் ஜோதிடத்தில் மிகுந்த ஆய்வு செய்திருக்கின்றான், இந்துக்களின் கலைகளெல்லாம் கற்றிருக்கின்றான்

பறவைகள் விலங்குகளோடு பேசியிருக்கின்றான், ஆவிகளோடும் தெய்வங்களோடும் உறவாடியிருக்கின்றான், பெரும் பிரபஞ்ச ரகசியமெல்லாம் அவனுக்கு பரிட்சயமாயிருக்கின்றன‌

அவன் ஞானி என்பதால் பெண்களும் மயங்கியிருக்கின்றார்கள், 64 கலைகளும் அத்துபடியாயிருக்கின்றது

இந்து தெய்வங்களை அவன்வழிபட்டு பூஜையெல்லாம் செய்திருக்கின்றான்

அவன் அந்நிய தெய்வங்களை வழிபட்டதால் கடைசியில் யூதர்களின் தெய்வமான ஜஹோவா மனம் வருந்தியதாகவும் அவன் அரசை அவன் சந்ததிக்கு கொடுக்காமல் போனதாகவும் யூத் நூல்கள் தெரிவிக்கின்றன‌

ஆனால் அவன் இருந்தவரை அவன் ஆட்சிக்கும் அவன் ஞானத்துக்கும் அரசுக்கும் எந்த பாதிப்பும் வந்ததாக தெரியவில்லை,பெரு வாழ்வு வாழ்ந்திருக்கின்றான்

அவன் பக்தியின் உச்சத்தில் படித்த பாடல்கள் ஆண்டாள் மீரா பாடல்கள் போல சிலிர்ப்பானவை, அது பைபிளில் கூட உண்டு

ஏன் இதையெல்லாம் சொல்கின்றோம் என்றால் இன்று கிறிஸ்மஸ் பைபிள் என சொல்வோரெல்லாம் இந்த சாலமோனை பற்றி, இயேசபபவின் முன்னோர் பற்றி சொல்லவே மாட்டார்கள்

அவன் நிச்சயம் ஞானி மகா ஞானி, ஆனால் அந்த ஞானம் அவனை இந்துமதம்பாலும் இந்து ஜோதிடம்பாலும், இந்து ஆன்மீகம் நோக்கியே இழுத்துவந்தது

அவன் அறிவாளியாய் இருந்ததால் அதைத்தேடி வந்தான், ஜோர்டானின் சிறிய ஓடை அவன் தாகத்தை தீர்குடியாமல் போனபோது கங்கைக்குத்தானே அவன் வரவேண்டும்

எல்லா ஞானியரின் கடைசி தேடலும் முடிவும் இந்துமதமாகவே இருந்தது என்பதற்கு அந்த யூதர்களின் பெரும் மன்னனும் விதிவிலக்கல்ல, அவன் கடைசிகாலத்தில் இந்துவாகவேதான் வாழ்ந்து மரித்திருகின்றான், இந்து மதம் அவனை அவ்வளவ் ஆட்கொண்டிருந்தது

காரணம் அவன் ஞானியாய் இருந்தான்