அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 01 /21
1528 – 1530 – பாபர் காலப் போராட்டம்
அயோத்தி ராமர்கோவில் என்பது பாஜக தொட்டு உருவான விஷயம், அவர்களின் அரசியலுக்கு அடிப்படை காரணமாக உருவாக்கபட்ட விஷயம் என ஒரு பிம்பம் தமிழகத்தில் உண்டு.
உண்மை அது அல்ல, காலம் காலமாக சுமார் 500 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தை, பிரிட்டிசாரும் காங்கிரசும் உத்திரபிரதேச மாகாண கட்சிகளும் அடக்க நினைத்த போராட்டத்தை, இந்துக்கள் 500 வருடமாக உணர்வுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக நடத்திய போராட்டதினை 1980களில் ஆதரித்த கட்சி பாஜக.
அதுவும் ராமர்கோவில் விவகாரத்தில் ராஜிவ் ஏதோ சொல்லப்போக அதன் பின்புதான் அதனை பாஜக கையில் எடுத்தது.
அந்தப் போராட்டம் நீண்டது, உருக்கமானது, பல இடங்களில் கண்ணீரை வரவழைப்பது.
அப்படி என்ன பாவம் இந்துக்கள் செய்தார்கள் என்றால் அவர்கள் இந்துக்களாக இந்துஸ்தானில் பிறந்தது முதல் பாவம், ஒரு இந்து பெரும் பேரரசு அமைந்து வலுவான ராஜ்ஜியமாக விளங்கி அந்நியரை விரட்டியடிக்காமல் போனது அடுத்த பாவம்.
கஜினி தொடங்கி வைத்த கொள்ளைகள், அரேபிய துருக்கி பின்னணியில் ஆப்கானியர் நடத்திய கொள்ளைகள் கோரி காலத்தில் ஆட்சியாக வந்தது, பின் கில்ஜி காலத்தில் இந்து ஒழிப்பு இந்து ஆலய ஒழிப்பாக தொடங்கிற்று
அவர்களுக்கு ஏகபட்ட சுல்தானிய வல்லரசுகள் உஸ்பெக், துருக்கி, பாரசீகம் என பின்னணியில் இருக்க இந்துக்களுக்கு யாருமில்லை, இந்து பேரரசுகளுமில்லை
ராஜபுத்திரர்கள் சிதறி கிடந்தார்கள், ஆனால் பெரும் ஆபத்தென்றால் ஆப்கானியரை எதிர்த்தார்கள் எனினும் இந்து பேரரசு அமையாதது பெரும் பலவீனமாக இருந்தது
இந்த பலவீனத்தில் கில்ஜி, துக்ளக் என யாரெல்லாமோ ஆண்டு கடைசியில் இப்ராஹிம் லோடி அட்டகாசம் செய்துகொண்டிருந்தான்
அவனை ஒழிக்க பாபரை ஒரு கூலிபடையாக ராஜபுத்திரர்கள் அழைத்துவர, பீரங்கி சகிதம் வந்தவன் லோடியினை வீழ்த்திவிட்டு அவன் அமர்ந்துகொண்டான்
அவனையும் எதிர்த்து ராணா சங்கா போன்ற ராஜபுத்திரர்கள் வீரபோர் புரிந்தார்கள், அவர்களையெல்லாம் தந்திரமாக கொன்றுவிட்டு இனி இந்துஸ்தானம் தனக்கு என அமர்ந்துகொண்டான் பாபர்
அவனை பல மன்னர்கள் ஏற்கவில்லை ஆனாலும் அவனுக்கு உஸ்பெக் போன்ற பெரும் அரசுகளின் பின்புலம் இருந்ததாலும், இன்னும் ஆப்கானிய கொள்ளையர்களை அவன் கட்டுபடுத்துவான் என்ற நோக்கம் இருந்ததாலும் பலர் தயங்கினார்கள்
அந்த பாபர் இந்துஸ்தானத்தில் ஒரு பெரும் அரசை அமைக்க விரும்பினான்,அதற்கு இந்துஸ்தானத்தை மிக நன்றாக படித்தான் அவனுக்கு முன் எந்த பெரும் ஆப்கானிய அரசும் நிலைத்ததில்லை, இந்துக்களின் பெரும் எதிர்ப்பு அதை செய்தது
அவன் இந்துஸ்தானத்தின் ஆணிவேர் இந்துமதம் என்பதையும் இந்துக்கள் வாழ்க்கையில் அது எப்படி ஆழ ஊடுருவிருக்கின்றது என்பதையும் அறிந்து இந்துஸ்தான சாயலில் தன் கலாச்சாரத்தை புகுத்த விரும்பினான்
அப்போது அவனின் தேர்வு ராமனின் பெயரும் புகழுமாய் இருந்தது
இந்துஸ்தான அரசர்களெல்லாம் ராமனின் பெயரால் முடிசூடி ராமராஜ்யம் அமைப்பதையே கொள்கையாய் கொண்டிருந்தனர், வடக்கே பல மன்னர்கள் அயோதிக்கு வந்து வழிபட்டு ராமன் பெயரால் முடிசூடுவதை வழமையாய் கொண்டிருந்தனர்
தானும் அதில் பங்கெடுப்பதாக சொல்லி நுழைந்தான் பாபர், இந்துக்கள் புனிதமாக கருதும் இடத்தில் தனக்கும் பங்குவேண்டும் தானும் ஒரு இந்துஸ்தானி என புகுந்தான்
அவன் ஆட்சிக்காய் இந்துஸ்தானி என சொன்னானே தவிர மதத்தாலும் இனத்தாலும் அந்நியனாய் இருந்தான் அதைவிட்டுகொடுக்க அவனால் முடியவில்லை
இந்துக்கள் புனிதமாக வழிபடும் இடத்தில் நாங்களும் வழிபடுவோம் இனி இங்கு பாபரின் ஆட்சி என அவன் குழப்ப தொடங்கினான்
அவன் இந்துஸ்தானில் நிம்மதியாக இருந்தான் என சொல்லமுடியாது பெரும் கலகமும் எதிர்ப்பும் அவனுக்கு எதிராக நடந்துகொண்டே இருந்தன, இந்துக்கள் எதிர்ப்பை தெரிவித்துகொண்டே இருந்தனர், மேவார் ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட பலர் அவனை எதிர்த்து கொண்டே இருந்தனர்
ஆனால் அவனின் பலம் அராபியாவில் ஆப்கானில் உஸ்பெக்கில் துருக்கியில் இருந்தது, பெரும் சேனையினை அவனால் திரட்டமுடிந்தது
அப்படி திரட்டியவன் பல போர்களை செய்துகொண்டே இருந்தான், அப்போதுதான் அயோத்தியில் தங்களுக்கும் பங்கு வேண்டி அந்த கோவிலில் கால் வைத்தான்
அயோத்தி ஆலயம் பலமுறை இடிக்கபட்டது, கஜினி காலம் முதல் பலர் இடிக்க இடிக்க இந்துக்கள் கட்டிகொண்டே இருந்தார்கள், அப்பட ஒரு சிறிய ஆலயம் அங்கே இருந்தது
அதன் பூஜாரியாக பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ் என்பவர் இருந்தார், அது 1528ம் வருடாக இருந்தது
பாபரின் விருப்பபடி முதலில் அயோத்திக்கு வந்தவன் க்வாஜா அப்பாஸ் மூசா என்ற தளபதி அவன் ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ் என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தான், அவனுக்கு அந்த ஆலயம் மேலும் பூசாரி மேலும் ஒரு அபிமானம் ஏற்பட்டுவிட அவன் இவரின் சீடனாக மாறிவிட்டார்
பாபர் இதனை எதிர்பார்க்கவில்லை, துரோகி என அந்த தளபதியினை அறிவித்து அவனை கொல்ல ஜலால் ஷா என்பவனை அனுப்பினான்
பாபருக்கு ஏகபட்ட போர்கள் செய்யும் அவசியம் இருந்ததால் அப்போது நேரடியாக மோத எண்ணமில்லை, இதனால் இந்த ஜலால்ஷா பூசாரிக்கு இன்னொரு சீடன் போல் வந்து உளவாளியாக புகுந்து கொண்டான்
பாபர் சில யுத்தங்களில் வென்று தன்னை நிறுத்தியதும் தளபதி மீர்பாக்கி கானிடம் (Meerbaki Khan) என்பவனை படையோடு அனுப்பினான்
அவனே வலுகட்டாயமாக பள்ளிவாசல் அமைக்க முதல் மிரட்டலை விடுத்தான், பூஸாரி ஷ்யாமாநந்த மஹராஜ் பெரும் போரை துவக்கினார்
ஆனாஅல் உள்ளே சீடன் வேடத்தில் இருந்த ஜலால்ஷா பெரும் குழப்பம் செய்ய ஷ்யாமாநந்த மஹராஜுக்கு தோல்வி கிடைத்தது
17 நாள் பெரும் போருக்கு பின் இனி ஆலயத்தை காக்கமுடியாது என உணர்ந்த ஷ்யாமாநந்த மஹராஜ் புனிதமான விக்கிரங்களுடன் தப்பி சென்றார் அதை பலத்த ஏற்பாட்டில் காகக் ஏற்பாடு செய்தார்
(அதுதான் இப்போது கன்னட மடத்தில் இருப்பதாகவும், இப்போது கட்டபட்டிருக்கும் புதிய ஆலயத்தின் சன்னதியில் வைக்கபட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
அயோத்தி ஆலயம் இடிபட்டபோது, ஷ்யாமாநந்த மஹராஜ் விக்ரகத்தோடு தப்பியபோது தெற்கே நாயக்க அரசு இருந்ததால் இதுதான் பாதுகாப்பு என அந்த சிலைகள் இங்கே கொண்டுவரபட்டன
500 வருடமாக அதை காகக் இந்துக்கள்படும்பாடு துக்ளக் காலத்தில் திருவரங்க நாதன் சிலையினை காகக் அந்த மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரத்துக்கு ஈடானது)
இந்துக்கள் அப்போது அல்ல , நீண்ட காலமாகவே ஆலய இடிப்பையும் பின் மீள கைபற்றி ஆலயம் கட்டுதலையும் செய்துகொண்டே இருந்தவர்கள் என்பதால் எப்போதும் மூல சிலையினை மட்டும் பாதுகாப்பது வழமையாய் இருந்தது
ஆலயம் போனால் கட்டலாம் ஆனால் சிலை முக்கியம் என்பதால் அதைத்தான் பெரிதும்காத்தனர், அப்படி இந்த பாலராமர் சிலையும் காக்கபட்டது
எனினும் அந்த தளபதி மீர் பாக்கி ஷ்யாமாநந்த மஹராஜை கண்டறியமுடியவில்லை
சிலைகள் மாயமாயின என்பதை அவன் அறிந்து கொதித்தான்
அவன் அங்கே நிலை கொண்ட செய்தி அருகிருந்த பித்தி அரசன் ராஜா மெஹ்தாப் சிங்கிறு கிடைத்தது, அயோத்திக்கு தெற்கே சுமார் 50 மைல் தொலைவில் அவன் அரசு இருந்தது
அந்த பித்தி ராஜா மெஹ்தாப் சிங் பெரும் படையோடு வந்தான் சுமார் 2 லட்சம் இந்துக்கள் திரண்டனர், ஆனால் வலுவான பாபர் படையுடன் அவர்கள் திணறினார்கள், பெரும் அழிவு நடந்தது
இருமாதம் போர் தொடர்ந்தது, பாபர் அராபிய ஆப்கானிய தொடர்பில் பெரும் படையோடு முரட்டு படையோடு வந்ததால் அழிவுகள் அதிகரித்தன, 2 லட்சத்துக்கும் மேலான இந்துக்கள் கொல்லபட்டு மெஹ்தாப்சிங்கும் கொடூரமாக கொல்லபட்டான்
இந்த ரத்தத்தின் மேல்தான் பின் மசூதி கட்டபட்டது, இனி ராமன் ஆலய நினைவோ பெயரோ இருக்க கூடாது என கட்டபட்டது
வரலாற்றில் இது அதிசயமல்ல, எகிப்தில் பழைய எகிப்துமத ஆலயங்களை இடித்து அலெக்ஸாண்ட்ரியா என தன் பெயரை இட்டு ஒரு நகரை எழுப்பினான் அலெக்சாண்டர்
யூதர்களின் கோவிலை ஜெருசலேமில் இப்படி மாற்ற முயன்றான் நெபுகாத் நேச்சர், இன்னும் பல விஷயம் வரலாற்றில் உண்டு
அகஸ்டஸ் சீசர் காலத்தில் யூத ஆலயம் இடிக்கபட்டதும் அப்படித்தான்
ஒரு நாட்டை கைபற்றும்போது அங்கிருக்கும் எல்லாவற்றையும் அதன் தாத்பரியத்தையும் அழித்து தங்கள் மத அதிகாரத்தை நிறுத்துவது அரசர்கள் காரியம்
அதைத்தான் பின்னாளில் அமெரிக்க கண்டத்தில் பிரிட்டிசார் செய்தார்கள், பாபரின் தளபதி அதைத்தான் செய்தான்
அது மதரீதியான தாக்குதல் என்பதைவிட அரசை நிலை நிறுத்தும் முயற்சி என்றேதான் வரலாறு சொல்கின்றது
பள்ளிவாசலை கட்டியவன் இந்துக்களுக்கு எதுவுமில்லை என மறுத்து கூடுதலாக அந்த வளாகத்தில் கல்லறை தோட்டம் அமைக்க ஆரம்பித்தான்
இது இன்னும் ஆத்திரத்தை கிளறிற்று, இந்துக்கள் அடுத்த போருக்கு தயாரானார்கள்
சனேது நகர பிரமாணர் தேவதீன் பாண்டே போரைஇ தொடங்கினார், அவர் பல்வேறு ராஜபுத்திரர்களையும் அழைத்தார். இந்த கோவிலை இடித்து, சுடுகாடாக மாற்றுகிறார்கள். இந்தக் கொடுமையை மௌனமாகப் பார்ப்பதை விட ஸ்ரீராமனுக்காக உயிரை விடலாம், நான் ரிஷி பரத்வாஜரின் வம்சம் (பரத்வாஜர் வால்மீகியின் சிஷ்யர்), நீங்கலெல்லாம் சூர்ய வம்சத்தவர்கள், நாம் இணைந்து போரிடாவிட்டால் இந்துஸ்தானம் நமக்கல்ல என அவர் துணிச்சலுடன் போரை தொடங்கினார்
அந்த பிரமாணர் பெரும் வெற்றி பெற்றார், ஐந்து நாள் போரில் அவர் பல மொகலாய தளபதிகளை கொன்று அந்த மீர் பாக்கியினை நேருக்கு நேர் சந்தித்து கொல்லும் அளவு சென்றார், ஆனால் தந்திரமிக்க மீர் பாக்கி தன் சிப்பாயினை அவரின் பின்னால் இருந்து தாக்க செய்து அவரை வீழ்த்தினான்
சுமார் ஆயிரம் பேரை கொன்று வீழ்ந்தார் அந்த தேவதீன் பாண்டே, இப்போதும் லட்சம் இந்துக்கள் கொல்லபட்டனர்
சராயு நதிக்கு ஈடாக ஒரு ரத்த ஆறு ஓடிற்று
அத்தோடு போராட்டம் முடியவில்லை சில நாட்களில் ஹன்ஸ சமஸ்தான மன்னன் ராஜா ரணவிஜய் சிங் , 25 ஆயிரம் பேருடன் வந்து 4 லட்சம் பேர்கொண்ட மீர் பாக்கி படையோடு மோதினான்
பத்து நாட்கள் நடந்தபோரில் அவன் படையோடு அவனும் வீழ்த்தபட்டான். ஆனால் இந்துக்கள் சிறிதும் பெரிதுமாக போர்களை நடத்தினார்கள்
இந்துக்கள் தோற்றுபோக ஒரே காரணம் கடைசிவரை அறவழிபோர் செய்தார்கள், ஆயுதம் இல்லாதவனை தாக்க கூடாது, மறைந்திருந்து அடிக்க கூடாது, இரவில் போர் செய்யகூடாது, காலாட்படை வீரனை குதிரை யானையில் இருந்து தாக்க கூடாது, எதிரி படை குதிரைகளை தொடகூடாது என எல்லாமே தர்மம்
ஆனால் பாபர் தரப்பு அதற்கு தலைகீழாக போரிட்டாலும் இந்துக்கள் அறத்தைவிடவில்லை, அழிந்தாலும் அறத்தோடு அழிந்து தாக்குபிடித்தார்கள்
பாபர் இந்துஸ்தானில் நான்கு ஆண்டுகளே ஆட்சிசெய்தான் அதற்குள் அவன் மரணம் சம்பவித்தது, அவன் மரணத்துக்கு பின் இந்துக்கள் சீறி எழுந்தனர் பெரும் போர் வெடித்தது
ஜென்மஸ்தான் மசூதி என மொகலாயர்களால் சொல்லபட்ட மசூதி அருகே ராமனுக்கு குடிசை போட்டு பின் சிறியகோவில் கட்டி தங்கள் உரிமையினை இந்துக்கள் விடாபிடியாக காட்டிகொண்டே இருந்தார்கள்
பாபருக்கு பின் குழப்பம் அதிகரித்தது, ஆனாலும் ஹுமாயுன் எனும் பாபரின் மகன் தாக்குபிடிக்கலாம் என நம்பினான், ஆனால் இந்துக்களின் உக்கிரப்போர் முன் அவன் தடுமாறினான்
ஹூமாயுன் காலத்திலும் அயோத்தியில் பெரும் யுத்தங்கள் தொடர்ந்தன
இந்துக்களுக்கு அயோத்தி என்பது இடமல்ல உணர்வு என்பதும், ராமன் என்பவன் தெய்வம் மட்டுமல்ல உயிரில் கலந்தவன் என்பதையும் தொடர்ந்த போர்கள் காட்டிகொண்டே இருந்தன
சிறிதும் பெரிதுமாக பல்நூறு போர்கள் நடந்தாலும் 76 யுத்தங்கள் கடுமையானவை, 1530 முதல் 1934 வரை சுமார் 400 ஆண்டுகள் நடந்த போர்கள் அவை
எந்த இனமும் செய்யாத வீரமிக்க உணர்ச்சிபோரை இந்துக்கள் அவ்வளவு தீவிரமாக தொடுத்து நடத்தினார்கள், விழ விழ எழுந்து அடித்துகொண்டே இருந்தார்கள்
(தொடரும்..)
(அயோத்திக்காக நடந்த பெரும் போர்களின் கால அளவு, கன்னடத்தில் இருக்கும் ஆதிகால அயோத்தி ஆலய சிலைகள், மொகலாய படைகளுக்கு பெரும் அழிவை கொடுத்து வீழ்ந்த துறவி தேவதீன் பாண்டே)