அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 05 /21
1827 – 1856 காலப் போராட்டம்
காலம் 1820ம் ஆண்டை தொட்டது, அப்போது மொகலாயம் ஓய்திருந்தது மிக சிறிய அரசாக சுருக்கபட்டிருந்தது
மொகலாயத்தில் இருந்து சிதறிய சுல்தான்களெல்லாம் ஆளாளுக்கு தனி ராஜ்ஜியங்களை அமைத்து தனி ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள், ஆனால் எந்த சுல்தானாவது நிம்மதியாக இருந்தானா என்றால் இல்லை
இந்துக்கள் சீக்கியர்களின் பெரும் போர் அனைத்து சுல்தான்களையும் முடித்துவிடும் வேகத்தில் இருந்தது
இக்காலகட்டத்தில் ஆப்கானிய சுல்தான்களுக்கு சேனைகளுக்கு சிக்கல் இருந்தது, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் ஆனால் முரட்டு அடியாட்கள் ஆப்கன் அராபியா என மேற்கில் இருந்துதான் வருவார்கள்
இப்போது மொகலாயமில்லை மேலும் சீக்கியர்கள் மேற்கு எல்லையினை அடைத்தபின் சுல்தான்களுக்கு படை தட்டுப்பாடு உண்டாயிற்று, இந்த காலகட்டத்தில்தான் துப்பாக்கி,பீரங்கிகள் என பிரிட்டிசார் கூலிபடையாக உள்ளே நுழைந்தார்கள்
இப்படித்தான் தமிழக ஆற்காடு நவாப், வங்கத்து நவாப் என எல்லா இடங்களிலும் நுழைந்தார்கள்
பிரிட்டிசாரை பொறுத்தவரை தொழில் செய்ய வந்தவர்கள், அது ஆயுத விற்பனையோ அடியாள் வேலையோ சரியாக செய்தார்கள், சுல்தான்களோ இந்துமன்னர்களோ யார் வலுத்தவர்களோ அவர்கள் பக்கம் சரிந்து நல்ல வருமானமும் பல இடங்களில் ஆட்சியினையும் நிர்மானம் செய்தார்கள்
1827ல் பிரிட்டிசார் வலுவாக கடலோரங்களில் காலூன்றி உள்பக்கம் நோக்கி வியாபாரம், சமாதன ஒப்பந்தம், கூலிபடை என நுழைந்துகொண்டிருந்தார்கள்
இந்துஸ்தானமெங்கும் குழப்பமும் நிலையற்ற தன்மையும் இருந்த காலமது
அப்போதும் இந்துக்கள் அயோத்தி ராமர்கோவிலுக்கான யுத்தத்தை விடவில்லை அதி தீவிரமாக போராடி கொண்டிருந்தார்கள், பெரும் போராட்டமாக அது வலுத்தது
இப்போது மக்ராஹி சமஸ்தான மன்னர் கிருஷ்ண பிரசாத் சிங் என்பவர், இவர் மக்ராஹி சமஸ்தான அரசராக இருந்தார், இது அயோத்தி அருகே இருந்த ஹன்ஸ்வர் (ராஜா ரண்விஜய்சிங், ராணி ஜெயகுமாரி ஆண்ட பகுதி) பிரதேசம் அண்டிய பகுதியாக இருந்தது
இனி சுல்தான்களை ஒடுக்குவது எளிது என அவர் போர்தொடுத்தார், அப்போது இருந்த நவாப் நஸ்ருதீன் ஹைதர் என்பவன்
இந்த நஸ்ரூதின் ஒரு மாதிரியான ஆசாமியாக இருந்திருக்கின்றான், வங்கத்தின் சிராஜ் உத்தவ்லா இருந்தது போல போதையும் கொண்டாட்டமுமான சுல்தானாக இருந்திருக்க்கின்றான்
இப்படிபட்டவர்களை பின்னால் இருந்து ஆட்டிவைத்து ஆயுதமோ போதைவஸ்துவோ எதுவோ விற்று பெருமளவு சம்பாதிப்பது பிரிட்டிசார் வியாபாரம், அவர்கள் துணையில் இவன் ஆடிகொண்டிருந்தான்
ஆங்கிலேயர் அவன் பின்புலம் இருந்தார்கள், ஆனாலும் ராஜா கிருஷ்ணபிரசாத்சிங் விடாமல் தாக்கினார்
ஆனால் ஆங்கிலேயர் குவித்த நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என பலம் இருந்ததால் இந்துக்கள் பக்கம் சேதாரம் அதிகம் இருந்தது
ஆனாலும் இந்துக்கள் மீண்டு எழுந்து தாக்கினார்கள், விழ விழ எழுந்து தாக்கினார்கள். ஒருமுறை விழுந்தாலும் பின் சில மாதங்களில் அல்லது வருடங்களில் மீண்டெழுந்து போராடினார்கள்
இருவருடங்களுக்கு ஒருமுறை பெரும் போர் நடந்துகொண்டே இருந்தது, இந்துக்கள் விடாமல் போராடி கொண்டே இருந்தார்கள்
இக்காலகட்டத்தில் ஆலயம் இல்லையே தவிர ராமனுக்கான வழிபாடு சிறிய குடிசையில் அந்த வளாகத்தில் நடக்கத்தான் செய்தது, எப்படியோ போராடி உரிமை இழக்காமல் அதை தடைகளை மீறி செய்து வழிபட்டு கொண்டே உரிமையினை காத்தார்கள்
ஆனால் ஆலயம் கட்டமட்டும் சுல்தான்கள் விடவில்லை , இந்துக்களும் ஒய்வதாக இல்லை, சண்டை நீடித்து கொண்டே சென்றது
பலமுறை இப்போர் நடந்தது, அதில் மூன்று போர்கள் கடுமையானவை அதிகம் இந்துக்கள அதிகம் பிரிட்டிஷ் ஆயுதங்களால் பாதிக்கபட்டார்கள்
இந்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் இன்னும் திரண்டார்கள், ஹன்ஸ்வர் ராஜாவும் அந்த ரண்விஜய் சிங் வழிவந்தவனுமான கஹூர்கத், தீயரா மன்ன, அமேதி மன்னன் என பலர் கலந்து கொண்டார்கள்
அதே நேரம் சுல்தானுக்கும் ஆங்காங்கே இருந்து உதவிகள் வந்தன, பிரிட்டிசாரும் உதவினார்கள்
1837ல் கடைகட்ட போர் உக்கிரமானது, சுல்தான் படையின் தாக்குதலில் இந்துக்களின் படை தோற்க தொடங்கி எட்டாம் நாளிலே நிலமை தலைகீழானது
பிரிட்டனின் நவீன துப்பாக்கிகள் இன்னும் பல அன்றைய அபாய ஆயுதங்கள் பரிசீலிக்கபட்டன காலம் காலமாக இருந்த போர்முறை மாற்றமடைந்தது இந்துக்கள் திணறினார்கள்
பிரிட்டிசாரின் இன்னொரு கணக்கு இந்துக்களை ஆதரிப்பதை விட சுல்தான்களை ஆதரித்து உரிய நேரம் சரித்துபோட்டால் ஆட்சி தங்களுக்கு என்றதாக இருந்தது
இந்துக்களுக்கு ஆதரவாக சென்று சுல்தானை வீழ்த்திவிட்டால் இந்துக்களால் என்ன லாபம்? ஒன்றுமில்லை இன்று சுல்தானை எதிர்ப்பவர்கள் நாளை நம்மை எங்கே வைப்பார்கள் என கணக்கிட்டு சுல்தான் பக்கமேதான் நின்றார்கள்
மொகலாயத்தை இந்துக்கள் சரித்துபோட்டு , அப்படி சிதறிய மொகலாயத்தின் ஒவ்வொரு பாகத்தையும் பிடித்து பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சி அமைத்தபடி வேகமாக வளர்ந்தார்கள்
இதனை இந்துக்களும் உணர்ந்தார்கள், அந்நேரம் கடற்கரை தாண்டி பிரிட்டிசார் வரமாட்டார்கள் என்ற இந்துக்களின் கணக்கு பிழையாகிவிட்டது
கடும் வேகத்தில் பிரிட்டிஷ் சுல்தான் கூட்டுபடைகள் இந்துக்களுடன் மோதின, அனுமன் கட்டி அருகே இந்த போர் எட்டாம்நாள் நடந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது
இந்துபடைகள் தோற்கும் நேரம் மிகபெரிய சாதுக்கள் படை காசியில் இருந்து வந்தது, சிம்டாடாரி சாதுக்கள் வந்தபின் சுல்தானிய படைகள் திணறின
தோல்வியியின் விளிம்புக்கு சுல்தானிய படைகள் சென்றன, இந்த போர் பல இடங்களில் பரவிற்று
மிக பெரிய போரில் இந்துக்களே வென்றார்கள், அயோத்தி மீட்கபட்டது, ஆனால் பின்பு திரண்டுவந்த சுல்தான்கள் படை மீண்டும் அயோத்தியினை எதிர்பாரா வகையில் கைபற்றியது
இதற்கு பல காரணங்கள் இருந்தன, பிரிட்டிசார் வேகமாக மேற்கு பக்கமும் ஊடுருவினார்கள், பல சுல்தான்களை கூட்டணி என சரித்தார்கள் , பலரோடு ஒப்பந்தம் செய்தார்கள், பல இடங்களில் இந்துக்களை குழப்பினார்கள்
தேசமெங்கும் ஒரே குழப்பமும் போருமாக குழம்பி கிடந்தது, இதனால் அயோத்தி மறுபடியும் அமைதியானது பிரிட்டிசார் சதியில் பெரும் பஞ்சமும் வந்த காலமது
ஆனால் அது அடுத்த பத்தாண்டுகளில் மீண்டும் வெடித்தது போர்
1847ம் ஆண்டு மறுபடியும் ஏகபட்ட இந்துமன்னர்களும் மக்களும் கூடி அயோத்திய சுல்தானை எதிர்த்தார்கள், தேசமெங்கும் சுல்தான்கள் அட்டகாசம் ஒடுக்கபட்ட நேரமது, அதனால் இவனும் குறிவைக்கபட்டான்
அப்போது வஜித் அலி ஷா ஆலம் எனும் சுல்தான் ஆண்டுகொண்டிருந்தான், அவனின் ஆட்சி மோசமாக இருந்தது பிரிட்டிசார் மறைமுகமாக ஆள தொடங்கினார்கள்
போர் தொடங்கும்போது பல இடங்களில் ஆங்கில ஆட்சி இருந்தது, அயோத்தியில் இந்துக்களுக்கு எதிரான படையில் இருந்தால் தங்கள் மேல் மக்கள் கோபம் திரும்பும், இந்துமக்கள் தங்களை நோக்கி திரும்புவார்கள் என புதிதாக ஆளதொடங்கியிருந்த பிரிட்டிசாருக்கு அச்சம் வந்தது
இதனால் அவர்கள் இம்முறை விலகினார்கள் ,சுல்தானும் அவன் வீரர்களும் மட்டும் களத்துக்கு வந்தார்கள்
அனுமன் கட்டி அருகே நடந்த போரில் நான்கு நாட்களிலே சுல்தான்படை முறியடிக்கபட்டது இந்துக்கள் அயோத்தியினை கைபற்றினார்கள்
அனுமன் கட்டி என்பது அயோத்தியின் அனுமன் கோவில், வனவாசம் முடிந்து சீதையினை மீட்டு அயோத்தி திரும்பிய ராமனுடன் அனுமன் வந்து வசித்த இடத்தில் உருவான ஆலயம்
பால ராமன் போலவே பால அனுமன் அங்கிருப்பார்
அவர்தான் அயோத்தியின் காவல் தெய்வம் என்பது நம்பிக்கை, இன்றும் அயோத்தி செல்வோர் அந்த அனுமனை சந்தித்துவிட்டுத்தான் செல்வார்கள்
ஆக்கிரமிப்பு காலங்களில் அதுவும் இடிபட்டது ஆனால் அக்பர் காலத்தில் அது மீண்டும் கட்டபட்டது, அயோத்தியின் சக்திவாய்ந்த ஆலயம் அது என்பது இந்துக்கள் நம்பிக்கை
இதனால் பிரசித்தியான போர்களெல்லாம் அந்த ஆஞ்சநேயரை முன்னிட்டுத்தான் நடக்கும்
இந்தபோரை பிரிட்டிசாரும் கண்காணித்தனர், காரணம் பெருவாரியான இடங்களில் அவர்கள் ஆட்சி இருந்தது, இந்துக்களை பற்றி நிறைய அவர்கள் படித்திருந்தார்கள், இந்துக்களின் பலம் பலவீனமெல்லாம் அலசி அறிக்கை அறிக்கையாக படித்தார்கள்
இதனால் இந்த போரின் முடிவுகளை கவனித்தார்கள்
இந்துக்கள் சுல்தான்படைகளை வென்று அவர்கள் குலத்தை சூழ்ந்தாலும் பெண்கள், குழந்தைகள், பசுக்களையெல்லாம் சிறிய துன்பமும் இன்றி விடுவித்ததையும், அவர்களுக்கு வேண்டிய காவலை செய்ததையும் தவறாமல் குறித்தும் வைத்தார்கள்
இந்துக்களிடம் ஒரு அறநெறியும் சத்தியமும் இருப்பதை அறிந்து இந்துக்களை ஆளும் தந்திரத்தை எல்லாம் கற்றுகொண்டார்கள்
1847ம் ஆண்டு மான்சிங் எனும் ராஜபுத்திர மன்னன் தலமையில் ஒளரங்கசீப் இடித்த ஆலயத்தை பெரிதாக கட்டினார்கள், புதுகோவிலில் ராமர் சிலை வைக்கபட்டு எங்கும் கொண்டாட்டம் உச்சத்தில் இருந்தது
அயோத்தி முழுக்க விடுவிக்கபட்டதாக இந்துக்கள் கொண்டாடியபோது சுல்தான்களின் கடைசி முயற்சியாக துருக்கி மற்றும் அராபியாவில் இருந்து படைதிரட்டி வந்து மறுபடி இஸ்லாமிய ஆட்சி தொடங்க சில சுல்தான்கள் முயன்றார்கள் அது முடியவில்லை
அது பல இடங்களில் சிக்கலாகி இன்னும் ஆங்காங்கே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கே எதிராக இந்துக்கள் எழ, பிரிட்டிசாரை பொது எதிரியாக கருதி சுல்தான்கள் சிலரும் எழ மறுபடியும் கலவரபூமியானது இந்துஸ்தானம்
இதனை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1857ல் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்திய ஆட்சியினை எடுத்துகொண்டது
இனி இந்துக்களுக்கு அரசர்கள் இல்லை இருந்தாலும் சக்தி இல்லை, இஸ்லாமியருக்கு சுல்தான்கள் இல்லை இருந்தாலும் மூலையில் வைக்கபட்டனர்
இனி இந்துக்கள் ஆயுதம் ஏந்த முடியாது, முன்புபோல மன்னர்கள் படைதிரட்ட முடியாது, போர் பயிற்சி இந்துக்கள் பெறமுடியாது
இனி பிரிட்டிசார் வைத்ததுதான் சட்டம்
அதுவரை போர்மூலம் ரத்தம் சிந்தி உயிர்களை கொடுத்தது போல இனி உடனே எழமுடியாது , இனி எல்லாவற்றுக்கும் பிரிட்டிசார் அனுமதி அவசியம்
வியாபாரத்துக்கு வந்த கூட்டம் இந்துக்களுக்கும் ஆப்கானியருக்கும் இடையே நடந்தமோதலின் நடுவே புகுந்து தன் வியாபார புத்தியால் ஆட்சியினை கைபற்றியது
அதுவரை இந்தியருக்கு தெரியாத புது புது சட்டதிட்டங்களை அறிவித்தது
இனி இந்துக்கள் வாளேந்த முடியாது, படைதிரட்ட முடியாது, போர் என கிளம்ப முடியாது. அவர்கள் கரங்கள் கட்டபட்டன
இஸ்லாமிய ஆட்சியில் இருந்த சுதந்திரம் கூட பிரிட்டிஷ் ஆட்சியில் இல்லாமல் போயிற்று, இந்து மன்னர்களுக்கு மரியாதை இருந்ததே தவிர அதிகாரமில்லை
இனி இந்துக்களுக்கு தலைவன் இல்லை, அதிகாரமில்லை, படை இல்லை, எதுவுமில்லை எனும் நிலையில் அந்த பள்ளிவாசல் ஒருபக்கம், மான்சிங் அமைத்த ஆலயம் ஒருபக்கமுமாக அயோத்தி நிலைகொண்டிருந்தது
இஸ்லாமிய ஆட்சியினை அகற்றிவிட்டால் இது இந்துபூமி அப்போது யாருடைய அனுமதியும் அவசியமில்லை என கருதிய இந்துக்களுக்கு எதிர்பாரா விதமாக பிரிட்டிசார் ஆட்சிக்கு வந்தது அதிர்ச்சியளித்தது
தங்கள் தந்திரமாக மோசம்போய்விட்டதாக உணர்ந்தார்கள், சுரண்டல்களும் ஆங்கில ஏகபோகமும் அதிகரித்தது
அதுவரை இருந்த எல்லா இந்துபாரம்பரியங்களும் தாக்குதலுக்குள்ளாயின மதமாற்றங்கள் வேகமாக அதிகரித்தன, இந்து துவேஷங்கள் துளிர்விட்டன
பிரிட்டிசாரின் ஆட்சிமுறையும் வழிமுறையும் இந்திய தர்மத்தில் இருந்து வேறுபட்டது
இந்திய தர்மம் ஒருவனை வாழவைக்கும், ஒரு சிக்கல் என்றால் அதனை தீர்த்துவைக்கும்
ஆனால் அவர்கள் வழி அதுவல்ல, ஒருவன் சிக்கிவிட்டால் அவனை குழப்பத்தில் வைத்தே அவனிடம் இருந்து எல்லாம் பறித்து தான் வாழ்வது அவர்கள் ஆட்சிமுறை
எங்கிருந்தோ வந்து ஆட்சியினை கைபற்றியவர்கள் இந்துக்களை குழப்பத்திலும் ஒரு மோதலிலும் வைத்திருப்பதே தங்களுக்கு நல்லது என கண்டார்கள்
அதுவரை அதாவது பிரிட்டிசார் காலம் வரை இங்கு இந்துஸ்தானிகள் ஆப்கானியர் என மோதல் இருந்ததே தவிர இந்து இஸ்லாம் என மோதல் இல்லை
இந்து மன்னர்கள் படையில் இஸ்லாமியர் உண்டு, சுல்தான்கள் படையில் இந்துக்கள் உண்டு. அப்படித்தான் இருந்தது நிலை
ஆப்கானிய சுல்தான்களுக்கு எதிரான போரையே இந்துக்கள் நடத்தினார்களே அன்றி இஸ்லாமியர் என்பதற்காக அல்ல
பிரிட்டிசார் இதனை இந்து இஸ்லாமிய மோதலாக வரையறுத்து இவர்கள் இருவரும் மோதிகொண்டே இருந்தால்தான் இந்தியாவினை சுரண்டுவது எளிது என அதர்ம அரசியல் செய்தார்கள்
இனி அயோத்தியின் எதிர்காலம் போர்களில் அல்ல நீதிமன்றங்களில் வாதங்களில் வரலாற்று ஆவணங்களில் என காலம் சொல்லிற்று
இனி நீதிமன்ற காலம் அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி நீதிமன்றங்களில் ஆங்கிலம் கற்று வாதிட்டுத்தான் இனி ராமர்கோவிலை மீட்டாக வேண்டும்
இந்துக்கள் கொஞ்சமும் கலங்கவில்லை கதறவில்லை, சுமார் 250 ஆண்டுகால போராட்டத்தில் ராமபிரான் ஆலயம் முழுக்க மீட்க முடியாவிட்டாலும் தங்கள் உரிமையினை விட்டுகொடுக்கவில்லை உணர்வை விடவில்லை பாதி வெற்றி பெற்றுவிட்டோம் என நம்பிக்கை கொண்டார்கள்
இனி என்ன எனும் கேள்வி எல்லா இந்துக்களிடமும் வந்தது?
நாம் வாதிட்டு வெல்லவேண்டும், அவ்வளவுதானே? இது வாதத்தால் வளர்ந்த மதம் அல்லவா? ஆதி சங்கரர் வாதத்தால் மீட்ட மதம் அல்லவா?
சம்பந்தரும், அப்பரும் வாதம் ஒன்றால்தானே இந்துமதம் மீட்டார்கள என கண்ணீரை துடைத்து எழுந்தார்கள்
இனி வாளால் அல்ல அறிவால் வெல்லவேண்டிய காலம், அந்த அறிவை வளர்க்க ஆங்கிலம் அவசியம் இக்கால உலக கல்வி அவசியம் மாற்றம் அவசியம் என வரிந்துகட்டினார்கள்
இந்துக்கள் உரிமையினை பெற இனி ஆங்கிலமும் கல்வியும் உலக அறிவும் பெறுதல் அவசியம் என உணர்ந்தார்கள்
அதுதான் அவர்களை கல்வி நோக்கி இழுத்தது, வாள் முனையில் செய்யவேண்டியதை இனி வாதங்கள் வார்த்தைகள், கல்வியால் செய்யவேண்டும் என முடிவெடுத்தார்கள்
வாள்முனையில் போராடி பல லட்சம் உயிர்களை வீரர்கள், அரசர்கள், பெண்கள், சாதுக்கள் என இழந்து பாதி உரிமை மீட்ட இந்துக்கள் நீதிமன்ற படியேற கல்விகற்க ஆரம்பித்தார்கள்
அயோத்தி உள்ளிட்ட இந்துக்கள் சிக்கலினால் எப்படியெல்லாம் இங்கு குழப்பலாம் மக்களை கதறவைத்து திசைமாற்றலாம் , இந்தியா பூர்வீக இந்து நாடு அல்ல குடியேற்ற நாடு என அந்நியருகு உரிமை கொடுத்து நாமும் உரிமை எடுத்து சுரண்டலாம் என பல திட்டங்களோடு பிரிட்டிசார் சிரித்தனர்
முரட்டு ஆப்கானியரோடு வாள்முனையில் யுத்தம்செய்த இந்துக்கள், சட்டென புதிய சூழலில் தந்திரமும் மோசடியுமிக்க சகுனி போல வந்து நின்ற பிரிட்டிசாருடன் எப்படி அறிவால் மோதுவது என குழம்பினாலும் சுதாரித்தார்கள்
ராம்பிரான் புன்னகைக்க தொடங்கினார், காட்சிகள் வேகமாக மாற ஆரம்பித்தன
எந்த நீதிமன்றம் என்றாலும் எந்த வாதம் என்றாலும் எந்த மாதிரி மோதல் என்றாலும் தர்மம் எங்களுடன் உண்டு, நாங்கள் ஏன் அஞ்சவேண்டும் என தைரியமாக அடுத்தகட்ட போரை இந்துக்கள் தொடக்கினார்கள்
அது ராமன் நேரடியாக செய்த போர் போல அல்லாமல், இந்திரஜித்தனுடன் செய்த போர் போல மிக மிக மாயமாய் மந்திரமாகத்தான் இருந்தது
ஆனாலும் அனுமன் துணையுடன் அப்போர் நடந்தது போல இந்துக்களும் பலம் பெற்று நின்றார்கள், ராமபிரான் எவ்வளவு சக்திகொண்டவர் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவர் என்பதை ஆப்கானியர் கண்டது போல பிரிட்டிசாரும் காணும் காலம் நெருங்கிகொண்டிருந்தது
250 ஆண்டுகளாக தலைமுறைகள் மாறின, ஆட்சிகள் மாறின, காலமும் காட்சியும் வாழ்க்கையும் மாறின, எல்லாமும் மாறிற்று
ஆனால் இந்து உணர்வு மட்டும் மாறாமல் இந்துக்களிடையே அப்படியே எரிந்துகொண்டிருந்தது, எதுவும் அதை மாற்றமுடியவில்லை நெருங்க கூட முடியவில்லை, அந்த மதத்தின் சக்தி அதை அதிசயமாக செய்துகொண்டிருந்தது
(தொடரும்..)