அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 18 /21
காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்
அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கினை செய்த அமைப்புக்களில் காஞ்சி மடத்துக்கும் பெரிய பங்கு உண்டு
காஞ்சிமடம் எப்போதுமே இந்துக்களுக்கு, இந்து ஆலயங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் ஓடிவந்து உதவ முயலும், பிரச்சினையினை தீர்க்க முயலும்
அதுதான் தமிழக ஆதீனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், அந்த மடத்தை இந்து துவேஷ கும்பல்கள் குறிவைப்பதும் அதனால்தான்
தமிழகத்தில் மீனாட்சிபுர மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் என எத்தனையோ இடங்களில் காஞ்சிமடம்தான் வந்தது வேறு யாரும் அதைபற்றியெல்லாம் கவலைபடமாட்டார்கள்
அப்படியான மடம் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்திலும் பங்களிப்பை செய்தது
1986ல் காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ப்ரயாகை (அலகாபாத்) பக்கம் யாத்திரையில் இருந்தார், அப்போது ராஜிவ்காந்தி பொது தரிசனதுக்காக ராம்லல்லாவினை திறந்த காலமாக இருந்தது
இதனால் அவரும் அங்கே செல்ல விரும்பினார், நடைபயணம் மேற்கொண்ட அவர் ப்ரதாப்கர்ஹ், சுல்தான்பூர் வழியாக அயோத்திக்கு 7ம் தேதி சென்றடைந்தார்.
அதற்குள் காஞ்சியிலிருந்து பட்டு குடையும், விசிறியும் (சத்ரம், சாமரம்) செய்து மஹாஸ்வாமிகள் ப்ரயாகைக்கு பண்டிதர்களுடன் விமானத்தில் அனுப்பி வைக்கபட்டது
அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் இந்த விவகாரத்தில் சரியாக இருந்தார்.
சுவாமிகளின் யாத்திரை அயோத்தியினை அடைந்த சமயம் காஞ்சியிலிருந்து முதல் மரியாதைகளும் குழந்தை ஸ்ரீ ராமருக்கு வந்து சேர்ந்தது. அவற்றை ராம தரிசனம் செய்து சமர்ப்பித்து வணங்கினார் பெரியவர்
அதன் பின் அனைவரும் ப்ரயாகை திரும்பினார்கள். அங்கே 9 நாட்கள் தங்கி வால்மீகி ராமாயண பாராயணமும், துளசிதாசரின் ராமசரிதமானசும் பாராயணமும் செய்தனர்.
அது முதல் அய்யோத்தியில் ராமர் கோவில் வர அனைவரையும் ராம நாமா எழுத ஊக்கப்படுத்த தொடங்கினார் அந்த ஸ்வாமி, அப்படி எழுதுபவர்களுக்கு வெள்ளி காசு ப்ரசாதமாக கொடுத்தார்.
நாமம் எழுத புஸ்தகம் விநியோகித்து 13 கோடி ராம நாம எழுத இலக்கு வைத்தார்..
உண்மையில் சுதந்திர இந்தியாவில் ராம ஜன்ம பூமி போராட்டங்கள் சிறிதும் பெரிதுமாக இருந்து வந்தாலும் 1980 களில் தான் வலுவடைந்தது, அப்போதுதான் தீவிரமானது
வி.ஹெச்.பி. கோரக்பூர் மடத்துடன் சேர்ந்து ந்யாஸ் என்னும் கரசேவை தொடங்கியது, அதுதான் பின்னாளைய பெருவெற்றிக்கு காரணமானது
இதற்கான மூல பலம் தமிழகத்தில் இருந்துதான் அயோத்தி போராட்ட காரர்களுக்கு கிடைத்தது என்பது இன்னொரு ஆச்சரியம்
இந்திய தமிழகம் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரசித்தியானது, ஆனால் மராட்டிய இந்துக்களுக்கு பின் அவுரங்கசீப்பின் தளபதி செஞ்சி வேலூர் கோட்டையினை கைபற்றியபின் அது சீரழிந்து கிடந்தது
அது பிரிட்டிஷ் காலத்திலும் தொடர்ந்தது, அப்படியான லிங்கத்தை 350 வருடங்களுக்கு பிறகு புனர் ப்ரதிஷ்டை செய்ய உதவியவர் காஞ்சி பெரியவர்.
உண்மையில் காஞ்சிமடம் செய்த பெரிய சாதனை அது, எவ்வளவோ சர்ச்சைகளை தாண்டி அங்கே காஞ்சி மடம் சாதித்தது, அதன் பின் ஒரு கோவில் கும்பாபிஷேகமும் நன்றாக நடந்தது. இந்த சம்பவம் தான் வி.ஹெச்.பி.க்கு கரசேவை எண்ணத்தை வித்திட்டது.
தமிழகத்தில் 350 ஆண்டுக்கு முன்னரான ஆலயத்தை மீள எடுக்கமுடியுமென்றால் இங்கே என் முடியாது என அவர்கள் உத்வேகம் பெற்றது அப்படித்தான்
2002 ல் வாஜ்பாய் மத குருமார்களிடம் ஒரு கோரக்கை வைத்தார். இங்கு பிரிந்து கிடக்கும் எல்லோருடனும் பேசி அமைதியாக முடிவினை எட்ட யாராவது வரவேண்டும் என மனமுருகி கேட்டார் வாஜ்பாய்
வழக்குக்கு அப்பாற்பட்டு தீர்வு என்பது அவரின் விருப்பமாய் இருந்தது
ராமருக்காக அந்த பொறுப்பை ஏற்க முன் வந்தார் பெரியவர் ஸ்ரீ ஜயேந்த்ர சரஸுவதி ஸ்வாமிகள்.
அதை பிராமணருக்கான மடம் என்பதெல்லாம் அபத்தம், அது இந்துக்களுக்கான மதம், வழக்கம் போல் இந்துக்களுக்கான சேவையினை அயோத்தியில் தொடங்கிற்று
டில்லியில் உள்ள காமாக்ஷி கோவிலின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தான் பேச்சுவார்த்தை நடந்தது. பல ஹிந்து தரப்பு தலைவர்களிடம் வி.ஹெச்.பி.யின் திரு. அஷோக் சிங்கால். ராம ஜன்ம பூமி ந்யாஸ் தலைவர் மஹந்த் யோகி அவைத்யநாத்,நிர்மோஹா அக்காரா சாதுக்கள், வட நாட்டு ஆன்மீக மடங்கள், சங்க பரிவார் என அனைவருடனும் பேச்சுவார்தை நடத்தினார் சுவாமிகள்
இந்து ஒற்றுமையினையும் அதன் அவசியத்தையும் எடுத்துரைத்து எல்லோரையும் ஒன்றாக்க முயன்றார்
இந்த வழக்கை கவனித்தால் உக்களுக்கு புரியும், இந்துக்களும் நிர்மோஹி அக்காரா எனும் அமைப்பும் தனி பிரிவாகத்தான் இருந்தன, வழக்கு முடியும் வரை நோக்கம் ஒன்றாய் இருந்தாலும் பிரிவு இரண்டாக இருந்ததை அனுமானிக்கலாம்
இந்த ஒற்றுமையின் அவசியத்தைத்தான் பெரியவர் எடுத்து சொன்னார்
இந்துக்கள் தரப்பு மட்டுமல்ல இஸ்லாமிய தரப்பிடமும் அவர் பேசினார். இதில் பள்ளிவாசல் குழுவின் தலைவரும், வழக்கு தொடர்ந்திருந்த சஹாபுதினும் உண்டு
மேலும் அதிலாபாத், பைசாபாத், வாரணாசி ஜமாத் தலைவர்களிடம் அவர்கள் ஊருக்கே சென்று பேசினார்.
முஸ்லிம் தரப்பினர் கோவிலின் பகுதியாக இருக்கும் காமாட்சி அம்மன் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வர தயங்கியபோது, வேறு ஒரு பொது இடத்திற்கு பெரியவர் தானே சென்று பேசினார்.
கோவில் கட்டுவதுதான் எங்கள் நோக்கமே தவிர மசூதியை இடிப்பது அல்ல. மசூதி இருந்த இடத்தை விட்டுவிட்டு, கோவில் கட்ட தான் விரும்பினோம் என்ற ஹிந்துக்களின் எண்ணத்தை அவர்களுக்கு பல முறை சொல்லி புரிய வைத்தார். அவரிடம் இருந்த நேர்மை அவர்கள் நம்பினார்கள்.
வேறு இடத்தில், அவர்கள் விரும்பிய இடத்தில் மசூதி கட்ட அரசிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாக அதற்கு அவர்களை சம்மதிக்கவும் வைத்தார்.
முஸ்லிம் தரப்பு ஒரு கட்டத்தில் அவரை முழுக்க நம்பினர். அரசியல்வாதிகளை நம்ப மாட்டோம். ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறோம் என்றனர்
இது நடந்த உண்மை, காஞ்சி பெரியவரின் பெரும் முயற்சியால் எல்லாம் கைகூடி வந்த காலம் இருந்தது
அவர் இன்னும் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் என அனைவரையும் கலந்து பேசி திட்டமிட்டார். முதலில் மசூதி கட்டிக்கொடுத்துவிட்டு தான் மற்றதை யோசிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.
தினமும் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து அன்றைய பேச்சுவார்த்தை விவரங்களையும் மக்களிடம் சொல்வதையும் செய்தார்.
ஓரளவுக்கு ஏராளமான மக்களுக்கு உண்மையினை புரியவைத்தார், அந்த புரிதல்தான் தீர்ப்பு வந்து இப்போது கோவில் திறக்கபடும் போதும் நிலவும் மவுனத்துக்கு காரணம்.
பொதுவாக ஆச்சார்யர்களுக்கு பூஜை, ஜப, வ்ரத நியமங்கள் அதிகம். அதிலும் மடாதிபதிகளுக்கு இன்னும். அவற்றில் எதையும் குறைத்துக் கொள்ளாமல் அதையும் செய்துகொண்டு ஸ்ரீ ராமனுக்காக பாடுபட்ட அரும்செயல் போற்றத்தக்கது
எல்லாம் சுமூகமாக தீர்வை நோக்கி நகர்ந்த தருணத்தில் மறுபடி சில விஷமிகளால் சமாதான முடிவு கலைந்தது. இந்து ஆன்மீகவாதி ஒரு முடிவினை எட்டிவிட்டால் அரசியல்வாதிக்கு வேலை இல்லை என இந்து துவேஷிகள் எல்லாம் குழப்பிவிட அவரின் முயற்சி முழுக்க கைகூடவில்லை
ஆனால் 1986 முதல் இறக்கும் காலம் வரை எவ்வளவோ தடைகள் வந்தாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் ராமர்கோவில் அமைய பாடுபட்டுகொண்டே இருந்தார்
தமிழகத்தில் ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் சொல்லபடலாம், பாம்பும் நடுங்கும் கொடிய குற்றசாட்டுக்கள் கூறபடலாம் ஆனால் வேலூர் கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் செய்வித்து அதை கொண்டே ராமர்கோவிலுக்கு பெரும் எழுச்சி கொடுத்து அதற்காக உழைத்து பெரும் அமைதி கொண்டுவந்த அவரை மறக்க முடியாது
அவர் இஸ்லாமிய மக்களோடு பெரும் இணக்கபாட்டுக்கு வந்திருந்தார், அந்த சமூகம் அவரை நம்பி கட்டுபட்டது, பின்னாளைய குழப்பங்களால் முடிவு எட்டபடவில்லை என்றாலும் இஸ்லாமியர் அவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கை மாறவில்லை
அதனால்தான் அவர் முக்தி அடைந்த அன்று ஏகபட்ட இஸ்லாமியர் வந்து அஞ்சலிசெலுத்தினார்கள், அது வரலாறு
அயோத்தியின் பெரும் விழா அன்மிக்கும் நேரம் அந்த காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சுவாமிகளும் பெரும் நன்றியோடு நினைவுக்கு வருவார், அந்த ஆலய கட்டடத்தில் ஒரு தூணாக அவர் சேவை என்றும் நிலைத்திருக்கும்.