அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 19 /21
பாஜக தன் அரசியல் ஆதாயத்துக்காக ராமர்கோவிலை எடுத்தது அதனால் ஆட்சிக்கு வந்தது என்பதெல்லாம் அபத்தம், அந்த ராமர்கோவில் என்பது 500 ஆண்டுகால சிக்கல்
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பெரு போராட்டத்தை அது சந்தித்தே வந்தது, சுதந்திர இந்தியாவில் அது இந்துமக்கள் போராட்டமானது
ஆச்சரியம் என்னவென்றால் எந்த கட்சியும் அதனை கண்டுகொள்ளவில்லை, காங்கிரஸ் அதை தீர்த்துவைத்திருந்தால் பாஜக பின்னாளில் எழும் அவசியமே வந்திருக்காது
காங்கிரஸ் என்றல்ல, ஜனதா தளமோ, முலாயம்சிங்கோ யாரோ ஒருவர் அதனை கையில் எடுத்திருந்தால் கூட அங்கே பாஜகவுக்கு அவசியமே இல்லை
அது என்னவோ தெரியவில்லை சுதந்திர இந்தியாவில் இன்றுவரை இந்துக்களுக்கான தனி இந்து கட்சி என எதுவுமில்லை, பாஜக கூட தேசத்தை முன்னிறுதும் கட்சி அன்றி முழு இந்துகட்சி அல்ல
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம் லீக் இருந்தது, காங்கிரஸ் இருந்தது ஆனால் இந்துக்களுக்கான அரசியல் கட்சி என எதுவுமில்லை
இந்துக்கள் கட்சி அரசியலை விரும்பவில்லை ஆனால் தங்கள் கோரிக்கையினை ஆதரிக்க்கும் கட்சிக்கு ஏங்கி நின்றார்கள் இது நிஜம், ஆனால் யாரும் அதனை செய்யவில்லை
இந்துக்களுக்கு வி.எ.பி, பஜ்ரங் தள் என இயக்கங்கள் இருந்ததேதவிர அதனை அரசியலாக மாற்ற எந்த கட்சியுமில்லை
ஆர்.எஸ்.எஸ். ராமர்கோவிலை ஆதரித்தது ஆனால் அது முழுக்க முழுக்க இந்து இயக்கம் அல்ல அது தேசிய இயக்கம் தேர்தலில் பங்குபெறாத இயக்கம்
இந்து மக்கள் இயக்கமாக அயோத்தி ராம் ஜெனமபூமி பெரிதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புத்தான் செய்தது
1982ல்தான் பாஜக தொடங்கபட்டது, 1986ல் ல் வி. ஹெச். பி. தலைவர் திரு. அஷோக் சிங்கல் கரசேவை தொடங்கிய போதுதான் பாஜக ஆதரித்தது, அதாவது கரசேவையினை ஆதரித்தது
ஒரு கட்சி ராமர்கோவிலுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கையினை ஆதரிதது அப்போதுதான் முதல் தடவையாக நடந்தது, அதுவும் ஒரு ஆதரவு அவ்வளவுதான்
ராஜிவ்காந்திதான் ராமர்கோவிலை கையில் எடுத்த முதல் தலைவர், சீக்கிய முரண்பாடு காங்கிரஸின் வீழ்ச்சி, ஊழல் சிக்கல்களை மறைக்க உபியில் காங்கிரஸ் ஆட்சியில் ராமர்கோவில் கட்டி தரபடும் என சொன்னவர் அவர்தான்
அதன் பின்பே விவகாரம் அரசியலாயிற்று, . 1989ல் ஹிமாசல ப்ரதேசம், பாலம்பூரில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் நடந்த பாஜக கட்சி காரியக்குழுவில் ராம ஜன்மபூமி கோவில் கட்டும் கோரிக்கையை தங்கள் கட்சியில் எடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. தேர்தல் வாக்குறுதிகளிலும் சேர்த்தது.
அதன் பின்பே பாஜக ராமர்கோவிலை தீவிரமாக ஆதரித்தது
அவர்கள் அந்நேரம் எல்லா போராட்டங்களையும் நடத்தினார்கள், கவனித்தால் தெரியும் ராமர்கோவில் ஒன்றை மட்டும் பற்ற்கொண்டிருக்கவில்லை
காஷ்மீர் போராட்டம், இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஊர்வலம், வடகிழக்கு மாகாண சிக்கல் என எல்லாவற்றுக்கும் போராடினார்கள்
அக்காலகட்டத்தில் தமிழக மண்டைக்காடு கலவரங்களுக்கு கூட ஓடிவந்தார்கள்
பாஜக மதவாத கட்சி என்பவர்கள் அதே1980களில் வாஜ்பாய் கருணாநிதியின் “டெசோ” அமைப்பில் பங்குபெற்று இலங்கை தமிழருக்காக போராடியதை மறந்துவிடுவார்கள்
உண்மை அதுதான் அன்று பாஜக எல்லா போராட்டத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தது, ராமர்கோவிலும் அதில் ஒன்று
இனி அரசியல் விழிப்புணர்வை கொடுக்காமல் ராமர்கோவி சிக்கல்தீராது என்றுதான் பாஜக தன் ரதயாத்திரையின அறிவித்தது
1990ல் எல். கே. அத்வாணியின் தலைமையில், அஷோக் சிங்கல், நரேந்த்ர மோடி மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு ராம ரத யாத்திரையை மேற்கொண்டார். 10000 கி.மீ. எட்டு மாநிலங்கள் உட்பட.
ரத யாத்திரை முழு ஏற்பாடு செய்தவர்களில் மோடியும் ஒருவர்.
பாஜக ரத யாத்திரையால் சிக்கல்களையும் சந்தித்தது, எந்த கட்சியும் சந்திக்கா சிக்கல்களையெல்லாம் சந்தித்தது
ரத யாத்திரைக்கு எல். கே. அத்வாணி கைதானார். ராம பக்த கரசேவகர்களை போலிஸ் துப்பாக்கி சூடு நடத்திய பெரும் களபேரம் செய்தது, பாஜக தொண்டர்களும் செத்தனர்
அதன் பின்பே மத்திய அரசிலிருந்து வெளிவந்தனர்.
1992 டிசம்பரிலும் கரசேவைக்காகத்தான் எல்லா பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் எல். கே. அத்வாணி, வாஜ்பாய், முரளி மனோஹர் ஜோஷி, கல்யாண் சிங், விஜயராஜ் சிந்தியா, உமா பாரதி, நரேந்திர மோடி அயோத்தியில் கூடினர்.
அச்சம்பவத்தை காங்கிரஸ் தடுத்திருக்கலாம், உரிய முடிவினை செய்திருக்கலாம் ஆனால் மக்களின் கோபத்தை மறைமுகமாக தூண்டிவிட்டார்கள், நிச்சயம் காங்கிரசுக்கும் டிசம்பர் 6, 1992ல் தொடர்பு ரகசியமாக உண்டு
பின் என்னவெல்லாமோ நடந்தன பாஜக பல மாகாணங்களில் ஆட்சி இழந்தது, தலைவர்கள் மேலெலலம் வழக்கு பாய்ந்தது
பாஜக அப்போதுதான் இன்னும் தீவிரமானது, ஏன் தடுக்கின்றார்கள்? யார் தடுக்கின்றார்கள் என்பதை எல்லாம் கவனித்தது
அதிகாரம் இல்லா இந்துக்கள் அடிதான் படுவார்கள், ஒரு மதம் வாழ அரசியல் பலம் அவசியம் என்பதை உண்ர்ந்தார்கள், அப்படித்தான் நிலமையும் இருந்தது
பெருவாரி இந்துக்கள் வாழும் நாட்டில் இன்னும் ராமருக்கான ஆலயம் இழுத்து கொண்டிருந்தால் அது அரசியல் பலவீனம், இந்துக்களின் அரசியல் பலவீனம் அன்றி வேறென்ன?
1992ல் மோடி பகிரங்கமாக சொன்னார், அந்த மோசி மோடி சபதம் எடுத்தார். குழந்தை ராமருக்கு கோவில் வர உழைப்பேன், அது வரை அயோத்தி வர மாட்டேன் என்றார்
அதன்பின் என்னென்ன நடந்தது என்பதை எல்லோரும் அறிவோம், அவர் அதற்காக உழைத்தபோதுதான் மொத்தமாக் முடக்க கோத்ரா ரயில் எரிப்பும் கலவரமும் ஏற்படுத்தபட்டது மோடி அதனை கடந்து வந்தார்
1992க்கு பின் அவர் அயோத்திக்கு சென்றது 2020ல்தான்
காரணம் அயோத்தியினை சுற்றி சுற்றிவந்து அதை கொண்டு அவர் அரசியல் செய்ய விரும்பவில்லை, மக்களிடம் பணி செய்துவிட்டு நம்பிக்கை பெற்றுவிட்டுத்தான் இப்படி ராமர்கோவிலுக்கும் நலல்முடிவினை தருவோம் என்றார், அதுதான் இப்போது சாத்தியமாயிற்று
1992ல் என்னனெவோ நடந்தது, அந்த கலவரத்தில் போலிஸை உபயோகப்படுத்த மத்திய காங்கிரஸ் வற்புறுத்திய போதும் உ.பி தலைவராக இருந்த திரு கல்யாண் சிங் மறுத்தார். ராம பக்தர்கள் மீது எதுவும் செய்யமாட்டேன் என உறுதியாக இருந்தார்.
கல்யாண்சிங் அரசு, அந்த பாஜக அரசு ஆட்சியினை ராமர்கோவிலுக்காக் இழந்தது, அதுவும் அயோத்தியில் மட்டுமல்ல, ஹிமாச்சல், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் என நான்கு மாகாணங்களில் இழந்தது
எந்த கட்சி அந்த சவாலை எடுத்தது? பாஜகதான் எடுத்தது
வாஜ்பாய் காலத்திலும் சமாதான பேச்சு வார்த்தையை பா.ஜ.க. தான் முயற்சித்தனர் பலாத்கார வழிகள் எதையும் அவர்கள் செய்யவில்லை
1992ல் நடந்தது மக்கள் எழுச்சி, காலம் காலமாக ஏமாற்றபட்டு பின் சுதந்திர இந்தியாவிலும் ஏற்பட்ட இழுபறியால் ஆத்திரமான மக்கள் எழுச்சி
1949ல் தொடரபட்ட வழக்கில் கடைசிவரை தீர்ப்பு இல்லை, 1975 அகழ்வாராய்ச்சி முடிவினையும் வெளியிடமாட்டோம் என காங்கிரஸ் அடம்பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த எழுச்சி வந்திருக்காது
காங்கிரஸ் செய்த குழப்பங்களே மக்களை எழுப்பியது அதுதான் நிஜம்
கடைசியில் பாபர் மசூதி இடிபாட்டிற்கு முழுதாக கெட்ட பெயர் சுமப்பது பாஜக ஆர்.எஸ்.எஸ் அத்வாணி, உமா பாரதி, முரளி மனோஹர் ஜோஷி பழிகளை சுமந்தனர்
பாஜக கட்சி அரசியலாக மட்டுமல்ல நீதிமன்றத்திலும் வாதாடியது, 13. அலஹாபாத் நீதிமன்றத்தில் குழந்தை ராமருக்காக பா.ஜ.க.வின் திரு. ரவி ஷங்கர் ப்ரசாத், வழக்காடினார அதையெல்லாம் ஏனோ மறந்துவிட்டார்கள்
அயோத்தி என்றல்ல நாடுமுழுக்க பாஜகவின் தேவை இருந்தது இந்துக்களுக்கு அவ்வளவு சிக்கல்கள் இருந்தன, அச்சிக்கல்கள் தொடமுடியா அளவு அச்சமூட்டும் வகையில் இருந்தன
எல்லோரும் அஞ்சி ஓடினார்கள், இந்து இயக்கங்களே அரசியல் கட்சியானால் என்னென்ன வரும் என யோசித்து தயங்கின
ஆனால் பாஜக தைரியமாக அதை தொட்டது, மக்களிடம் இருந்த வெற்றிடத்தை நிரப்பியது
நிச்சயம் அதை காங்கிரசோ ஜனதாவோ செய்திருந்தால் பாஜக எழும்பியிருக்காது, யாரும் செய்யவில்லை என்பதால் பாஜக களமிறங்கியத் வெற்றிபெற்றது
நிச்சயம் பாஜக செய்ய தவறியிருந்தால் இன்னொருவர் செய்திருப்பார்கள்
பாஜகவின் பெரும் சாதனை எதையுமே சத்தமில்லாமல் சாதிப்பது, காசி உஜ்ஜைனி என சிக்கலான இடங்களில் ஒரு சத்தமோ கலவரமோ இல்லாமல் சாதித்தார்கள்
வடகிழக்கில் காஷ்மீரில் அதையே செய்தார்கள்
2014ல் மோடியு யோகியும் வந்தபின்பும் பலாத்காரமாக கோவிலை அயோத்தியில் கட்டவில்லை, வெகு நிதானமாக நீதிமன்ற தீர்ப்பினை பெற்று, அந்த தீர்ப்பு அடிபடையில்தான் கட்டுகின்றார்கள்
ராமர்கோவிலுக்காக சுதந்திர இந்தியாவில் போராடியவர்கள் பலர் உண்டு அவர்களில் கோரக்பூர் மடாதிபதிகள் (பா.ஜ. க.) அனைவருமே (யோகி திக்விஜய் நாத் 1949ல், யோகி அவைத்யநாத் 1986ல், யோகி ஆதித்யநாத் ) மறக்கமுடியாதவர்கள்
இவர்கள் ஆதரவினை பாஜக பெற்றபின்புதான் எல்லாம் சாத்தியமாயிற்று, அவர்கள் நம்பிக்கையினை பாஜகவினர் காத்து கொடுத்தார்கள்
ராமர்கோவில் வரலாற்றில் சுதந்திர இந்தியாவில் மறக்கமுடியா நபர் அசோக் சிங்கல்
அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர் நல்ல படிப்பாளி, 16 வயதில் RSS ல் சேர்ந்தார் பின் படிப்பு முடித்ததும் RSS ல் முழு நேரம் வந்தார். உ.பி யில் வேலை செய்தார்.
அவரின் உழைப்பை பார்த்து 1980களில் விஹெச் பி அவரை இழுத்து கொண்டது. ராமஜன்ம பூமிக்கு பெரிய அளவில் எழுச்சி குடுத்தவர் அவர்தான்
1984 ல் மாநாடு நடத்தி ஹிந்துக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கரசேவை தொடங்கினார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் பாரதமெங்கும் இருந்து கோவில் கட்ட ஸ்ரீராம் என எழுதிய செங்கற்கள் லட்சக்கணக்கில் அயோத்திக்கு அனுப்பினர். பலர் வெளிநாட்டிலிருந்தும் அனுப்பினர்.
2001ல் மத்திய அரசில் இருந்த பாஜக வை கோயில் கட்ட முயலவில்லை என எதிர்த்து ராம ஜன்ம பூமி க்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கினார், பெரும் போராட்டங்களை செய்தார்
2015 தனது 89 வயதில் ராமர்கோவிலை காணாமல் ஆனால் விரிந்த கண்களுடன் மரித்துபோனார்
நிச்சயம் அவர்தான் முக்கியமானவர் அதை மறுக்கமுடியாது, அவர் பாஜக அல்ல
அத்வாணி நிச்சயம் மறக்கமுடியாதவர், உயிர் ஆபத்து மிரட்டல்களை கடந்து ரதயாத்திரை செய்தவர் அவர்தான்
அயோத்தி என்பது உபி மாகாண இந்துக்களின் பிரச்சினை என முடக்கபட்ட நேரம் அது அகில இந்திய இந்துக்களின் உணர்வு என இந்துமக்களிடம் நாடெங்கும் கொண்டு சேர்த்தவர் அவர்தான்
ஆக பாஜகவின் உழைப்பு ராமர்கோவில் விவகாரத்தில் முக்கியம்தான், ஆனால் அதை வாக்கு அரசியலுக்கோ அரசியல் ஆதாயத்துக்கோ அவர்கள் செய்யவில்லை
இந்துக்களுக்கான வலுவான கட்சி இல்லாமல் இருந்தது, அப்படி ஒரு கட்சி வராதவறு பல சக்திகளும் குழப்பமும் இருந்தன, பாஜக அந்த சவாலை தொட்டது
ஆனால் பாஜக முழு இந்து கட்சியா என்றால் இல்லை அது தேசாபிமான கட்சிதான், அதன் ஒரு அங்கம்தான் இந்து ஆதரவு, இந்துக்களுக்கு அது போதுமானதாக இருந்தது கைகொடுத்தார்கள்
ஆக பாஜக வாக்குவங்கிக்காக ராம்ர்கோவிலை தொட்டது என்பதெல்லாம் சரியல்ல, இந்துக்களுக்கு அரசியல் பிரதிந்தித்துவம் இல்லாமல் இருந்தது பாஜக அதை நிரப்பியது
அவர்கள் இல்லையென்றால் இன்னொருவர் வந்திருப்பார்கள்
இப்போது பாஜகவின் மோடி பிரதமராக அந்த திறப்புவிழாவினை முன்னின்று செய்கின்றார், குழந்தை ராமர் விக்ரஹம் அவரால் நாளை ஸ்தாபிக்கபடுகின்றது
இந்த ஐநூறு வருட வரலாற்றை யோசித்தால் ஒரு காட்சி ராமாயணத்தில் இருந்தே நினைவுக்கு வருகின்றது
ராவண சம்ஹாரம் முடிந்து ஓய்ந்திருக்கும் ராமன் அனுமனிடம் சொல்வான்
“அனுமானே, ராவணன் ஒன்றும் வெல்லமுடியாதவன் அல்ல, கத்தரிவீரியன் அவனை கொன்றிருக்கலாம், பலமுறை அவனை வாலில் கட்டி இழுத்துவந்த வாலி கொன்றிருக்கலாம்
ஏன் மகா பராக்கிரமசாலியான் நீ கொன்றிருக்கலாம், சீதை நான் உடைத்த வில்லை இடது கையால் தூக்கும் பலசாலி அவள் ஒரே அடியில் ராவணனை கொன்றிருக்கலாம்
ஆனால் எல்லோரும் விட்டுவிட்டு என கையில் அவனை ஒப்படைத்தீர்களே, இன்று என்னைத்தானே உலகம் கைகைகாட்டுகின்றது, நான் விரும்பியா இதை செய்தேன்”
அவனின் துயர் கண்ட அனுமன் சொன்னான்
“ராமா, எல்லா தெரிந்த நீ கலங்கலாமா? இவ்வளவு பேரால் கொல்லமுடிந்த ராவணனை ஏன் யாரும் கொல்லாமல் விட்டுவைத்தார்கள், தேர்ந்தெடுத்தவன் வரும்வரை யாராலும் எதுவும் செய்யமுடியாது, எவன் தேர்ந்தெடுக்கபட்டானோ அதுவரை காலம் வாய்ப்பை யாருக்கும் கொடுக்காது என்பது உனக்கு தெரியாதா?
அதனாலே யாருக்கும் தராத வாய்ப்பினை தேர்ந்தெடுக்கபட்ட உனக்கு காலம் தந்தது என்பதை அறிவாய் தெளிவாய்”
இதுதான் மோடிக்கும் நடந்தது, அந்த பள்ளிவாசல் பிரச்சினை 17ம் நூற்றாண்டிலே முடிந்திருக்கும், அகல்யாபாய் கட்டியிருக்கலாம், ரஞ்சித்சிங்க் கட்டியிருக்கலாம் ஆனால் கட்டவில்லை
பின் ராஜபுத்திர மன்னர்கள் கட்டியிருக்கலாம், போரில் வென்ற சாதுக்கள் கட்டியிருக்கலாம் செய்யவில்லை
பிரிட்டிசார் கட்டியிருக்கலாம் செய்யவில்லை, சுதந்திர இந்தியாவில் நேரு கட்டியிருக்கலாம் இன்னும் பலர் கட்டியிருக்கலாம்
யாருக்கும் வராத வாய்ப்பு மோடிக்குத்தான் வந்தது
இன்னும் அழுத்தமாக சொன்னால் மோடி வரட்டும் அவர் செய்யட்டும் என காலம் வாய்ப்பினை பிறரிடம் இருந்து தட்டி தட்டி சென்றது
இன்று மோடி கையால் எல்லாம் நிறைவேறுகின்றது , இது எங்கோ எப்போதோமுன் குறிக்கபட்ட ஒன்று
அதனால் பாஜக தன் வளர்ச்சிக்காக அயோத்திகோவிலை தொட்டது என்பது அபத்தம் , எல்லா தேசிய பிரச்சினை போலத்தான் யாருமற்ற இந்துக்களுக்கு அவர்கள் உதவ வந்தார்கள், தேசம் அவர்களுக்கு கைகொடுத்தது
எல்லாம் சுபமாயிற்று
அனுமர் ராமனிடம் சொன்ன வார்த்தைகள் மோடிக்கு மிக பொருத்தமானவை, தேர்ந்தெடுக்கபட்ட ஆத்மா அதனை சரியாக செய்கின்றது
1992ல் எத்தனையோ தலைவர்கள் இருந்தபோது ராமர்கோவில் கட்டாமல் அயோத்தியில் இனி கால்வைக்கமாட்டேன் என அவர் ஏன் சொல்லவேண்டும்?
எல்லோரும் எதை எதையோ செய்தபோது உள்ளே அயோத்தி நெருப்பை வைத்து முதல்வராக அவர் தன்னை நிரூபித்து பிரதமராக வேண்டும்
பிரதமரான பின்னும் ஆயிரம் தடைகளை கடந்து காசி, உஜ்ஜைனி என தொட்டுவிட்டு இப்போது அயோத்திக்கு வரவேண்டும்?
இன்று திருவரங்கம், ராமேஸ்வரம் என விரதமிருந்து சுற்றும் மோடியினை மட்டும் பார்த்துவிட்டு ஏதேதோ சொல்வது சரியல்ல
அவர் முடிப்பது 11 நாள் விரதமல்ல, 32 வருட தவம் மிகபெரிய தவம், ஒரு நொடி கூட விடாது மனதால் அவர் செய்த தவம்
அந்த தவம்தான் அவருக்கு அந்த பெரும் பாக்கியத்தை கொடுத்திருக்கின்றது, விரதம் முடிக்கும் அந்த ராஜரிஷிக்கு எல்லா நலமும் விளையட்டும்
தான் எதற்கு தேர்ந்துகொள்ளப்பட்டோம் என்பதை உணர்ந்து ஒரு நொடி அதைவிட்டு விலகாது, எத்தனையோ பெரும் போராட்டங்களுக்கு பின் தன் தவத்தில் அவர் வெல்கின்றார்
அதுதான் ராமபிரானின் பெரும் கருணை, அந்த கருணையில்தான் அவர் மூலமாக பெரும் நன்மையினை தேசம் காண்கின்றது
பகீரதன் தவம் பற்றி புராணத்தில் படித்ததுண்டு, மோடி வடிவில் அதை நேரில் கண்டோம்..
இதோ அந்த ராமனருள் கங்கையாக இறங்கி ஓடத் துவங்குகின்றது.