அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 20 /21
இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் மனதார நன்றி சொல்ல வேண்டிய பெரும் பட்டியல் உண்டு, அவர்கள் செய்த பெரும் போராட்டமும் அர்பணிப்பும்தான் அந்த புண்ணிய பூமியினை மீட்டு கொடுத்திருக்கின்றன
அவர்களை காலகிரமமாக நினைந்து நன்றி தெரிவிப்போம்
அன்று சிறிதும் பெரிதுமாக 76 போர்களில் உயிர்நீத்தவர்கள்
பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ், ராமர் கோவில் பூஜாரி, அயோத்யா
ராஜா மெஹ்தாப் சிங், பீத்தி மற்றும் ஒரு லட்சம் படை வீரர்கள்
ராஜா ரண்விஜய் சிங், ஹன்ஸ்வர் மற்றும் 24000 படை வீரர்கள்
ராணி ஜயகுமாரி கன்வர், ஹன்ஸ்வர், ராஜா ரண்விஜய் சிங்கின் விதவை ராணி மற்றும் 3000 பெண் படை வீரர்கள்
தேவதீன் பாண்டே, சனேதூ
ஸ்வாமி மஹேஸ்வரானந்தர் (ராணி ஜயகுமாரி கன்வர் குரு) மற்றும் 10000 படை வீரர்கள்
ஸ்வாமி பலராமாச்சாரி (தமிழ்நாட்டின் போர்கலை குரு)
ஸ்ரீ வைஷ்ணவ்தாஸ் (ஸமர்த்தர் குரு ராமதாஸர் சிஷ்யர்) மற்றும் ராஜபுத்ர வீரர்கள்
சராய் ராஜா – சர்தார் கஜ்ராஜ் சிங் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
ரஜேபூர் ராஜா – குன்வர் கோபால் சிங் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
சிர்சிந்தா ராஜா – தாகூர் ஜகதம்பா சிங் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
சிம்ட்டாதாரி சாதுக்கள் 10000 சாதுக்கள்
சீக்கிய குரு கோவிந்த் சிங் மற்றும் ஐயாயிரம் நிஹங்க வீரர்கள்
5000 ராஜபுத்ர வீரர்கள்
ஜய்பூர் ராஜா – மஹாராஜா இரண்டாம் ஜய் சிங்
அமேதியின் ராஜா, ராஜா குருதத் சிங் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
பீபர்பூரின் இளவரசரர் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
குன்வர் ராஜ்குமார் சிங் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
மக்ராஹி சமஸ்தான ராஜா க்ருஷ்ண ப்ரசாத் சிங் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
ஹன்ஸ்வர், கஜுர்ஹத், தீயரா மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
அமேதி ராஜபுத்ரர்களும், அவர்கள் சேனையும் இருந்தது,
அயோத்யா ராஜ்யத்தின் அனைத்து ராஜபுத்ரர்களும்
ராஜா மான்சிங்
ஹனுமான் கட்டியின் தலைமை பூஜாரி மஹந்த் ராம்சரண்தாஸ்
ராம ஜன்மபூமி பூஜாரி ரகுபீர்தாஸ்
அபிராம் தாஸ்
கோரக்நாத் மடத்தின் மடாதிபதி மஹந்த் திக்விஜய் நாத்
நீதிபதி கே கே நாயர்
வ்ருந்தாவன் தாஸ்
நிர்மோஹி அக்காரா
மஹாராஜா பாடேஷ்வர் ப்ரசாத் சிங், பல்ராம்பூர்
வி.ஹெச்.பி மற்றும் எண்ணற்ற கரசேவகர்கள்
ஆர். எஸ். எஸ். மற்றும் எண்ணற்ற தொண்டர்கள்
ஸ்ரீ கோல்வால்கர்
ஸ்ரீ தாதாசாகேப் ஆப்தே
ஸ்ரீ ஸ்வாமி சின்மயானந்தா
ஸ்ரீ அஷோக் சிங்கல்
கோரக்பூர் பீடாதிபதி மஹந்த் அவைத்யநாத்
பா. ஜ. கட்சியினர் (அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, நரேந்திர மோடி, விஜயராஜ் சிந்தியா) மற்றும் எண்ணற்ற தொண்டர்கள்
ஸ்ரீ எஸ். குருமூர்த்தி
ஸ்ரீ பி. பி, லால்
ஸ்ரீ கே கே முகம்மது
கோத்ரா சாபர்மதி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பலியான 60 கரசேவகர்கள்.
காஞ்சி காமகோடி பீட 69வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்.
அலகாபாதி மற்றும் உச்ச நீதிமன்றத்தில் குழந்தை ராமனுக்காக வாதாடிய பரசரன் உள்ளிட்ட வக்கீல்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட சாட்சியங்கள்.
அயோத்தியினை சுற்றியுள்ள ஊர்களில் சூர்யவம்சாவளி ராஜபுத்ரர்கள், நேற்றுவரை தலைபாகை, காலணி அணிவதில்லை
இன்னும் ஆலயத்துக்காக இறந்தவர்கள், வாழ்வை தொலைத்தவர்கள், எல்லாம் இழந்து உயிரை மட்டும் பிடித்து கொண்டு நிற்பவர்கள்
என எண்ணற்றோரின் தியாகத்தில்தான் அந்த புண்ணியபூமி மீண்டு கும்பாபிஷேகம் காண்கின்றது, அங்கே அமைக்கபட்டிருக்கும் அஸ்திபாரம் முதல் தூண்கள் கோபுரம் வரை இவர்கள் பெயரினை சொல்லி கொண்டே இருக்கும்
(தொடரும்..)