குடியரசு தினம்
“தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!”
எனும் பாரதியின் நிரந்தரமான வரிகளுடன் தேசம் தன் 75ம் ஆண்டு குடியரசு தினவிழாவினைக் கொண்டாடுகின்றது.
1947ல் தேசம் சுதந்திரம் பெற்றாலும் இந்தியாவுக்கான சட்டதிட்டங்கள் என்ன? எப்படியான ஆட்சிமுறை நம்முடையது என விதிகளை வகுக்க மூன்று ஆண்டுகள் சட்டமியற்றி 1950ல் இதே நாளில்தான் இந்திய குடியரசு என அறிவித்தோம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு எனும் பெயருடன், உலகின் மாபெரும் ஜனநாயக தேசம் எனும் கவுரவத்துடன் அன்றில் இருந்து இன்று வரை குடியரசாக நிலைத்து நிற்கின்றோம்.
குடியரசு நாள் என்பது நமக்கு நாமே விதிகளை, சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டு நம்மை நாமே ஆளத் தொடங்கிய நாள்.
சந்தேகமே இல்லை, உலகின் மிக மிக எளிமையான மனிதாபிமான அதே நேரம் சாட்சியும் ஆதாரமும் இருந்தால் யாரும் தப்பமுடியாத அளவில் இந்தியச் சட்டம் உருவாக்கப்பட்டது.
அது தனிநபர் உரிமை, நாட்டின் இறையாண்மை, அரை சென்ட் நிலம் கூட விட்டுவிட முடியா பிணைப்பு, மக்களுக்கான எல்லாவகை உரிமைகள் என அழகாக வரையறுத்து காக்கும் சட்டம்.
அந்த சட்டம்தான் உரிய ஆதாரங்களைக் கொடுக்கும் போது ராமர் கோவிலையும் மீட்டுத் தந்தது.
உலகின் மிகச்சிறந்த மக்களாட்சிக்கு அது அற்புதமான சட்டம், ஆனால் காலத்தால் சில மாறுதல்கள் தேவைபட்டபோது அவ்வப்போது தேசம் செய்துகொண்டது.
அமித்ஷா கூட சமீபத்தில் பல சட்டப் பிரிவுகளை சேர்த்துக் கொண்டார்.
எவ்வளவோ போர்கள், அரசியல் குழப்பங்கள் என எல்லாம் தாண்டி இந்தியா உலகின் உன்னத குடியரசாக நிலைக்க அந்த சட்டம் தூணாக நிற்கின்றது.
அந்த குடியரசு நாளை தேடிய கொடியேற்றி வணங்கி சிறப்பிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் குடியரசு தினவிழா நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
ஆனாலும் இரு விஷயங்கள் இன்னும் உறுத்தல்.
முதலாவது இந்துஸ்தான, இந்தியா இந்துக்களின் நாடு என அன்றிலிருந்தே கருதப்பட்ட நாட்டை, பிரிட்டிசாரே இந்து தெய்வங்கள் உருவ முத்திரையினை வெளியிட்டு இது இந்துக்கள் தேசம் என சொன்ன நாட்டை இன்னும் இந்துக்களின் தாய்பூமி என சொல்லப்பட்ட நாட்டை இரண்டாக வெட்டி ஒரு இஸ்லாமிய தேசம் என உருவாக்கினார்கள்.
பாகிஸ்தான் ஒரு குடியரசு நாடு. ஆனால் இஸ்லாமிய குடியரசு என அழுத்தமாக பதிவு செய்து அதையே பின்பற்றுகின்றார்கள்.
ஆனால் இந்துக்களின் தாய்பூமிக்கு மதசார்பற்ற தேசம் என சட்டத்தில் சொல்லி இது இந்துக்களின் தாய்பூமி என்பதை மறுத்துவிட்டார்கள்.
இரண்டாவது தேசியகீதம் என தாகூர் எழுதி பிரிட்டிஷ் அரசனை வரவேற்று எழுதிய பாடலை தேசிய கீதமாக வைத்து இன்னும் சிந்து அது இது என பாடிக்கொண்டிருக்க வகை செய்தார்கள்.
இந்திய சட்டம் சிறந்தது. ஆனால் இம்மாதிரி சில குழப்பங்களைக் கொண்டது, காலவோட்டத்தில் இந்த திருத்தமெல்லாம் அவசியம். இந்துக்களின் தாய்பூமி இது எனும் திருத்தம் அவசியம்.
காலம் அதைச் செய்யும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்துமக்கள் பெருவாரி வாழும் இந்தியா எனும் கம்பீரத்தோடு கர்வத்தோடு இந்நாளில் இந்திய மக்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றார்கள்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே – இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ?”
இந்தியா சுதந்திரம் அடைந்து அது 1950ல் குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டபொழுது அதாவது அது பிரிட்டிஷ் இந்தியா அல்ல இனி “இந்திய குடியரசு” என அறிவிக்கப்பட்ட பொழுது இந்நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது “ஜண கண மண” பாடல்.
இந்தப் பாடல் எப்பொழுது எழுதப்பட்டது ஏன் எழுதப்பட்டது என்பதில்தான் மறைக்கப் பட்ட வரலாறே இருக்கின்றது.
அது பிரிட்டனின் மன்னனாக ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிய காலம், 1910ல் இந்த விக்டோரியா மகாராணியின் பேரன் அரியணை ஏறினான், அதன் பின் தன் ஆளுகைக்குட்பட்ட நாடுகளுக்கெல்லாம் விஜயம் செய்தான் அப்படித்தான் இந்தியாவும் வந்தான்.
அக்காலம் அதாவது அந்த 1908க்கும் 1912க்கும் இடைப்பட்ட காலம், கடும் பஞ்ச காலம், பிரிட்டிஷாரின் தானிய பதுக்கல் மற்றும் வியாபாரத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலம் சுமார் 75 லட்சம் மக்கள் செத்திருந்தனர்.
இந்நிலையில்தான் டிசம்பர் 12, 1911ம் ஆண்டு இந்தியா வரும் ஜார்ஜ் மன்னனை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன, மும்பை இந்தியாகேட் எனும் வளைவு அவரின் வருகைக்கான வரவேற்பு வளைவாகக் கட்டப்பட்டது.
அன்று கப்பல்தான் பயணம் என்பதால் மும்பைக்குத்தான் மிலேச்ச மகராஜா வந்து இறங்கி டெல்லி செல்வதாக ஏற்பாடு.
அந்நேரம் தேசம் கொந்தளித்தது. பெரும் எதிர்ப்பு கிளம்பிற்று, இந்தியாவினை அடக்கி ஆளும் பிரிட்டிசாரின் அரசன் வருவதற்காய் லட்சக்கணக்கான இந்தியர் சாகும் பட்டினி வேளையில் இந்த அலங்காரமும் ஆடம்பரமும் தேவையா என பெரும் எதிர்ப்பு வெடித்தது.
வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுட்டு கொன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தினான்.
ஆனாலும் இந்தியாவின் அறிவுஜீவிக் கூட்டம் ஜார்ஜ் மன்னனை வரவேற்க தலைகீழாய் தொங்கியது, இதில் முக்கியமானவர் வங்கத்து தாகூர்.
அவன் அப்பொழுது எழுதி அதாவது அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதியதுதான் இந்த “ஜணகண மன” பாடல்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் டெல்லி தர்பாரில் அமர்ந்தபொழுது இந்தியர் சார்பாக பாடப்பட்ட பாடல் அது, அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து படித்தபொழுது அந்த ஜார்ஜ் மன்னனும் மகிழ்ந்துகொண்டான்.
பாடலின் பொருள் என்ன?
“ஏ மன்னனே உன் திருப்பெயர் இமயமலையில் எதிரொலிக்கின்றது, உன்னை புகழ்ந்து இந்தியர் பாடும் வாழ்த்து சிந்து கங்கை தக்காணம் என எல்லா இடமும் எதிரொலிக்கின்றது ..
உன் புகழ் என்ன உன் கீர்த்தி என்ன? உன் மகிமை என்ன…”
இப்படி நீளும் பாடல் “மன்னனே நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க உன் குடை வாழ்க” என முடியும். அதாவது நீ ஆண்டுகொண்டே இரு, இந்தியர் மாண்டு கொண்டே இருக்கட்டும் எனும் பொருளில் பாடப்பட்ட பாடல்.
இது 40 நிமிடம் வரும் (இதன் பின்னால்தான் தாகூருக்கு “நோபல்” பரிசெல்லாம் கொடுக்கப்பட்டது).
இந்தப் பாடலைத்தான் சுருக்கி ஜனவரி 25, 1950ல் தேசிய கீதமாக வைத்தார்கள்.
அதனால் இன்றும் நம் தேசிய கீதத்தில் பாகிஸ்தானையும், வங்கதேசத்தையும் வாழ்த்திக் கொண்டிருகின்றோம்.
உண்மையில் இது ஒருவகை அவமானம், இந்தியாவில் வேறு பாடல்களே இல்லாதது போலவும் பிரிட்டிஷ் அரசனை வாழ்த்திய பாடல்தான் தேசிய கீதம் என்பதெல்லாம் மனம் நோகச் செய்யும் தலைகுனிவு.
ஆனால் பிரிட்டிசார் வழங்கிய நிபந்தனை சுதந்திரம் அல்லது மறைமுக தன்னாட்சியில் இதெல்லாம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
பாரத தேசத்தின் 75ம் ஆண்டு குடியரசு தினவிழா அதி உற்சாகமாக தேசமெங்கும் கொண்டாடப்பட்டது, தலைநகரில் ஜனாதிபதி முர்மு அம்மையார் கொடியேற்றி ராணுவ அணிவகுப்பு மற்றும் மாகாண கலாச்சார பிரதிபலிப்பு அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டார்.
இந்தியா உலக அரங்கில் நான்காம் பெரிய ராணுவமாகக் கருதப் படுகின்றது, ரஷ்ய ராணுவம் உக்ரைனில் சிக்கிக் கிடக்கும் இந்நேரம் இந்தியா உலகின் மூன்றாம் பெரிய ராணுவம் என்பது ரகசிய கணக்கு.
உலகின் ஒவ்வொரு நாட்டு ராணுவ அணிவகுப்பும் கவனம் பெறும், அப்படி இந்திய ராணுவ வலிமையும் பறைசாற்றப் பட்டது, முக்கியமாக வான் பாதுகாப்பு மற்றும் ஆளில்லா விமானம் எனக் காட்சி படுத்தப்பட்டது இந்தியா எந்த போருக்கும் தயார், எந்த நவீன யுத்தத்துக்கும் தயார் என்பதைக் காட்டிற்று.
பாகிஸ்தான் சீனா என இரு எல்லைகளில் யுத்தம் எதிர்நோக்கும் தேசமிது, அதனால் பிரம்மாண்ட அணிவகுப்பை நவீன ஆயுதம், விமானம், கப்பல் எனக் காட்டவேண்டும், அதைச் சரியாகச் செய்தது தேசம்.
வானிலும் கடலிலும் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டு பலம் காட்டப்பட்டது.
இந்த அணிவகுப்பில் இம்முறை இந்திய ராணுவ மகளிரும் தனி பெண்கள் இசைக்குழுவுடன் கலந்துகொண்டார்கள், பெண்கள் ராணுவ பலத்தின் அதிசக்தியும் காட்டப்பட்டது.
பிரதமர் மோடி டெல்லியின் ராணுவ வீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார், அதன் பின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினரான பிரான்ஸின் அதிபருக்கு வரவேற்பு செய்யப்பட்டது, அவரும் ஏற்றுக் கொண்டார்.
விழாவின் முக்கிய அம்சமாக ஒவ்வொரு மாகாண பாரம்பரிய பெருமையும் அலங்கார ஊர்தியாகச் சென்றது, ஒவ்வொரு மாகாணமும் அதன் பாரம்பரிய சிறப்பைக் காட்டிற்று.
அது பாரதி எழுதிய தேசாபிமான பாடல்களைக் கண்முன் காட்டிற்று.
தமிழக சார்பில் சோழர்களின் குடவோலை முறை காட்சி ஊர்தியாக இடம்பெற்றது, தமிழகம் எப்படியான ஆட்சிமுறை ஜனநாயக முறையினை அன்றே கொண்டிருந்தது, தேர்தல் விதிகள் என்ன? வேட்பாளர் தகுதி என்ன? என அதன் ஞானமான தேர்தல் முறை அகில இந்திய மக்களுக்கும் உலகுக்கும் விளங்கும்படி காட்டப்பட்டது.
இது சுதந்திர இந்தியாவின் முதல் தடவை, மோடி அரசுதான் சோழர் கால குடவோலை முறையே உலகின் அதி உன்னத ஜனநாயக முறை. அதை உலகிற்கு கொடுத்த நாடு இந்தியா. உலகிற்கு ஜனநாயகம் கொடுத்த நாடு அமெரிக்கா அல்ல, அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மக்களாட்சி தேர்தல் இருந்தது என்பதை உரக்கச் சொல்லி தமிழக அறிவு பாரம்பரியத்தைக் காட்டிற்று.
குடியரசு தின ஊர்வலம் என்பது சாதாரணம் அல்ல, பல நாட்டு தூதர்கள் மக்கள் ராஜதந்திரிகள் ஓசைப்படாமல் அமர்ந்து கவனிப்பார்கள், அவ்வகையில் சோழர்களின் குடவோலை முறை உலக கவனம் பெற்றது.
இதற்காக மோடியினை வாழ்த்தலாம்.
இப்படி தேசத்தின் பாரம்பரிய சிறப்பு, ராணுவ வலிமை என பல விஷயங்களை உலகுக்கு காட்டிய படி குடியரசு கொண்டாட்டம் நடந்தது.
இந்த காட்சிகளில் தமிழக கலைஞர் பேனா இடம் பெறவில்லை, மிசாவில் அடிவாங்கிய சிலை இடம்பெறவில்லை, தண்டவாளத்தில் தலைவைத்த ஊர்வலம் இல்லை, அய்யா ராம்சாமி கைத்தடியினைக் காணவில்லை.
இதுபற்றி உபிக்கள் விரைவில் பொங்குவார்கள் என எதிர்பார்ப்போம், மிக பரபரப்பாக தேசம் இயங்கும்போது அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பது அவர்கள்தான். அதை இன்று மாலையே தொடங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.