பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்
இந்துஸ்தானம் என்பது ரிஷிகளின் தேசம், அந்த மண்ணின் ஆயிரகணக்கான் ரிஷிகளில் வெகு சிலர் பெரும் அடையாளமாக எழுந்து நின்றார்கள், காலம் காலமாக மானுட இனம் வாழ வழிபல கண்டு சொன்னார்கள், எல்லா காலத்துக்கும் தாங்கள் காவல் நிற்கும் படி தங்கள் தவவலிமையினால் பிரபஞ்ச ரகசியங்களை மந்திரங்களாகவும் ஸ்லோகங்களாகவும் தந்தார்கள்
பல இடங்களில் தங்களையே சோதனை கருவியாய் தந்து பெரும் போதனையினை தந்தார்கள், எப்படி வாழவேண்டும் என சொன்ன அவர்களே எப்படி ஒரு மனிதன் சறுக்க கூடாது என சறுக்கியும் காட்டினார்கள்
இந்துக்களின் ரிஷி பாரம்பரியத்தில் முக்கியமானவர் பிரம்மரிஷி எனும் பட்டம் பெற்ற விஸ்வாமித்திரர்
விஸ்வம் என்றால் உலகம் மித்திரன் என்றால் நண்பன், இந்த பூலோக நலனுக்காக வாழ்ந்தவன் பூலோக காவலாளி என அர்த்தம்
விஸ்வாமித்திரர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கட்டமும் ஆராய்ச்சிகள் அதிகம் செய்து பாடம் படிக்கவேண்டிய பெரும் பல்கலைகழகம் அந்த அளவு மிக நுணுக்கமான ரகசியங்களும் போதனைகளும் அவர் வாழ்வெங்கும் கிடக்கின்றது
அவர் ராமபிரானுக்கு குருவாக வரும்பொருட்டு படைக்கபட்டவர், ரீசிக முனிவடிவில் ராமபிரானுக்கு குரு ஒருவர் கிடைக்க பரம்பொருள் செய்த திருவுளத்தில் வந்தவர் அந்த கொளசிகர்
பிறப்பால் அவர் சத்ரியர் ஆனால் பின்னாளில் தவவலிமையால் மனம் பொருந்திய தவத்தால் அவர் பிராமணராக ஏற்றுகொள்ளபட்டார் இந்துமதம் சாதியால் பிரிவினை வளர்க்கும் மதம் அல்ல குணத்தால் மட்டுமே அறிவால் மட்டுமே அங்கு பிரிவுகள் உண்டு என்பதை முதலில் சொன்னவர் விஸ்வாமித்திரர்
பிறப்பால் ஷத்திரியராகவும் பொறுப்பாக கௌசிக நாட்டை ஆண்டுவந்தவருமான அவரின் வாழ்வு வசிஷ்டரால் திரும்புகின்றது, நாட்டில் பஞ்சம் வந்து பெரும் பாதிப்பு வந்தபோது வசிஷ்டர் குடிசையின் காமதேனுவால் தன் மக்கள் பஞ்சம் தீரும் என அவர் முடிவெடுத்து அந்த பசுவினை கவரமுயன்றபோதுதான் அவர் வாழ்வு மாறிற்று
ஒரு பிராமணனின் தவ வலிமை ஷத்திரிய வலிமையினை விட அதிகம் என்றால் நாட்டு மக்களுக்காக நான் அடைந்தே தீருவேன் என தவமியற்றினார்
அவரின் தவம் அவருக்காக அல்ல, தான் வரம்பல பெற்று உலகாள வேண்டும் எனும் நோக்கில் அல்ல மாறாக இந்த மக்களுக்கும் உலகுக்கும் தவத்தால் தவவலிமையால் நல்லது செய்யமுடியுமென்ரால் அந்த தவத்தை அடைவேன் என வைராக்கியத்துடன் தவமிருந்தார்
ஒரு அரசன், அதுவும் பெரும் சக்திவாய்ந்த அரசன் ராஜ்ஜிய ஆட்சியினை விட தவமே பெரிது , மக்கள் வாழ யோக தவமேபெரிது என உண்ணாமல் உறங்காமல் இருப்பதை கண்டு வசிஷ்டர் மனம் நெகிழ்ந்தார், ஆனால் உரிய ஞானம் பெறும் பொருட்டு அவரை சீண்டி கொண்டே இருந்தார்
வசிஷ்டர் பிறப்பால் பிராமணர், அதுவும் இளமைமுதலே எல்லா தவநியதிகளையும் கடந்தவர், முக்குணங்களையும் கடந்தவர்
ஆனால் விஸ்வாமித்திரருக்கு தவவலிமையினால் நல்லது செய்யலாம் எனும் வேகம் இருந்ததே தவிர அடிப்படை ஞானம் அந்நாளில் இல்லை
அந்த ஞானம் பெறும் பொருட்டுத்தான் வசிஷ்டர் வாட்டி எடுத்தார், அந்த ஞானக்கண் திறக்காதவரை எந்த வரம்பெற்றாலும் அது நிலைக்காது என்பதை தெய்வங்களு அறிந்திருந்தன
தன்னால், தன்னால் மட்டும் என்ற எண்ணமும் கர்வமும் கொண்டவரை ஒருவனுக்கு ஞானமில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ளவே திருவிளையாடல் நடந்த்து
அப்படி முதலில் தான் யார் எனும் அகம்பாவத்தில் வசிஷ்டரிடம் மோதி தோற்றார், பின் பெரும் தவம் இயற்றி வசிஷ்டர் மறுத்த திரிசங்குவிற்கு நான் சொர்க்கம் அமைத்து தருகின்றேன் என்ற கர்வத்தில் மீண்டும் தோற்றார்
பின் பல்லாயிரம் ஆண்டு தவம் செய்து இந்திரனிடம் வீழ்ந்தார்
ஆனாலும் தெய்வங்கள் கருணை உள்ளவை, அவரின் தீரா தவத்தை மெச்சிய பிரம்மன் மேனகையினை அவருக்கு ஆக்ஞா சக்கரத்தை தெளிவிக்கத்தான் அனுப்பினார்
உண்மையில் வானலோகத்து ஏழு தேவதைகளும் வெறும் கவர்ச்சி கன்னிகள் அல்ல, ஆடிபாடி மயக்குவோரும் அல்ல
ஏழு கன்னியரும் ஏழு சக்கரங்களை துலக்கும் சக்திகள், அப்படி தடுமாறிகொண்டிருந்த விஸ்மாத்திரருக்கு ஆக்ஞா சக்கரத்தை துலக்க அதாவது மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு அவரை உயர்த்தத்தான் மேனகை வநதாள்
ஆனால் அவரோ அந்த ஞானமில்லாமல் அவளிடம் மயங்கி தெய்வ நிலையில் இருந்து மானுட நிலைக்கு மறுபடியும் வீழ்ந்தார்
இப்படி ஒவ்வொரு முறையும் முயன்று தோற்றவர், கடைசியில் வசிஷ்டர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என நினைந்து அவரை கொல்லவும் முயல்கின்றார்
அப்படி அவரை அவர் கொல்லதேடுவதை அறிந்த வசிஷ்டர் மனைவி அருந்ததி, தன் சக்தியால் அவருக்கு ஆக்ஞா சக்கரத்தை தெளியவைக்கின்றார்
அப்போதுதான் அவருக்கு ஞானம் பிறந்தது, அருந்ததியினை தாய் என வணங்கியவர் முழு ஞானம் பெற்றார், அவரின் ஞான கோலத்தை அதன் பின் அங்கீகரித்தார் வசிஷ்டர்
அதன் பின்பே பிரம்மரிஷி எனும் மிகபெரிய பட்டத்துடன் பெரும் ஞானமான மந்திரங்களை தந்தார் விஸ்வாமித்திரர்
ரிக் வேதத்தின் மகா முக்கியமான பாகங்களை அவர்தான் எழுதினார்
இந்துக்களின் மந்திரமான , ஒளியினை நோக்கி செல்லும் மந்திரமான காயத்ரி மந்திரம் அவர் வழங்கியதே
“ஓம் பூர் புவஸ்வஹா” என அவர் கொடுத்த மந்திரம்தான் இந்துக்களின் வழிபாட்டில் ஜீவநாடி
பின் ராமனுக்கு குருவாகின்றார் விஸ்வாமித்திரர், ராமனை பல இடங்களுக்கு அழைத்து சென்று யாகம் செய்டு தாடகை முதலானோரை அழித்தவர் அவர்தான்
ஜனகன் அரண்மனைக்கு ராமனை அழைத்து சென்றவர் அவர்தான், அப்போது கல்லால் ஆன அகலிகை உயிரபெற்று எழுந்தாள், அவளை மீட்டதும் விஸ்வாமித்திரர்தான்
ராம லட்சுமணனுக்கு யாராலும் வெல்லமுடியாத “பலா அதிபலா” என மகா முக்கிய மந்திரங்களை கற்று கொடுத்தவரும் அவர்தான்
இன்னும் ஏராளமான சிறப்புக்களை கொண்ட அவரின் வாழ்வு பெரிது, அவர் கொடுத்த ஸ்லொகமும் மந்திரமும் அவர் செய்தவேதங்களும் மகா பெரியவை
ஒவ்வொரு இந்துவும் ஒவ்வொரு நாளும் நன்றியோடு வணங்கவேண்டிய மகான அவர்
அவரின் வாழ்வு பல தத்துவங்களை போதிக்கும், முதலாவது இந்துமதம் சாதி அடிப்படையிலானது என்பதை என்றோ தகர்தவர் விஸ்வாமித்திரர்
ஷத்திரியனுக்கு சாத்வீகம் வரும் என முயன்று காட்டியவர்
விடா முயற்சிக்கு அவர்தான் உதாரணம் ஆயிரகணக்கான வருடங்கள் தோற்று திரும்ப திரும்ப முயன்று பிரமம்ரிஷி பட்டத்தை பெற்றவர்
அப்படியான மாபெரும் முயற்சியாள , விடா முயற்சியாளர் பிறந்த நாட்டில் அந்த மதம் உள்ள நாட்டில் கஜினிமுகமது எனும் கொள்ளைகாரனை பற்றி பேசுவதெல்லாம் இந்துக்கள் வந்தவழி மறந்த பரிதாபம்
விசுவாமித்திரின் தவவாழ்வும் தோல்வியும் அவர் பின்பெற்ற மகா வெற்றியும் சொல்வது ஒன்றுதான்
அதாவது ரஜோ குணம், தாம்ஸ குணம், இந்த இரண்டையும் வெல்லாமல் சத்வ குணம் வராது, சத்வ குணத்தையும் தூக்கிபோட்டு தான் ஒன்றுமில்லை என உணராதவரை முழு ஞானம் வராது
விஸ்வாமித்திரர் ரஜோ குணத்தில் மேலோங்கியிருந்தார் அவரின் வைராக்கியமும் பெரும் முனைப்பும் அந்த ரஜோ குணத்தின் சாயல்கள், மெல்ல அதிலிருந்து விடுபட்டார்
பின் தாம்ஸ குணத்தில் சிக்கினார், ஒருவகை அறியாமையில் சிக்கினார் அதிலிருந்தும் மீண்டார்
பின் சத்வ குணத்தில் மூழ்கி அதிலிருந்தும் கரையேறி முழு ஞானம் அடைந்து பிரம்மரிஷி எனும் நிலையினை பெற்று அழியா ஸ்லோகங்களை நமக்கு தந்தார், வேதங்களை தந்தார்
மேனகையிடம் அவர் வீழ்ந்தார் என்பது ஒரு யோக ரகசியம், குண்டலினி சக்தி எழும்போது அது ஒவ்வொரு சக்கரமாக உயரும்போது மனிதன் தெய்வநிலைக்கு உயர்வான், அதற்கான தேவதை வந்து வரமருளியபோது அவர் தன் அறியாமையால் அல்லது அகங்காரத்தால் மானுட குணத்தால் தெய்வ நிலையில் இருந்து தவறி வீழ்ந்தார்
பின் போராடி தெய்வ நிலையினை அடைந்தார், அருந்ததி அந்த சக்கரத்தை துலக்கி அவருக்கு ஞானம் அருளினாள்
ஏன் மேனகை, அருந்ததி என பெண்களை சொன்னார்கள் என்றால் ஒரு சக்தி இயக்கும் சக்தி வந்து அவருக்கு அந்த வரத்தை அருளியது என்றார்கள், உலகாளும் மகா சக்தியினை பெண் என சொல்லுதல் இந்துக்கள் மரபு
என்னதான் ஒருவன் தவமியற்றினாலும் உலகாளும் சக்தி வந்து வரம் தராமல் முழு ஞானம் வாய்க்காது என்பதுதான் அவர் ஞானம் பெற்ற ரகசியம்
ஒருவகையில் அவர் தன்னால் முடிந்த அனைத்தும் செய்துவிட்டு எப்போது தன்னால் ஆவதில்லை ஒன்றும் என தெய்வத்திடம் சரணடைந்தாரோ அப்போதுதான் அவர் பாதை மாறிற்று
அவரின் அகங்காரம் எப்போது ஓய்ந்ததோ அந்த நொடியில் ஞானம் பெற்றார்
அதுவரை தான் தன்னால் என அகங்காரம் கொன்டு திருந்தவர் ,, அந்த அகங்காரம் ஒழிந்தபோது ஞானம் பெற்றார்
அவரின் ஞானம் காயத்திரி தேவி கொடுத்தது என்பதில்தான் ரகசியம் ஒளிந்திருக்கின்றது
இந்த பிரபஞ்சம் ஒருவனை தேர்ந்துகொண்டு தன் சக்தியினை அவன் மூலம் சொல்ல விரும்புகின்றது , ஆனால் அவன் அதற்குரிய ஞானம் பெரும் பொருட்டு பல சோதனைகளை வைக்கின்றது
அவனை மானிட நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தி எல்லா சக்கரங்களையும் துலங்க வைத்து ஞானியாக்கிய பின் அவனுக்கு எல்லா நலன்களையும் அருள்கின்றது
அந்த இயக்கும் சக்தியே தேவி, அவளின் வடிவங்களே மேனகை முதல் காய்த்ரி வரை எல்லாமும் , எல்லாமே அவள் நாடகம்
பெண்மை என்பது எல்லோர் உடலிலும் சக்தியாய் மறைந்துள்ளது அதை கண்டுணர்ந்து எழுப்பி சமபடுத்தி கொண்டால் ஆண்பெண் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோலம் போல ஒவ்வொருவனும் தனக்குள் இருக்கும் மகா இயக்கு சக்தியான பெண் ச்கதியினை ஆக்ஞா சக்கரத்துக்கு ஏற்றினால் அவன் முழு ஞானம் அடைவான் அவன் மூன்றாம் கண் திறக்கும் என்பதே விஸ்வாமித்திரர் வாழ்வு சொன்ன போதனை
காமம் என்பது ஒரு தெய்வீக சக்தி அதை முறையாக பாவித்து மேல்நோக்கி யோகமாக எழுப்பினால் மானிடன் தெய்வநிலைக்கு செல்வான், அதை கீழ்நோக்கி இறக்கினால் விலங்கு நிலைக்கு செல்வான் என்பதை வாழ்வில் சொன்னவர் விஸ்மாத்திரர்
காமம் என்பது தெய்வீகம் அந்த நெருப்பை கொண்டு சக்கரங்களை மேல் நோக்கி எழுப்பி துலக்க வேண்டும், உடலின் பெண் தன்மையினை பெண் சக்தியினை தன் சக்கரங்களுக்கு கொடுக்கவேண்டும் அதுதான் தெய்வநிலையினை கொடுக்கும் என்பதை போதித்து காட்டியவர் அவர்
அதைத்தான் அவர் கண்டறிந்து சொன்னார்
அந்த சக்தியினை அவர் வசிஷ்டர் அருளால் பெற்றபோது தானும் தெய்வநிலையில் சிவசக்தி போல ஆண் பெண் சக்தி சரிசமமாக நிறைந்த நிலையில் இருப்பதை உணர்ந்தார் முழு யோகியானார்
அந்த யோகத்தில் தன் புருவ மத்தியில் ஐந்து முகமுடைய காயத்ரிதேவியாக விஸ்வாமித்திரர் தரிசித்தார், அந்த தரிசனமம் அவரின் கர்மம் யாவும் கழித்துபோட்டது
அவரின் உடலில் பஞ்ச வாயுக்களையும் சரிசெய்து நிலைப்படுத்தியதுடன், பஞ்சபூதங்களுடன் இணைந்து வாழும் வாழ்வையும் விஸ்வாமித்திரருக்குக் கொடுத்தது.
ஆக்ஞா சக்கரம் தூண்டபட்டதையும் அது அனைவரையும் சென்றடையவேண்டும் எனும் விருப்பத்துடனும் காயதிரி மந்திரத்தை தந்தார்
கீதையில் கிருஷ்ண பரமாத்மா “மந்திரங்களில் நான் காயத்ரி” என் சொல்வது கவனிக்கதக்கது
விஸ்வாமித்திரரை பற்றிய குறிப்புகள் வேதங்களில் உண்டு, புராணங்களில் உண்டு ராமாயணத்தில் மட்டுமல்ல, மஹாபாரதம் அனுசாசன பர்வதத்திலும் அவரை பற்றிய குறிப்புகள் உண்டு
அவர் வெறும் ஞானி மட்டுமல்ல யோகி மட்டுமல்ல, மருத்துவம் வானியல் போர்கலை ஆட்சிமுறை படை நடத்துதல் என எல்லாவற்றிலும் சிறந்துவிளங்கினார்
ராமபிரானுக்கும், லட்சுமணருக்கும், அதர்மத்துக்கு எதிராக எப்படி அஸ்திரங்களைப் பயன்படுத்துவது என்று போதித்து, 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரம் சொல்கின்றது
விஸ்வாமித்திரரின் வாழ்வு மிகபெரிய பாடம், அங்கே தத்துவம் யோகம் சமூகம் ஆட்சி ஆன்மீகம் விஞ்ஞானம் என எல்லாமும் உண்டு
ஒரு நல்ல குருதான் நல்ல சீடனை உருவாக்கமுடியும், அப்படி ராமபிரானை உருவாக்க பல்லாயிரம் ஆண்டு தவமிருந்து வந்த ஷத்திரிய குலத்து மகாஞானி விஸ்வாமித்திரர், ராமபிரானை செதுக்கியதில் அவர் பங்கும் உண்டு
விஸ்வாமித்திரர் என்றோ வாழ்ந்து மறைந்தவர் அல்ல, அவர் எக்காலமும் உண்டு பிரபஞ்சத்தில் கலந்துவிட்ட அவர் எக்காலமும் வாழ்கின்றார், எங்கே யார் அழைத்தாலும் வந்து உதவுவார்
பசியால் வறுமையால் துன்பமுற்றால் வருவார், அறியாமையால் துன்பமுற்றார் வருவார், பகை ஒழிக்க வருவார், நோய் தீர்க்க வருவார், யோகம் கைகூட வருவார்
யார் அவரை குருவாக ஏற்று வழிபடுவார்களோ அவர்களுக்கு இன்றும் என்றும் வழிகாட்டி கொண்டே இருக்கின்றான்
தை மாதம் அனுஷ நட்சத்திரம் அவருக்கானது, அவ்வகையில் இன்று அவருக்கான குருபூஜை நாள்
அயோத்தி ராமன் கோவில் துலங்கிய நேரம் அவரை எல்லோரும் வணங்குதல் சாலசிறந்தது அது முக்கிய கடமையும கூட
அயோத்தியில் முன்பு விஸ்வாமித்திரருக்கும் அலயம் இருந்தது என்பார்கள் பின் எல்லாம் மாறிற்று, வடக்கே பெரும் அழிவுகள் வந்த காலத்தில் விஸ்வாமித்திருக்கான் ஆலயங்கள் மறைந்தன
ஆனால் தென்னகம் அப்படி அல்ல, இலங்கையும் தென்முனையும் அதிக அழிவுகள் எட்டிபார்க்கா இடம் என்பதால் பல சுவடுகள் எஞ்சியிருக்கின்றன
அப்படி இருப்பதுதான் நெல்லைமாவட்டம் கூடங்குளம் அருகே அமைந்திருக்கும் விஸ்வாமித்திரர் ஆலயம்
தாடகை வதம் அங்கே நடந்தது, அப்போது அவர் வெட்டிய யாக குண்டம் இன்றும் உண்டு, ராம லட்சுமணருடன் அங்கேதான் அவர் தாடகையினை வதைத்தார்
அந்த இடத்தில் சிறிய கோவில் உள்ளது, ராமபிரானும் லட்சுமணனும் “பலா அதிபலா” எனும் மந்திரங்களை அங்கேதான் பெற்றார்கள்
அயோத்தி துலங்கியிருக்கும் நேரம் ராமபிரான் குருவான விஸ்வாமித்திர மகரிஷியின் புனித ஸ்தலமும் ராமபிரான கால்பட்ட அந்த விஜயாபதியும் துலங்குதல் அவசியம்
அயோத்தி ஆலய திறப்புக்காக திருவரங்கம், ராமேஸ்வரமெல்லாம் சென்ற மோடி இந்த விஜயபதிக்கும் சென்றிருக்கவேண்டும்
இதையெல்லாம் தமிழக பாஜகவினரோ ஆன்மீகவாதிகளோ அவருக்கு எடுத்து சொல்லியிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை
நிச்சயம் மோடிக்கு தெரிந்திருந்தால் தவற விட்டிருக்கமாட்டார், இனியாவது அந்த விஜயாபதி தலம் அதற்குரிய பெருமையினை எட்டட்டும்
அயோத்தி ராமேஸ்வரத்துடன் அந்த விஜயாபதியும் இணையட்டும்
இந்த நாள் விஸ்வாமித்திரருக்கானது, கௌசிக நாட்டு மக்களுக்காக அல்ல, திரிசங்குவிற்காக அல்ல, ராமனுக்காக மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் அவர் அருள் வழங்க காத்துகொண்டிருக்கின்றார்
அவரை தேடி பணிவோர்க்குஏதோ ஒரு வடிவில் அவர் அருள் புரிந்துகொண்டே இருக்கின்றார், பாரதத்தில் ராமர்கோவில் மீண்டெழ அவரின் அருளும் மகா முக்கியம்
ராமபிரான் ஆலயம் அயோத்தியில் துலங்கியிருக்கும் இந்நேரம் விஸ்வாமித்திர மகரிஷி தேசத்துக்கு நல்ல வரங்களை அருளட்டும் காவலை அருளட்டும்
எல்லா மக்களுக்கும் ஞானத்தையும் அருளையும் வழங்கட்டும் ஆள்வோருக்கு ராமனுக்கு கொடுத்தது போல் நல்ல ஞானத்தை அருளட்டும்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க அவர் அருள் செய்யட்டும்.
தென்முனை விஜயாபதியின் அந்த ஒரே ஒரு விஸ்வாமித்திரர் ஆலயம் அதற்குரிய பெருமையினை அடைந்து பெரிதாய் ஜொலித்து எல்லா மக்களுக்கும் வழியும் ஒளியும் வீசிவரட்டும்.