சீனப் புத்தாண்டு & கொண்டாட்டம்
ஹாய் கோங் ஷி பா சாய்
டேய் குவாங்க்சு கலீக், என்னடா அது?
இது சீன புத்தாண்டு வாழ்த்து, எஙகளுக்கு புது வருஷம் பொறக்க போகுது, இது டிராகன் வருஷம் எங்களுக்கு 12 வருஷம் இப்படி உண்டு, கரடி, காளை..
எல்லாம் வெட்டி திங்குற ஐட்டமா பெயர் வைப்பீங்க போல, சரி உங்க தேசிய பாஷை என்ன?
மாண்டரின்
நீ என்ன பேசுற?
கேண்டனிஸ், எங்களுக்கு மாண்டரின் போக 20 மொழி இருக்கு
டேய் இப்ப என்ன கொண்டாட போற?
சீன புத்தாண்டு
அது எப்படிடா? நீ கேண்டனிஸ் பேசுற அப்படின்னா கேண்டனிஸ் புத்தாண்டுதான கொண்டாடனும்
லூசாய்யா, நீ? எங்க எல்லாருக்கும் சேர்த்துதான் புத்தாண்டு எங்க கலாச்சாரம்
டேய், யாரோ இமயமலை இடுக்கு வழியா ஆடோ மாடோ வாத்தோ மேய்க்க வந்து உன்னை ஏமாத்திருக்காங்க, உனக்கு மொழி கலாச்சாரம் எல்லாம் இருந்திச்சி , சீனசுவருல கிழக்கு பக்கம் எல்லாம் நீங்க கட்டுனது ஆனா வந்தேறி கூட்டம் உன்ன ஏமாத்திருச்சி, வாத்தும் பன்றியும் மேய்க்க வந்த கூட்டம் உன்ன ஏமாத்திட்டு , பாரு 12 மிருக வருஷம் உனக்கு கொடுத்து உன்ன மிருகம்னு காட்டுது, நம்பாத, உனக்கு மானமும் அறிவும் இருக்காண்ணு செக் பண்ணு
அப்படின்னா?
இந்த புத்தாண்ட கொண்டாடாத, இடையில என்னைக்காவது கெண்டனிஸ் புத்தாண்டு தான் எங்க புத்தாண்டு அப்படின்னு ஒண்ண உருவாக்கு
எப்போ?
டேய் உங்க ஊர்ல எப்ப நெல் அறுப்பீங்க, அதவிடு இந்த வாத்து பண்ண, பன்றி பண்ணையெல்லாம் எப்ப விளைஞ்சி வெட்டுக்கு வரும்?
அது மே மாசம் வரும்
ஆங், அத பிடி இதுதான் கேண்டனிஸ் புத்தாண்டுன்னு கிளம்பு, போராடு, புரட்சி செய், உன் இனமான அடையாளத்தை விடாத
இதுக்கெல்லாம் ஆதாரம்?
அதெல்லாம் பிடிட்டிஷ்காரன் அறிஞனா எழுதினான்னு சொல்லு, வால்டுவெல்லு வாழதவெல்லுன்னு எவன் பெயரையாவது சொல்லு
அவனே எங்கள அடிமைபடுத்த பார்த்தவன்ல அவன் உண்மைய எழுதுவானா?
டேய், பிரிட்டிஷ்காரன் எத எழுதுனாலும் நம்பணும் அதுதான் பகுத்தறிவு
இல்ல, எங்களுக்கு சீன புத்தாண்டுதான், இப்படி கேண்டனிஸ் புத்தாண்டு ஹாக்கியன் புத்தாண்டுன்னு சண்டை போட்டா நாடு என்னாகும்?
நாடு நாசமா போகணும், இப்ப ஒண்ணா இருக்கிறதுனாதானடா பலமா இருக்கீங்க, இப்படி ஆளாளுக்கு புத்தாண்டு கேட்டு புரட்சி பண்ணுங்க, நாசமா போங்க, சரி இந்த இட ஒதுக்கீடு எல்லாம் உண்டா?
அப்படின்னா
அடேய் உனக்கு நிறைய சொல்லிதரணும் போலிருக்குடா, எங்க அய்யா வேற இல்ல, எங்க ஊர்ல இப்போ எல்லாரும் ஒருமாதிரி ஆயிட்டானுக, யார வச்சிடா உனக்கு பகுத்தறிய புகட்டி உன்ன மானமும் அறிவும் கொண்ட சீனனா மாத்துறது? வெரி டெலிகேட் பொஷிசன், சரி நல்ல பகுத்தறிவு புரட்சியாளரா உனக்கு இறக்குமதி பண்ணிதாரேன் திருந்தி கேண்டனிஸ் புத்தாண்ட கொண்டாடு
மிஸ்டர் எங்க நாட்டுல பிரிட்டிஷ்காரன் வரல அதனால நாங்க பலமொழி பல இனமிருந்தாலும் இன்னமும் சீனர்களா வலுவா இருக்குறோம், நீங்கதான் உங்க பகுத்தறிவுல நாசமா போயிட்டீங்க
நோ நோ, உனக்கு பகுத்தறிவு இல்ல, நீ ஏமாந்துட்ட, உன்ன ஏமாத்தி வச்சிருக்காங்க
ஏமாத்தி வச்சதாகவே இருக்கட்டும், ஆனால் அமெரிக்காவுக்கு சவால்விடுற அளவு வளர்ந்திருக்கோம், நீங்க உங்க பகுத்தறிவும், மதசார்பின்மை, பகுத்தறிவுல என்ன வளர்த்துட்டீங்க சொல்லு
பை பை .. போ போய் டிராகன் டான்ஸ் பாரு
சொல்லு மேன், எங்க நாடும் உங்க நாடும் ஒரே நேரம்தான் ஆட்சி மாறிச்சி, நாங்க எங்க போக்குல வளர்ந்தோம், உங்க ஊர்ல கட்சிகள், ஜாதிசங்கம் , தொழிற்சங்கம் , கழகம் அது இதுண்ணு வளந்திருக்கு நாடு ஏன் அவ்வளவு வளரல?
ம்ம் இதெல்லாம் ஜனநாயகம், சமத்துவம் , சமூக நீதி
அதெல்லாம் பேசிட்டு இருந்தா குழப்பம்தான் மிஞ்சும் அதான் அப்படி இருக்கீங்க, நாங்க மொழி பல இருந்தாலும், இனம் பல இருந்தாலும் ஒரே சீனமா எழும்பி இன்னைக்கு உலகத்தை மிரட்டுறோமா இல்லியா
சரி, பை
சொல்லிட்டு போ.
கோங் ஷி பா சாய்..”
February 19, 2024
சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் 10 நாட்களாக உலகெங்கும் நடந்து முடிந்திருக்கின்றது, 12 வருட சுழற்சி கொண்ட அவர்கள் நாள்காட்டியில் இது ட்ராகன் வருடம்
கிட்டதட்ட 10 நாட்கள் கொண்டாடுவார்கள், மொத்த வருட உழைப்பையும் ஒரே மாதத்தில் தீர்ப்பது போல் பிரமாண்டமாய் கொண்டாடுவார்கள்
அது ஒரு அமாவாசையில்தான் தொடங்கும், சீனரின் காலண்டர் நிலாவினை மையமாக கொண்டது என்பதால் அது அப்படித்தான் தொடங்குகின்றது
இன்னும் கூர்ந்து நோக்கினால் இந்துக்களின் மகர சங்கராந்தி மற்றும் சூரிய பொங்கல் பண்டிகைக்கும் அவர்களின் புத்தாண்டு பண்டிகைக்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காணமுடியும்
பச்சரிசி பொங்கல் மட்டும் இராது
மற்றபடி கூடி கிடந்து கொண்டாடுதல், கனி தரிசனம், உறவுகளை நோக்குதல் பொங்கல்படி போன்ற அன்பளிப்புகள் எல்லாம் ஒன்றே
நமக்கு போகி போல அவர்களுக்கும் சில பழையன கழிதல் சடங்கு உண்டு
இங்கே ஜல்லிகட்டு போல அங்கு சிங்க நடனம் முக்கியம், அந்த உருவம் ஒன்றும் விசிதிரம் அல்ல இந்து ஆலயங்களில் யாளி என இருக்கும் சிலை அதுதான்
யாளி எனும் பலமான மிருகம் முன்பு இருந்திருக்கின்றது அதை இந்துக்கள் ஆலய சிற்பங்களில் வடித்து வைத்திருப்பார்கள், அது எவ்வளவு பெரியது என காட்ட அதன் காலடியில் யானை சிலை ஒன்றை எறும்பு போல் வைத்திருப்பார்கள்
இந்த யாளி ஆட்டம் அதாவது பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் போல இங்கு யாளி ஆட்டம் ஒருகாலத்தில் இந்துவழிபாட்டின் கொண்டாட்டத்தின் அங்கமாக இருந்திருக்கின்றது
பின் இங்கு அது மறைந்துவிட்டது ஆனால் சீன பாரம்பரியத்தில் தொடர்கின்றது
சீன மாண்டரின் மொழியில் தமிழ் சொற்களும் நிரம்ப இருக்கின்றன , சமஸ்கிருதமும் உண்டு
இன்றும் சீனபுத்தாண்டு அன்று விளக்கு வைத்து வரவேற்பார்கள், இந்துக்களின் அந்த தொடர்ச்சி சபரிமலையில் மட்டும் ஜோதியாய் தெரிகின்றது, மகர ஜோதி என்பது அதுவே
இங்கு மஞ்சள் அன்று வீடெங்கும் தெருவெங்கும் நிறமாகும், சீனர்களுக்கு அன்று சிகப்பு நிற தினம்.
என்றோ ஒரு காலத்தில் இரு இனங்களும் ஒரே சமயத்தில் ஒரு பண்டிகையினை கொண்டாடியிருக்கின்றன
இன்று அது அவர்களுக்கு சீன புத்தாண்டாய் மாறிற்று தென்னிந்திய மக்களுக்கு பொங்கல் மகரசங்கராந்தி என மாறிற்று
காலங்கள் மாறிவிட்டாலும் இரு இனமுமே அதை தொடர்ந்து வருகின்றது
இந்துக்களுக்கும் அவர்களுக்குமான ஒற்றுமை யாளி மற்றும் சிங்க நடனத்தில் மட்டுமல்ல, அவர்கள் நாள்காட்டியிலும் உண்டு
காளை, எலி, முயல், ஆடு, சேவல், பன்றி , புலி,குரங்கு, நாய், வராகம், பெரிய பாம்பு என 12 வகையான மிருங்களின் அடையாளத்தில்தான் அவர்கள் நாள்காட்டி வரும்
இந்த 12 மிருகங்களும் இந்துக்கள் வழிபாட்டில் வரும் விலங்குகளே
ஆக சீன புத்தாண்டு என்பது இந்துக்களின் மகர சங்கராந்தியொடு தொடர்புபட்ட நாள், அவர்கள் கரும்பும் தீபமுமாக கொண்டாடுவது அதை சரியாக சொல்கின்றது
இந்துக்கள் பாரம்பரியமும் வழிபாடும் கொண்டாட்டமும் உலகெங்கும் உண்டு, சீனா என்பது வடநாடு இந்துஸ்தானம் என்பது தென்னாடு என அம்மதம் பரந்து விரிந்திருக்கின்றது என்பதற்கான சான்றுகளுடன் சீன புத்தாண்டை சீனர்கள் கொண்டாடிகொண்டிருக்க்கின்றார்கள்
இந்துஸ்தானிகளுக்கு சூரிய சந்திர நாள்காட்டி என இரண்டும் உண்டு, அவர்களுக்கு சந்திர் நாள்காட்டி மட்டும் உண்டு மற்றபடி அடிப்படையான அமைப்பு இந்துமதமே என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கின்றது.
February 19, 2024
இந்தியாவினை போல பெரிய மக்கள் தொகைகொண்ட தேசம் சீனா, பட்டாசுகளின் தாயகமும் அவர்கள்தான்
அங்கே சீனபுத்தாண்டு அவ்வளவு விமரிசையாக கொண்டாடபடும், அவர்கள் கொண்டாட்டமெல்லாம் பட்டாசு இன்றி நடவாது அவ்வகையில் 10 நாட்களாக பட்டாசு கொளுத்தி தீர்க்கின்றார்கள்
சீனா மட்டுமல்ல உலகெல்லாம் சீனர்கள் வாழும் நாடுகளில் அதுதான் நிலை
ஆனால் அங்கெல்லாம் யாரும் நீதிமன்றம் சென்று நாய் ஓடுகின்றது, பூனை கதறுகின்றது, புறாக்களெல்லாம் சிபி சகக்ரவத்தியாக எங்களிடம் சரணடைகின்றது என கதறவில்லை
நீதிமன்றமும் இந்த நேரம்தான் வெடி வெடிக்கவேண்டும் என தீர்ப்பு சொல்லவுமில்லை
சீனா கம்யூனிச தேசம், வெடிக்க கூடாது என உத்தரவிட்டால் கூடாதுதான் மீறிவெடித்தால் துப்பாக்கி ஒலிதான் கேட்கும்
ஆனால் அவர்களுக்கு எது மக்கள் பாரம்பரியம், எது கலாச்சாரம் என தெரிந்திருக்கின்றது கொண்டாடி தீர்க்கின்றார்கள்
ஒரே மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் சீனாவிலும் அவரவர் பட்டாசு கொண்டாடங்களில் எத்தனை வேறுபாடுகள் கண்டீர்களா?
அங்கே வெடி வெடிக்க தடையேதுமில்லை இங்கே தீபாவளிக்கு ஆயிரம கட்டுபாடுகள்
ஏன்? காரணம் மூன்று
முதலாவது அங்கே பிரிட்டிஷ் ஆட்சி ஒருகாலமுமில்லை, மதமாற்றிகளை குழப்பவாதிகளை சீன மன்னன் கடைசிவரை அனுமதிக்கவில்லை, பைபிள் ஒரு ஆபாசநூல் என அன்றே தடை செய்யபட்டது
இரண்டாது அங்குள்ள கம்யூனிஸ்ட் அவன் நாட்டுக்கும் அவன் கலாச்சாரத்துக்கும் விச்வாசமாய் அவர்கள் மக்கள, அவர்கள் மண் என சரியாக இருக்கின்றான், இந்திய கம்யூனிஸ்டுகள் யாருக்காக வாழ்கின்றர்கள் என்பது அவர்களுக்கே தெரியாது
மூன்றாவது வழிவழி பாரம்பரியய்மே கலாச்சாரத்தாலும் கொண்டாடங்களாலும் பண்டிகைகளாலும் ஒரு தேசத்தை இணைக்கும், ஒருமைபாட்டை இணைக்கும் என்பது சீனர்கள் நம்பிக்கை , சீனா அதில் நிலைத்திருக்கின்றது
இந்தியாவினை இணைக்கும் பாரம்பரியங்களை, பண்டிகைகளை ஒழித்தால் இந்தியா சிதறும் என்பது இங்கிருக்கும் மத நல்லிணக்கவாதிகள், மதசார்பு அற்றவர்கள் நம்பிக்கை அதனால் அதில் கவனமாக இருக்கின்றார்கள்
சீனர்களிடம் இருந்து கற்கவேண்டியது கம்யூனிசத்தை அல்ல, ஒரு நாட்டை கட்டுகோப்பாக கொண்டு செல்ல என்னென்ன காரியங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்பதை மட்டுமே
அதில் முக்கியமானது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாட்டங்களையும் காக்கவேண்டும் அதுதான் தேச ஒற்றுமையினை வலுபடுத்தும் என்ற மகா முக்கியமான ஒன்று.