தீனதயாள் உபாத்யாய்
இன்று உலகின் மிகப்பெரிய கட்சி பாரதீய ஜனதா கட்சி (பாஜக), மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமும் அதுதான்.
பலமான இந்தியாவினை உருவாக்கி, இனி அவர்களை அசைக்கவே முடியாது, இனி எதிரிகளே அவர்களுக்கும் தேசத்துக்கும் இல்லை எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
அப்படிப்பட்ட பலமான பாஜக இன்று ஆட்சியில் இருக்கலாம், மகா அசுரபலத்துடன் அது விஸ்வரூபமெடுத்து நிற்கலாம். இன்னும் 100 ஆண்டுக்கு அசைக்கமுடியா பலத்தை அது பெற்றிருக்கலாம். ஆனால் அதன் தொடக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது, சுருக்கமாகச் சொன்னால் அப்படி ஒரு கட்சி தொடங்கப்பட்டதே பலருக்குத் தெரியாது.
1980ல் அது பாஜக என அறியப்பட்டாலும் அது 1950களில் ஜனசங்கம் எனும் தாய் கழகத்தில் இருந்து பாரதீய ஜன சங்கம் அதாவது பிஜேஎஸ் என அறியப்பட்டபொழுது யாருக்கும் தெரியாது.
சுதந்திர இந்தியாவில் இந்துக்களுக்கும் இந்திய சுதேசிகளுக்கும் பாதுகாப்பில்லை. அதையெல்லாம் காக்க ஒரு கட்சி வேண்டும் இயக்கம் வேண்டும் என்றுதான் அது உருவானது.
1951ல் சியாமா ப்ரசாத் முகர்ஜி பாரதிய ஜன சங்கத்தை தொடங்கியபொழுது பலர் ஓடிவந்து இணைந்தனர்.
அவர்களுக்கெல்லாம் அடுத்த 60 வருடத்தில் அக்கட்சி நாட்டை ஆளும் என்றோ மிகப்பெரிய பலமான இந்தியாவினை அது உருவாக்கும் என்றோ ராமர் கோவில் முதல் காசி உள்ளிட்ட விவகாரங்களில் பெரும் தீர்வினைக் கொடுக்கும் என்றோ காஷ்மீரை இணைக்கும் என்றோ கருதவில்லை.
300 ஆண்டுகளாக மதமாற்றக் கும்பல் பிடியில் இருக்கும் தமிழகத்தை அதுதான் மீட்கும் என அவர்கள் கருதவுமில்லை.
ஆனால் இத்தேசத்துக்கு எது தேவையோ அதைச் சொன்னார்கள். அதற்காக உழைத்தார்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி சுமார் 1000 வருடம் இத்தேசம் எதற்குப் போராடியதோ அந்த நோக்கத்தைச் சொன்னார்கள்.
அவர்களில் முக்கியமானவர் தீனதயாள் உபாத்யாய்.
அவர்தான் பாரதீய ஜன சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர். அக்கட்சிக்காய் அவர் உழைத்து இன்றைய பாரதீய ஜனதாவுக்காக அடித்தளமிட்ட உழைப்பு கொஞ்சமல்ல.
பாஞ்சஜன்யா, ராஷ்ட்ரிய தர்மா போன்ற செய்தி இதழ்களை நடத்தினார். அதில் இந்தியாவின் சிக்கல்களையும் அதன் தீர்வுகளையும் எழுதினார். கால்கள் தேயத் தேய தேசமெங்கும் சுற்றி கட்சி வளர்த்தார்.
இன்று காணும் பலமான பாஜகவின் அஸ்திவாரம் அவரால்தான் எழுப்பப்பட்டது.
1953ல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைவுக்கு பின் 1968 வரை அக்கட்சியினை அதன் தலைவராய் இருந்து நடத்தினார்.
மிக எளிய இயக்கமாக நாட்டுப்பற்றும் தேசியமும் வளர்க்கும் இயக்கமாக அதுதான் வலம் வந்தது. காங்கிரசும் இதரப் பெரும் கட்சிகளும் கோலோச்சியபொழுது அது யாரும் அறியாமல் வேர் விட்டு கொழுந்துவிட்டது.
பெரும் இன்னல்கள் மிரட்டல்கள் இடையே கட்சியினை அவர்தான் வளர்த்தார்.
கட்சிக்கு இப்படி அஸ்திவாரம் இட்டபொழுது 1968ல் உபி ரயில் நிலையத்தில் அவர் வெட்டிக் கொல்லபட்டார். கொள்ளை முயற்சியில் அவர் கொல்லப்பட்டதாக வழக்கு முடிந்தது.
இன்று மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கும் ஆலமரத்தின் விதை அவர்தான். அந்த விதைதான் விருட்சமானது.
தன் இரண்டாம் தலைவரையே ரத்தபலி கொடுத்துத்தான் பாஜக வளர்ந்தது.
அது வன்முறை இயக்கம், தீவிரவாத இயக்கம் என்பதெல்லாம் கொஞ்சமும் ஏற்புடையதல்ல. தன் தலைவன் செத்ததையும் அதுவும் கொடூரமாகக் கொல்லப் பட்டதையும் அது அரசியலாக்கவில்லை, கடந்து சென்றது.
தன் கட்சித் தலைவனின் ரத்தத்தில் அனுதாபத்தில் அது கட்சி வளர்க்கவில்லை. மாறாக தலைவனின் சித்தாந்தத்தில் வளர்ந்தது.
தீனதயாள் உபாத்யாயா கொடூரமாகக் கொல்லப்பட்டபொழுதும் அது இந்தியாவில் யார் மேலும் வன்மம் காட்டவில்லை. கலவரம் நிகழ்த்தவில்லை.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இறக்கும்பொழுது என்ன நடந்தது என்பதும், திராவிடத் தலைவர்கள் சிறையிருந்தால் என்ன நடந்தது என்பதும் எல்லோரும் அறிந்தது.
இப்படியெல்லாம் அமைதியாக வலிதாங்கி அழுகையும் கண்ணீரும் தாங்கி சித்தாந்தம் வளர்த்துத்தான் பாஜக வளர்ந்திருக்கின்றது.
இன்று அது வளர்ந்துவிட்ட இயக்கம். ஆனால் அதன் அஸ்திபாரம் தீனதயாள் உபாத்யாயா போன்றோரால் இடப்பட்டது. அதில்தான் மேக் இன் இந்தியா முதல் பல விவகாரங்களாக இன்று தேசம் காக்கின்றது.
அந்த தீனதயாள் உபாத்யாவுக்கு இன்று (11/2) நினைவு நாள். 1968ல் இதே நாளில்தான் அவர் உத்திரப்பிரதேச ரயில் நிலையத்தில் வெட்டி சரிக்கப்பட்டார். கடைசிவரை யாரையும் குற்றவாளி எனப் பிடிக்கவுமில்லை, தண்டிக்கவுமில்லை.
இன்று உபி மட்டுமல்ல இந்தியாவினை ஆளும் கட்சியாக அசைக்கமுடியா கட்சியாக பாஜக வளர்ந்திருக்கின்றது. அவ்வகையில் தீனதயாள் உபாத்யாயாவின் ரத்தம் வீணாகவில்லை. அது தேசத்தினை வளர்த்து காத்துக் கொண்டிருக்கின்றது.
எதிர்கால பாரதத்தை கனவுகண்ட அந்த நாயகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை தேசம் செலுத்துகின்றது.
ஆம், சிலர் சொல்வது போல ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எக்காலமும் வன்முறை இயக்கம் அல்ல, கலவரமோ வன்முறையோ பதிலுக்கு பதில் அடி வெட்டு குத்து என இறங்கிய இயக்கம் அல்ல.
அவர்கள் ஒவ்வொரு அசைவிலும் நாட்டுப்பற்றை சிந்திப்பார்கள், ரயில் தண்டவாளமும் பேருந்தும் இன்னும் பலவும் நாட்டு சொத்தல்லவா என அமைதி காப்பார்கள்.
அப்படியே எதிர்தரப்பு எவ்வளவு அட்டகாசங்களைச் செய்தாலும் அவர்களும் இந்தியர்கள் அல்லவா எனத் தயங்குவார்கள். சட்டமும் காவலும் எதுவும் செய்ய முடியுமா என எதிர்பார்ப்பார்கள். அப்படி நடக்காபட்சத்தில் வலியும் வேதனையும் தன்னுள் வைத்துக் கொண்டு மக்களிடம் தங்கள் கருத்தை, சித்தாந்தத்தை வளர்க்கப் பாடுபடுவார்கள்.
அவர்களிடம் பதவிவெறியோ, பெரும் ஆசையோ, வீண் ஆடம்பரமோ எதுவுமிருக்காது.
அப்படிப்பட்ட தியாக நாட்டுப் பற்றாளர்களால்தான் இன்று தேசம் வளர்ந்து பலமாக நிற்கின்றது, அவ்வகையில் அந்த உபாத்யாயாவின் தியாகம் மகத்தானது.
ஆர்.எஸ்.எஸ். எப்படியான பொறுமையான இயக்கம் என்பதை பல இடங்களில் காணலாம். அதனை உபாத்யாயாவின் வாழ்வில் காணலாம். இன்றும் தமிழகத்தில் நடக்கும் காட்சிகளிலும் காணலாம்.
எந்த உத்திரப்பிரதேசத்தில் அவர் கொல்லப்பட்டாரோ அதே உத்திரப்பிரதேசத்தின் ஆளும் கட்சியாக, அயோத்தி, காசி, மதுரா என எல்லா இந்து அடையாளங்களையும் மீட்கும் இயக்கமாக அங்கு பாஜக கோலோச்சி நாட்டுக்கும் தர்மத்துக்கும் வழி காட்டுகின்றது என்பதில் உயர்ந்து நிற்கின்றது தீனதயாள் உபாத்யாயாவின் பெரும் தியாகம்.