மரித்துவிட்டார் நவ்லோனி
சில நாடுகளின் தலைவிதி எக்காலத்திலும் மாறாது, ஜாதகமோ விதியோ இல்லை அவர்கள் சாபமோ எதுவோ என ஒன்றை நம்பித்தான் தீரவேண்டி இருக்கின்றது
இந்தியாவின் மேற்கு பக்கமாக இருந்து பின் தனிநாடாக பிரிந்த இடம் பாகிஸ்தான். அங்கேதான் மொகஞ்சதாரோ ஹரப்பா என மண்மூடிபோன இடங்கள் உண்டு, அன்றில் இருந்தே ஒரு சாபம் அங்கே நிலவி பின்னாளில் அது ஆப்கானிய குழப்பமாகி பின் தனி இஸ்லாமிய நாடானார்கள்
இந்த 75 வருட அவர்கள் வரலாற்றில் ஒரு அரசு கூட ஐந்துமுறை நிறைவு செய்ததே இல்லை, கொலை அல்லது ராணுவ ஆட்சி இல்லை பாதியில் கவிழும் அரசு என அவர்கள் காணும் ஜனநாயகம் அப்படி
இப்போது நவாஸ் கட்சியும் பெனாசிர் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்கின்றன, இது அதிமுகவும் திமுகவும் கூடி அமைக்கும் ஆட்சிக்கு சமம்
இது நிலைப்பதற்கான அறிகுறிகள் இனிதே தெரிகின்றன விரைவில் அரசு கவிழலாம்
இப்படி ஒரு சாபத்தை போல சர்வாதிகார சாபம் பெற்ற நாடு ரஷ்யா, அது என்னவோ தெரியவில்லை ஏதோ ஒரு சர்வாதிகாரியிடம் அத்தேசம் சிக்கிவிடுகின்றது
ஜார் மன்னர்களை தொடர்ந்து ஜோசப் ஸ்டாலின் அதை செய்தார் பின் 1990களில் அத்தேசம் கம்யூனிசத்தை ஆழகுழிதோண்டி புதைத்தபின் இனி எல்லாம் மாறும் என கருதபட்ட நிலையில் புட்டீனார் வந்துவிட்டார்
புட்டீனாருக்கு ரஷ்யாவில் எதிரியே இல்லை காரணம் எதிரிகளெல்லாம் காணாமல் போவர் அலல்து செத்து போவார்கள்
அப்படி இருதினம் முன் ஒருவர் மரணித்துவிட்டார் அதுவும் சிறையிலே மரித்துவிட்டார் அவர் நவ்லோனி
நவ்லோனி 47 வயது இளம் தலைவர், மக்களிடம் ஒரு செல்வாக்கும் உண்டு கொஞ்சம் எச்சரிக்கையான ஆசாமிதான் ஆனால் விமான பயணத்தில் ஒரு டீ கேட்டார், அங்கு காத்திருந்த உளவாளிகள் நச்சு கலந்து கொடுத்துவிட இரு ஆண்டுக்கு முன்பே அன்னார் சாக கிடந்தார்
அந்த் நச்சு டீ கொடுக்க ஏற்பாடு செய்தது ரஷ்ய உளளவுதுறை என பின்னர் தெரியவந்தது
சாககிடந்த அவரை ஜெர்மன் தன் நாட்டுக்கு கொண்டு சென்று பிழைக்கவைத்தது, அந்த விஷம் சோவியத்கால விஷம் என பின்னால் சொல்லபட்டது
சோவியத்தில்தான் புட்டீன் உளவாளியாக இருந்தவர்
பின் நவ்லனி ரஷ்யா திரும்பினார், வந்தவரை அரசுக்கு எதிரான சதி, குழப்பம் ஏற்படுத்துதல், மக்களிடம் பீதி ஏற்படுத்துதல் என தமிழக அரசு சமூக ஊடகத்தில் இருப்போரை கைது செய்வது போல் கைது செய்து சிறையில் அடைத்தது ரஷ்ய அரசு
அந்த நவ்லனி இப்போது இறந்துவிட்டார்
கவனியுங்கள் அமெரிக்கா ஜனநாயக நாடு, இன்றும் அவர்கள் ஜனநாயகம் நல்ல நிலமையில் உண்டு
என்றேனும் ஒரு அதிபர் சர்வாதிகாரி ஆகலாம், மக்கள் உரிமை மறுக்காபடலாம் அன்று எல்லா மக்களும் ஆயுதம் ஏந்தி அரசை மாற்றவேண்டும் என எல்லா மக்களும் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்க்கும் தேசம் அது
அதாவது ஒரு சர்வாதிகாரி உருவாக கூடாது என்பதற்காக அவ்வளவு முன்னேற்பாடாய் இருக்கின்றார்கள், அந்த அறிவிப்பால் எல்லோரிடமும் துப்பாக்கி வந்து பல சர்ச்சைகள் வந்தாலும் சர்வாதிகாரி உருவாக கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றார்கள்
ரஷ்யா பழைய ஜார் மன்னன் காலத்துக்கு திரும்பிவிட்டது
ஆச்சரியம் என்னவென்றால் ஜார் மன்னனின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவன் இப்படி பல எதிர்ப்பாளர்களை கொன்று குவித்தத அவனை எதிர்த்துத்தான் ரஷ்ய புரட்சி வந்தது
அந்த ரஷ்ய புரட்சி பின் ஜோசப் ஸ்டாலின் எனும் சர்வாதிகாரியினை உருவாக்கியது பின் பல சர்வாதிகாரிகள் வந்து இப்போது புட்டீன் அமர்ந்திருக்கின்றார்
இதில் எங்கே புரட்சி வென்றது, மானுடம் வென்றது என்றால் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை
சீனாவிலும் இதுதான், வடகொரியாவில் எல்லோரும் அறிந்த வெள்ளை குண்டான் அமர்ந்திருப்பதும் இப்படித்தான்
புரட்சி, மானுடம், எல்லாம் எல்லாருக்கும் என்பதெல்லாம் இப்படித்தான் முடியும், எல்லாம் படுபயங்கர ஏமாற்றுவேலை, மக்களை குழப்பும் விஷயம்
சரி,நவ்லனி மரணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் புட்டீன் என்ன சொன்னார்
அவர் அமைதியாக சொன்னார் “நிறைய குழந்தைகளை பெற்றுகொள்ளுங்கள், எதிர்கால ரஷ்யாவுக்கு மக்கள் தொகை மிக அவசியம், அதனால் நிறைய நிறைய பெற்றுகொள்ளுங்கள்”
புரிகின்றதா?
நாட்டுக்காக பலர் சாவத்தான் செய்வார்கள், அதற்கு பதில் நிறைய குழந்தைகளை பெற்று நாட்டை பலபடுத்தவேண்டும்
எப்படிபட்டவர் பாரத்தீர்களா? இவர்தான் புட்டீன், ரஷ்யர்கள் தலைவிதி அப்படி.