மாதவ சதாசிவ கோல்வால்கர்
காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம்
ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி ஒளிமயமனாது எனபதும் தெரியும்
சிவாஜிக்கு பின் யார்யாரோ போராடி பின் திலகர் சாவர்க்கர் என யார் யாரோ வந்து, இந்துமதம் இந்துஸ்தானம் காத்த மண் அது
வீரசிவாஜி வரலாற்றில் காகபட்டர் அவனுக்கு முடிசூட்ட வரும்போது பெரும் யாகம் செய்து பல சூட்சும சக்திகளை ஸ்தாபித்ததை கண்டோம், அதை நம்பத்தான் வேண்டியிருக்கின்றது
சிவாஜிக்கு முடிசூட்ட மட்டும் அவர் வரவில்லை, காலம் காலமாக இந்து எழுச்சி வந்துகொண்டே இருக்க அவர் பெரும் யாகம் இயற்றி பவற்றை சக்கரமாக்கி ஸ்தாபனம்
அன்றிலிருந்து இன்றுவரை அந்தமண் அபப்டியான அதிசுத்தமான பரிசுத்தமான தேசியவாதிகளை தந்துகொண்டேதான் இருக்கின்றது
காகபட்டர் அங்கு எதையோ ஸ்தாபித்தார் என்பது வரலாறு, ஆனால் எங்கே என்ன ஸ்தாபித்தார் என்பது மறைககபட்டது என்றாலும் அங்கே இந்துஸ்தனா அணல் எப்போதும் உண்டு என்பது வரலாறு சொல்வது
அப்படி திலகர், சாவர்க்கர், ஹெட்கோவர் வழியில் அங்கிருந்தே வந்தார் அந்த தேசாபிமானி
அப்படி காலத்தால் வந்தவர் அந்த மாதவ சதாசிவ கோல்வால்கர் , 1906ம் ஆண்டு இதே நாளில் நாக்பூரில் பிறந்தவர் அவர்
அவர் வளர வளர் அவரோடு சுதந்திர தாகமும் வளர்ந்தது, ஆனால் அது வாள்முனையிலோ காந்தியின் அஹிம்சைமுனையிலோ வராது அது இங்கே அன்மீக கலாச்சார எழுச்சி வந்தால்தான் நிலைக்கும் என்பதில் உறுதியாக இருந்தார்
அவர்காலத்தில் நடந்த சுதந்திர போராட்டம் என்பது காந்திக்கும் பிரிடிட்சாருக்கும் நடக்கும் ஒப்பந்த் கண்ணாமூச்சி ஆட்டம் இதனால் பலனேதுமில்லை என்பதை உணார்ந்தார்
இந்துக்களுக்கு சரியான தலமை இல்லாமல் இங்கே சுத்ந்திரம் சாத்தியமில்லை , அபப்டி ஒரு தலமை இல்லமால் சுதந்திரம் கிடைத்தாலும் தேசம் நிலைக்காது என்பதை உணர்ந்தார்
அவரின் கணிப்பு சரியானது அன்று இந்துக்களுக்கென தலமையோ, அமைப்போ குர்லோ இல்லை
அவர் இந்நாட்டுக்கு தேவை வீரதுறவிகள் என்பதை உணர்ந்து விவேகானந்தரின் நேரடி சீடரான அகண்டானந்தா என்பவரின் மாணவரானார்
அவர் அப்போதே பட்டம் மெற்றார், 1926ல் சென்னையிலெல்லாம் பணியாற்றினார், ஆனாலும் அதெல்லாம் தேசவிடுதலைக்கான வழியில்லை என கருதியவர் 27ம் வயதில் அகந்தானந்தாவிடம் துறவியாக சேர்ந்தார்
சுவாமி அகந்தானந்தா என்பவர்தான் அவருக்கு தீட்சை கொடுத்து சன்னியாசியாக்கி, விவேகானந்தர் விரும்பிய 100 இளைஞர்களில் நீரும் ஒருவர் என்பதை உணரவைத்து 1937ல் அதாவது இவரின் 31ம் வயதிலே சமூக பணிக்கு அனுப்பி வைத்தார்
1937ல் தன் சிந்தனைக்கும் வழிக்கும் தான் தேர்ந்துகொண்ட கர்மத்துக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமே சரியானது என கருதி அங்கே தனனை இணைத்து கொண்டு அரசியல் துறவியாக கடமையாற்றினார்
அப்போதுதான் மதன்மோகன் மாளவியாவுடன் இணைந்து தீவிர பணிகளை மேற்கொண்டார்
அந்த 1940கள்தான் இந்திய வரலாற்றின் முக்கியமான தருணங்கள், பாகிஸ்தான் பிரிவினை குரல் பெரிய பெரிய கலவரமெல்லாம் அரங்கேறி இந்துக்களுக்கு இனி எதுவுமில்லை என்ற உண்மை தெரியவந்த காலங்கள்
இந்த 1940ல்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மற்றும் நிறுவணர் ஹெட்கோவர் மரணித்தார், 12 ஆண்டு காலம் அவர் கட்டி காத்த இயக்கத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவரின் உயில்தான் சொல்லிற்று
ஆம், அந்த கடித்த்தில் உயிலில் தனக்கு பின் இந்த இயக்கத்தை நடத்த சரியான நபர் கோல்வால்கர் என அவர் சுட்டிகாட்டியிருந்தார் சில உரைகளும் குறிப்புகளும் செய்துவிட்டே மரித்தார்
அதாவது இயக்கத்தை கோல்வர்கர் கைகளில் விட்டுவிட்டு சென்றார், கோல்வால்கர் எனும் குருஜி இரண்டாம் தலைவரானார்
அக்காலகட்டங்கள் சவால் நிறைந்தவவை, சதியும் குழப்பமும் மர்மங்கள் பல நிறைந்தவை
அப்போது இந்துக்களின் குரலாய் ஆர்.எஸ்.எஸ் குரலே ஒலித்தது ,தேசம் பிரியவும் குழப்பம் கூடவும் அது எதிர்ப்பை காட்டியது
காங்கிரசார் மற்றும் பிரிட்டிசாரின் கள்ள மவுனத்தில் பெரும் பெரும் கலவரங்கள் ஜின்னாவினால் நடத்தபட அங்கெல்லாம் இந்துக்களுக்கு ஆதரவாகவும் தேசம் பிரியாமல் இருக்கவு ஆர்.எஸ்..எஸ் இயக்கமே உயிரை கொடுத்து நின்றது
ஆனாலும் தேசம் பிரிந்தது, அந்த கொடும் சூழலில் எல்லையில் நின்று இந்துக்கள பெரும் ரத்த சேற்றில் இருந்து முடிந்தவரை காத்தது அவர்கள்தான்
அங்கெல்லாம் கோவல்கர் முதல் ஆளாக நின்று பணியாற்றினார்
1947 அக்டோபர் 18ல் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கை சந்தித்து அவர்கள் இந்தியாவோடு இணையும் அவசியத்தை சொன்னவர் அவர்தான், காஷ்மீர் இந்தியாவின் அங்கம் கலாச்சாரம் மதம் பண்பாடு என அது இந்திய மண் என்பதை சொல்லி வாதிட்டவர் அவர்தான்
அவரும் காஷ்மீர் இந்தியாவோடு இணைய முக்கிய காரணம் என்பதை மறுக்கமுடியாது, தேசபிரிவினை காலங்களில் பட்டேலுக்கு ஆதரவாக வலுவான் இந்தியா உருவாக அவரும் பாடுபட்டு கொண்டிருந்தார் அந்த சங்கமும் அப்படி உழைத்தது
1948ல் காந்தி கொல்லபட்டபோது அவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார் பின் விசாரணையில் அவருக்கு கொலையில் தொடர்பில்லை எனப்து நிருபணமாகி விடுவிககபட்டார்
அக்காலம் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யபட்ட காலம் இனி அந்த இயக்கமே இருக்காது என சொல்லபட்ட காலம்
1948 பிப்ரவரி முதல் 1948 அக்டோபர் வரை ஆர்,எஸ்,எஸ் தடை செய்யபட்டது, கோல்வால்கர் சிறையில் இருந்தார்
ஆர்.எஸ்.எஸ் எங்கே தனித்து நின்றது என்றால் அது தடைசெய்யபட்டபோது அதன் தலைவர் கைது செய்யபட்டபோது ஒரு கொந்தளிப்பையும் வன்முறையும் காட்டவில்லை
மாறக தடைசெய்யபட்ட காலங்களிலும் நாட்டுக்காக உழைத்தது, ஒரு எதிர்ப்பு காட்டாமல் ஆர்.எஸ்.எஸ் எனும் பெயர் இல்லாமல் உழைத்தார்கள்
அது சோமநாத் கோவில் கட்டுமானத்தில் தெரிந்தது, காஷ்மீர் போரில் தெரிந்தது, அந்த காஷ்மீர் படையெடுப்பில் ஆர்.எஸ்.எஸ் காட்டிய நாட்டுபற்றை கண்டுதான் பின் நேருவும் பட்டேலும் தடையினை நீக்கினார்கள்
ஹெட்கோவருக்கு பின் அந்த இயக்கத்தை தாங்கிய கோல்வால்கர், தடை செய்யபட்ட சவாலான காலத்தில் ஒரு சலசலப்பின்றி இயகக்த்தை தூக்கி நிறுத்தினார்
காந்தி கொலையில் இருந்து வெளிவந்து பின் அவர் அரசியல் செய்யவில்லை, நேருவினை பழிவாங்குவேன் எனகிளம்பவில்லை, நாடெல்லாம் வன்முறை என கிளம்பவில்லை
மாறாக தேசத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் அதே நேரம் தேசத்தின் ஆதார் பிரச்சினைகளையும் சுட்டிகாட்டி உழைத்தார்
அயோத்தி ராம்ர்கோவில் எழுந்துவர அந்த போராட்டத்தில் அவரும் பங்குபெற்றார், 1950களின் அரசியலில் அவரும் முக்கிய பாத்திரத்தை வகித்தார், பசுவதை போராட்டம், அயோத்தி ராமர்கொவில் காஷ்மீர், வடகிழக்கு மாகாணங்களில் மதமாற்றம் தடுத்தல் என பெரும் பங்கு அவருடையது உண்டு
1962ல் சீனபோர் நடந்தபோது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இரண்டாம் ராணுவமாக நின்று பணியாற்றியபோதுதான் நேருவே அவர்களை அணைத்து கொண்டு அடுத்த குடியரசு தினவிழாவில் பங்கு கொள்ள் வைத்தார்
பின் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வழியில் காங்கிரஸ் வரவில்லை, அதை அனுமதித்தார்கள் அந்த இயக்கமும் அரசியல் அல்லாமல் தேசபற்று இயக்கமாக கிளைபரப்பி வளர்ந்தது
லால்பகதூர் சாஸ்திரிக்கும் கோல்வார்கருக்கும் பெரும் புரிதல் இருந்தது, சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு கட்டமைக்கபட்ட தேச் ராணுவம் என அழைத்தார்
1965 பாகிஸ்தனபோரில் அந்த இயக்கம் காட்டிய நாட்டுபற்று சாஸ்திரியினை கவர்ந்தது, சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ் இயகத்தோடும் கோல்வால்கரோடும் இணைந்தபோதுதான் அவரின் மரணம் நிகழ்ந்தது
அதன் பின்பும் கோல்வால்கர் கொஞ்சமும் தயங்கவில்லை, தன் இயக்கத்தை சரியான வழியில் நடத்தினார், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் 1960களில் அமையவந்தபோது பெரும் சர்ச்சைகள் கிறிஸ்தவர்களால் வந்தன
அந்த கலவர சூழலை ராணடே எனும் மாமனிதன் சமாளித்து துளிவன்முறையின்றி அதனை அமைத்ததில் இந்த கோல்வால்கருக்கும் முக்கிய பங்கு இருந்தது
பின் வங்கபோரிலும் அவரின் பங்களிப்பு இருந்தது இந்திய ராணுவத்துக்காக துணை நின்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை, அகதிகள் குவியும்போது அரவணைத்த இயக்கத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தியே வரவேற்றார் என்பது வரலாறு
ஆக கோல்வாரின் பங்களிப்பு எப்படி இந்த தேசத்தை காத்தது, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை காத்தது என்றால் அது ஒரு சாதாரணா மனிதன் செய்யகூடிய காரியம் அல்ல
அவருக்குள் ஒரு அசாதாரணா சக்தி குடிகொண்டே அதை சாதித்தது
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஹெட்கோவரால் நிறுவபட்டு 12 ஆண்டுகள் பெரிய சவாலை சந்திக்கவில்லை, ஆனால் அவருக்கு பின்னரான 30 ஆண்டுகாலம் அது பெரும் புயலை, பெரும் பூகம்பத்தை மாபெரும் சவால்களை சந்தித்தது
இந்த 30 வருட காலம் இயக்கத்தை காத்து, இரு தடைகளை தாண்டி (1947ல் பஞ்சாப் பிரிவினையின் போது முதல் தடை, 1948ல் காந்தி கொலையினை ஒட்டி இரண்டாம் தடை) என காத்து நின்றவர் அவர்
ஒரு தேசாபிமான இயக்கம் நடத்துவது என்பது ஆசிரமம் நடத்துவதற்கு சமம், அங்கே வருமானமில்லை சல்லி காசு பிரயோசனமில்லை , ஆனாலும் நாடு நாட்டு நலன் நாட்டின் அடையாளம் என கொள்கைகொண்டு மக்களை ஈர்த்து மிக கட்டுகோப்பாக ஒரு இயக்கம் நடத்துவது சாதாரணம் அல்ல
அதுவும் பிரிட்டிசார் காலம், நேருகாலம் என மிகபெரிய நெருக்கடியான காலங்களில் ஒரு இயக்கம் நடத்துவது சாமானியம் அல்ல
கோல்வால்கர் அந்த அதிசயத்தினை செய்தார், மிக சாதுர்யமாக செய்தார்
30 ஆண்டுகள் அவர் எதற்கெல்லாம் போராடினாரோ அதைத்தான் காஷ்மீராக, வலுவான இந்தியாவாக, அயோத்தியாக இந்த தேசம் கண்டுகொண்டிருக்கின்றது
இன்றைய வலுவான இந்தியாவினை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் காத்து நிற்கின்றது என்றால் அதன் பின்னால் இருந்தவர் ஆணிவேராக இருந்தவர் இந்த கோல்வால்கர்
காலமெல்லாம் வீரதுறவியாக நின்று பெரும் அஸ்திபாரமிட்டு சென்ற மகான் அவர், ஆர்.எஸ்.எஸ் மேலான ஒவ்வொரு விமர்சனத்துக்கும் செயல்கள் ஒன்றால், நாட்டுபற்றுமிக்க செயல்கள் ஒன்றாலே பதில் சொன்னவர் அவர்
அவரின் பண்பு அப்படியானது, விவேகானந்தரின் சீடரால் வளர்க்கட்டவர் அவர், அதனால் எங்கும் வன்முறை அடாவடி பதிலடி என அவர் போதித்ததுமில்லை, இயக்கத்தினை அப்படி திசை திருப்பியதுமில்லை
அடித்தால் பட்டுகொள், சாகடிகபட்டால் செத்துபோ, விமர்சித்தால் கண்டுகொள்ளாதே, நீ ஒரு இந்துமரபில் வந்தவன் இந்துஸ்தான பாரம்பரியம் உன்னுடையது
உன்னை கொன்றால் அஞ்சாதே , காரணம் நீ ஆதமா, உன் உடல் அழியலாம் ஆனால் ஆத்மா கர்மத்தை செய்ய மீண்டும் வரும். நமது கர்மா நம் முன்னோர்கள் தந்த இந்த நாட்டை பாதுகாப்பது நாடு என்பது துன்டு நிலமல்ல, வெறும் கண்ணும் ஆறும் மலைகளும் மக்களுமலல், நாடு என்பது நம் பாரம்பரிய ஆத்மார்த்தம், அதை காப்பதே நம் கடமை
இங்கு இருப்போர் எல்லோரும் இந்தியர்களே, நம் சகோதரர்களே அவர்களுக்கு இந்நாட்டுக்கு எது நலல்து எதுசரி என்பதை புரியவைப்பதே நம் நோக்கம், அவர்களை எதிர்ப்பதோ சண்டையிடுவதோ ந்ம கடமை அல்ல
நாட்டுக்கு எது அவசியமோ அதை செய்யவென்டும், வார்த்தைகளால் அல்ல செயலால் ஒவ்வொருவர் இதயத்தையும் தொடவேண்டும்”
என போதித்து வாழ்ந்துகாட்டியவர் அவர், அவரால்தான் இன்றைய வலுவான பாரதம் மலர்ந்திருக்கின்றது
இங்கே மோதல்களும் சண்டைகளும் போரால் மட்டுமல்ல,பல வகையான புரிந்துகொள்ளமுடியாத சூட்சுமங்களலும் உண்டு
அந்த சூட்சுமம் பல வகையில் உண்டு, அதில் ஒன்றுதான் அந்த மராட்டிய பக்கம் இருந்து காலத்துக்கு ஏற்றவாறு யாரொ எழும்பி இந்துஅம்தத்தை காப்பது
காளி வழிபாடு மிகுந்த கேரளாவில் இருந்து சங்கரர், அதே காளி உபாசனை நிறைந்த வங்கத்தில் இருந்து விவேகானந்தர் என யாரோ யாரோ வந்து காலத்துக்கு ஏற்றபடி இங்கே காத்து நிற்பார்கள்
16ம் நூற்றாண்டில் சிவாஜி அப்படி எழும்பினான், காகபட்டர் எனும் மகா வேதஞானி பல வேதவடிவங்களை சக்தியாக்கி அப்பக்கம் நிறுத்திவைத்தார்
அதிலிருந்து யார் யாரோ காலத்துக்கு ஏற்றபடி உருவாகி கொண்டே இருந்தார்கள், சிவாஜிக்கு பின் அவுரங்கசீப்பே நேருக்கு நேர் வந்து எல்லாம் அழித்துபோட்டபின்பும் அந்த சக்தி மீண்டும் தளைத்தது பல இந்து பெரும் அரசர்களை உருவாக்கியது
பின்னாளில் திலகர், சாவர்க்கர் என காலத்துக்கு ஏற்றபடி வந்தார்கள், சரியான நேரத்தில் அந்த சக்தி கோல்வால்கரை அனுப்பி தேசத்தை காத்து கொண்டது
இன்று அந்த அசாத்திய மனிதன் கோல்வால்கரின் பிறந்த நாள், தேசாபிமான இயக்கத்தினை 30 ஆண்டுகள் பெரும் சோதனையில் பெரும் குழப்பத்தின் இடையே கட்டுகோப்பாக நடத்தி இன்று தேசம் வலுவாக நிற்க அடித்தளமிட்டவரின் பிறந்த நாள்.
அந்த குருஜி என தேசம் கொண்டாடும் கோல்வால்கருக்கு, விவேகானந்தர் கண்டபடி வீரமும் அறிவுமிக்க இளைஞராய் வந்த துறவிக்கு, வீரசிவாஜி உருவாக்க நினைத்தது போல வலுவான சேனையினை உருவாக்கிவிட்ட அந்த வீரத்துறவிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துகின்றது தேசம்.