வைத்தியநாதய்யரும் மதுரை ஆலய நுழைவும்
அந்நிய ஆட்சிக் குழபப்ங்களில் அவர்கள் கைகூலிகளின் அராஜகத்தில் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய சில தடைகள் இருந்தன.
அங்கு மன்னர் காலத்தில் அப்படி அல்ல, நாயக்கர் காலத்தில் அல்ல, இக்குழப்பம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்தான் மர்மமாக வந்தது
அந்த மர்மத்தின் பின்னால் மதமாற்ற தந்திரமும் இருந்தது, இந்துக்களுக்கு நெருக்கடி கொடுத்து மாற்றுமதம் தேடவைக்கும் ரகசிய தந்திரம் இருந்தது
1924ல் கேரள வைக்கம் கோவிலுக்கு சென்று கூட்டத்தோடு ஓரிருநாள் கத்திவிட்டு பின் தன்னை பெரும் சாதி ஒழிப்பு தலைவராக அடிபொடிகள் மூலம் காட்டிகொண்ட ராம்சாமி நாயக்கர் கடைசிவரை மதுரை பக்கமே வரவில்லை
அங்கே முதலில் எல்லா சாதியும் அனுமதிக்கப் படவேண்டும் எனக் கிளம்பியவர் வைத்தியநாதய்யர்
அவர் 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 8.50 மணிக்கு.
ஐந்து தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு நாடார் இனத்தைச் சேர்ந்தவரையும் அந்த கோவிலுக்குள் அழைத்து சென்றார், அதுவும் அம்மன் சன்னதிக்கே அழைத்து சென்றார்
அவர்களை வரவேற்ற பொன்னுசாமி பட்டர், அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதம் அளித்தார்.
ஆனால் மறுநாள் பிரச்சினை வெடித்தது, அந்நிய ஆட்சியின் அடிவருடிகள் குழப்பத்தை தொடங்கினார்கள்,
முத்து சுப்பர் என்ற பட்டர் அன்று காலை நேரத்திற்கான பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவுகளை மூடி விட்டார்.
பிறகு மாலையில் கோவிலை திறக்க வேண்டிய நேரத்தில் திறக்க மறுத்தார்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாகவும், அதற்காக சுத்தீகரணச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
அப்படி அவரை தூண்டிவிட்டது யார் என்பது தெரியவில்லை, அதாவது முதல்நாள் தாழ்த்தபட்டோரை பொன்னுசாமி பட்டர் அழைத்து பூஜையில் பங்கேற்க வைத்தபோது அவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். எதிர்க்கவில்லை, ஆனால் மறுநாள் பொங்கிவிட்டார்
நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடுவால் அவரிடமிருந்து சாவிகளைப் பெற முடியவில்லை.
அன்று வழிபாட்டு உரிமை பெற்றிருந்த மற்றொரு பட்டரான சாமிநாத பட்டர் வெளியூர் சென்றிருந்தார்.
அவர் இரவில் மதுரை திரும்பியதும் மற்ற பட்டர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் ஆர்.எஸ். நாயுடுவுக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்தார்.
ஜூலை பத்தாம் தேதியன்று கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டன.
சன்னதி திறக்கப்பட்டு முதல் நாள் பூஜைகளும் அன்றைக்கான பூஜைகளும் சாமிநாத பட்டரால் செய்யப்பட்டன.
சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யக்கோரிய முத்து சுப்பர் உள்ளிட்ட மூன்று பட்டர்கள் நிர்வாக அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதற்குப் பிறகு, கோயிலுக்கு வர மறுத்த பட்டர்கள் படிப்படியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இப்படி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, அன்றைக்கு செயல்பட்டுவந்த வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கம் என்ற இந்து அமைப்பு ஆதரவு அளித்தது.
இந்த சங்கத்தின் தலைவராக இருந்த என். நடேச அய்யர், ஆர்.எஸ். நாயுடுவின் செயலைக் கடுமையாகக் கண்டித்தார்.
மீனாட்சி அம்மன் கோயில் அசுத்தப்பட்டுவிட்டது என்றும் தெய்வங்கள் திருக்கோயிலை விட்டுச் சென்றுவிட்டனர் என்றும், திருக்கோயிலைச் சுத்தம் செய்தால்தான் தெய்வங்கள் திரும்ப எழுந்தருளுவார்கள் என்று நடேச அய்யர் வலியுறுத்தினார்.
கோவிலை சுத்தம் செய்யவேண்டுமெனக் கோரி வழக்கும் தொடரப்பட்டது.
இதுபோக ஜூலை 29ஆம் தேதியன்று காலையில் நடேச அய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு கூடியவர்கள், கோயிலில் சுத்தீகரணச் சடங்கைச் செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால், கோயில் கதவுகள் சாத்தப்பட்டதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பட்டர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
குழப்பம் கூடிற்று
யார் என்ன சொன்னாலும் சுத்தீகரணச் சடங்கு செய்யப்பட மாட்டாது என கோயிலின் நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடு கறாராக மறுத்துவிட்டார்.
அவர் நல்ல இந்துவாக சரியான இந்துவாக இருந்தார்
இதற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்ய வேண்டுமெனக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டன.
அவை அனைத்துமே நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டன.
1942ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 19 பட்டர்கள் மதுரை முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர்.
அதாவது கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யும்வரை தாங்கள் கோயிலுக்கு வராமல் இருந்தது சரிதான், அதற்காக தங்களைப் பணி நீக்கம் செய்தது தவறு என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.
1943ல் பட்டர்களுக்குச் சாதகமாக முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், மேல் முறையீட்டில் நிர்வாக அதிகாரிக்குச் சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் பிறகு 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாக அதிகாரியும் பட்டர்களும் ஒரு சமரச உடன்பாட்டிற்கு வந்தனர்.
அதன்படி, கோயிலில் எந்த சுத்தீகரணச் சடங்கும் செய்யாமல் வேலைக்கு வரவும் நிர்வாக அதிகாரியின் சட்டப்படியான உத்தரவுகளை பின்பற்றவும் பட்டர்கள் ஒப்புக்கொண்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு பின் வெகுசில ஆலயங்களில் இருந்த இந்த சர்ச்சையும் முடிந்துபோனது
வைத்திய நாத அய்யரை குருவாக வரிந்து அவருடன் இருந்தவர்தான் கக்கன்
மதுரையில் வைத்தியநாதய்யர் இறந்தபிறகு அவரின் மூன்று மகன்களோடு சேர்ந்து மூத்தமகனாக மொட்டை போட்டுக்கொண்டவர் கக்கன்.
அந்த அளவு அவரை தந்தைபோல் பாவித்தார்.
கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, வைத்தியநாதய்யர் இறந்தார்.
தகவலறிந்து உடனே மதுரை கிளம்பிய கக்கன், அவரது குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்கத் தயாரானார்கள்.
இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர். ‘இது முறையல்ல’ என ஐயரின் பிள்ளைகளை அழைத்து கண்டித்தனர்.
ஆனால் அவர்களோ, ‘நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது’ என்றனர்.
ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போய் நின்றார்கள்.
அப்போது சிலர் கக்கனிடம், ‘உங்களால் தான் பிரச்னை விலகிக்கொள்ளுங்கள்’ என்றனர்.
ஆனால் கக்கனோ, இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மானுடநேயம் தான்.
அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்றார்.
அவர்கள் திகைத்துப் போனார்கள். இதையடுத்து ஐயரின் உறவினர்கள் சிலர் இறுதிச் சடங்கை புறக்கணித்தனர்.
(ஐயரின் குடும்பத்தை சமுதாயக்கட்டுப்பாடு என்ற பெயரில் பின்னர் சிலர் விலக்கி வைத்ததாகவும் தகவல் உண்டு)
உள்ளூர் அக்ரஹாரத்து பெரிய மனிதர்கள் தெரிவித்த எதிர்ப்பை புறந்தள்ளி எங்களைவிட எங்கள் அப்பாவுக்கு காரியம் செய்ய கக்கனே ஸ்லாக்கியமானவர்.
அவர் எங்கள் அப்பாவின் ஆக்ஞையை நிறைவேற்றுகிறார் என்று உடன் நின்று தோள் தொட்டு
காரியம் செய்தார்கள் வைந்தியநாதய்யரின் வாரிசுகள்
அப்படி வைத்தியநாத அய்யருக்கும் தாழ்த்தபட்ட ககக்னுக்கும் இருந்த பந்தம் அலாதியானது
இப்படி ஒரு காட்சி திராவிட கழகத்தில், திமுகவில் இதர திராவிட இயக்கத்தில் உண்டா என்றால் ஒருகாலமுமில்லை
ராம்சாமியோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ இப்படி ஒரு தாழ்த்தபட்டவனை கைதூக்கிவிட்டார்கள் என காணமுடியுமா என்றால் பதில் வரலாற்றில் இல்லை
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், 1924லே வைக்கம் பக்கம் ஓடிய ராம்சாமி, 1937 முதல் 1945 வரை மதுரை ஆலயம் உள்பட பல ஆலயங்களில் குழப்பம் நடந்தபோது வரவே இல்லை
ஆலய நுழைவினை வைத்தியநாதய்யர் போன்றோர் நீதிமன்றத்தில் போராடி வாங்கினார்கள் 1945 வரை இந்த வழக்கை பிராமணர்கள்தான் நடத்தினார்கள்
இங்கேயும் திராவிட கும்பல் நடத்திய வழக்கு என எதுவுமில்லை , எந்த உரிமையும் அவர்கள் வாங்கி தரவுமில்லை வாங்கி தர நினைத்ததுமில்லை
ஈரோட்டு ராம்சாமி எங்கும் எதுவும் உருப்படியாக செய்யவுமில்லை, வழக்குகள் நடத்தவுமில்லை, இம்மாதிரி போராட்டங்களுக்கு வரவுமில்லை
அண்ணாதுரையும் கருணாநிதியும் இக்காலத்தில் வசனங்களை எழுதுவதிலும் வருமானத்தை பார்ப்பதிலும் சரியாக இருந்தார்கள்
தாழ்த்தபட்டோருக்காக போராடியது பிராமணர்கள், வைத்தியநாத அய்யர் போன்ற பிராமணர்கள், பசும்பொன் சிங்கம் போன்றவர்கள்
இங்கே அம்பேத்கர் என்பவரும் எட்டியே பார்க்கவில்லை என்பது ஒன்றும் ரகசியமல்ல
இப்படி உண்மையான சாதி ஒழிப்பு, சமதர்ம போராட்டங்களை பிராமணர்கள் நடத்தியிருக்க அவர்களை விரோதிகளாக்கிவிட்டு ஒன்றுமே செய்யாத ஈரோட்டு ராம்சாமிக்கு ஊரெல்லாம் சிலைகள், அண்னாவுக்கும் கருணாநிதிக்கும் சிலைகள் நினைவிடங்கள் என வைத்து அரசியல் நடப்பதுதான் பெரும் விசித்திரம்
இதை கவனித்தால் தமிழக அரசியல் எவ்வளவு பரிதாபமாக யாரோ ஒருசிலரின் கண்ணாமூச்சியில் நடத்தபடுகின்றது என்பது புரியும்
மதுரை ஆலயத்தில் தாழ்த்தப்பட்டோரை அழைத்து சென்ற அய்யருக்கு ஒரு கல்வெட்டு கூட இல்லை. ஆனால் ஒன்றுமே செய்யாத ராம்சாமிக்கு இந்துமத துவேஷிக்கு திருவரங்க வாசலில் சிலை.
எவ்வளவு பரிதாபமான மடமையான அறிவில்லா சமூகமாக தமிழக சமூகம் கண்கட்டி வைக்கப்பட்டு புத்தி பேதலிக்க வைக்கப் பட்டிருக்கின்றது என்பதற்கு இதை விட உதாரணம் இல்லை
காலம் மாறும்போது எல்லாம் மாறும் மதுரை கோவில் வாசலின் இருபுறமும் அய்யருக்கும் பசும்பொன் தேவருக்கும் சிலைகள் வைக்கபடும், காலம் அதை செய்யும்.