“திருநெல்வேலி வரலாறு” என்ற கால்டுவெல் புத்தகம்
கால்டுவெல் பற்றி கவர்னர் சொன்ன வார்த்தை சரியானது அவன் எந்த கல்வி கற்றான் என்பதை விட தமிழையே அவன் சரியாக படிக்கவில்லை என்பது நிஜம்.
அவன் தமிழை முழுமையாக கற்கவில்லை, தமிழ் உச்சரிப்பை கூட அவனுக்கு சொல்ல தெரியவில்லை. இது நாம் சொல்வது அல்ல அவன் எழுதிய நூலை படித்தாலே புரியும்
“திருநெல்வேலி வரலாறு” என கால்டுவெல் எழுதிய புத்தகத்தை வாசியுங்கள், அவன் எப்படிப்பட்ட உளவாளி வேலை பார்த்திருக்கின்றான் என்பது தெரியும்
கால்டுவெல்லுக்கு திருநெல்வேலி வரலாறே 1500ம் ஆண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் திருநெல்வேலி எனும் ஒரு ஊர் இருந்தததாகவும் தாமிரபரணி என ஒரு நதி ஓடியதாகவும் அவர் சொல்லவே இல்லை
அன்னாரின் “திராவிட” ஆராய்ச்சியின் முடிவு இப்படி செல்கின்றது
நெல்லையப்பர் கோவிலில் சிவன் நெல்லுக்கு வேலியிட்டது கட்டுகதையாம், அரிசி என்றால் உமியோடு சேர்ந்தது என வராதாம், மூங்கிலில் இருந்து வருவதுதான் அரிசியாம், தாமிரபரணி கரையில் நெல் விளையாமல் மூங்கில் அரிசியில்தான் பசியாரினார்களாம்
வ்ற்றாத நதி தாமிரபரணி ஓடும் மண்ணில், ஆதிச்சநல்லூர் என பெரும் நாகரீகம் உருவாகிய கரையில் மூங்கில்சோறுதான் உண்டார்கள் என்பது எப்படியான பொய்?
அவன் இன்னும் நிரம்ப சொல்கின்றான்
இந்துக்கள் நம்பிக்கை எல்லாம் கட்டுகதையாம், இந்துக்களின் நம்பிக்கையெல்லாம் கட்டுகதையாம். அதே நேரம் அவர் பரப்ப வந்த கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி கேள்வி கேட்கவே கூடாதாம்
அவன் சொன்ன தென் தமிழக வரலாறு முழுக்க கிரேக்கன் வந்தான், ரோமன் ஆப்கானியன் வந்தான், நாயக்கன் வந்தான், அராபியன் வந்தான் அப்படிபட்ட தமிழகத்தில் பிரிட்டானியர் ஏன் வரகூடாது என்ற ரீதியில்தான் செல்கின்றது
பாண்டிய வம்சத்தை அவன் மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தாமல் கிரேக்க புராணங்களோடு தொடர்புபடுத்தும் பொழுது அப்படியே புத்தகத்தால் அவன் மண்டையில் அடிக்க வேண்டும் போல் கோபம் எழுகின்றது
முதுமக்கள் தாழியின் எலும்புகளை கண்டு இது இந்துக்கள் இல்லை என சொல்கின்றான் கால்டுவெல், எந்த இந்து இந்து அடையாளத்தோடு புதைக்கபடுவான் என்பதுதான் தெரியவில்லை, 300 வருட கிறிஸ்தவன் கல்லறையினை தோண்டினால் அவன் பைபிளோடு படுத்திருப்பானோ என்னவோ?
அன்னாரின் ஆய்வில் ஒரு இடத்திலும் பிரமாண்டமான நெல்லை ஆலயம் பற்றியோ, குற்றால நாதர், தென்காசி கோவில் பற்றி சிறுகுறிப்புமில்லை
அக்கோவில்களின் மிகபரந்த பரப்பளவு அது கட்ட செதுக்கபட்ட கற்கள், அங்கு நிற்கும் பிரமாண்ட தேர் இது பற்றியெல்லாம் குறிப்ப்பே இல்லை, அந்த அளவு அவன் எரிச்சல் அடைந்திருக்கின்றான்
அன்னாரின் ஆய்வு திருவிதாங்கூர் சமஸ்தானம் வரை செல்கின்றது, அங்கு அய்யா வைகுண்டர் தலமையில் நடந்த போராட்டத்தை, அதாவது அய்யா எனும் நாராயணின் அவதாரத்தை மறைத்து “மக்கள் கிளர்ச்சி” என மாற்றி வைக்கின்றான் கால்டுவெல்
மக்கள் ஏன் கிளர்ந்தார்கள் என்பது பற்றி அவன் ஒன்றும் சொல்லவில்லை, வஞ்சகம் என்றால் இதுதான், இதன் பெயர் சமத்துவ கிறிஸ்தவம் உண்மை பேசும் கிறிஸ்தவம்
நெல்லையின் பிரமாண்ட ஆனிதிருவிழா, மதுரையின் சித்திரை திருவிழா உள்ளிட்ட ஒரு குறிப்பும் காணோம் , திருசெந்தூர் ஆலயம் பற்றியோ அங்கு நடந்த சூரசம்ஹாரம் பற்றியோ கொஞ்சமும் தகவலே இல்லை
குலசேகரபட்டின முத்தாரம்மன் ஆலயம் பற்றி, அந்த தசரா பற்றி மூச்சே இல்லை
ஆனால் வரிக்கு வரி பிரான்ஸிஸ் சேவியர் எனும் மதம்மாற்றி, இயேசுசபை இன்னும் ஏகபட்ட சபைகளை சொல்லமுடிகின்றது
தஞ்சாவூர்காரியான அலமேலுவினை , இளம்பிராமண விதவையான அலமேலுவினை மணம் செய்த ஐரோப்பியன் கதை வஞ்சகமாக திரிக்கபட்டிருக்கின்றது
ஆம் அந்த அலமேலு தஞ்சாவூர் பிராமணத்தி ஆனால் பெரும் செல்வசெழிப்புமிக்க குடும்பம் அவளுடையது வைரநகை மட்டும் அணிந்திருப்பாள்
அவள் மதம்மாறினால் மணம் செய்யலாம் என ஆசைகாட்டபட்டு ஒரு பிரிட்டிஷ் கமலஹாசனால் மதம்மாற்றபடுகின்றாள், ஆனால் அவனுக்கும் குடும்பம் இருந்தது
கிறிஸ்தவ முறைபடி திருமணம் ஆன ஒருவன் இரண்டாம் திருமணம் சட்டபடி செய்யமுடியாது என்பதால் அவர்கள் கமலஹாசன் பாணியில் குடும்பமாகவும் வெளியில் போதகர்களாகவும் வலம் வந்தனர்
தஞ்சாவூர் பக்கம் இது சர்ச்சையானதால் அம்மணியும் அவரின் துணைவனும் பாளையங்கோட்டை பக்கம் வந்து “ஊழியம்” செய்து, ஏராளமான ஜனங்களை கர்த்தரிடம் சேர்த்தனர்
ஒரு கட்டத்தில் அந்த ஐரோப்பிய கமலஹாசனும் செத்துவிட இரண்டாம் முறையாக விதவையாகும் அலமேலுவுக்கு மனம் உடைகின்றது ஆனால் திரும்பி செல்லமுடியா வலை கிறிஸ்துவத்தால் விதிக்கபடுகின்றது
குளோரிந்தா என பெயரை மாற்றிகொண்டு பாளையங்கோட்டையிலே வாழ்ந்து மரித்தாள் அம்மணி, அவளின் கோடான கோடி சொத்து சபைக்கு சென்றது
அவள் பிராமண பணக்காரியாக இல்லையென்றால் கிறிஸ்தவம் ஏற்றிருக்குமா? ஏற்றிருந்தாலும் லிவ்விங் டுகேதர் வாழ்வினை அங்கீகரித்திருக்குமா என்பதெல்லாம் தலைசுற்றும் விஷயம்
அந்த குளோரிந்தாவினை மதர் தெரசா அளவுக்கு சொன்ன கால்டுவெல்லுக்கு நெல்லையப்பர் ஆலயம் பற்றி சொல்ல வாய்வரவில்லை என்பதுதான் அவனின் பொல்லாத மனம்
பாளையங்கோட்டை பற்றி சொல்லும் கால்டுவெல் அந்த கோட்டையின் கட்டபொம்மன் கதையினையோ, அங்கிருந்து ஊமைதுரை தப்பி சென்ற கதையினையோ சொல்லவே இல்லை
பாளையங்கோட்டையில் பெரும் கோட்டை இருந்ததையும் அங்கிருந்து பிரிட்டிசாருக்கு எதிரான பெரும் போர்கள் தொடங்கியதையும் அப்படியே மறைத்தும் இருக்கின்றான்
சரி, அவன் தமிழ்படித்தது இருக்கட்டும் ஆனால் தமிழக ஊர்களுக்கு அவன் வைத்த பெயர் என்ன தெரியுமா?
“வாஷிடே நெலூர்” அதாவது வாசு தேவ நல்லூர்”
அப்போதும் அந்த ஊரின் சிங்கம் புலித்தேவன் பற்றி ஒருவார்த்தை இல்லை
“கோமரின்” அதாவது கன்னியாகுமரி, “டூட்டுகொரின்” அதாவது தூத்துகுடி
இப்படி தமிழே சரியாக தெரியாதவன் திருநெல்வெலி வரலாற்றை எழுதினானாம் , அவனுக்கு இங்கு சிலையாம் கொண்டாட்டமாம்
தமிழகம் எப்படிபட்டவர் கையில் சிக்கி இருக்கின்றது என்பதற்கு திராவிட கூட்டம் கொண்டாடிய கால்டுவெல் மிகபெரிய சாட்சி
கால்டுவெல் செய்தது என்னவென்றால் அவன் வரும்பொழுது இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அவர்கள் எழுதிவைத்த நாள்குறிப்பினை படித்திருக்கின்றான், அதை ஒரு காப்பியாக எழுதி வைத்து திருநெல்வேலி வரலாறு என சொல்லியும் விட்டான்
ஆம் அவன் கணக்குபடி திருநெல்வேலிக்கு வரலாறு வெறும் 300 வருடமே, இதை அங்கீகரித்தவர் தமிழனத்தை காக்க வந்த முத்தமிழ் அறிஞர் கருணாநிதி
ஒரு காலம் வரும் அன்று கால்டுவெல்லும் அவனின் குதர்க்கமான பிடித்த புத்தகமும் கடலில் வீசபடும், அது நிச்சயம் நடக்கும்
ஆளுநர் இதைத்தான் சொல்லியிருக்கின்றார், அவ்வகையில் அவரின் கருத்து மிக சரியனதுதான், சந்தேகமில்லை
(திருநெல்வேலி எனும் அழகான தமிழ் பெயரை கூட டின்னவெலி என எழுதியவன் என்ன தமிழக வரலாற்றை எழுதியிருப்பன, தமிழ்மொழி அருமையினை புரிந்திருப்பான் என்பது பவர்ஸ்டார் பரதநாட்டியத்தை விட சிரிப்பானது)