லச்சித் பொர்புக்கான் சிலையினைத் திறந்து வைத்தார் பாரத ப்ரதமர் மோடி
மோடி அசாமில் மொகலாருக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்திய லச்சித் பொர்புக்கான் சிலையினை திறந்துவைத்தார என்பது தேசாபிமானிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி
லச்சித் பார்புக்கானின் வரலாறு அசாத்தியமான ஒன்று
இவன் வரலாறு எங்கே தொடங்கி பெரும் போராயிற்று என்றால் வழக்கம்போல் எல்லா வம்பையும் இழுத்த அவுரங்கசீப் காலத்தில் இருந்து தொடங்குகின்றது
நாம் சிவாஜி தொடரில் இந்த மாவீரன் வரலாற்றை சுருக்கமாக சொல்லியிருந்தோம், சிவாஜி தொடரை நாம் சிவாஜியின் கதையாக மட்டும் சொல்லவில்லை,அக்கால கட்டத்தில் இந்துஸ்தானம் முழுக்க என்ன நடந்துகொண்டிருந்தது எனபதையும் ஓரளவு சொல்லியிருக்கின்றோம்
வங்கத்தில் முதன் முதலில் மொகலாயர் ஷாஜகான் காலத்தில் கால் வைத்தார்கள்,
ஷாஜகான் காலத்து தளபதி மீர் ஜூம்லா, வங்கத்தின் வளமான பகுதிகளும் டாக்கா கல்கத்தா சிட்டகாங் முதலான பகுதிகள் வரை மொகலாயத்தை நீட்டியிருந்தான்
வங்கத்தை தாண்டி அகொம் எனும் அசாமில் அவன் கால் வைத்தபோது அவன் கொல்லபட்டான், அவனை கொன்றது இந்த லச்சித் புர்புக்கான்
ஒருமுறை இருமுறை அல்ல 17 முறை மொகலாய படைகளை தோற்கடித்தவன் லச்சித்
அவனுக்கு எல்லோரும் அஞ்சினார்கள், அகோமிய வீரசிவாஜியாக காடுகளில் மலைகளில் பழக்கபட்ட யானைகளை கொண்டு வீரபோர் புரிந்தான் அந்த மாவீரன்
மீர் ஜூம்லா அவனால் கொல்ல்பட அதிர்ந்தான் அவுரங்க்சீப், அந்நேரம் வீரசிவாஜியால் விரல் வெட்டபட்டு புனேவிலிருந்து ஓடிவந்த தன் மாமன் ஷாயிஸ்ட்கானை அசாமிற்கு அனுப்பினான்
சிவாஜியிடம் தோற்ற ஷாயிஸ்ட்கான் லச்சித்திடமும் தோற்றான், தோற்றுகொண்டேதான் இருந்தான்
1672ல் அவுரங்கசீப் உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்தான், ஒருபக்கம் சிவாஜி ஒருபக்கம் லச்சித் என பலர் போராடும்போது அங்கே இருந்த ஒற்றுமை இந்து ஆலயங்களாக இருந்தது
அந்த 1672ல்தான் மதுரா, காசி என எல்லா ஆலயங்களையும் இடித்த அவன், அசோமின் காமாக்யா ஆலயத்தையும் குறிவைத்தான்
அந்த ஆலயத்தை காக்கும் போரில் உயிர்துறந்தான் லச்சித், அதுவும் வஞ்சகத்தால் கொல்லபட்டான்
காளையார் கோவிலை காக்க உயிர்விட்ட மருது சகோதரர்களை போல காமாக்யா ஆலயத்தை காக்க உயிர்விட்டான் அம்மாவீரன்
ஷாயிஸ்ட்கான் காமாக்யா ஆலயத்தை த்கர்க்கவில்லை, லச்சித் கொல்லபட்டதால் கொஞ்சம் தயங்கினான்
அசாமிய வரலாற்றில் மட்டுமல்ல இந்துஸ்தான வரலாற்றிலும் மறக்கமுடியா மாவீரன் அந்த லச்சித்
17 முறை மொகலாய தளபதிகளையெல்லாம் விரட்டி அடித்து அவன் பெற்ற வெற்றி மாபெரும் வரலாறு அந்த அளவு நதிகள், காடுகளை அரணாக பயன்படுத்தி பெரும் வெற்றிபெற்றான்
கடைசியில் காமாக்ய தேவிக்காக தன் உயிர்தந்தான்
அவன் வரலாறு ஒரு பழன்குடி கிளர்ச்சியாக பிரிட்டிஷாரால் பதிவு செய்யபட்டு அதுவே வரலாறு என்றானது, அந்த பழங்குடியினர் இந்து என்பதும் சக்திபீடங்களில் ஒன்றான காமாக்யா எனும் சக்தி தேவியினை வழிபட்ட இனம் என்பதும் மறக்கடிக்கபட்டது
இப்போது வரலாறு மீள்கின்றது
லச்சித் புர்புக்கான் சுமார் 28 ஆண்டுகள் மொகலாயரை அலறவிட்டவன், 49 வயதுவரை வாழ்ந்தாலும் கடைசிவரை வீரசிவாஜி போல் சிம்ம்சொப்பணமாக நின்ற இந்துவீரன்
அவனை சரியாக கவுரவபடுத்துகின்றார் மோடி
இத்தேசத்தில் எப்போதும் அந்நியருக்கு எதிர்ப்பு இருந்தது, அதுவும் மொகலாயருக்கு அதிகம் இருந்தது எனபதை லச்சித்தின் வாழ்வு சொல்லிகொண்டே இருக்கும், அவனுக்கு எக்காலமும் அழிவே இல்லை.