சூர்யா சென்
இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள்
அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை
ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு
அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் சூர்யாசென் செய்த மகத்தான கலங்க வைக்கும் தியாகமே அடிதளமானது
பிரிட்டிசார் கல்வி தந்தனர் , கருணை கொண்டனர என்பதெல்லாம் பொய் அவர்கள் எவ்வளவு கடுமையானவர்கள், இரக்கமே இல்லாதவர்கள் என்பதை தன் சாவில் சொல்லி சென்றவன் சூர்யாசென்
1894ல் இன்றைய வங்கதேசத்தின் சிட்டகாங்க் அருகே பிறந்தவன் அவன், அன்றே பி.ஏ பட்டம் பெற்றான், பின் பிரிட்டிசாருக்கு கீழ் அரசுபணி பார்க்கமாட்டேன், அவர்களை விரட்ட பாடுபடுவேன் என சொல்லி 1918ல் “யுகாந்தர்” எனும் இயக்கத்தை ஏற்படுத்தினான்
இவர்கள் கொரில்லா போராளிகளாக பிரிட்டிசாரை கலங்கடித்தார்கள்
அதே நேரம் அது வெளிதெரியாதவாறு பார்த்து கொண்டு காங்கிரஸ் வேடமும் இட்டு கொண்டார்கள், அவ்வகையில் 1920ல் அப்பக்கம் காங்கிரஸ் தலைவனாகவும் இருந்தான் சூர்யா சென்
காங்கிரஸின் அலுவகமே ரகசிய படைக்கும் அலுவலகமானது, பிரிட்டிசார் கண்களில் கண்ணை தூவிவிட்டு 26 வயதிலே அந்த சாகசத்தை செய்தான் சூர்யா சென்
அப்போது காந்தி வந்தார் , வந்தவர் முதலில் பெரும் பிம்பம் காட்டினார், அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தான் சூர்யா சென்
காந்தியின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை அவனும் நடத்தினான், அப்போதெல்லாம் காந்திமேல் அவனுக்கு மரியாதை இருந்தது
ஆனால் செரளா சௌரி சம்பவத்துக்கு பின் மாறிற்று
செரளா சௌரி என்பது இன்றைய உத்திரபிரதேச மாகாணம் பக்கம் இருக்க்கும் ஊர், அங்கே ஒத்துழையாமை இயக்க ஊர்வலத்தை பிரிட்டிஷ் காவல்துறை தடுக்க அது வன்முறையானது
14 அப்பாவி இந்தியர்கள் சுட்டு கொல்லபட்டார்கள், இதனால் மக்கள் வெகுண்டெழுந்து காவல் நிலையத்தை சூறையாடி காவலர்களை கொன்றார்கள்
நிலமை எல்லை மீறி செல்ல ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார் காந்தி
அதாவது 14 இந்திய மக்கள் கொல்லபட்டபோது கலங்காத காந்தி, பிரிட்டிஷார் கொல்லபட்டதும் நெகிழ்ந்தார் இதுதான் அன்றே சிக்கலானது
இதன் பின் காந்தியினை விட்டு பலர் பிரிந்தனர், சூர்யா சென்னும் பிரிந்தான்
28 வயதே ஆகியிருந்த அவன் தைரியமாக காந்தியின் போராட்ட முறை தோற்றுவிட்டது என அறித்துவிட்டு வெளியேறினான்
அவனது ரகசிய புரட்சிபடையே தனியாக போராட தொடங்கிற்று
கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் ஆகியோர் இருந்தார்கள்
நேதாஜிக்கு முன்பே பெண்களை படையில் சேர்த்தவனும் அவனேதான், அவன் படையில் பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் இருந்தனர்
துப்பாக்கி பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி , சொந்தமாகவே அவற்றை தயாரித்தல் என பல செயல்களை அவர்கள் செய்தார்கள், சுமார் 300 பேர் அவர்கள் படையில் இருந்தார்கள்
அந்த படை செய்த அதிரடியில்தான் பிரிட்டிஷ் அரசு ஆடிபோயிற்று
அவர்களுக்கான நிதிக்காக அரச சொத்துக்களையே கொள்ளை அடித்தார்கள், இந்தியர் பணம் இந்திய போராட்டத்துக்கே என்பதில் அதை சரியாக செய்தார்கள்
அப்படி நடந்ததுதான் பிரிட்டிசாரை உலுக்கிய ரயில் கருவூல கொள்ளை
சிட்டகாங்கில் அசாம் பெங்கால் ரயில்வே நிலைய கருவூலத்தை அவன் படை 1932ல் டிசம்பர் 23ம் தேதி தாக்கிற்று
காவலர்களை கொன்றுவிட்டு பெரும் பணம் அடித்து சென்றனர், பிரிட்டிஷ் படைகள் விசாரணையினை தொடக்கின, ஆனாலும் ஆங்காங்கே தாக்குதலும் கொள்ளையும் தொடர்ந்தபடி இருந்தது
ஒரு கட்டத்தில் 1926ல் சூர்யாசென்னை கைது செய்தார்கள், ஆனால் அவனிடமிருந்து எந்த தகவலும் பெறமுடியவில்லை, வெளியே தாக்குதல் நடந்துகொண்டே இருந்தது, இதனால் இருவருடத்தில் விடுவிக்கபட்டான்
சிட்டகாங் மகா முக்கியமான நகரம் கூடவே காடுகள் அதிகம் இருந்த பகுதி, அதுவும் ஜலாலாபாத் மலைகள் மிக மிக அடர்த்தியான காடுகளை கொண்டவை
அங்கிருந்து தாக்குதலை நடத்தினான் சூர்யா சென்
வருடம் 1930 எட்டியது, லாகூரில் காங்கிரஸ் மகாசபை கூடத்தில் நேரு சொன்ன வரி முக்கியமானது, அவர் நல்ல விதத்தில் சொன்னாரா, இல்லை பிரிட்டிசாருக்கு எச்சரிக்கை கொடுத்தாரா என்பது புரியவில்லை
பகத்சிங் மரணம், இந்த சூர்யா சென்னின் எழுச்சி ஆகியவை நடந்த காலங்களில் அவர் சொன்னார்
“‘பூர்ண சுயராஜ்ஜியத்’ தீர்மானத்தை முன்மொழிந்து புரட்சி இயக்கங்களைப் பற்றி ஆற்றிய உரையில் “இந்திய இளைஞர்களின் சுதந்திர தாகத்தை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எவ்வளவு விரைவில் உணர்கிறதோ அவ்வளவு அதற்கு நல்லது”
இதன் பின்பு ஆயுத போராட்ட குழுக்களை பிரிட்டிசார் தீவிரமாக கண்காணித்தனர் பெருமளவில் ஆயுத பலம் கொண்டு ஒடுக்கினர், அந்த பணியில் முக்கியமான இடம் வகித்தது சிட்டகாங் ஆயுத கருவூலம்
அங்குதான் பிரிட்டிசாரின் பெரும் ஆயுத கிடங்கு இருந்தது
1930, ஏப்ரலில் அந்த ஆயுதகுடோனை கைபற்றி ஆயுதமும் வெடிபொருளும் அள்ளி சென்றான் சூர்யா சென், அதை கொண்டு பெரும் தாக்குதலை செய்யமுடியும்
அவனின் சேனை சுமார் ஆயிரம் பேரை எட்டியிருந்தது அதற்கு “இந்துஸ்தான் குடியரசு ராணுவம்” என பெயரிடபட்டது
அவர்கள் சிட்டகாங் நகரை முதலில் பிரிட்டிசாரிடம் இருந்து விடுவித்து “சுதந்திர நாடாக” அறிவிக்க அவனின் “இந்துஸ்தான் குடியரசு ராணுவம்” திட்டமிட்டது
வேகமாக திட்டங்கள் செயல்படுத்தபட்டன, பிரிட்டிசாரின் தலமை நிலையம் மீதே தாக்குதல் தொடுக்கபட்டது, அந்த முக்கிய நிலையம் துண்டிக்கபட்டு போராளிகள் வசம் வந்தது.
பெரிய மோதல் நடந்தது, அத அடக்க வந்த பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிட்டகாங்கில் பெரும் பதற்றம் பரவியதை அடுத்து ஜாண்சன் தலமையில் பெரும் படையினை பிரிட்டிஷ் நிர்வாகம் அனுப்பியது, சண்டை பெரிதாக பரவிற்று
சுமார் 100 பிரிட்டிஷ் ராணுவத்தார் கொல்லபட்டனர், போராளிகள் தரப்பில் 45 பேர் பலியானாலும் யுத்தம் நிற்கவில்லை, நான்கு நாட்கள் தொடர்ந்தது
தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி ஆகிய முக்கிய வீரர்களை இழந்த நிலையில் இந்துஸ்தான் ராணுவம் பின்வாங்கிசென்றது
பிரிட்டிசார் சிட்டகாங் நகரையே கைபற்ற முனைந்த போராளிகளை வெறியோடு தேடினார்கள், சிட்டகாங் காளிகட்டம் எனும் கிராமத்துக்கு சென்று ஒரு விதவையின் மகன் போல் மறைந்திருந்தான்
அப்போது சந்தேகம் ஏற்படா வகையில் கூலி வேலைகளை செய்தான், புரோகிதமும் தெரிந்திருந்தது
காரணம் அவன் பிராமணனாக இருந்தான்
தினகூலி போல பால்காரன், புரோஹிதன், வீட்டு வேலைக்காரன் என மாறுவேடத்தில் வாழ்ந்து சரியான நேரத்துக்காக காத்திருந்தான்
ஒரு கட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் அவன் தலைக்கு விலை வைத்தது பிரிட்டிஷ் அரசு, இன்று அது பலநூறு கோடிக்கு சமம்
பிரிட்டிஷ் புலனாய்வு குழு சூர்யா சென் இருந்த காளிகட்டம் கிராமத்தை மோப்பம் பிடித்து வளைத்தது, கேப்டன் கெம்சன் பெரும் வீரர்களோடு அவனை வளைத்தான்
அந்த முற்றுகையினை எளிதாக உடைத்தவன் தன் கத்தியால் கேப்டன் கெம்சனை கொன்றுபோட்டு தப்பினான், பிரிட்டிஷ் தளபதியே பலியான நிலையில் பிரிட்டிசார் அரண்டனர்
பெரும் சவாலாக உருமாறினான் சூர்யா சென், அவன் தலைமறைவாக இருந்தாலும் தாக்குதல் நடந்துகொண்டே இருந்தது
தலைமறைவு தொடர்ந்து அவன் கைலாரா பக்கம் நேத்ரா சென் எனும் தன் உறவினர் வீட்டில் இருந்தபோது அந்த பணத்துக்காய் அவனை காட்டி கொடுத்தான் நேத்ரா சென்
நேத்ரா சென்னின் துரோகத்தால் பிடிபட்டான் பெரும் வீரன் அந்த சூர்யா சென், அவனுக்கு அப்போது 36 வயதுதான் ஆகியிருந்தது
( நேத்ரா சென் எந்த அளவு மக்களால் வெறுக்கபட்டான் என்பதிலே சூர்யா சென்னுக்கான ஆதரவும் மக்கள் அபிமானமும் தெரியும்
நேத்ரா சென்னின் மனைவி சாவித்திரியே கணவன் செய்த தேச துரோகத்தினால் புரட்சி படையினருடன் சேர்ந்து கணவனை தலைவெட்டி கொன்றாள்
அவளை பிரிட்டிஷ் காவல்துறை கைது செய்து விசாரித்தபோது சொன்னாள் , “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”
இன்னும் சொன்னாள் “நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன்.
அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி)
1930 ஜூலைமாதம் அவன் கைவிலங்கிடபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தபட்டான், விசாரணை இரண்டரை வருடம் நடந்தது
உண்மையில் அது விசாரணை அல்ல, அந்த புரட்சி இயக்கத்தை முழுக்க அழிக்க தகவல்களை அறிந்து கொள்வதற்கு
இந்த விசாரணை நடக்கும் போதே பல போராளிகள் கைது செய்யபட்டனர், நிலமை மோசமாவதை அறிந்த ஆனந்த்சிங் என்பவன் தானும் போராளி என சொல்லி சரண்டைந்து சிறைபுகுந்தவன், உள்ளே இருந்த போராளிகளுக்கு நம்பிக்கை கொடுத்து ரகசியம் காக்க செய்தான்
சிறையில் சூர்யா சென் இருந்தாலும் அங்கிருந்தே போராட்டடத்தை சாதுர்யமாக இயக்கினான், , 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி பிரிதிலதா தலமையில் போராலிகள் “பஹார்தலி என்ற இடத்தில் உள்ள கிளப் ஒன்றை தாக்கினார்கள்
ப்ரதிலதா ஒரு பெண்
அந்த தாக்குதல் மகா கடுமையானது, இன்றைய பப் போன்ற அந்த கிளப்புகளில் பிரிட்டிசாரும் ஐரோப்பியரும் குடித்து கூத்தாடிய நேரம் சுற்றி வளைத்து சுட்டாள் பிரதிலதா
கடும் தாக்குதலில் ஐரோப்பியர் பலர் இறந்தார்கள், அங்கிருந்த உயரதிகாரியும் வெடிகுண்டு வீசி கொல்லபட்டான், பெரும் பலி எண்ணிக்கை அதிகரித்தது
ஆனாலும் பிரிட்டிஷ் படை வந்து அவளை வளைத்தது, அவள் அசரவில்லை கடைசி பிரிட்டிஷ்காரனை கொல்லாமல் சாகமாட்டேன் என தோட்டா தீருமட்டும் சுட்டு பலரை கொன்றுவிட்டு கடைசியில் விஷம் அருந்தி நாட்டுக்காய் செத்தாள்
வங்கம் என்றாலே தெரேசா என பழக்கபட்டிருக்கும் இந்த சமூகத்துக்கு அன்றே ஐரோப்பிய்ரை எதிர்த்து சுட்டு கொன்று தானும் செத்த பிரதிலதா பற்றி தெரியாது
சிட்டகாங் நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.
சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு ஜனனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர் எனும் செய்தி முதலில் வந்தது
ஆனால் பின்னர் வந்த செய்தி அதிர்ச்சியினை கொடுத்தது
அவனை தூக்கிட்டு கொல்லவில்லை மாறாக சுத்தியலும் சம்மட்டியும் கொண்டு அடித்தே கொன்றார்கள் கொடிய பிரிடிஷ்காரகும்பல்
அவனின் பல் ஒவ்வொன்றாய் உடைத்தார்கள், ஒவ்வொரு நகமாய் பிடுங்கினார்கள், எலும்புகள் ஒன்றுவிடாமல் உடைக்கபட்டன, அவனை சிதைத்து நசுக்கி அணு அணுவாக கொன்றார்கள்
கடைசியில் அவன் பிணத்தையும் கொடுக்காமல் பெட்டியில் அடைத்து கடலில் வீசினார்கள், கொடுத்திருந்தால் அவன் தூக்கிட்டு சாகவில்லை அடித்து கொல்லபட்டான் எனும் உண்மை தெரியவந்திருக்கும்
இன்று (22 / 03) அவன் பிறந்த நாள்.
இந்தியருக்கு ஒரு பலமான ராணுவம் வேண்டும் என கருதி அமைத்து போரிட்டவன் அவன், பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு அவனுடையது
ஆண்களோடு, பெண்களும் படையில் இணைந்து போராடிய வரலாற்றினை அவன் செய்து நேதாஜிக்கு வழ்காட்டினான்
அவன் தனக்கு மரண தண்டனை என அறிவிகக்பட்டபோது சொன்ன வார்த்தைகள் சாகாவரம் பெற்றவை
“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது.
விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.
அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.
தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம். நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள்.
எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்”
அவன் கொல்லபட்ட விதமே அவன் எவ்வளவுக்கு பிரிட்டிசாருக்கு அவமானமும் நம்பிக்கையின்மையும் கொடுத்திருந்தான், எவ்வளவுக்கு அவனை பிரிட்டிசார் வெறுத்தனர் என்பதை புரியவைக்கும்
காரணம் அவன் உண்மையான சுதந்டிர போராட்டத்தை நடத்தினான்
காந்தியினை நேருவினை ஏன் பிடிட்டிசார் கடைசிவரை பொன்போல் பாதுகாத்தனர் என்பதற்கு பதில் உங்களிடமே எழும்
அந்த வங்கத்து தேசமகனுக்கு, எலும்பும் பல்லும் ரத்தமும் சதையும் உயிரும் தந்து தேசம் காக்க போராடிய சிங்கமகனுக்கு தேசம் தன் வீர வணக்கத்தை சமர்பிக்கின்றது.