அக்னிகுல் – அக்னிபான் சிறிய ரக ராக்கெட்
ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின், சக்ரவர்த்தி
மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என சில பதர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, இப்போது தேர்தல் காலம் அது மழைக்கால தவளை சத்தம் போல அதிகரித்திருக்கின்றது.
மோடி ஒரு கர்மவீரர், அவர் அதிகம் பேசுவதில்லை, வாயால் பிரியாணி கிண்டும் திராவிட பரம்பரை வியாதியும் அவருக்கில்லை.
அவர் எந்த சவாலையும் நாட்டுக்காக எடுக்கும் செயல்வீரர். அவரின் துணிச்சலும் சாதுர்யமும் கொஞ்சமல்ல.
அதைத்தான் ரஷ்ய புட்டீனே ஆச்சரியமாகச் சொன்னார் “மோடி என்பவர் எப்படியான உலக அழுத்தத்தை தாங்குபவர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது, இப்படி ஒரு மனிதன் துணிந்து நிற்பதெல்லாம் இந்திய வரலாற்றிலே முதல் முறை.”
ஆம், உலக அரசியல் அப்படியானது, அதுவும் ஆயிரம் ஆண்டு அந்நிய ஆட்சியால் சீரழிக்கப்பட்ட இந்தியா எக்காலமும் எந்நேரமும் எழுந்துவிடக் கூடாது, உலக அரங்கில் அது இறக்குமதி செய்யும் தரித்திர தேசமாக மட்டும் இருக்கவேண்டும் என்பது அவர்களின் வியாபார சிந்தனை.
இதனால் இந்தியாவில் எதையும் உருப்பட விட மாட்டார்கள், இதனை 1800களிலே பிரிட்டிசார் செய்தார்கள், இந்தியக் கல்விமுறை ஒரு அடிமை சிந்தனையில் சொன்னதை செய்யும்படி இருக்க வேண்டுமே தவிர சுய சிந்தனையோ சுய தயாரிப்போ கொண்டதாக இருக்கவே கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
காங்கிரஸ் அதை அப்படி பின்பற்றியது, மோடிதான் அதை உடைத்து புதிய கல்வி கொள்கையினை உருவாக்கினார். அது இனி பெரும் திருப்பத்தை கொடுக்கும்.
இது இன்னொரு கோணம் வருங்கால எதிர்காலம்.
சரி, இப்போது என்ன மோடி அப்படி செய்துவிட்டார் என்றால் எதிர்கால இந்தியத் தலைமுறை பெரும் இடம் எட்டும்படி பெரிய காரியங்களைச் செய்துள்ளார்.
அதுதான் “அக்னிகுல்” என இன்று உலகை அதிரவைக்கின்றது. எலன் மஸ்க் போன்ற பெரும் பிம்பங்களே வாய்பிளந்து நிற்கும் சாதனை அது.
விஷயம் சுருக்கமாக இதுதான், சிறிய ரக செயற்கை கோள்களை எப்படி விண்ணுக்கு ஏவுவது என்பது.
இதுவரை உலகில் மிகப் பெரிய எடை கொண்ட செயற்கை கோள்களை ஏவும் ராக்கெட்டுகள்தான் உண்டு, அவற்றின் செலவு மிக அதிகம்.
ஒரு ராக்கெட்டை ஏவி செயற்கை கோளை மேல் நிறுத்த பல நூறு கோடிகள், ஆயிரம் கோடிகள் வேண்டும் அந்த செலவு அப்படி.
ராக்கெட் பெரியதோ சிறியதோ விஷயம் அல்ல, ஏவும் செலவு அதிகம்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு கொரியரை டெல்லியில் இருந்து குமரிக்கு அனுப்ப தனி வாகனம் இல்லை, கொரியர் லாரி கண்டெய்னர் அல்லது விமானம்தான் வேண்டும்.
இந்த விமானமோ லாரியோ ஒரே ஒரு துண்டுச் சீட்டுக்கோ, சில கிராம் கொண்ட பார்சலுக்ககோ தனியே கிளம்பாது அப்படி கிளம்பினால் பெரும் நஷ்டம்.
10 லிட்டர் கச்சா எண்ணெயுடன் ஒரு கப்பல் அராபியாவில் இருந்து வரமுடியாது.
அவர்கள் சரக்குகள் குவியும் வரை காத்திருந்து பெரும் சரக்கோடு வந்தால்தான் லாபம், செலவு மிஞ்சும்.
அதேதான் ராக்கெட் விவகாரமும், பெரிய ராக்கெட்டோ இல்லை சிறிய ராக்கெட்டுகளோ சில சேர்ந்தல்தான் ஏவும் செலவு கட்டுபடியாகும்.
ஆனால் மாறிவிட்ட உலகம் இது, ஒரு போன் என்பது கூட மோதிரம் அளவுக்கு சுருங்கிவிட்ட நாட்கள் இவை, ஐசி சிப் எனும் எலெக்ட்ரானிக்ஸ் யுகம் அந்த அதிசயத்தை செய்கின்றது.
இதனால் எடைகுறைந்த சிறிய ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன, ஒவ்வொருவரும் நில ஆய்வு, தனிபட்ட தேவைகள், இன்னும் பல காரணங்களுக்காக அரச நிர்வாகங்களும் தனியார் கம்பெனிகளும் சொந்த செயற்கை கோள், சிறிய கோள்களை ஏவ விரும்புகின்றன.
ஆனால் ஏவும் செலவுதான் மலைக்க வைக்கின்றது.
இங்கேதான் உலகுக்கு வழிகாட்டியது இந்தியாவின் சென்னை ஐஐடி, இரு தமிழக இந்திய மாணவர்கள் அந்த சாதனையினை செய்திருக்கின்றார்கள்.
மார்க்கர், பில்கேட்ஸ், எலன் மஸ்க் என்ற வரிசையில் அசால்ட்டாக இடம்பிடித்து நிற்கின்றார்கள் அவர்கள்.
ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின், சக்ரவர்த்தி என இந்த இருவரும் சென்னை ஐஐடியில் படித்தவர்கள். பின் மேற்படிப்புக்காக அதாவது ராக்கெட் நுட்பம் தொடர்பாக மேல்நாட்டில் படித்தவர்கள், வயது 30க்கும் குறைவு.
இந்த சிந்தனை அதாவது மிகக் குறைந்த செலவில் எடை குறைந்த ராக்கெட்டுகளை ஏவும் சிந்தனை அவர்களுக்கு வந்தது. ஆனால் இந்தியாவில் அது முன்பு நடக்காத ஒன்றாக இருந்தது.
ஜிடி நாயுடு காலம் அல்ல அதற்கு முன்பே இந்தியன் விமானம் தயாரிக்க முயன்று அதை தடுத்து ஐரோப்பியர் தட்டிச்சென்ற கொடுமை உண்டு.
ஜிடிநாயுடு பட்டபாடு கொஞ்சமல்ல.
அதுவும் ராக்கெட் விவகாரம் என்றால் விக்ரம் சாராபாய்க்கு என்ன நிகழ்ந்தது என்பதும், நம்பி நாராயணனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதும் உலகறியும்.
இன்னும் பல மர்மங்கள் வெளித்தெரியவில்லை, நடந்த கொடுமைகள் ஏராளம்.
ஆம், இந்தியாவில் எதுவும் உருபடக்கூடாது, திறமை இருந்தால் அந்நியருக்கு அடிமை சேகவம் செய்ய வேண்டும் அது அல்லாமல் நாட்டுக்காக செய்தால் விடமாட்டார்கள்.
ஒன்று அரசியலில் புகுந்து குழப்புவார்கள் அல்லது மர்மமாக தொலைப்பார்கள்.
இந்த இளைஞர்களின் திட்டம் மிக மிக புரட்சியனாது. எதிர்காலத்தை புரட்டிப் போடக் கூடியது, மிகக் குறைந்த செலவில் 700 கிமீ உயரத்துக்கு சிறிய ரக செயற்கை கோள்களை எடுத்து நிறுத்துவது.
இவர்களுக்கான முதல் வழியினை மோடிதான் திறந்தார், அவரின் மேக் இன் இந்தியா, இந்திய நிறுவணங்களுக்கு முன்னுரிமை, விண்வெளி வளர்ச்சியில் தனியாருக்கு பங்களிப்பு என அவர் அதுவரை மூடியிருந்த கதவுகளை திறந்து விட்டார்.
மேற்கொண்டு சென்னை ஐஐடிக்கு பெரும் நிதி அளித்து ஆயுவுகளை மேற்கொள்ள வழி செய்தார்.
அவர் கொடுத்த வழியில்தான் ஒளியில்தான் இந்த இளைஞர்களின் பெரும் கனவும் மெய்பிக்கத் தொடங்கிற்று.
2017ல் இவர்கள் அக்னிகுல் என்ற நிறுவணம் தொடங்கினார்கள், அது அக்னிபான் எனும் ராக்கெட்டை தயாரித்தது.
மோடி அரசின் தொடர் பாதுகாப்பிலும் அது கொடுத்த உற்சாகத்திலும் அவர்கள் ஆய்வு தொடர்ந்தது.
கடந்த வாரம் அவர்கள் தங்கள் ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் மார்ச் 20 வாக்கில் சோதித்திருக்கின்றார்கள், ராக்கெட் முழு வெற்றி.
இனி மிகச் சிறிய செயற்கை கோளை கூட இந்த ராக்கெட் எளிதில் எடுத்துச் செல்லும், இதனால் உலகின் மிக மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா மாறும்.
இதனை இனி இந்தியாவின் கனவான சொந்த விண்வெளி நிலையம் என்பதற்கு எளிதாகப் பயன்படுத்தலாம்.
வர்த்தகம், ராணுவம், விண்வெளி ஆய்வு என எல்லாவற்றுக்கும் இது மிகப்பெரிய திருப்பமாக அமையும்
இந்தியா தன் தொழில்நுட்பத்தால் உலகை ஆள ஆரம்பித்திருக்கும் தருணம் இது.
கார் தயாரிப்பு, இதர வாகன தயாரிப்பு, படகுகள், கப்பல்கள் தயாரிப்பில் வெளிநாடுகள் என்ன இடம் பிடித்ததோ அதை இனி இந்தியா ராக்கெட் உலகில் பிடிக்கும்.
இந்தியா இனி விண்வெளி வர்த்தகத்தின் தலைநகரமாக மாறும்.
இது பெரும் சாதனை உலகை திருப்பிப்போடும் அரிய சாதனை, உலகமே அடுத்த கட்ட விண்வெளி பாய்ச்சலுக்கு இந்தியா வழிகாட்டிவிட்டது என ஒப்புகொள்ளும் சாதனை.
இச்சாதனையினை படைக்க விஞ்ஞானிகள் அவசியம், அது எப்போதும் இங்கு உண்டு.
ஆனால் வலுவான அரசு இல்லாமல் எதும் செய்யமுடியாது, இந்தியாவில் எப்போதுமே வளங்களும் அறிவும் எல்லா வடிவிலும் உண்டு, அற்புதமான அறிவாளிகள் உண்டு.
ஆனால் நல்ல தலைவன் பாதுகாப்பான அரசு இல்லாமல் எல்லாமே நாசமாகி அந்நியர் ஆட்டம் போட ஏதுவாய் இருந்தது.
இந்தியர்கள் கல்வி கற்ற அடிமைகளாக அந்நிய தேசம் இழுத்துச் செல்லப் பட்டனர், தேசம் பின்னடைந்து கொண்டே சென்றது.
மோடி இதனை மாற்றியிருக்கின்றார், அவரின் மேக் இன் இந்தியா, விண்வெளி ஆய்வில் தனியார் பங்களிப்பு, ஐஐடிக்கு அதிக நிதி, ஆய்வு செய்ய உதவி மேற்கொண்டு அந்த ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய மாணவர்கள் தங்கள் ராக்கெட்டை ஆய்வு செய்ய வசதி என எல்லாம் அவர் கொடுத்தது.
குலசேகரப்பட்டின திட்டமும் அவர் தொடங்கி வைத்தது.
இன்னும் 20 ஆண்டுகளில் கோவை, குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி பக்கமெல்லாம் பெரிய பெரிய ராக்கெட் தொழில்கள் வரும்.
இளம் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் வருவார்கள்.
எலன் மஸ்க்கும், பில்கேட்ஸும், மார்க்கும் அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கும் வருவார்கள் என்பதை உலகம் அறியும்.
மோடி அதனை செய்திருக்கின்றார்.
திராவிட ஆட்சியில் கண்டதெல்லாம் சாராய ஆலைகள், அதிக தனியார் டிவிகள், இம்சை ஊடகங்கள், கல்குவாரி மண்குவாரி கொள்ளைகள் இன்னபிற.
மோடி அரசு தருவதெல்லாம் உலக விஞ்ஞான சாதனைகள், பெரும் பெரும் விஞ்ஞான தொழில்கள், நாட்டுக்கும் உலகுக்கும் தேவையான அவசிய உறுதியான வழிகள்.
இனி இந்தியா உலகுக்கே ராக்கெட் நுட்பத்தில் வழிகாட்டும், மோடி ஏன் “விஸ்வகுரு” என அழைக்கப்படுகின்றார் என்றால் இதனால்தான்.
எங்கோ எலன் மஸ்க்கிடம் கூலிக்கு வேலை செய்து, இந்த சாதனையினை அமெரிக்க சாதனை, ஐரோப்பிய விண்வெளி மைய சாதனை என அமைய இருந்ததை இந்திய சாதனை, இந்திய சென்னை மைந்தரின் சாதனை என யார் மாற்றிக் காட்டியிருக்கின்றார் என்றால் மோடிதான்.
அந்த கர்மவீரன், பெரும் தலைவனுக்கு நன்றி கூறி அந்த இளம் விஞ்ஞானிகளை, அதுவும் சென்னை விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.
அதே எண்ணத்தில் 100 ஆண்டுக்கு முன்னால் இளைய சமூகத்தை நோக்கி அழைத்து பாடிய அந்த பாரதியின் வரிகளோடு பாடுவோம்.
அவனும் அப்படி கனவு கண்டான், அவன் வழியில்தான் சாஸ்திரி, காமராஜர், அப்துல்கலாம், வாஜ்பாய் என எல்லோரும் இளைஞர்களை அழைத்தார்கள்.
மோடியின் இந்தியா அந்த பாரதியின் வரிகளோடு அவர்களை வாழ்த்தி அவர்கள் பெரும் இடம் பிடித்து தேசத்தின் பெருமை காக்க பிரார்த்திக்கின்றது.
“இளையபார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும்
உதய ஞாயிரறோப்ப வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன்போலே
கலைசிறக்க வந்தனை
விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா
விந யநின்ற நாவினாய் வா வா வா
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா
முழுமைசேர் முகத்தினாய வா வா வா
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே -நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல்செய்வாய் வா வா வா”