பெரிய வெள்ளி – பாஸ் ஓவர் – பாஸ்கா
கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியினை அனுசரிக்கின்றார்கள்,அது அவர்கள் சம்பிரதாயம், அவர்கள் எதுவும் செய்யட்டும் விஷயம் பெரிய வெள்ளி பற்றியது அல்ல அதன் மூலத்தை பற்றியது
பெரிய வெள்ளியின் மூலம் யூதர்களின் “பாஸ் ஓவர்” அல்லது “பாஸ்கா” , அன்றுதான் இயேசு சிலுவையில் கொல்லபட்டதாக அவர் வரலாற்றில் சொல்லபடுகின்றது
இந்த “பாஸ்கா” என்றால் என்ன?
பாஸ் எனும் சொல்லுக்கு கடந்து செல்லுதன் என பொருள், அப்படி பன்னெடுங்காலத்துக்கு முன் யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபொழுது மோசஸ் எனும் தலைவன் யூத கடவுள் ஜகோவா என்பவரால் உருவாக்கபட்டு பல மாயாஜாலங்கள் நடந்து , அதனால் பாரோக்கள் இவர்கள் வெளியேற அனுமதி கொடுத்து மோசஸ் தலமையில் செங்கடலை பிளந்து சென்ற சம்பவம் அது
எகிப்துக்கும் இன்றைய இஸ்ரேலுக்கும் வெறும் 8 நாள் பயணம்தான், செங்கடலை கடக்க அவசியமில்லை
ஆனால் மோசஸ் இம்மக்கள் பல்லாயிரம் பேரை இஸ்ரேலுக்கு அழைத்து சென்ற நாளில் அவனுக்கும் வழி தெரியவில்லை காரணம் யாரும் அங்கே சென்றதுமில்லை அது இருக்குமிடமும் தெரியாது
இதனால் மக்கள் மோசஸை நம்ப மோசஸ் கடவுளை நம்ப செங்கடல் பக்கம் சுற்றி திரிந்தது கூட்டம், அப்பொழுது இந்த அடிமைகள் சென்றுவிட்டால் யார் வேலை செய்வார்கள் என உணர்ந்த பாரோக்கள் இவர்களை பிடிக்க வர இப்படி செங்கடல் பிளந்து வழிவிட்டதாம்
காவேரி சுந்தர பெருமான் நாயனாருக்கு பிளந்தது போல செங்கடல் அவர்களுக்கு பிளந்ததாக நம்பிக்கை
இப்படி கடல் கடந்த கூட்டம் வழி தெரியாமல் பாலை நிலத்தில் சிக்கியது, சுமார் 40 வருடம் சுற்றி திரிந்த வரலாறு உண்டு பின் இன்றைய இஸ்ரேலை அடைந்தது
இந்த 40 வருட காலத்தில் நடந்ததுதான் நாம் பார்க்க போகும் விஷயம்
மோசஸ் தலமையில் இக்கூட்டம் எகிப்தில் இருந்து கிளம்பியபோது அவர்களுக்கு எகிப்தியரிடம் இருந்து விடுதலைமட்டும்தான் இலக்காய் இருந்தது, அதை தங்கள் தெய்வம் தந்ததாக கருதினார்கள் ஆனால் அந்த தெய்வம் எப்படி இருக்கும், அதை எப்படி வழிபட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது
இதனால் அவர்கள் ஜெஹோவா மோசஸை ஒரு பெரிய மலை உச்சிக்கு வர சொல்லி பத்து கட்டளைகளை கொடுத்தார் அதையும் மந்திரமாக சொல்லாமல் கற்பலகையில் எழுதி கொடுத்தார்
இதை மலைமேல் ஏறி அவன் பெற்றுவர பல ஆண்டுகள் ஆனது
அவன் அப்படி காணாமல் போனதில் கொஞ்சம் கவலைபட்ட யூத இனம், இனி நமக்கான கடவுளை நாமே தொழுவோம் என சொல்லி தங்கள் கைகளில் இருந்த தங்கத்தை போட்டு ஒரு உருவம் செய்து வணங்க தொடங்கினார்கள்
அப்போது வந்த மோசஸ் இது நம் கடவுள் அல்ல , நமக்கு உருவவழிபாடு கூடாது என சொல்லி சண்டையிட்டான் சண்டையில் அந்த 10 கட்டளை எழுதிய பலகை உடைந்தே போனது, இனி இந்த மக்களை வழிநடத்தமாட்டேன் என அவன் ஓரமாக ஓடிவிட்டான்
ஆனால் யூத இனம் கவலை அடைந்தது காரணம் யூதருக்கான நாடு எது என அவர்களுக்கு தெரியாது, அது எங்கே இருக்கும் எப்படி இருக்கும் என்பதும் தெரியாது
எல்லாம் வல்ல அந்த ஜஹோவா , செங்கடலையே பிளந்த ஜகொவா ஏன் ஆபிரமாகுக்கு வளமான ஆற்றை கொடுக்கவில்லை அப்படி கொடுத்திருந்தால் ஏன் நைல் நதி தேடி சென்று எகிப்தியருக்கு அடிமை ஆகின்றோம் எனும் பகுத்தறிவு முணுமுணுப்பும் இருந்தது
எல்லாம் வல்ல ஜெகோவா ஏன் அந்த இஸ்ரேலை பாலைவனமாகவே வைத்திருந்தார் பெரிய ஆறுகளை உருவாக்கவில்லை என்றெல்லாம் அவர்களுக்கு வருத்தம் இருந்திருக்கலாம்
காரணம் அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தாலும் நைல் நதி தீரத்தில் நன்றாக உண்டவர்கள், அவர்களை விடுவித்து வாக்களிக்கபட்ட நாட்டுக்கு அழைத்து செல்கின்றேன் என் அழைத்துவந்த மோசே சவுதி பாலைவனம் பக்கம் நிறுத்தினான்
இதனால் நீரும் இல்லா உணவில்லா பாலையில் மிகுந்த சிரமம் அனுபவித்தார்கள், ஜஹோவா அப்பம் போட்டார் இறைச்சி போட்டார் என்றாலும் அவர்கள் மனம் சந்தோஷமாக இல்லை
மாறாக வளமான ஆற்றையும் விளைச்சலையும் தேடினார்கள், அப்படிபட்ட நாட்டை நோக்கித்தான் மோசஸ் அவர்களை அழைத்து செல்வதாக சொன்னான்
யூத முப்பாட்டன் ஆபிரஹாமுக்கு முன்பு ஜஹோவா வாக்களித்தார், ஒரு நாடு உன் இனத்துக்கு உண்டு என வாக்களித்தாரே தவிர அது எங்கே எது என தெரியாது
அவனுக்கு பின் 500 வருடம் எகிப்தில் அடிமையாக இருந்ததால் இவர்களுக்கு அந்த நாடு எது என்பதே தெரியாது
தெரிந்த ஒருவன் மோசஸ், அவனுடனேதான் ஜஹோவா பேசுகின்றார் என்பதால் மறுபடி அவனிடமே பணிந்தார்கள்
மோசஸும் இந்த உருவத்தையெல்லாம் வணங்காதீர்கள், இன்னொரு கற்பலகையில் பத்துகட்டளை எழுதபட்டுளளது இதைத்தான் வணங்க வேண்டும் என்றான்
அவர்களும் அழகான தங்க பேழை செய்து, பல்லக்கு போல் செய்து அதன் முன்னால் இரு தேவதூதர்களை நிறுத்தி வணங்கினார்கள்
உருவவழிபாடு கூடாது என்றவர்கள் அந்த பேழையினை வணங்கினார்கள் , 10 கட்டளை கொண்ட கல்லை வணங்கினார்கள்
மோசஸ் அதையும் பார்த்துகொண்டேதான் இருந்தான், ஜஹோவாவும் பார்த்துகொண்டேதான் இருந்தார்
பின் 40 ஆண்டுகள் அலைந்து இன்றைய இஸ்ரேல் பக்கம் வந்தார்கள், பின் அவர்களுக்கு ராஜா வந்தார் சாலமோன் வந்தார் யார் யாரோ வந்தார்கள்
இந்த பாரம்பரியத்தில் வந்தவவர் இயேசு
இந்த யூதர் எல்லோருக்கும் எகிப்தில் இருந்து அவர்கள் கடந்துவந்த நாள் முக்கியம், வருடாவருடம் ஜெருசலேமில் கூடி கொண்டாடுவார்கள்
அப்படி கொண்டாபடபட்ட பண்டிகையில்தான் இயேசு சிலுவையில் கொல்லபட்டார் என்பது அவர்கள் வரலாறு
விஷயம், சிலுவை அல்ல அந்த பாஸ்கா அல்ல, யூதர்கள் இடையில் வணங்கிய உருவம்
ஆம், மோசஸ் காணாமல் போனபொழுது அவர்கள் தங்கத்தால் ஒரு காளையினை செய்து வணங்கினார்கள்
காளை என்றால் வேறு எதுவுமல்ல இந்துக்களின் சிவாலயத்தில் காணபடும் நந்தி
அதாவது எகிப்திலே வாழ்ந்த இனம் அங்கிருந்த வழிபாட்டை கவனித்தது, பல இனமக்கள் வாழ்ந்த அக்கால எகிப்திய வல்லரசின் மதங்களை கவனித்தது ,தங்களுக்கு ஒரு கடவுள் வேண்டும் அதை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது தங்கள் தெய்வமும் இதுதான் என காளையினை செய்தது
இல்லாத ஒன்றில் இருந்து ஒன்று உருவாக முடியாது, ஒரு மூல உண்மையின் பாதிப்பில் இருந்துதான் இன்னொன்று உருவாக முடியும், அப்படி இந்துக்களின் வழிபாடு சிவ வழிபாடு இருந்த பண்டைய எகிப்தில் இருந்துதான் அவர்கள் அதனை பெற்றுகொண்டார்கள்
காளையினை வணங்கினார்கள் என்பது காளைமேல் அரூபியாய் நின்ற சிவனை வணங்கினார்கள் என்றேதான் அர்த்தம், சிவனைத்தான் வணங்கினார்கள்
தங்கத்தில் காளை செய்து வணங்கினார்கள் என்பது அதைத்தான் சொல்கின்றது
கல்லை நட்டு எண்ணெய் ஊற்றி வணங்கும் கலாச்சாரம் யூதருக்கும் இருந்தது ஆபிரஹாமின் பேரன் யாக்கோபு அப்படி கல்லை நட்டு அபிஷேகம் செய்த காட்சி உண்டு
அதாவது இந்துக்களின் சிவலிங்க வடிவ வழிபாடு இது, அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த காளை வழிபாடும் வந்தது
இதெல்லாம் யூத ஆவணத்தில் கிறிஸ்தவ பைபிளில் சொல்லபட்ட விஷயங்கள், ஆவணமாக உண்டு
ஆக இந்துமதமும் நந்தி வழிபாடும் உலகெல்லாம் பரவி இருந்தது என்பதையும், யூத இனமே அதனை வணங்க முயன்றிருக்கின்றது என்பதும் உண்மையாகின்றது
இந்துமதம் எவ்வளவு பெரிதாக வளர்ந்திருந்தது, எல்லா மக்களையும் தொட்டிருந்தது என்பதற்கு இதெல்லாம் ஆதாரங்கள்
இன்று இஸ்ரேலில் யூதர்கள் பாஸ் ஓவர் பண்டிகையினை கொண்டாடுகின்றார்கள், அப்படியே உலகெல்லாம் வாழும் யூத இனம் இந்த கொண்டாட்டத்தை செய்கின்றது
இந்த நாளில்தான் இயேசு கொல்லபட்டார் என கிறிஸ்தவர்களும் பெரிய வெள்ளியினை அனுசரிக்கின்றார்கள்
அந்நாளில் இந்த யூதர்களின் பாஸ் ஓவர் பண்டிகையின் மூலமும், அப்பொழுது அவர்கள் வணங்கிய நந்தியும் நினைவுக்கு வருகின்றது, இந்துக்களின் வழிபாடு அன்றே இருந்தது என்பதும் தெரியவருகின்றது
ஆனாலும் உருவற்ற கடவுளை வணங்கும் இனம் உருவத்தை சிலையினை வணங்க கூடாது என காளையினை புறக்கணித்த மோசஸ், 10 கட்டளை கொண்ட கல்லையும் அந்த பேழையினையும் வணங்க சொல்லி அம்மக்களூம் வணங்கி சுமந்தார்கள் அல்லவா?
அதுதான் இங்கு கொஞ்சம் புன்னகையோடு நோக்கபட வேண்டிய விஷயம்.