குரு தேஜ்பகதூர் ஜயந்தி
சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர், அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப், அப்போது அவரிடம் அடைக்கலாமக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள்
ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான்
அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது அவன் அவையில் நடந்திருகின்றது
வாதத்தில் குரு தேஜ் பகதூர்தான் வென்றார், சமய தர்க்கங்களில் அவரின் வாதம் முன் மொகலாய மதகுருக்களால் நிற்கமுடியவில்லை
ஆனால் அவுரங்கசீப் விடுவதாக இல்லை, ஒன்று மொத்த சீக்கியரும் இந்துக்களும் மதம் மாற வேண்டும் இல்லை குருவினை கொன்றுவிடுவேன் என மிரட்டுகின்றான்
குரு கொஞ்சமும் அசரவில்லை, இம்மக்களுக்காக உயிரை கொடுப்பதென்றால் இந்த தர்மத்தை காக்க உயிரை கொடுப்பதென்றால் அது புண்ணியமிக்கது என அம்மக்களை காக்க தன் உயிரை கொடுக்கின்றார்
அவுரங்கசீப் அவரை சும்மா கொல்லவில்லை அவரின் மதிப்பு அவனுக்கு தெரியும்
இதனால் அவரின் சீடர் மூவரை மிக கொடியதாக வதைத்து வதைத்து அவர் கண்முன் கொல்கின்றான், அப்படியாவது அவர் அஞ்சி மனம் மாறி மதம் மாறமாட்டாரா என்பது அவன் எண்ணம்
அவரோ அசையாமல் இருந்தார், சிலை போல் இருந்தார்
கடைசி முறையாக மதம் மாறுகின்றீரா இல்லை சாகின்றீரா என கேட்கபடுகின்றது
அவர் புன்னகை பூக்க சொல்கின்றார், “இந்த மக்களுக்காகவும் இந்த தர்மத்துக்காகவும் நான் சாகதயார், என் உயிர்தான் அவர்களையும் இந்த தர்மத்தையும் காக்குமென்றால் அதை கொடுக்க தயார்”
அதன்பின் அவர் உயிர் போக்கபட்டது, சடலம் வீழ்ந்தது
இந்நாட்டின் தர்மத்துக்காய் உயிர்விட்டார் அந்த உத்தம குரு
அவரின் அந்த தியாகம்தான் ஒவ்வொரு சீக்கியனையும் கொதிக்க வைத்தது, சாதாரண விவசாய கூட்டமாக இருந்தவர்கள் அதன் பின்பே கொண்டை கட்டி வாளேந்தி அவர்களே ஒரு படையாக உருவாகி பெரும் போர் செய்து மொகலாயரின் மேற்கு வாசலை அடைத்து நாட்டை காத்தார்கள்
அந்த தியாகத்தின் உன்னத எழுச்சியே இந்நாட்டின் விடுதலையின் இரண்டாம் படி
சிவாஜியின் வாள்முனை போராட்டத்துக்கு ஈடானது அந்த பெரும் தியாகம்
இந்நாட்டில் இந்நாட்டு மக்களுக்காக தன்னையே தந்த அந்த தியாகத்தை அறியாமல் மேற்காசியாவில் யூதருகாக யூத நலனுக்காக செத்து அப்படியே இன்றும் யூதருக்கு எருசலேம் என உலகை சொல்லவைத்து யூதரின் வெற்றியினை சாத்தியமாக்கிய மேற்கத்திய யூதரை கடவுள் என்றும் தெய்வமென்றும் சொல்லி அவரை தெய்வமாக்கி மீட்பராக்கி கொண்டிருப்பதெல்லாம் இம்மக்கள் இந்நாட்டின் வரலாற்றை அறியாததால் வந்த வீழ்ச்சி
தேஜ்பகதூரின் தியாகமே இந்துஸ்தான விடுதலையில் முக்கிய பங்காற்றிற்று, இந்நாட்டில் இந்நாட்டு மக்களுக்கும் தர்மத்துக்கும் தன்னை தந்த அந்த உன்னத மகானின் தியாகத்தை அறியாமல் மேற்கத்திய யூதனை “நமக்காக மரித்தார், நமக்காக மரித்தார்” என்பதெல்லாம் அறியாமை
உண்மையில் நமக்காக மரித்தவர் தேஜ்பகதூர்
பிரிட்டிசார் காலத்தில் காங்கிரசார் அந்த சீக்கிய தாயகத்தை பிளந்தபோது அவர்கள் துடித்தார்கள் அழுதார்கள், இந்நாட்டுக்காக இந்த மக்களுக்காக சீக்கிய குருக்களும் மக்களும் செய்த தியாகத்தை வீணாக்காதீர் என கலங்கினார்கள்
ஆனால் சீக்கிய பிரநிதிகள் யாருமில்லாமல், அவர்களிடம் ஒருவர்த்தையும் கேளாமல் பஞ்சாப் பிரிக்கபட்டது
ஏன் என்றால் அதுதான் காங்கிரஸ்
இலங்கையில் தமிழர் தரப்பில் யாரிடமும் ஆலோசனையோ பிரநிதித்துவமோ இல்லாமல் தமிழர்களே இல்லா குழு மூலம் தமிழருக்கு நல ஒப்பந்தம் எழுதினவர்கள் அல்லவா?
அதைத்தான் சீக்கியருக்கும் செய்தார்கள்
சீக்கியரின் அனுமதி இல்லாமலே பஞ்சாப் பிளக்கபட்டு ஒரு பங்கு பாகிஸ்தானுக்கு போனது
அப்பொழுதும் அந்த இனம் அழுதது, இந்நாட்டுக்கு நாங்கள் செய்த தியாகத்துக்கு எங்களை அங்கீகரியுங்கள் தேஜ்பகதூர் போன்றோரை இந்தியருக்கு சொல்லுங்கள் என்றார்கள்
இந்திரா அதை மறுத்தார்
சீக்கியர் பட்ட வலிகளை சொன்னால் இத்தேசம் மொகலாயர் காலத்தில் பட்ட வலிகளை சொல்லநேரிடும் அது “மதசார்பற்ற” இந்தியாவுக்கு நல்லதல்ல என மறுத்தார்
அந்த மோதல்தான் பின் அந்த கொடுமையில் முடிந்தது
சீக்கியர் உணர்வை மதித்தெடுத்தவர் மோடி, சீக்கியரின் அந்த குருவான தேஜ் பகதூர் சமாதிக்கு சென்று வழிபட்டு அவரை மக்களிடம் சேர்க்க முனைந்தவர் மோடி
சீக்கியர் கேட்பதெல்லாம் ஒரு அங்கீகாரம், இந்நாட்டின் துணைமதமாக நின்று இந்துஸ்தான விடுதலைக்கு அவர்கள் பாடுபட்டதன் அங்கீகாரம்
அதை கொடுக்காமல்தான் இவ்வளவு சிக்கல்கள்
சீக்கியர் இத்தேசத்திற்கு செய்த சேவை கொஞ்சமல்ல, அதை ஒவ்வொரு இந்தியனும் உணர்தலே அவர்களுக்கான அங்கீகாரம், அதை பாஜக சரியாக செய்தால் பஞ்சாபில் எல்லாம் மாறும் தேசியமும் மலரும்
இங்கு தேவை யூதருக்காக செத்த அந்த யூத இளைஞன் அல்ல, இந்துஸ்தான இந்துக்களுக்காக தன்னையே தந்த, தன் தலையே தந்த அந்த உத்தம ஞானி தேஜ் பகதூர்
இன்று (01 / 04) அவரின் பிறந்த நாள், அவரின் வரலாற்றையும் தியாகத்தையும் வீரசிவாஜியின் தொடரில் ஒரு அத்தியாயத்தில் சொல்லியிருக்கின்றோம்.