வ.வே.சு அய்யர் எனும் வ.வே.சுப்பிரமணிய அய்யர்
அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம்
ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று
அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த திராவிட பெரும் சதிக்கு அவனும் தப்பவில்லை
பிராமணன் எல்லோரும் சாதிவெறியர்கள் என்ற ஈரோட்டு ராம்சாமியின் பொய்க்கு அவரும் தப்பவில்லை
வ.வே.சு அய்யர் எனப்படும் வ.வே.சுப்பிரமணிய அய்யர். அவருக்கு வர்னாஸ்ம வெறியர் என ஈரோட்டு ராம்சாமி எனும் தேசவிரோதி பட்டம் சூட்டியது அவரின் அந்திம காலத்திலே
ஆனால் ஈரோட்டு ராம்சாமி இங்கு மைனராகவும் ஒரு மாதிரி ஆசாமியாகவும் சுற்றி கொண்டிருந்த பொழுதே இந்நாட்டுக்கு போராடி முடித்துவிட்டுத்தான் சேரன்மகாதேவி குருலத்துக்கு வந்தார் அய்யர்
அவரை குற்றம் சொல்லும் தகுதி கொஞ்சம் கூட ஈரோட்டு ராம்சாமிக்கோ அவரின் கோஷ்ட்டிகளுக்கோ அறவே கிடையாது
வ.வே.சு அய்யர் திருச்சியில் 1881ல் பிறந்தார், அங்கே பள்ளி முடிந்து மணமும் செய்துவிட்டு பின் ரங்கூனில் சில காலம் இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்
அவருக்கு கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் என 6 மொழிகள் தெரிந்திருந்தது
லண்டன் அவரின் வாழ்வினை மாற்றியது, மிக பெரும் தேசபக்தர்களும் போராளிகளுமான சாவர்க்கர், திங்காரா, பிபின் சந்திரபால் போன்ற பெரும் பிம்பங்களோடு பழகினார், இவர்கள் தங்கியிருந்த வீட்டில் லண்டனில் அபிநவபாரத் சங்கம் தொடங்கபட்டது.
இந்தியாவினை வெள்ளையன் ஆள்கின்றான், அவன் வழியில் அவனை ஒழிக்க வேண்டும் என்ற முடிவில் துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற போர் பயிற்சிகள் அந்த சங்கத்தால் வழங்கபட்டன, 30 பேர் அதில் இருந்தார்கள்
ஒருபக்கம் ஆயுத பயிற்சி என்றாலும் இன்னொரு பக்கம் எழுத்தாற்றல் அய்யருக்கு அழகாய் வந்தது, அங்கிருந்து பாரதியாரின் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதினார். அதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது
1909 அவரின் வாழ்வில் திருப்புமுனையான ஆண்டு, முதன் முதலாக இந்திய தேசிய விழா என ஒன்றை தொடங்கி அதை தசரா அன்று கொண்டாடினார், இந்தியா இந்துநாடு என்பதில் மாற்றமே இல்லை அக்காலமுமில்லை இக்காலமுமில்லை
அதைத்தான் அன்றே கொண்டாடினார் அய்யர், அதற்கு பேச அழைக்கபட்டார் காந்தி. அய்யரின் புகழ் பரவியது
இதே ஆண்டில் இன்னொரு வீரசம்பவம் நடந்தது, ஆம் கர்சான் லில்லி என்றொரு ஆங்கில கமாண்டர் இருந்தான் கொடுங்கோலன், 1900 வங்க பஞ்சத்தில் அவனால் செத்த இந்தியர் ஏராளம். அவனால் அழிந்த குடும்பங்கள் ஏராளம், ஜெனரல் டயர் போன்றவன் அவன்
அவனை லண்டனில் அசால்ட்டாக போட்டு தள்ளினான் மதன்லால் திங்காரா, பிரிட்டிஷ் தளபதியினை லண்டனிலே நாயினை போல் சுட்டு கொன்றதில் அதிர்ந்த பிரிட்டன் அபிநவபாரத் சங்கத்தை தேடி ஒழிப்பதில் இறங்கியது
சாவர்க்கர் கைதானார், அய்யர் பெயர் பட்டியலில் இல்லை ஆனால் பிரிட்டிஷ் எதிர்ப்பினை கைவிட்டு வாய்மொழியும் கைசாத்தும் வைத்தால் மட்டுமே “பாரிஸ்டர்” பட்டம் என பிரிட்டன் சொன்னது
அதை ஏற்க மறுத்து பட்டம் முக்கியமல்ல நாடு முக்கியம் என பட்டம்பெறாமலே வெளியேறினார் அய்யர், இவர் மிக ஆபத்தானவன் என முத்திரை குத்தி தேடதொடங்கியது பிரிட்டன்
பின் சீக்கியர் போல் வேடமிட்டு பிரான்சுக்கு தப்பி கொழும்பு வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு 1910ல் வந்தார், பிரிட்டன் கைது செய்யும் அபாயம் இருந்ததால் பாண்டிச்சேரியில் தங்கினார்.
ஆம் பிரிட்டிஷாரை எதிர்க்கமாட்டேன் என சொல்லியிருந்தால் பாரிஸ்டர் பட்டத்தோடு வந்து கோடி கோடியாக சம்பாதித்திருக்க கூடிய அய்யர், தேசத்துக்காக தலைமறைவாய் அனாதையாய் திரிந்து பாண்டிச்சேரியில் சாமான்யனாய் நின்றிருந்தார்
அங்கும் குருகுலம் ஆரம்பித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார், அதில் ஒருவன் வாஞ்சிநாதன், ஆஷ்துரையினை சுட்ட வாஞ்சிநாதனின் துப்பாக்கி பிரான்ஸ் தயாரிப்பு,அதை கொடுத்தது அய்யர் என்றாலும் பிரிட்டனிடம் ஆதாரமில்லை என்பதால் அவர்மேல் நடவடிக்கை இல்லை
இந்நிலையில் முதல் உலகப்போர் தொடங்கிற்று, அய்யரை ஆப்ரிக்காவின் அல்ஜீரியாவுக்கு நாடு கடத்த சொன்னது பிரிட்டன், பிரான்ஸ் மறுத்தது. அய்யர் பாண்டிச்சேரியிலே தங்கினார்
பாரதியார் பத்திரிகை, திருவிக பத்திரிகை என தொடர்ந்து எழுதினார், பின்னாளில் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் என அறியபட்ட அய்யரின் எழுத்துக்கள் அங்குதான் சீரடைந்தன
முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டன் வெற்றிபெற, யாரும் அசைக்கமுடியா சாம்ராஜ்யமான ஓட்டொமன் துருக்கி ராஜ்ஜ்ஜியமே சிதற பிரிட்டன் எதிர்ப்பாளர்களுக்கு பெரும் சோகமும் சலிப்பும் உண்டாயிற்று
நிச்சயம் ஒரு போர் வரும் பிரிட்டன் மண்ணை கவ்வும் என்றுதான் ஆயுத வழியில் சாவர்க்கர் , அய்யர், திங்காரா, வாஞ்சிநாதனெல்லாம் வந்தார்கள் ஆனால் காலம் கைவிட்டபின் மனம் நொடிந்தார்கள்
அவர்களுக்கு கொஞ்ச நாளில் இரண்டாம் பெரு யுத்தம் வருவதோ நேதாஜி எழும்புவதோ தெரியாது தெரிந்திருந்தால் அந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள்
ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனோடு சேர்ந்து நேதாஜி செய்ததைத்தான் முதல் உலகபோரில் இந்த கோஷ்டி ஆட்டோமன் சாம்ராஜியம் ஜெர்மனுடன் சேர்ந்து ரகசியமாக செய்ய பார்த்து தோற்றது
ஆனால் அவர்களின் முயற்சியும் தியாகமும் வீரவரலாறு, வாழ்த்துகுரியது
இப்படி மனமுடைந்த நிலையில்தான் இனி ஆயுதபோராட்டம் சாத்தியமில்லை என அமைதிவழிக்கு திரும்பினார்கள், சாவர்க்கரின் மன்னிப்பு கடிதமெல்லாம் இக்காலத்தில் நடந்ததே
அய்யரும் அப்படி பொது மன்னிப்பு பெற்று பிரிட்டிஷ் இந்தியாவின் திருச்சிக்கு வந்தார், ஆம் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து , நாட்டு விடுதலைக்காய் பரதேசியாய் திரிந்த அவர் 15 வருடம் பின்புதான் தோற்றுவிட்ட கணவனாய் மனைவியினை பார்த்தார்
பாரிஸ்டர் பட்டமுமில்லை, கையில் காசுமில்லை ஆனால் விடுதலை கனவு மட்டும் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது, அந்த அற்புதமான எழுத்தாளனின் எழுத்து அணலை மூட்டி கொண்டே இருந்தது
ஒரு கட்டத்தில் சில கட்டுரைகளுக்காக அவரை பெல்லாரி சிறையில் அடைத்த பிரிட்டன் அரசு அவரை பழி தீர்த்து ரசித்தது
பின் வெளிவந்த அய்யர் பாரதியாருடன் பல புரட்சிகளை செய்தார்
அய்யர் பாரதியாருடன் சேர்ந்து கனகலிங்கம் எனும் தலித்துக்கு பூனூல் அணிவித்து நீ இந்தியன் என கட்டி தழுவிய காட்சிகளெல்லாம் வரலாற்றில் உண்டு
ஆம், அவர் சாதிவெறியர் என்பதெல்லாம் ராம்சாமி சொன்ன பச்சைபொய்.
பாரதியின் கடைசி காலங்களில் அவரோடு இருந்தவர் அய்யர், “பாரதி, மருந்தை எடு. நாட்டின் சுதந்திரத்தை பார்க்க உயிரோடு இரு, அதற்காகவாது எழு” என தழுதழுத்த குரலில் அடிககடி சொன்ன அய்யர் பாரதியின் கடைசி கால பக்கங்களில் கண்ணீர் நினைவாய் நிற்கின்றார்
கதர் வேட்டியும் மேலே கதர் துண்டுமாக போர்த்தி கொண்டு நடந்த அந்த அய்யர், பெரும் நண்பனும் அறிவாசானுமான பாரதியின் மறைவுக்கு பின் சென்னையில் இருக்க முடியாமல் தவித்தார்
ஒரு நல்ல இடம் , தனிமையான இடம் பரபரப்பில்லா இடம் அவருக்கு தேவைபட்டது, அப்படித்தான் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு வந்தார், அங்கு ஒரு குருகுலம் அமைத்தார்
அந்த தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், தொழிலும் உடல்வலிவுப் பயிற்சிகளும் அழகு ஆங்கிலமும் இதர மொழிகளும் போதிக்கப்பட்டன.
தேசபற்றும் பன்மொழி புலமையும் மிக சிறந்த சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்களை அவர் உருவாக்கி கொண்டிருந்தார்
அவர் கையில் காசு இல்லை, மாணவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் கொடுக்கும் காசில்தான் குருகுலம் இயங்கிற்று, அதில் பிராமண மாணவர்களுக்கு சைவமும் இதர மாணவர்களுக்கு அசைவமும் கொடுக்கபட்டது அது தனி தனியாக கொடுக்கபட்டது
பெற்றோர் விருப்படிதான் கொடுக்கபட்டது, இதில் தவறேதுமில்லை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் இன்றளவும் சைவ அசைவ மெஸ்கள் தனி தனியேதான் உண்டு.
ஆனால் தேசபற்று மிக்க மாணவர்களை அய்யர் உருவாக்குகின்றார் , அவர் குருகுல மாணவர்களுக்கு தேச உணர்வு வருகின்றது என்ற கவலை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டாயிற்று
ஏற்கனவே லண்டனில் கர்ணல் கர்சன் கொலை, ஆஷ்துரையின் கொலையில் அவர்மேல் சந்தேகம் இருந்ததால் ரகசிய கண்காணிப்பும் இருந்தது, அய்யர் குருகுலத்தில் இன்னொரு வீரன் உருவாகிவிட கூடாது எனும் அச்சமும் பிரிட்டன் அரசுக்கு இருந்தது
ஆனால் அவனால் குழப்பமுடியாது, சட்டத்தில் இடமில்லை. என்ன செய்யலாம் என யோசித்த அவனுக்கு தன் அடிப்பொடி ஈரோட்டு ராம்சாமியின் நினைவு வந்தது
அவன் கண் காட்டியதும் ஈரோட்டு ராம்சாமி சேரன்மகாதேவி ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் என பெரும் ஆர்ப்பாட்டம் செய்து, பிராமண வெறி அது இது என குதித்து குத்தாட்டம் போட்டது
சேரன்மகாதேவியில் இருந்து 20 கிமீ தொலைவில் வடக்கன்குள கிறிஸ்தவ ஆலய சாதி சண்டைக்கு ராம்சாமி செல்லவில்லை ஏனென்றால் அது வெள்ளையன் ஆசிபெற்ற இடம் அங்கு செல்லமாட்டார்
இப்படி தன் ஏவலாளை வைத்து அய்யரை பழிவாங்கினான் பிரிட்டிஷ்காரன், ஆனாலும் அய்யர் மனம் தளரவில்லை
அவருக்கு அப்பொழுது 44 வயதுதான் ஆகியிருந்தது. அதற்குள் பெரும் காரியங்களை செய்திருந்தார்
திருகுறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், கீதைக்கு ஆங்கில உரை, கம்பனை ஆங்கிலத்துக்கு மாற்றியது என ஏராளம் , அவர் கம்பனை வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தோடு ஆய்வு செய்து அதை நுணுக்கமாக எழுதினார்
மிக சிறந்த ராமயண ஆய்வு அதுவே
நெப்போலியன் வரலாற்றையும் கரிபால்டி வரலாற்றையும் இங்கு கொண்டு வந்தவர் அவரே, தமிழ் இலக்கிய உலகின் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவர்தான்
ரவுத்திரம் பழகிய அய்யராக, ஆயுதம் தாங்கிய அய்யராக, பக்தி இலக்கியம் தேசபற்று என பல் முகங்களுடன் வலம் வந்த அய்யருக்கு விதி மகள் வடிவில் வந்தது
அய்யர் பெண்ணுரிமைக்கு பாரதி போல் முன்னுரிமை கொடுத்தார், இதனால் செல்லும் இடமெல்லாம் தன் மகளை அழைத்து சென்றார்
பாபநாசம் அருவி பக்கம் ஒரு சிற்றோடையில் மாணவர்களுக்கு தாண்டு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார், அந்த பயிற்சியினை மகளுக்கும் கொடுத்தார்
அந்த சிறுமி தாண்டும் பொழுது தவறி அருவியில் விழுந்தார், மகளை தாங்கிபிடிக்க விழுந்த அய்யர் அங்கே பலியானார்
திருச்சியில் பிறந்து லண்டனுக்கு சென்று அங்கு பிரிட்டிஷ்காரனை அலறவிட்டு வாழ்வினை தொலைத்து பின் தாயகம் திரும்பி எழுச்சியும் தேசபற்றுமிக்க ஒரு தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட அந்த மாமனிதன் பாபநாசம் அருவியில் 44ம் வயதில் மகளோடு செத்து கிடந்தான்
அவன் செய்த தவறு என்ன? பிரிட்டிஷ்காரனை எதிர்ப்பேன் என உறுதியாய் சொன்னது நாட்டுக்காய் கடைசிவரை பாடுபட்டது
அந்த மாமனிதனைத்தான் ஈரோட்டு ராம்சாமி எனும் தேசத்வேஷி வர்னாசிரம வெறியன் என திட்டி தீர்த்தார், தீரா பழிசுமத்தினார்.
இன்று (2 / 4) அந்த வ.வே.சு அய்யரின் பிறந்த நாள்,
இந்தியாவின் மிக சிறந்த விடுதலை போராட்ட வீரரும், மிக சிறந்த எழுத்தாளரும் தேசத்துகாக வாழ்வினை அர்பணித்த அந்த மாமனிதனுக்கு அஞ்சலிகள்
ஆயுதம் அறவழி என எல்லா வழிபோராட்டத்திலும் அவர் பெயர் இருக்கும். சாவர்க்கர், திங்காரா, வாஞ்சிநாதன் போன்றோர் பெயர் இருக்கும் வரை அய்யரும் இருப்பார்
பாரதி பெயர் ஒலிக்குமிடமெல்லாம் அவரும் இருப்பார்
நிச்சயம் அவர் தேசபற்றும் மதபற்றும் உணர்ச்சியுமிக்க ஒரு நல்ல தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட்டார், அவரின் கனவு இப்பொழுது நிறைவேறி கொண்டிருக்கின்றது
மத அபிமானமும் தேசாபிமானமும் கொண்ட மாபெரும் இளைய தலைமுறை உருவாகி கொண்டிருக்கின்றது
ஒரு நாள் விரைவில் வரும் அன்று அவரை விமர்சித்து பழிசுமத்தியோர் அடையாளம் கடலில் எறியபடும், மாமனிதனும் தேசபற்றாளனும் தேசத்தின் குரலுமான வ.வே.சு அய்யரின் புகழும் அடையாளமும் அழியா இடம்பெறும்
பாபநாசம் மலையிலோ இல்லை சேரன்மகாதேவி பக்கமோ அவருக்கு நினைவிடம் ஏதுமில்லை, விரைவில் மிகப்பெரிய அடையாளம் அம்மாமனிதனுக்கு அமைக்கப்படும், காலம் அதை செய்யும்.