ஜிஞ்ஞாஸு – திரு. நரேந்திர மோடி
மோடி தந்தி டிவியில் பேசும் போது தான் ஜிஞ்ஞாஸுவாக இருந்தபோதே தமிழகத்துக்கு வந்தேன் என ஒரு வரி சொன்னார்.
அது என்ன என தந்தி டிவி நெறியாளர்களும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை. ஆனால் அந்த சொல் சாதாரணமானது அல்ல.
அதைப் புரிந்து கொண்டால் மோடியின் மிக ஆச்சரியமான அதிசயமான பின்னணி புரியும்.
பகவத்கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு, அது இப்படிச் சொல்லும்.
“சதுர்விதா பஜன்தே மாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜுன |
ஆர்தோ ஜிஞ்ஞாஸு ரர்தார்தீ ஞானீ ச பரதர்ஷப || “
அதாவது சதுர்-விதாஹ என்றால் -நான்கு வகை, பஜந்தே என்றால் வழிபடுகின்றனர், மாம்— என்றால் என்னை; ஜனாஹா என்றால் மக்கள்; ஸு-கிருதினஹ என்றால் பக்தியுள்ளவர்கள். அர்ஜுனா என்றால் அர்ஜுனா; ஆர்தஹ என்றால் கஷ்டப்படுகிறவர்கள்; ஜிஞ்ஞாஸுஹு என்றால் அறிவைத் தேடுபவர்கள்;
அர்த்த-அர்த்தீ— என்றால் ஆதாயத்தை நாடுபவர்கள்; ஞானீ என்றால் அறிவில் நிலை பெற்றவர்கள். (ஞானம் என்பது சமஸ்கிருத சொல்லே)
ச என்றால் மற்றும் , பரத ரிஷப என்றால் பரதர்களில் சிறந்தவர்.
ஆக ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.
“அர்ஜூனா, என்னை நான்கு விதமான (சதுர்விதமான) மக்கள் வழிபடுகிறார்கள். ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, மூன்றாவது அர்த்தார்த்தி, நான்காவது ஞானி’ எனப் பொருள்.
ஆர்த்தன் என்றால் உடல் கஷ்டம் மனக்கஷ்டம் என வாழ்வின் கஷ்டங்களைச் சொல்லி வழிபடுபவன், ஜிஞ்ஞாஸு என்றால் ஆன்மீக அறிவைத் தேடுபவன்.
அர்த்தார்த்தி என்றால் பொருளை, செல்வாக்கை தேடுபவன்.
ஞானி என்றால் எல்லாம் உணர்ந்தவன். எதுவும் வேண்டாமல் இறைவனுக்கு நன்றி மட்டும் செலுத்துபவன்.
இந்த இரண்டாம் வகையான “ஜிஞ்ஞாசு” பற்றித்தான் இங்கே சொல்கின்றார் மோடி.
அதாவது ஜிஞ்ஞாஸுவாக நான் இருந்தபோது, அதாவது ஆன்மீக அறிவைத் தேடுபவனாக நான் இருந்தபோது பலமுறை தமிழகத்துக்கு வந்திருக்கின்றேன் என்றார்.
மோடி பிரதமர் ஆன பின்போ, அதற்கு முன் குஜராத் முதல்வராக இருந்தபோது மட்டும் தமிழகத்துக்கு வரவில்லை. அவர் இளம் வயதிலே பொதுவாழ்வு, சங்க வாழ்வு என வந்தவர் அதனால் யாரும் அறியாத மோடியாக பல முறை தமிழகத்துக்கு வந்திருந்தார்.
அதைத்தான், தேசம் பற்றி அறியும் ஒருவனாக, தேசத்தின் அறிவை பெறும் ஒருவனாக, ஒரு ஜிஞ்ஞாஸு என்பவனாக இங்கே வந்தேன் எனத் தெளிவாகச் சொன்னார்.
இதை தந்தி டிவி சொல்லவில்லை, தமிழக பா.ஜ.க.வும் சொல்லவில்லை. ஏன் எனத் தெரியவில்லை.
மோடி என்பவர் தேசத்தின் பொக்கிஷம் மட்டுமல்ல, அவர் இந்திய ஞானத்தின் கருவூலம், அதைத்தான் அவரின் மிகத் தேர்ந்த ஞானமான வார்த்தைகள் காட்டுகின்றன.