மூக்கையா தேவர்
கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும்
கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது
இது எங்கள் இந்திய மக்களுக்கும் மண்ணுக்குமான துரொகமாகும், ஏற்கனவே பல துரோகங்களை நாட்டுக்கு செய்தவர்கள் இந்த துரோகத்தையும் செய்ய கூடாது
ஏற்கனவே நிறைய இழந்துவிட்ட இம்மக்களும் மண்ணும் மேற்கொண்டும் இழப்பதையே கொண்டிருந்தால் சுதந்திரம் பெற்றதின் அர்த்தம் கேள்விகுறியாகிவிடும்”
இப்படி ஒரு தேசாபிமான இந்திய தமிழன், 1970களிலே பாராளுமன்றத்தில் முழங்கினான் என்றால் நம்பமுடிகின்றதா?
நிச்சயம் காங்கிரஸ் காரனோ, திமுகவினரோ இதை சொல்லியிருக்கமுடியாது, அதிமுக எனும் மந்தைகளில் இதெல்லாம் வாய்ப்பே இல்லை
இந்த வீரமுழக்கத்தை செய்தவர் மாபெரும் தியாகி, கர்ம தலைவன் மூக்கையா தேவர் அவர்கள், பசும்பொன் தேவரின் வாரிசாக அன்று முழங்கிய மிகபெரிய தேசாபிமானி அந்த மூக்கையா தேவர்
2006களில் இலங்கையில் கால்பதித்த சீனாவினை , 1970களிலே ஒருவன் எச்சரித்தான் என்றால் அந்த மாமனிதனின் தேச அக்கறையும், உலக பார்வையும் எவ்வளவு துல்லியமானதாக இருந்திருக்க வேண்டும்
ஆம், தமிழகத்தில் அப்படியான தேசாபிமானிகளும் இருந்தார்கள்
காமராஜர், கக்கன் என காங்கிரஸ்காரர்களையே பட்டியலிட்டு பழகிய தமிழகத்தில் இம்மாதிரி அரும்பெரும் மனிதர்கள் ம்றைக்கபட்டார்கள் புதைக்கபட்டார்கள்
காரணம் என்னவென்றால் வெகு எளிது, முதலாவது அவர்கள் காங்கிரஸை நேருவினை எதிர்த்தார்கள் இரண்டாவது அவர்களெல்லாம் இந்துக்கள் அடையாத்தோடு தேசாபிமானியாக இருந்தார்கள்
இப்படிபட்டவர்களை ஒழித்துகட்டுவதுதான் அன்றைய அரசியல் , அந்த அநீதி இவருக்கும் நிகழ்ந்தது
காமரஜரும் கக்கனும் கொண்டாடபட வேண்டியவர்கள் ஆனால் மூக்கையாதேவரும் அவ்வரிசையில் வணங்கபட வேண்டியவர்
அவரின் பிறந்த நாளான இன்று (04 / 04) அந்த மாமனிதனை பற்றி கொஞ்சம் பார்த்தல் நன்று
அவர் 1923ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார்
அவரின் பெற்றோருக்கு அதற்கு முன் பிறந்த குழந்தையெல்லாம் இறந்த பரிதாப விதி இருந்தது, இதனால் இந்த குழந்தையினை ஊர் குழந்தையாக கொடுக்க முடிவுசெய்தார்கள், அக்காலத்தில் அப்படி ஒரு வழமை இருந்தது
அதன்படி ஊரெல்லாம் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர்.
ஊராரால் வளர்க்கபடும் குழந்தை இது , எங்கள் குழந்தை அல்ல என அக்குழநதையினை அறிவித்தார்கள், ஊர் குழந்தையினை நாங்கள் வளர்க்கின்றோம் என்றார்கள்
அக்குழந்தை பின்னாளில் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் பெருமகனாக வளர்ந்தது
பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.
1949ம் ஆண்டு அவருக்கு ராணி அம்மாள் எனும் ஆசிரியை மனைவியாக வாய்த்தார்
அப்போதுதான் தேவர் பெருமகன் குற்றபரம்பரை சட்டம், ஆலய நுழைவு சிக்கல் என எல்லாம் எதிர்த்து போராடி வென்று பின் நேதாஜி படைக்கு ஆள்திரட்டி கொண்டிருந்தார்
அவரோடு களத்துக்கு வந்தார் மூக்கையா தேவர் , தேவரோடு சுதந்திரத்துக்கு பாடுபட்ட பெருமை அவருக்கும் உண்டு
மூக்கையா தேவர நேதாஜி கட்சியில் இணைந்தார், தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் அய்யா பசும்பொன் தேவர் வழிகாட்டலில் அரசியலுக்கு வந்தார்.
நேதாஜியின் புகழை தமிழகத்தில் பரப்பி நின்றதில் மூக்கைய்யா தேவருக்கு தனி இடம் உண்டு, மக்களும் தேசாபிமானிகளும் அவரை கொண்டாடினார்கள்
அவருக்கென தனி செல்வாக்கு இருந்தது
1952 ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் 1957 ல் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து வென்றார், தொடர்ந்து 1962, 1967, 1971, 1977 தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.
உசிலம்பட்டி அவரின் அறிவிக்கபடாத ஜனநாயஜ ராஜ்ஜியமாக இருந்தது
காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா என யாரும் படைக்கா சாதனை அது, ஒரே தொகுதிபக்கம் சுமார் ஐந்து தேர்தலில் தோல்வியே பெறாமல் வெல்வது என்பது அவர் மட்டுமே செய்த சாதனை
இன்றுவரை அதுதான் சாதனை
இதனால் இடைக்கால சபாநாயகாரகவும் இருந்தார்
1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சுத்தான் இன்றுவரை மிகபெரிய குறிப்பாக உண்டு
கச்சதீவு பற்றி அங்கே தமிழரின் உரிமை பற்றி ஆழபதிவு செய்தவர் அவர்தான், பாராளுமன்றத்தில் முதன் முதலில் ஆணிதரமாக பேசியவர் அவர்தான்
அவருக்கு திமுக துணை நின்றிருந்தால் காட்சி மாறியிருக்கும், ஆனால் திமுக அப்படி தமிழருக்கு நல்லது செய்யும் கட்சி அல்ல, காமராஜரையே சரித்தவர்களுக்கு மூக்கய்யா எனும் தேசாபிமானியும் உவப்பானவர் அல்ல
எந்த அளவு அவர் கொண்டாடபட்டார் மதிக்கபட்டார் என்றால் அதற்கு எம்ஜிஆர் வாழ்வே சாட்சி
எம்ஜிஆரின் முதல் தேர்தலில் அதாவது 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை எம்ஜிஆர் அவசரமாக திரும்ப பெற்று சொன்னார்
“நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்ப்பட்ட தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை” என்று வாபஸ் பெற வைத்தார்.
அவரின் மதிப்பும் மரியாதையும் எம்ஜிஆருக்குத்தான் தெரிந்திருந்தது
கல்விபணியில் தனி இடம் பெற்றவர் மூக்கய்யா தேவர், கல்வி ஒன்றே சமூகத்தை மாற்றும் என்பதில் சரியாக இருந்தார்
உசிலம்பட்டி தேனி ராமநாதபுர பக்கம் பல கல்விசாலைகள் வர பாடுபட்டார்
உசிலம்பட்டி, மேல நீலிதநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவினார்.
இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
உசிலம்பட்டியில் தேவர் கல்லூரியை உருவாக்கி அதன் தலைவராக இருந்தாலும் அந்த கல்லூரியில் தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ, தனது சொந்தக்காரர்களுக்கோ எந்த பொறுப்பும் வழங்ங்கியதிலை
1966 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த பார்வர்ட் பிளாக் கட்சி மாநாட்டில் தேவரை கைது செய்த அதே இடத்தில் அவருக்கு சிலை நிறுவ வேண்டும் என தீர்மானித்து அள்ளும் பகலும் உழைத்து மதுரையில் கோரிப்பாளையத்தில் 3 சென்ட் இடத்தை விலை குடுத்து வாங்கி தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 14 அடி வெண்கல சிலையை தனது கடின முயற்சியால் நிறுவியது அவர்தான்
அவர் எப்படியான எளிய வாழ்க்கை வாழ்ந்தார் என்றால் அது காமராஜருக்கும் கக்கனுக்கு சற்றும் குறைவில்லா வாழ்க்கை
அதைவிட அதிகமாக கடனில்தான் செத்தார்
ஆம், ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினராக ஆனது முதல் தன் கடைசிக் காலம் வரை ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார்.
சொந்தமாக டெலிபோன் கூட கிடையாது. தான் இறக்கும்போது 66,000 ரூபாய் கடன் வைத்திருந்தார். தொடர்ந்து பல்வேறு அதிகாரமிக்க பதவிகளில் இருந்தும் தனக்கென்று 1 ரூபாய் கூட சேர்த்துவைத்து கொள்ளாதவர்.
பசும்பொன் தேவருகு பின் அந்த பார்வர்ட் பிளாக் கட்சி இப்படி ஒரு உத்தமனால் காக்கபட்டது
ஆனால் நல்லகண்ணு தெரிந்த அளவு கூட மூக்கய்யா தேவரின் தியாகம் வெளிதெரியாது அதுதான் தமிழக அரசியல்
ஓய்வில்லாமல் உழைத்த அவரை “உறங்கா புலி” என்றார் பசும்பொன் தேவர், அப்பட்டம் நிலைத்துவிட்டது
“உறங்கா புலி”, உசிலம்பட்டி சிங்கம், தேவர் தந்த தேவர், கல்வித் தந்தை என அவரை மக்கள் கொண்டாடினார்கள்
காலம் தந்த வரமாக, அந்த வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான திரு. மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6 ல் காலமானார்
இப்படியான மகான்களை மறைத்து சரித்து வளரர்ந்ததுதான் திராவிட இயக்கங்கள் அதற்கு துணைபோனது காங்கிரஸ் கடைசியில் அதுவும் சரிந்துவிட்டது
இப்படியான மாமணிகளைத்தான் தேசமும் மதமும் பிரதானம் என நின்றிருதவர்களைத்தான், எளிமையின் கங்கையாக வாழ்ந்திருந்தவர்களை மதவெறியர், சாதி வெறியர் என சரித்துவிட்டு இன்று யார் யாரையெல்லாம் திராவிட இயக்கம் உருவாக்கியிருக்கின்றது என்பதை எளிதாக கவனிக்கலாம்
இந்த மாமணிகள், இந்த வீர சிங்கங்கள் தமிழகத்தின் தேசாபிமான அடையாளங்கள், இவர்களை காட்டித்தான் இளைய சமூகத்தை நாட்டுபற்றிலும் தெய்வீகத்திலும் வளர்க்க வேண்டும்
இன்று கச்சதீவு விவகாரம் பெரிதாக வெடிக்கும் நிலையில் , 1970களிலே அதை எவ்வளவு தீர்க்கமாக ஒருவர் அமெரிக்க கணிப்பையும் மீறி கவனித்து பேசியிருக்கின்றார், அவரின் உலகளாவிய பார்வை இந்திய நலவின் எவ்வளவு தீர்மானமாய் இருந்தது என்பதை நோக்கும் போது ஆச்சரியமே மேலெழுகின்றது
அந்த தென்பாண்டி சிங்கத்தை, பாண்டிய மன்னர்களின் மறுவுருவினை வணங்கி தேசம் பெரும் அஞ்சலி செலுத்தி, கச்சதீவு ஒருநாள் மீட்கபடும் அங்கே மூங்கையாதேவர் நினைவுகூறபடுவார் என உறுதியேற்று கொண்டிருக்கின்றது.