சப்த கன்னியர் – 02
பிராம்மி – முதல் கன்னிதெய்வம்
இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது
இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது
இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார அசுரனை அழிக்கும் போது யோகேஸ்வரி எனும் ச்கதியினை , அவள் மகேஸ்வரி எனும் சக்தியினை உருவாக்கினாள், அவளுக்கு துணையாக பிரம்மன் பிராம்மியினையும் நாராயணன் நாராயனியினையும் முருகபெருமான் கௌமாரியினையும் , இந்திரன் இந்திராணியினையும், வராஹமூற்த்தி வராஹியினையும், யமன் சாமுண்டியினையு உருவாக்கி , தங்களின் சக்தியில் இருந்து உருவாக்கி கொடுத்ததாக ஒரு குறிப்பு உண்டு
மகிஷாசுரனை அழிக்க , கப்பத்தில் உருவாகாத பெண்ணால் மட்டும் அழிவு என வரம் பெற்ற மகிஷனை அழிக்க இந்த சக்திகள் உருவாகி வந்தன என்பது இன்னொரு குறிப்பு
ஆனால் மார்கண்டேய புராணம் தெளிவாக இந்த சப்த கன்னியர் தோற்றம் நிம்ப சுதம்ப அசுரனை அழிக்க இவை அவதரித்த்ன் என தெளிவாக சொல்கின்றது
வேதங்களில் இருந்து காவியம் படைத்த மகாகவி காளிதாசன் சப்த கன்னியர் சிவனை வணங்கும் பணிபெண்கள் என குமார சம்பவம் காவியத்தில் சொல்கின்றான்
மார்கண்டேய புராணம்தான் அந்த சப்த கன்னியர் பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, நாராயணி, இந்திராணி, வராஹி, சாமுண்டி என ஏழுபேர் என சொன்னது
பிராம்மி என்பவள் பிரம்மனின் முகத்தில் இருந்து வந்தவள, மகேஸ்வரி சிவனில் இருந்து வந்த்வள், கௌமாரி முருகபெருமானின் சக்தியாய் வந்தவள், வராஹி வராஹமூத்தியிடம் இருந்த்ம், சாமுண்டி ருத்திரனிடம் இருந்தும் வந்தவள் என சொல்கின்றது
இங்கே அறிந்துகொள்ள வேண்டிய தாத்பரியம் ஒன்றுதான், அந்த தாத்பரியம் புரிந்தால்தான் சப்த கன்னியரின் அவதாரமும் அவை இயக்கும் முறையும் அருளும் அவசியமும் முழுக்க புரியும்
இந்த உலகின் இயக்கம் முக்கியம் , இந்த உலகின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு விதி, ஒரு தர்மம், ஒரு சத்தியம் ஒரு ஞானம் உண்டு
ஒரு இயங்குவிதி உண்டு
இந்த விதியினை இந்த தர்மத்தை ஏதோ ஒரு சக்தி மாற்ற முயன்றால் அல்லது அழித்து தனக்கு ஏற்ப புதுவிதி ஏற்படுத்த முயன்றால் அந்த தர்மத்தை உடைக்க முயன்றால் இந்த சக்திகள் வந்து அந்த அதர்மத்தை அழித்து விதிப்படி தர்மபடி எல்லா இயக்கமும் நடக்க வழி செய்யும்.
ஒரு ஒயக்கம் தர்மபடி விதிபடி அதனதனை பகவான் படைத்தபடி அதனதன் ஞானத்தின்படி நடக்க இந்த சக்திகள் வழி செய்யும்
இங்கு எல்லாமே பிரபஞ்சததின் ஏதோ ஒரு திட்டத்திற்காக அந்த சக்தியின் விருப்பபட் இயங்குகின்றன, அந்த இயக்கத்தை சரியாக நடக்க வைக்க, தடைகள் வந்தால் விலக்கி, பெரும் குறுக்கீடுகள் வந்தால் உடைத்து அந்த இயக்கத்தை சரியாக செய்ய வைப்பவை இந்த ஏழு சக்திகள்
இந்த பிராம்மிதான் சப்த கன்னியரில் முதல் தெய்வம்
இவள் பிரம்மனின் முகத்தில் இருந்து உருவானவள் என்பது புராணம் சொல்லும் செய்தி, ஒருவகையில் அல்ல இவள் முழுக்கவே சரஸ்வதி அம்சம்
அன்னபறவையில் வரும் இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்ட், அதில் ஏடுகள், அபயம், கமண்டலம், அட்சமாலிகை எனும் மந்திர மாலை என நான்கும் கொண்டிருப்பாள்
அன்னை தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்
இந்த பிராமிதான் சிந்தனைகளை நல்ல அறிவினை ஞானத்தை தருபவள், கலைகளின் மூலத்தை அருள்பவள், படைக்கும் தொழிலுக்கு பக்கபலமாய் இருப்பவள்
பிரம்மனின் ஞானம் இவள்தான், பிரம்மனின் சக்தி இவளேதான் இவள் அருளாலே பிரம்மன் இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிர்களையும் படைக்கின்றான்
இந்த பிராம்மி என்பவளை மானிடருக்கு சிந்தனை கல்வி கலை அருள்பவள் என மட்டும் கருதிவிட கூடாது,அவள் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு உயிரின் ஞானமாக நிற்கின்றாள், படைப்பின் தத்துவ விதி அவள் ஞானமே
அதாவது இந்த பிரபஞ்சம் மிக பெரியது ஏகபட்ட கோள்கள் அவற்றின் இயக்கங்களை கொண்டது, ஒவ்வொரு கோளும் அதனதன் இயக்கத்தில் இயங்குகின்றது, ஒரு புள்ளி கூட தன் பாதையில் இருந்து நகர்வதில்லை
அதன் இயல்பில் இருந்து விலகாமல் தன் கடமையினை தன் வேலையினை சரியாக செய்யும் அதில் ஒரு ஞானம் இருக்கும்
இதே ஞானம் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு , ஒரு ஒழுங்கான சீரான இயக்கம் உண்டு அது மழையில், மேகத்தி, காற்றில், நெருப்பில் என எல்லாவற்றிலும் உண்டு
அந்த ஞானமே ஒவ்வொரு உயிரிலும் உண்டு அது மீன்கள், பறவைகள், எறும்புகள், விலக்குகள், மரம் செடி கொடிகள் என ஒவ்வொன்றும் தன் இயல்பில் அதன் ஞானத்தில் சரியாக இயங்குகின்றன
தேனீக்கள், தூக்கணாங்குருவி, சிலந்தி, எறும்பு, யானை, சிங்கம், நாகம் என எல்லாமே ஒரு ஞானத்தில் ஒரு ஒழுங்கில் இயங்குவதை காணலாம்
கடலும் மலையும் அந்த விதிக்கு உட்பட்டதே
அந்த ஞானமான ஒழுங்கான அந்த விதியினை அந்த இயக்கத்தை அந்த சீராக நடக்கும் ஞானத்தை அருள்பவள் அன்னை பிராம்மி
எல்லா படைப்பிற்கும் அந்த விதியினை ஒழுங்கை ஞானத்தை கல்வியினை கொடுக்கும் அவள் மானிடருக்கும் ஞானமும் அறிவும் கொடுக்கின்றாள்
( இதைத்தான் கம்பன் பாடுகின்றான் தன் சரஸ்வதி அந்தாதியில் பாடுகின்றான்
“தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.”
அதாவது வானலோக தேவர்கள், தேவர்களின் அரசனான இந்திரன், உயர்ந்த புனிதமான வேதங்கள் போற்றும் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, சிவன் விஷ்ணு என சக்தி மிக்கோர், அசுரர்கள், முனிவர்கள், இன்னும் எல்லா உயிர்களும் வெண் தாமரையில் இருக்கும் அன்னையின் அருளால் ஞானம் பெறுகின்றார்கள் )
அப்படியான நிலையில்
மானுடன் படைப்பின் உச்சம், ஈரேழு உலகங்களில் பூமியில் அவன் ஆத்ம சொரூபம். பரம்பொருளின் ஆத்மா தங்கியிருக்கும் கூடு
அந்த மனிதன் தன் சிந்தையால் செயலால் இறைவனை உணர்ந்து அடையவேண்டும், மற்றவரும் இறைவனை உணர வழி செய்யவேண்டும் என்பது அவன் வாழ்வின் தாத்பரியம்
இந்த மானுடருக்கும் இந்த உலகில் வாழ சில விதிகள் உண்டு , அவன் சிந்திக்க தெரிந்தவன் அவன் சிந்திப்பதை வெளியில் சொல்லும் அறிவு படைத்தவன், அவன் சொல்லும் செயலும் சிந்தனையும் இந்த உலகை நல்லவழியில் நடத்தவும் இந்த மானுட சமூகத்துக்கு நலல் வழிகாட்டுவதாகவும் பல பயன்களை செய்வதாகவும் இருத்தல் வேண்டும்
மானுட விதிப்படி அவன் உலகில் வாழ பல விஷயங்கள் அவசியம் அவற்றை உருவாக்கவும் அடையவும் மனுகுலம் மேன்மையடையவும் மகிழ்ச்சியாய் வாழவும் அவனுக்கு சில விதிகள் நல்ல சிந்தனைகள் நல்ல ஞானங்கள் அவசியம்
அந்த ஞாந்த்தை அறிவினை தருபவள் அன்னை, அதனலே அவளை கல்விக்கு அதிபதி கலைக்கு அதிபதி என்றார்கள்
மானுட வாழ்வின் பெரும் பலம் சிந்தனை, அந்த சிந்தனையினை தருவது தலையின் மூளை , அன்னை அந்த மூளைக்கான பலததை தருவாள் நல்ல சிந்தனையினை தருவாள் ஞானத்தை கலை ஞானத்தை தருவாள் என்பதாலே அவள் தலையில் இருந்து உருவானதாக சொல்லபட்டாள்
பிரம்மன் படைப்பு தொழிலை செய்பவன், அந்த படைப்புக்கான மூலமாக அவளே உண்டு என்பதால் அவள் நல்ல அறிவு, ஞானன், கல்வி என எல்லாம்தந்து நல்ல மூளை பலத்தை கொடுப்பாள்
இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கல்வி, ஞானம் என்றவுடன் அது ஏட்டுகல்வி அல்ல, கலை என்றவுடன் 64 கலை என்பதுமட்டுமல்ல
மானுடன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சொல்லும் சொல்லிலும் செயலிலும் எல்லா தொழிலிலும் ஞானமும் அறிவும் அவசியம்
விவசாயி மீணவன், கொல்லன், தொழிலாளி, வியாபாரி என எல்லாவற்றிலும் ஒரு ஞானமும் அறிவும், செய்வதை அழகுறை செய்து அதை மக்களிடம் பயனுற ஒப்படைத்து தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழவைப்பதிலும் நல்ல அறிவு முக்கியம்
அது சமையல் முதல் சந்தை வரை எந்த தொழிலாகவும் இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஒரு அறிவும் ஞானமும் நலல விதியும் அவசியம், அப்போதுதான் அது நிலைக்கும் சிறக்கும்
அந்த ஞானத்தை அறிவை தருபவள் இந்த பிராம்மி, அவளை வழிபட்டு துவங்கினால் எல்லாம் துலங்கும், அவள் செய்ய் தொழிலுக்கு அல்லது அவரவர் வாழ்க்கை நிலைக்கு என்ன வரம் வேண்டுமோ அதை அருள்வாள்
அதனால் சப்த கன்னியரில் அவளை முதலாவதாக வைத்தார்கள், “எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்” என்பதால் அவளை சிரசில் இருந்து வந்தவள் சிரசுக்கு காவல் என்றார்கள்
உடலின் ஏழு தாதுக்களில் மூளை முக்கியமானது அது தலையில் உண்டு, பிராம்மி தேவியின் அருளால் மூளை நலமாகும் பலமாகும் சிந்திக்கும் திறன் கூடும்
ஏழு தாதுக்களான உடல் நலல் பலம் பெற்றால்தான் சரியான இயக்கத்தில் இருந்தால்தான் ஆத்மா சரியாக செயலாற்றமுடியும் கர்மம் செய்யமுடியும்
அந்த உடலுக்கு மூளைதான் பிரதானம், அந்த மூளைதான் உட்லை இயக்கும் கட்டுபடுத்தும் இன்னும் ஒவனை சிந்திக்க செய்யும், அதுதான் அவனின் அடையாளமாகவே கருதபடும்
அந்த மூளையினை பலமாக்குபவள் அன்னை பிராம்மி
இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதாரமாக நிற்கின்றாள், அவளை வழிபட வழிபட அந்த் சக்கரம் துலங்கும், படைக்கும் திறன் புதிய புதிய புதிய சிந்தனைகள் பெருகும்
மூலாதார சக்கரம் துலங்க ஆரம்பித்தால் பல நல்ல மாறுதல்கள் சிந்தனையில் வரும், அன்னை அங்கேதான் இருந்து நடத்துகின்றாள்
ச்பத கன்னியர் வழிபாட்டில் முதல் இடம் இந்த பிராம்மி தேவிக்கு அவளை வழிபட வழிபட ஞானமும் அறிவும் பெருகும்
இந்த பிராம்மி என்பவள் புராணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் வருவாள், மகாபாரதத்தில் பெரும் அட்டகாசம் செய்யும் லவண அசுரன் என்பவனை, சிவனின் சூலாயுதம் கொண்ட அவன் யாரும் வெல்லமுடியா நிலையில் நின்று பெரும் அட்டகாசம் செய்வான்
அவனை ராமனின் அம்பு மூலம் அழிப்பான் சத்ருகன், அப்படி அழிக்கும் போது அவன் இந்த பிரமமியினை வேண்டி அழைத்து செல்வான் எனபது ராமாயணத்தின் ஒரு காட்சி
இங்கே ஒரு கேள்வி எழலாம், எழும்
அதாவது நல்ல சிந்தனைக்கு அறிவுக்கும் ஞானத்துக்குமான இந்த தேவியினை ஏன் நிம்ப சுதும்பனை அழிக்க படைகள் சண்டையிடும் களத்தில் இறக்கினார்கள் என்பது
அங்கேதான் பெரிய ஞான தாத்பரியம் உண்டு.
போரில் வீரம் முக்கியம், ஆயுதம் முக்கியம் அப்படியே ஞானமும் அறிவும் மகா முக்கியம், அறிவு கலக்காத போர் வெற்றியடையாது அது முரட்டுதனமான சண்டையாகிவிடும்
இதனாலே பலமிருந்தாலும் அசுரர்கள் தோற்று ஓடுவார்கள், பலம் குறைந்திருந்தாலும் தேவர்கள் வெற்றிபெறுவார்கள்
போரில் அறிவும் ஞானமும் மகா முக்கியம்
ஆம், ஒவ்வொரு மானிடரும் ஒவ்வொரு நாளையும் போராடி கழிக்கும் வாழ்வு இது, அந்த போராட்டமான வாழ்வில் ஞானம் முக்கியம் அறிவு முக்கியம் சமயோசித புத்தியும் , வாழ்வை காத்து தன்னோடு இருப்பவரை காத்து இந்த சமூகத்தை காத்து செல்ல அறிவும் ஞானமும் வேண்டும்
ஒவ்வொருவருக்கும் அதை தருபவள் அன்னை பிராம்மி
அன்னை பிராம்மியின் அருள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம், பெண்களுக்கு இந்த அறிவும் விழிப்பும் நல்ல சிந்தனையும் அவசியம்
அவளே படைக்கும் சக்தி கொண்டவள், அவளே உயிர்களை வளர்க்கும் சக்தி,குடும்பத்தை காக்கும் சக்தியும் கொண்டவள், அவளாலே எல்லாம் இயங்கும் , மானுட வாழ்வினை இயக்குவது பின்னால் இருந்து பெண்கள்தான்
அந்த பெண்களுக்கு எல்லா வகையான அறிவும் வேண்டும், நல்ல தோற்றம் நலல் சூழல், நலல் சிந்தனைக்ள், நலல் மனோவளம், அறிவு என எல்லாம் கொண்டிருக்கும் பெண்ணே, எல்லாம் புரிந்து உணர்ந்து ந்டக்கும் பெண்ணே வீட்டுக்கு சிறப்பினை கொடுப்பாள், சிறப்பான குடும்பத்தை உருவாக்குவாள்
அவளே வீட்டின் விளக்கு, அந்த விளக்கினை ஜொலிக்க வரம்ருள்பவள் அன்னை பிராம்மி
பெண்களுக்கு சப்த கன்னியர் வழிபாடு மகா முக்கியம், ஒவ்வொரு பெண்ணும் நடத்தும் போராட்ட வாழ்வில் அவளுக்கு அறிவும் ஞானமும் மகாமுக்கியம்
சிறப்பில்லா குடும்பங்கள், குழம்பி தவிக்கும் குலங்கள், கண்ணீரும் ஏழ்மையும் நிரம்பிய இடங்கள், ஓயா சண்டைகள், எப்போதும் அழுகை நிம்மதி குறைவு என குடும்பத்தை கண்டால் ஆழ்ந்து பார்த்தால் அங்கு அறியாமையும் எதுவும் தெரியாத சூனியமான ஒரு பெண் இருப்பதை காணலாம்
நன்றாக சிறந்துவாழும் குலம், ஏழ்மை என்றாலும் அது தெரியாமல் மகிழ்ந்துவாழும் குடும்பத்தை கண்டால், எல்லோரும் இன்புற்று மகிழ்வும் சந்தோஷமும் வளமும் கொண்ட குடும்பத்தை கண்டால் அங்கே ஒரு அறிவுள்ள பெண் இருப்பதையும் காணலாம்
இந்த வரம்தான் அன்னை பிராம்மி தரும் வரும், பெண்களுக்கு அறிவும் கல்வியும் ஞானமும் மகா முக்கியம் என்பதால் அவளை வணங்க சொன்னார்கள்
எல்லா கோவில்களிலும் சப்த கன்னியர் என ஏழு கன்னியரை வைத்து வணங்கி வழிபட சொன்னார்கள்
எல்லா கோவில்களிலும் சப்த கன்னியர் உண்டென்றாலும், சப்த கன்னியான இந்த பிரமமி வழிபட்ட இடம் என ஒன்றை இந்துமதம் அடையாளம் காட்டி அதற்கான தாத்பரியத்தை சொல்லி வழிபட சொன்னார்கள்
அது சக்கரப்பள்ளி, சக்கரமங்கை ஆலயம் என சோழ்நாட்டில் உண்டு. தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உண்டு, அய்யம்பேட்டை அருகில் உண்டு
சோழ மனன்ர்கள் எல்லோரும் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் என எல்லோரும் திருபணிசெய்த மிக மிக பழமையான ஆலயம் அது
அது தேவாரம் பாடபட்ட கோவில், சம்பந்த பெருமானே அங்கு வந்து பாடியிருக்கின்றார்
“பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.”
என சம்பந்த்ர் பாடியிருக்கின்றார்.
இங்கே அன்னை சக்கரபறவையாக வந்து சிவனை வழிபட்டாள் என்பது ஐதீகம், சப்த கன்னியர் சிவனின் பணிபெண்கள் என காளிதாசன் சொன்னது கவனிக்கதக்கது
சிவகிங்கத்தின் கோமுகி பக்கம் சப்தகன்னியர் இருப்பதாக வேதம் சொல்வதும் கவனிக்கதக்கது
அப்படி அன்னை சக்கரபறவையாக இங்கு வந்து சிவனை வழிபட்டாள் என்பதும் தன் குறைதீரபெற்றாள் என்பதும் இங்கே நடந்தது
அதன் காரணம் கொஞ்சம் ஆழமானது , சூட்சும தத்துவம் கொண்டது
அடிமுடி காணமுடியா நிலையில் சிவன் நின்றபோது அன்னபறவையாய் எழுந்த பிரம்மன் பொய் சொல்லி தண்டனை பெற்றபோது அவன் சக்தியான அந்த பிராம்மி அவனை காக்க வந்தாள்
அவள் சக்கரபறவையாய் வந்து சிவனிடம் மன்றாடி பிரம்மனை மீட்டாள் என்பது அந்த ஆலயத்தின் தலபுராணம்
அவள் அப்படி வந்தபோது பெரும்யாகம் நடத்தினாள் அந்த யாக குண்டம் உண்டு அது “குங்கிலிய குண்டம்” என உண்டு
இங்கு அன்னை சக்கரமபறவையாக வந்தாள் என்பதை வெறும் பறவையாக மட்டும் பார்க்க முடியாது, அங்கே ஞான சூட்சுமமும் உண்டு
சக்கரம் என்றால் வெறும் வட்டவடிவம் அல்ல, சக்கரம் என்றால் இடைவிடா சுழற்சி, இடைவிடாத ஆற்றல் சுழற்சி, அதாவது தொடர்ந்த இயக்கம்
அப்படி தொடர்ச்சியான முடிவில்லா அன்னை, ஸ்ரீசக்கரம் எனும் சக்கரத்தில் இருந்து தொடர்ந்து அருளை தரும் அன்னை இங்கே வந்து சிவனை வழிபட்டாள் என்பது
அப்படி வழிபட்டு தன்னை சார்ந்தவனும் தன் இருப்பிடமுமான பிரம்மனை அவள் மீட்டு சென்றாள் என்பது
ஆம், தன் ஆதர்சத்தை தன் முக்கியமான அடையாளத்தை, தன் பெருமையினை தனக்குரியவனை அவள் மீட்டு சென்றாள் என்பது அந்த கோவிலின் வரலாறு
அதனால் அது பெண்கள் வழிபாட்டுக்கு மிக மிக முக்கியமானது என சுட்டிகாட்டபட்டது, அதுவும் குடும்ப தலைவியர் வணங்க அது முக்கிய தலமாயிற்று
எல்லா ஆலயத்தில் இருக்கும் சப்த கன்னியரின் பிராம்மி எனும் தெய்வம் வழிபட அவசியமானவள் அதுவும் பென்களுக்கு அவசியமானவள் என்றாலும் இந்த ஆலயம் பிரசித்தியானது
இங்கே சென்றுவழிபட்டால் பெண்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும், அறிவும் ஞானமும் வாய்க்கும் குடும்பத்தை காக்கும், குடும்ப உறுப்பினர்களை காக்கும் தன் கடமையினை செய்யும் எல்லா ஞானமும் அறிவும் வாய்க்கும் உறுதி பெருகும்
அதனால் அப்பெண்ணும் சிறப்பாள் அவள் குடும்பமும் சிறக்கும்
அங்கே சென்று வழிபட்டால் மாங்கலய பாக்கியம் கிடைக்கும், பெற்ற மாங்கல்யம் நிலைக்கும்
வாய்ப்பு கிடைத்தவர்கள் கட்டாயம் சென்று அந்த சிவனை அவள் பெயரை சொல்லி வழிபட்டு, அவளையும் வழிபட்டால் எல்லா நலமும் அறிவும் பெருமையும் வாய்க்கும் அது சத்தியம்
அங்கு சென்று வழிபடலாம் இல்லை கோவில்களில் உள்ள சப்த கனியரை வழிபடலாம், அது சிறப்பினை தரும் நல்ல பலனினை தரும்
சவுந்தர்ய லஹ்ரி அவளை பற்றி சொல்கின்றது.
“கதா காலே மாத꞉ கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம்ʼ வித்யார்தீ தவ சரண நிர்ணே ஜனஜலம் |
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் || “
அம்மா! பிறவியிலேயே ஊமையாய் இருப்பவனுக்கும் கூட கவிபாடும் திறமையைக் கொடுக்கக் கூடிய மருதாணி பூசிய உன் பாதங்களை அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது, ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது கிடைக்குமோ?
அதாவது ஒரு பக்தன் அன்னையின் தாம்பூலரசம், ஞானப்பால், பாத தீர்த்த ப்ரசாதம் கிடைத்து வீரம், ஞானம், கவிபாடும் திறம் பெற்றது போலவே அடுத்து அன்னையை உபாசிப்பவன் தேவியின் அருளால், கல்வி, செல்வம், அழகு மற்றும் ஜீவமுக்தி நிலையையும் தன் வாழ் நாளில் அடைகிறான் எனவும் போற்றுகிறார்.
இதுதான் பிராம்மியின் தத்துவம்
அவள் அறிவின் தெய்வம் என்பதால் மஞ்சள் அவளுக்கு பிடித்தமான நிறம், அவள் வழிபாடுகளில் அது மிக முக்கியம்
அவளிடம் அறிவினை வேண்டி வழிபடும் போது மஞ்சளாடை சாற்றி. மஞ்சள் எலுமிச்சை சாதமிட்டு, மஞ்சள் பூக்களும் தும்பை பூக்களுமாக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம்
பிலஹரி ராகம அவளுக்கு உகந்தது என்பார்கள் , முடிந்தவர்கள் முயற்சிக்கலாம் முடியாதோர் விட்டுவிடலாம் உளமார்ந்த பக்திதான் மகா முக்கியம்
அன்னை பிராம்மியனை வழிபட வழிபட குலபெண்ணுக்கு அறிவும் புத்தியும் வரும ஆரோக்கியம் வரும் அக்குலம் செழிக்கும்
அன்னை பிராமியினை குலபெண்கள் வழிபடுதல் கூடுதல் நன்மை , ஆனால் எல்லோரும் அவளை வழிபடுதல் அவசியம்
அவளை வழிபட்டால் மூளை சம்பந்தமான நோய்கள் தீரும், மூளை வலுவாகும் அது நல்ல சிந்தனைகள் நல்ல ஆரோக்கியம், நினைவாற்றல், சுறுசுறுப்பு, சமயோசிதம் என எல்லாமும் கொடுக்கும், அதை பெற்றவர் வாழ்வு சிறக்கும்
படிக்கும் மாணவர்களுக்கு இந்த பிராம்மியின் அருள் அவசியம், பிராம்மி என்பவள் ச்ப்தகன்னி என ஆலயங்க்ளில் அமர்த்தபட்டாலும் கிராம தெய்வமான பேச்சியம்மன் அவள் சாயலே
அந்த பிரம்மி தேவிக்கான வழிபாடு மாணவர்களுக்கு மகா முக்கியம், காலை எழுந்தவுடன் அந்த மந்திரத்தை சொல்லி எழுதலும் , கல்வி கற்கும் முன்னும் தேர்வுக்கு முன்னும் அதை சொல்வதும் மிக நன்று
இந்த மந்திரம் மிகபெரிய பலனை கொடுக்கும், நினைவாற்றல் சிந்தனை கலவி என எல்லாமும் சிறக்கும் பலனை கொடுக்கும்
ஆம், அவள் மூளையினை பலபடுத்தும் தெய்வம் என்பதால் அது சம்பந்தமான எல்லா வரத்தையும் தருவாள்.
“தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா”
என்பது அவளின் தியான மந்திரம், இதை சொல்வோர்க்கு மூலாதார சக்தி எழும் துலங்கும் ஞானம் பெருகும்.
“ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம”
காயத்ரி மந்திரம்.
“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்”
என்பது அவளின் காயத்ரி மந்திரம், அதை சொல்ல சொல்ல மூளையும் அதுசார்ந்த செயலும் பலமாகும், அதை சொல்லி எழுதும் தெர்வுகளும் இதர விஷயங்களும் முழுக்க ஜெயமாகும், தெளிந்த சிந்தனையும் நிதானமும் பக்குவமும் அறிவும் ஞானமும் வரும், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் இது சத்தியம்
மிக முக்கியமாக மானுட நெறியில் மானுட விதியில் எது தர்மமோ, எது மானுட தர்ம விதியோ, எது மானுட நியாயமோ , எது மானுட தாத்பரிய வழியோ அதனில் சரியாக நடந்து முக்தி நிலையினையும் அடைவீர்கள் அது முக்கால சத்தியம்.