சப்த கன்னியர் – 04
கௌமாரி தேவி – மூன்றாம் கன்னிதெய்வம்
கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல், அவ்வகையில் இந்த கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினை குறிப்பவள்.
“கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” என குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகபெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதை சொல்கின்றார்.
சப்த கன்னியரில் முன்றாம் தேவியான இந்த அன்னை முருகபெருமானின் சக்தி, அந்த ஸ்கந்தனின் இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி.
அவள் முருகனின் அம்சம் என்பதால் மயிலை வாகனமாக கொண்டவள், சேவலை கொடியாக கொண்டவள். கையில் வேல் அல்லது சூலம் ஏந்திய நிலையில் இருப்பவள், வஜ்ஜிராயுதம் எனும் இந்திரனின் ஆயுதமும் கொண்டிருப்பாள்.
செந்நிற ஆடை அணிபவள், பூக்களில் கூட செவ்வரளி போன்ற பூக்கள் அவளுக்கு பிடித்தமானவை.
இவள் இந்திரனின் மகளான தேவசேனையின் இன்னொரு வடிவம்.
இவளே இயக்கும் சக்தி அன்ட சராசரம் முதல் ஒவ்வொரு படைப்பு உயிரினம் வரை இயக்கும் மகா சக்தி.
பொதுவாக இயக்கும் சக்திக்கு சிகப்பு வர்ணம் என்பது இந்துக்கள் என்றோ கண்டறிந்த ஒன்று அதனாலே எதெல்லாம் சக்திக்கெல்லாம் சிகப்பு வண்ணம் கொடுத்தார்கள்.
அதைத்தான் இன்று விஞ்ஞானமும் சொல்கின்றது, வானின் கிரகங்கள் கண்ணுக்கு தெரியாக அகசிகப்பு கதிர்களால் இயங்குவதை அது சொல்கின்றது.
சூரியனின் நிறம் முதல் உடலை இயக்கும் செங்குருதி வரை எல்லாமே அந்த நிறம்தான், அதனாலேதான் செந்நிற குங்குமம் இந்துக்களின் அடையாளமாயிற்று.
உலகை இயக்கும் பெரும் சக்தி என்னுள் உண்டு அது என்னை காக்கின்றது என்பதை சொல்ல குங்குமத்தை வைக்க சொன்னார்கள், பெரும் இயக்கம் என்னுள் உண்டு என்பதை சொன்னார்கள்
அந்த இயக்கம்தன் அன்னை கௌமாரி அவள்தான் மானுட உடலின் ரத்த வோட்டத்துக்கும் ரத்த சக்திக்கும் ஆதாரமானவள், முழு சக்தியானவள்
உடலுக்கு ரத்தம் தான் இயக்கம், ரத்த ஓட்டம் ஒரு நொடி நின்றால் கூட உயிர் வாழாது, உடலின் மரணம் என்பது ரத்த ஓட்டம் நின்றுவிட்ட நிலை அன்றி வேறல்ல
அந்த ரத்தம் இடைவிடாமல் பாயகூடியது, ஒரு நொடி கூட அது இல்லாமல் இருக்கமுடியாது, அப்படி உலகையும் உடலையும் காப்பவள் அன்னை
ரத்தமே புதிய செல்களை உருவாக்கும், உடலின் எல்லா பாகத்துக்கும் சக்தியினை எடுத்து செல்லும், சக்தியும் வளர்ச்சியும் அதுதான் கொடுப்பது, அதுதான் இயக்குவது
அந்த ரத்தத்தின் அணுக்கள்தான் ஒரு உடலில் வரும கிருமிகளை நோயகளை எதிர்த்து போராடும் அதுதான் உடலின் பாதுகாப்பு கவசம்
ரத்தம்தான் உடலை சுத்திகரிகும்கழிவுகளை அப்புறபடுத்தும், உண்ணும் உணவின் சக்தியினை அதுதான் உடலெல்லாம் பரப்பி உடலை வலுவாக இயங்க வைக்கும்
ரத்தவோட்டமே ஒவ்வொரு சூழலுக்கும் பருவத்துக்கும் உடலை காக்கும், அதுதான் மனதின் ஆசாபாசங்களுக்கும் வாழ்வுக்கும் அடிப்படை
அவ்வளவு முக்கியமானது ரத்தம், அது இல்லாவிட்டால் ஒரு நொடி கூட உடலும் உயிரும் வாழாது.
அன்னை அந்த ரத்தம் போல இந்த உலகை காப்பவள், அப்படியே மானுட உடலின் ஆதாரமாக நிற்பவள், அவளே பிரபஞ்சத்தை போல மானுட உடலையும் இயக்குகின்றாள், காக்கின்றாள்
உடலில் உயிர்தங்கி நிற்கும் அந்த இயக்கத்துக்கு ஆத்மா தன் கடமையினை கர்மாவினை செய்யும் அவசியத்துக்கு அவள்தான் மூல காரணம்
அவள் உடல் சீராக இயங்கி அதனால் ஆத்மா தன் கர்மாவினை நல்வழியில் செய்ய எல்லா வரமும் காவலும் அருள்வாள்
அந்த அன்னையின் வழிபாடு அவ்வளவு முக்கியமானது
உயிர் என்பது ரத்தத்தில் இருப்பதாக ஐதீகம், ரத்தம் நீங்கினால் உயிர் நீகும். அதனாலே ரத்தபீஜனின் ஒவ்வொரூ சொட்டு ரத்தமும் பூமியினை தொடும்போது ஒரு அரக்கன் ஜெனிக்கும் வரம் கிடைத்தது
அன்னை கௌமாரிதான் காளி உருவில் அவனை அழித்தாள் அதாவது ரத்தத்தை அவள் கட்டுபடுத்தி அவனை ஒழித்தாள் என்பதில் அவள் சக்தி உலகுக்கு சொல்லபட்டது
அன்னை உயிரை காப்பவள், ரத்தம் நோய்பட்டால் ரத்தம் கெட்டுவிட்டால் வாழமுடியாது , ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் வாழமுடியாது அதன் அடர்த்தி அதன் அழுத்தம் அதிகரித்தாலும் ஆபத்து
குறைந்தாலும் ஆபத்து
வனத்து கோள்கள் அதனதன் பாதையில், அதனதன் வேகத்தில் சரியாக செல்ல துல்லியமான அமைப்பு அமைக்கபட்டிருப்பது போல ரத்தம் சரியாக செல்லவும் பாயவும் துல்லிய தன்மை அவசியம்.
அதை செய்பவள் அன்னை, அதாவது உடலை தாங்குவது உயிர் அந்த உயிரை தாங்குவது ரத்த ஓட்டம், அந்த ரத்த இயக்கத்தை நடத்துபவள் அன்னை.
பிரபஞ்சத்தை இயக்குபவள் ரத்த சக்தியாக அதனை மானுட உடலுக்கு செய்கின்றாள்.
ரத்தம் என்பது சூடாக இருக்குமட்டுமே உடல் இயக்கம் என பொருள், ரத்தம் குளிர்ந்து உடல் குளிர்ந்துவிட்டால் உடல் இயக்கம் நின்றுபோயிற்று என பொருள்.
ரத்தத்தின் வெப்பமே இயக்கு சக்தி, அந்த வெப்பம் ரத்தத்தில் மூச்சுகாற்றில் இருந்துகொண்டேஇருக்கும், அந்த வெப்பம்தான் அந்த உஷ்ண சக்திதான் அன்னை.
இந்த வெப்பம், இந்த அக்னி ரத்தத்தை விட்டு நீங்கினால் எல்லாம் வலுவிழக்கும்.
இந்த வெப்பம்தான் பிரபஞ்சத்தை இயங்க வைக்கின்றது இங்கே மானுட உடலின் ரத்தத்தில் சூடாக நின்று வழிநடத்துகின்றது.
ஒரு அநீதியினை கண்டால், ஒரு அதர்மமான காரியத்தை கண்டால் ரத்தம் கொதிக்கின்றதே ஏன்? உலகை ஆளும் தர்ம் சக்தி நம் உடலில் உண்டு அது ரத்தத்தில் உண்டு அது அதர்மம் கண்டு பொங்குகின்றது.
ஆம் அன்னை ரத்தத்தில் ஆள்கின்றாள் வாழ்கின்றாள் என்பதற்கு இதுதான் சாட்சி.
சில அம்மன் ஆலயங்களில் சேவல் ஆடு பலியிடுவது உண்டு , அது ரத்தம் அவள் சக்தி என குறியீடாக செய்வார்கள், அப்படிபட்ட ஆலயங்கள் பெரும்பாலும் கௌமாரி ஆலயமாகவே இருக்கும்.
அவள் வாழும் குருதியினை அவளுக்கே காணிக்கை என வைப்பார்கள், உயிர்பலி வெட்டும் தத்துவம் அதுதான்
மானுட உடலின் ரத்தத்தின் சக்தியாய் இருக்கும் அந்த அன்னை யோக தத்துவத்தில் மணிப்பூரக சக்கரத்தை ஆட்சி செய்கின்றாள்
அக்காலத்தில் வெப்பம் அதிகமான காலங்களில் மாடுகளுக்க்கு ஒரு நோய் வரும், அது உஷ்ணம் அதிகமாகி அதாவது அன்னை கௌமாரியின் சீற்றம் அதிகமாகி வந்த நோய் என்பதால் “கௌமாரி” என பெயரிட்டனர் இந்துக்கள்
அது உலகெல்லாம் அப்படியே பரவிற்று , ஆங்கிலத்தில் இன்றும் “கோமேரி” என்றே அழைக்கபடுகின்றது
அந்த நோய்க்கு அன்று அன்னையிடம் வேன்டுவதே மருந்தாக இருந்தது, அவள் ஆலயத்தின் சில பொருட்களே நோயினை தீர்த்தன
ஆம், உடலின் வெப்பம் அன்னை, அதனாலே உஷ்ண கோளாறால் வரும் அம்மை போன்ற வியாதிகளுக்கு அவளையே சொல்லி அவள் பெயரால் வணங்கி சுகம் பெற்றார்கள் இந்துக்கள்
ஆம் கௌமாரி என்பது வெப்பம், அக்னி, இப்போது கவனியுங்கள் முருகபெருமான் அக்னி வடிவம், சிவனின் நேற்றிபொறியில் இருந்து வந்த அக்னியில் உருவானவன் முருகன் அவனின் சக்தி வெப்பசக்தியான கௌமாரி என்பதும் புரியும்
இந்த கௌமாரி, ம் மானுட உடலின் ரத்தத்தின் சக்தியாய் இருக்கும் அந்த அன்னை யோக தத்துவத்தில் மணிப்பூரக சக்கரத்தை ஆட்சி செய்கின்றாள்
சுவாஷ்டிதானத்தில் மகேஸ்வரி இருந்து ஆள்வது போல இந்த தேவி மணிப்பூரக சக்கரத்தில் அமர்ந்திருகின்றாள்
இந்த சக்கரம் சுவாஷ்டிதான சக்கரத்துக்கு மேல் அமைந்தது
நடுவில் சதுரம், அதைச் சுற்றி சக்கரம் என்ற வட்டம், சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை ,வட்டத்தை சுற்றி பத்து தாமரை இதழ்கள் வடிவம் கொண்டது இது என்பது சித்தர்கள் சொன்னது.
அதை ஒரு ஸ்லோகமும் சொல்கின்றது,
“தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்”
தாயே, நீலமேக ரூபமான,மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிப்பூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது என தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார் ஆதிசங்கரர்.
இந்த மணிப்பூரக சக்கரம்தான் மானிட சுபாவ உணர்ச்சிகளுக்கு ஆதாரமானது. அதாவது பந்தபாசம், நியா அநியாயம் , சுயநலம், பொதுநலம் என எல்லா உணர்வுகளும் இங்குதான் தீர்மானிக்கப்படும்.
இதுதான் ரத்தத்தில் வரும் உணர்ச்சி.
ஒருவகையில் மாயைகள் இருக்குமிடம் உதித்து ஆடும் இடம் இதுதான். ஆத்மாவினை சிறைபிடிக்கும் உணர்ச்சிகள் வரும் இடமும் இதுதான்.
இந்த மணிப்பூரகம் சரியாக இருந்தால் மன உறுதி, விடா முயற்சி, தைரியம், புது புது படைப்புச் சிந்தனைகள், புத்தாக்கச் சிந்தனைகள் , எதற்கும் கலங்காத நிலை ஆகியது இங்கேதான் உதிக்கும்.
இந்த சக்கரம் சரியில்லை என்றால் மனக்குழப்பம் , தீராக் கவலை, மன உறுதியில்லாமை, புதிய முயற்சி இல்லாமை, தெளிவு இல்லாமை, மூர்க்கம், பதட்டம், முரட்டு வாதம் என எல்லா குழப்பமும் வரும்.
இந்த சக்கரம் சரியில்லை என்றால் ரத்தம் கெடும், அது கெட்டுவிட்டால் உடல்சார்ந்த கோளாறுகளும் வரும். சீரண கோளாறு, மூச்சுக் கோளாறுகள் இயல்பாய் வரும்
ரத்தம் சரியில்லை என்றால் உடலின் வெப்பநிலை கெடும், கெட்டுவிட்ட வெப்பநிலை பல நோய்களை இழுத்துவரும்
உஷ்ணகோளாறு என்பது ரத்தம் சரியான வெப்பநிலையில் இல்லாத கோளாறே, அது இந்த சக்கரம் சரியில்லாவிட்டால் பல வகை சிக்கலை தரும்.
இன்னும் அன்னை இந்த சக்கரத்தில் வெப்பமாக இருப்பதை, கௌமாரி என்றால் வெப்பம் என்பதை பொருத்தமான் விஷயம் மூலம் அவதானிக்கலாம்
இந்த சக்கரம் வயிற்றில் இருப்பதை அவதானிக்கலாம், அவ்வகையில் ஒரு நெருப்புத்தான் உணவை செரிக்கவைக்கும், உணர்வுகளில் வயிறு எரிவதை சொல்லும். அவ்வகையில் இது வெப்பம் சார்ந்த சக்கரம்.
வயிற்றிலிருந்துதான் உணவு செரிக்கப் பட்டு சக்தி உடலெல்லாம் செல்வது என்பது உடலியல் அமைப்பு
அதேபோல இங்கிருந்துதான் நல்ல சக்திகள் உருவாகி நல்ல நாடிகள் உருவாகி சிந்தனைகளை வலுப்படுத்துகின்றன என்பது யோக சூட்சுமம்.
இதுதான் தன் கர்மத்தை தன் விதியினை நிர்ணயிக்கும் சக்கரம். இந்த சக்கரம் துலங்கியோர் தங்கள் கர்மத்தை உணர்வார்கள், விதியினை உணர்வார்கள்.
இந்த கர்மம் துலங்கியவருக்கு கர்மம் துலங்கும், அந்த பிறப்பின் நோக்கத்துக்கு செல்லும் வழிகள் துலங்கும். அதை நோக்கி இழுத்துச் செல்லும்.
ஆழ கவனித்தால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது தொப்புள் கொடிதான் குழந்தையின் தொடர்பாகின்றது. இந்த தொப்புள் கொடி இருக்குமிடம்தான் இந்த சக்கரமும் அமையும்.
அவ்வகையில் கர்ம வினை, குலவழி கர்மம் எல்லாம் இங்கேதான் பதிவு செய்யப்படுகின்றன.
“உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை” என திருமூலர் இதனைத்தான் பாடுகின்றார்.
இந்த சக்கரம்தான் இருவகை சக்திகளை கொடுக்கின்றது, ஒன்று உணவு செரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு அந்த வெப்பத்தில் உடலுக்கு தேவையான சக்தியினை கொடுப்பது.
அதே பகுதியில் இருக்கும் சக்தி மையம்தான் மனதுக்கு தேவையான எல்லாப் பலங்களையும் கர்ம வினைக்கான காரியங்களையும் கொடுப்பது.
இந்த சக்கரம் சரியாக துலங்கினால் அதிகம் உண்ணவேண்டி இராது. ஒருபொழுது உணவிலே சக்திபெற முடியும், அதுவும் இல்லை என்றால் உணவு இல்லாமல் நீரில், காற்றிலே சக்திப்பெற்று வாழமுடியும்.
யோகியர், ஞானியர் உணவில்லாமல் வாழும் ரகசியம் இதுதான். இந்த சக்கரம் துலங்கினால் எல்லாம் சரியாகும்.
நெருப்பு தத்துவம் என இதனை ஏன் சொன்னார்கள் என்றால் இதனால்தான், கௌமாரி இங்கே இருக்கின்றாள் என்றால் அதுதான் பொருள்
வெப்பமே உடலுக்கு முக்கிய ஆதாரம், சூட்சும சக்திகளின் நாடி இயக்கத்தின் ரகசியம் இதுதான்.
இச்சக்கரம் துலங்கினால் எல்லாம் ஒருவனுக்கு சரியாகும், அவனது கர்மா துலங்கும், துலங்குவதோடு மட்டுமல்ல அதனை செய்யும் வைராக்கியமும் வரும்
முருகபெருமான் போர் தெய்வம், அதுவும் விடமால் போராடி வெற்றிபெறும் தெய்வம், அவ்வகையில் விடாமுயற்சிக்கும் விடாத இயக்கத்துக்கும் மூலம் இந்த அன்னை
இந்த அன்னையினை ஏன் குலபெண்கள் வணங்க வேண்டும் என்றால் காரணம் பெரிது
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குலத்துக்கு ரத்தம் போன்றவள், அவளாலே அந்த குடும்பம் இயங்குகின்றது
அவளாலே ரத்தபந்தம் எனும் பாசபந்தம் அடுத்த குழந்தைக்கு கடத்தபடுகின்றது, அவளாலே ரத்த பந்தம் உருவாகின்றது
அவளே இயக்கும் சக்தி, அவளாலே ஆண்கள் இயக்கபடுகின்றார்கள், அவளாலே குடும்பம் இயக்கபடுகின்றது, ரத்தம் என்பது அவளாலே அடுத்த தலைமுறைக்கு உயிராக உருவாக கடத்தபடுகின்றது
ரத்தத்தை தாய்பாலாக ஊட்டி பாசபந்தங்களை வளர்ப்பதும் குலத்தை பெருக்குவதும் இயக்குவதும் அவளேதான்
அப்படி குலமும் குடும்பமும் நல்லபடியாக இய்ங்க, இயங்கி பெருக அவள் அன்னையினை வேண்டி வழிபடுதல் நன்று
போராட்டமும் விடாமுயற்சியும் ஒருநொடி சுணங்காத உழைப்பு பெண்களுடையது, ரத்தம் போல அவர்கள் ஓடிகொண்டே இருக்கவேண்டும் அப்போதுதான் குடும்பம் இயங்கும்
எப்படி ரத்தம் உடலை காத்து நோய்கிருமிகளை போராடி விரட்டுமோ அப்படி குடுமபத்துக்கு வரும் கெட்டவைகளை தீமைகளை விரட்டி குடும்பத்தை காக்கவேண்டியது பெண்கள் கடமை
தாய்கோழி போல அவர்கள் குலத்தை காக்கவேண்டியவர்கள், அதனால் போராட்டமும் வைராக்கியமும் விடாமுயற்சியும் அவசியம்
சேவல் போல அவர்கள் விழிப்பும் போராட்டமும் அவசியம் அதனாலே சேவல் தாங்கிய அன்னையினை வழிபட சொன்னார்கள் முன்னோர்கள்
மிக மிக முக்கியமான் விஷயம் மணிபூரக சக்கரம் அதுவும் வயிற்று பக்கம் கௌமாரி அம்மன் ஆட்சி என்பது
ஆம், அங்கேதான் கர்ப்பப்ம் வரும், கர்ப்பம் தரிக்க குழந்தை செல்வம் கிடைக்க அந்த அன்னையின் வழிபாடு மிக மிக அவசியம்
முருகபெருமான் நிலதத்துவம் என்பார்கள், அவரின் சக்தியான அன்னையும் நிலத்தின் சாரம், நிலத்தில்தான் செடிகொடிகள் வளரும் , மானுடர் வாழவும் பெருகவும் நிலமே ஆதாரமாகும் நிலம்தான் எல்லா உயிர்களையும் தோற்றுவித்து உணவூட்டி பெருக்கும்
அவ்வகையில் அன்னை கௌமாரி குழந்தை செல்வத்துக்கு பொறுப்பும் கடமையும் கொண்டவள், அவளை வழிபட்டால் குழந்தை செல்வம் நிச்சயம் உண்டு
இந்த அன்னைக்குரிய ஆலயம் தஞ்சாவூர் அருகே இருக்கும் சூலமங்கலம் அல்லது சூலமங்கை ஆலயம்
(பிரசித்தியான தெய்வ பக்தி பாடகிகளான சூலமங்கலம் சகோதரிகள் இந்த ஊரை சேர்ந்தவர்களே )
இங்கே அன்னை சூலம் ஏந்திய வடிவில் வடிபட்டாள், சூலம் ஏந்திய நிலையில் காட்சியளித்தாள் என்பது ஐதீகம், இன்றும் அந்த சூலநாயகி அங்கே உண்டு
இங்கிருக்கும் சிவனுக்கு கிருத்திவாகேஸ்வரர்
இந்த தலத்தில் கஜாசுரன் எனும் அரக்கனை சிவன் கொன்று அவன் தோலை போர்த்திகொண்டதால் அவரி கிருத்திகேஸ்வரர் என அழைக்கபடுகின்றார் என செய்தி உண்டு
ஆனால் உண்மையில் அப்படி இருக்கமுடியாது, கிருத்தி என்பது கிருத்திகை அதவாது முருகபெருமானுக்கு உரியநட்சத்திரத்தை குறிப்பது, முருகபெருமானுக்கு சக்தி கொடுக்கும் ஈஸ்வரனின் சக்தி குடியிருப்பதால் அவர் கிருத்திவாகேஸ்வரர் என்றானான் என்பவர்கள் உண்டு
அது சரியாக இருக்கலாம்
அங்கே அன்னை சூலமேந்தி நின்றாள் என்பது ரத்தம் நோய்கிருமிகளில் இருந்து உடலை காப்பது போல் உடலுக்கு கவசம் அளிப்பது போல் கவசமளிக்க நின்றாள்
சூல மங்கையாக இருக்கின்றாள்
ஆனால் சூலம் எனும் சொல் சூல் எனவும் பொருள்படும், சூல் என்றால் கர்ப்பம் என பொருள், கர்ப்பவரம் வழங்குபவள் அன்னை, அங்கிருக்கும் கௌமாரி அன்னை என்பதும் பொருள்
கர்ப்பம் என்பதும் ரத்தவோட்டம், ரத்த நிலை சார்ந்தது, ரத்தம் சரியாக இருந்தால் வெப்பநிலை சரியாக இருந்தால் கர்ப்பம் எளிதில் தங்கும்
அன்னை அந்த வரத்தை அருளி கர்ப்பம் வரம் தருவாள் என்பதே இக்கோவிலின் தாத்பரியம், சூல் எனும் கர்ப்பவரம் அருள்வதால் அவள் சூலமங்கை
இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ரத்தத்தினால் வரும் அத்தனை சிக்கலும் நோயும் நீங்கும், ஆரோக்கியமான சுத்தமான ரத்தம் உடலில் ஓடும் ஆரோக்கியம் கூடும்
பெண்கள் வழிபட வழிபட குடும்பத்தை இயக்கும் அவர்கள் திறன் கூடும், போராட்டத்தை தாங்கும் வைராக்கியம் அதிகரிக்கும்
குழந்தை பாக்கியம் இல்லா பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கூம்
சூலமங்கை என்பது புராதனமான ஆலயம், அப்பர் சுவாமிகள் தன் தேவாரத்தில் அதுபற்றி பாடியுள்ளார்
“நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே காணலாமே”
ஆம் சிவனுக்கு சப்த கன்னியர் பணிபெண்கள், அவ்வகையில் சிவாலயத்தில் பணிசெய்ய இங்கே சூலமங்கையாக கௌமாரி காத்திருக்கின்றாள், இங்கிருக்கும் சிவனை வணங்கினால் அவள் அருள் நிச்சயம் கிடைக்கும்
பாரதத்தின் பல இடங்கள் போலவே தமிழகத்திலும் கௌமாரி வழிபாடு முக்கியமானது, பல இடங்களில் இன்றும் விமரிசையாக நடப்பது
அவள் தேவசேனையின் அம்சமென்பதால் அவளை வணங்குவோர்க்கு உடல்நலம், செல்வாக்கு, பெரும் பதவி என எல்லாமும் வந்து சேரும்
அப்படி ஒரு கன்கண்ட சாட்சியாக இருப்பது தேனிமாவட்டம் வீரபாண்டியில் இருக்கும் கௌமாரி ஆலயம்
பெரிய பாளையம் பவானி, பன்னாரி அம்மன், முப்பந்தல் அம்மன், மன்டைக்காடு பகவதி போல அவளுக்கு தனி பெரும் பக்தர்களும் பெரும் கூட்டமும் உண்டு
வரலாற்றில் ஆதிகாலத்திலே அந்த ஆலயம் உண்டு, ஆனால் மதுரையினை ஆண்ட வீரபாண்டியன் எனும் மன்னனுக்கு கண்பார்வை கொடுத்த நிலையில் அவள் பெரும் பெயர் பெற்றாள்
அதனாலே அந்த இடம் வீரபாண்டியன் அடையாளமுமாயிற்று
ஆம், ரத்த வோட்டம் அதன் அழுத்தம்குறைந்தால் கண்கள் பாதிப்படையும், அப்படி ரத்தம் கெட்டுபோன மன்னன் கண்கள் பழுதாயின, அன்னை அவன் ரத்தவோட்டத்தை சரிசெய்த மறுகணம் அவனுக்கு பார்வை வந்தது
அந்த அன்னை ஒவ்வொருவருக்கும் செய்யும் அற்புதங்கள் ஏராளம், ஆண்டுதோறும் அவளுக்கு வரும் பெரும் கூட்டமும் அவர்கள் பெற்றுகொள்ளும் வரமும் ஏராளம்
சூலமங்கைக்கு வரமுடியாதவர்கள் , வீரபாண்டி அம்மனை வழிபட்டு நலம் பெறலாம்
அன்னைக்கு செந்நிற ஆடையும் , செந்நிற பூக்களும் மிகவும் விருப்பமானவை, குங்குமிட்டு படைக்கபடும் கனிகள் அவளுக்கு நைவேத்தியமாகும்
அவளை மனமார தொழுதால் ரத்தம் சீராகும், தன்னம்பிக்கை போராட்டகுணம் வைராக்கியம் பெருகும் , மகா முக்கியமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும், வாழ்க்கையின் இயக்கம் சீராகும்
அவளுக்கான துதி இதோ.
“மயூர குக்குட வ்ருதே பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே அம்பிகே நமோஸ்துதே.”
அவளுக்கான காயத்ரி மந்திரம் இதோ
“ஓம் – சிகித்வஜாயை வித்மஹே; சக்தி ஹஸ்தாயை தீமஹி; தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்”
அவளுக்கான தியான ஸ்லோகம் இதோ
“சதுர்புஜா த்ரிநேத்ரா சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத் உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா”
அன்னையினை வணங்க வணங்க உடல் இயக்கம் உள்ள இயக்கம் தொழில் மற்றும் வாழ்க்கையின் இயக்கம் சீராகும், எல்லாமும் சீராக சரியாக அமையும், எது குறையோ அது பூர்த்தியாகும்.
கௌமாரி அம்மன் தன்னிடம் வேண்டும் எல்லா பக்தர்களின் குறைதீர்க்க காத்திருக்கின்றாள், அவளிடம் மன்றாடி கேளுங்கள், கேட்டவரத்தை தந்து உங்களோடு இருந்து காவல் செய்தும் வருவாள் அது சத்தியம்.