சப்த கன்னியர் – 03
மகேஸ்வரி – இரண்டாம் கன்னிதெய்வம்
சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினை காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தபட்டதா? யாரோ இடைசெருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களை காணலாம்
சப்த கன்னியர் வழிபாடு இங்கு கால காலமாக உண்டு, சிறிய கோவில்களின் தெய்வமாக கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு
கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டை சொல்கின்றது
“மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்”
என அக்காலத்திலே இங்கு சப்தகன்னி வழிபாடு இருந்ததை சொல்கின்றது.
குமரகுருபரர் எனும் மகாஞானி , தமிழ் இந்து ஞானி பாடுகின்றார்
“கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்”
அதாவது “கடகளிறு உதவு கபாய் மிசைப்போர்த்தவள்” என்றால் தாருகாவன முனிவர்கள் கொல்ல அனுப்பிய மத யானை தந்த தோல் ஆகிய நிலைஅங்கியை மேலே போர்தியவள் என் பொருள்
அந்த சாகசத்தை அந்த மதயானையினை சிவன் அடக்கி கொன்று தோலை உரித்து போர்த்தி கொண்டார் என்பது புராணம், ஆனால் அவருக்கு அந்த சக்தியினை அளித்தவள் ஒருத்தி அவள் மகேஸ்வரி என்பது வரியின் பொருள்
அடுத்து “கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்-குரங்குகள் குவித்த சிறுகற்களினால் மன்னார்குடாக்கடலை மேடாக்கியவள் ” , அதாவது கடலை சிறிய கற்களால் நிரப்பி பாலம் அமைத்தவள், குரங்களுகளால் கடலை கடந்தவள் என்பது பொருள்
நாராயணின் சக்தியாக நாராயணி இருக்கின்றாள் என்கின்றார் முனிவர்
அடுத்து ” கடல்வயிறு எரியஒள் வேலினைப்பார்த்தவள்” அதாவது கடலின் அடிவயிறு கலங்கும்படி வேலை எறிந்தவள் என பொருள்
முருகபெருமானின் சக்தியாக நின்ற கௌமாரி என பொருள்
அடுத்து “கடிகமழ்தருமலர் தார்முடிச் சேர்த்தவள் மணங்கமழ்கின்ற கற்பகத்தருவின் மலரை மாலையாகப் புனைந்துமுடியிற் சேர்த்தவள்” என்றால் இந்திரனின் சக்தியான இந்திராணி என பொருள்
“இடி உக அடல் அரி ஏறு உகைத்துஆர்த்தவள” என்றால் இடியும்சிதறும்படி வலியுற்ற ஆண்சிங்கத்தினைச் செலுத்திமுழக்கம் புரிந்த சாமுண்டி என பொருள்
“எழுத அரு முழுமறை நூலினில் கூர்த்தவள் ” என்றால் எழுத்து அறிவும் கல்வி அறிவும் வேத அறிவும் கொடுக்கும் பிராமி என பொருள்
“எயிறுகொடு உழுது எழு பாரினைப்பேர்த்தவள்” என்றால் வராகம் ஆகிக் கொம்பினால் உழுது ஏழுலகங்களையும் பேர்த்தெடுத்த வராஹத்தில் இருந்து வந்தவள் என பொருள்
இவர்எழுவர்கள் தாள் முடிச்சூட்டுவதும் என்றால் என்று சொல்லப் படுகின்ற ஏழு மாதர்களின் திருவடிகளை நம்தலைமேற் கொண்டு பணிவோம் என பொருள்
ஆக மும்மூர்த்திகள் அவர்களின் அம்சமான அவதாரங்களில் சப்த கன்னியரே நின்று இயக்குகின்றார்கள் , அந்த சக்திமிக்க சப்த கன்னியரை தொழுவோம் என குமரகுருபரர் சொல்கின்றார்
ஆம், இந்த ச்ப்த கன்னியர் வழிபாடு எல்லா காலமும் எல்லா இடத்திலும் இருந்தது, எதுவும் இங்கு புதியதல்ல
அந்த சப்த கன்னியரில் இரண்டாம் தேவி மகேஸ்வரி
இந்த மகேஸ்வரி சிவனின் தோளில் இருந்து உருவானவள் என்கின்றது புராணம், மகேஸ்வரனின் இயக்கு சக்தியான அவள் பெயர் மகேஸ்வரி
இந்த மகேஸ்வரி சிவனின் அம்சம் அதாவது மகேசன் என்றால் அமைதியான நிலையில் இருக்கும் சிவன், தவகோலத்தில் இருக்கும் அந்த சாந்தமான வரமருளும் சிவன்
அந்த சிவனின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி தேவி
இந்த தேவிக்கும் மூன்றுகண் உண்டு, மகுடம் கொண்டவள். கையில் மான், கோடரி எனும் மழு ஏந்தி நிற்பாள், அபயவரதம் காட்டி நான்கு கரங்களோடு வீற்றிருப்பாள், சிவனை போலவே பாம்பும் பிறையும் சூடிய கோலமும் உண்டு
சிவனை போலவே இவளும் ஈசானிய மூலைக்கு அதிபதி. வெண்ணிற ஆடையினை அணிந்திருப்பவள், மஹதி என அழைக்கபடும் தெய்வமும் இவள்தான், ஐந்து முகங்களை கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணு தர்மோத்திர புராணம் ஆகியபை சொல்கின்றன.
ஸ்ரீதத்துவநிதி புராணம் இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.
இந்த தேவி எருதினை அதாவது நந்தியினை சிவனை போல வாகனமாக கொண்டவள், பலத்தினை தரும் சக்தியாக அறியபடுகின்றாள்
அவள் எப்படியான பலத்தை தருவாள் என்பதுதான் இங்கே காணவேண்டியது, அவளின் தாத்பரியமே அதில்தான் அடங்கியுள்ளது
அன்னை சிவனின் தோளில் இருந்து வந்தவள் என்பது அவள் எலும்பின் அதிபதி எலும்பு தத்துவத்தை கொண்டவள் என்பதை சொல்கின்றது
உடல்பாகத்தில் தோள் எலும்புதான் வலுவானது, சுமைகளை தாங்க கூடியது இன்னும் பலமும் வலிமையும் அதிகம் கொன்டது
அதனாலே அவள் தோளில் இருந்து வந்தாள் என்பது அவள் வலிமையானவள் சக்தி கொண்டவள் எதையும் தாங்கும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையினை தருவாள் என்கின்றது
ஆம், அவள் எலும்பின் அதிபதி
இந்த உலகில் எலலமே ஒவ்வொரு வடிவத்தை கொண்டிருக்கின்றன, வடிவம் இல்லாமல் படைப்பு இல்லை. பிரபஞ்ச கோள்கள் முதல் பூலோக மண்புழு வரை எல்லாமே ஒரு வடிவம் கொண்டவை
மானிட உடலுக்கும் வடிவம் உண்டு அந்த வடிவினை கொடுப்பது எலும்பு, எலும்பு இன்றி உடல் வடிவமில்லை இயங்க வழியில்லை
ஆம், இந்த வடிவத்தின் ஆதாரமாய் நிற்பவள்தான் இந்த அன்னை. ஒவ்வொரு படைப்புக்கும் மிக சரியான வடிவத்தை அவள் வழங்குகி இயக்கம் சரிவர நடக்க அவள் அடிநாதமாய் இருக்கின்றாள்
வானில் சுழலும் கோள்களுக்கு உருண்டை வடிவம், மலைகக்கு கூம்பு வடிவம் நதிக்கு திரவ வடிவம் மேகத்துக்க்கு புகைவடிவம், கடலுக்கு அலை வடிவம் என கொடுத்த அவள் ஒவ்வொரு உயிருக்கும் எது அதன் இயக்க வடிவமோ அதை கொடுக்கின்றாள்
மரத்துக்கு, செடிக்கு, மலருக்கு, ஊர்வன, பறப்பன, நடப்பன நீந்துவன என எல்லாவற்றுக்கும் எது ஏற்ற வடிவமோ அதை அருள்கின்றாள்
ஒவ்வொரு படைப்பும் எப்படி இயங்க வேண்டுமோ அந்த ஞானம் அவளாலே வடிவமைக்கபடுகின்றது
சரிவுகளை கொண்ட மலை, பள்ளத்தில் ஓடும் நதி, கூர்மூக்கும் இறகும் வாலும் கொண்ட பறவைகள், தங்கள் கடமையினை க்ர்மாவினை செய்யும்படி உடல் கொண்ட விலங்குகள் என எல்லாமும் பார்த்து பார்த்து வடிவமைக்கின்றாள்
விதைகள் அதன் வடிவம் முதல் அதன் எல்லா நுட்பமும் அவளாலே வடிவமைக்கபடுகின்றன, எல்லா படைப்பின் மூல வடிவமும அவளாலே உருவாகின்றன
அப்படிபட்டவளே மானுடருக்கும் எலும்பாய் வடிவங்களை கொடுக்கின்றாள், எலும்புதான் மானுடனுக்கு வடிவம் கொடுக்கின்றது அதனால்தான் மானுட உடல் இயங்குகின்றது
எலும்பும் வடிவமும் வெறும் இயக்கம் மட்டுமல்ல, அதுதான் பலம் அதுதான் தாங்கும் சக்தி அதுதான் பலமாக உழைக்க வைக்கும் சக்தி
எதையும் தாங்குவதும் உழைக்க வைப்பதுமான சக்தியினை எலும்புதான் கொடுக்கும் எலும்பு இன்றி மானிடர் இல்லை
முதுகெலும்பாக நிற்போம், தோள் கொடுப்போம், உறுதியாக நிற்போம் எனப்தெலலம் எலும்பின்றி எந்த் இயக்கமும் இல்லை தாக்கமும் இல்லை என்பதை சொல்வது
அன்னை அப்படி எலும்புபோல் மானுடருக்கு பலம் தருவாள், வடிவம் தருவாள், உழைக்கும் பலத்தை எதையும் தாங்கும் சக்தியினை தருவாள் என்பது அவள் வழிபாட்டின் தாத்பரியம்
சிவனுக்கு “கங்காள மூர்த்தி” என ஒரு பெயர் உண்டு, அதாவது ஒரு முதுகெலும்பினை கையில் வைத்திருப்பவர் என் பொருள்
அந்த சிவனின் சக்திமிக்க எலும்பாக இருப்பவள் அன்னை என்பதே அதன் தத்துவம், சிவனின் ஆதாரம் அவள்தான் என்பதே அந்த கங்காள முர்த்தி கோலத்தின் தாத்பரியம்
எலும்புதான் மிக முக்கிய விஷயங்களை காப்பதும் இயக்குவதுமானது, உடலில் இதயம் மூளை என முக்கிய பாகங்கள் எலும்புக்கு உள்ளேதான் உன்டு
மானுட உடலில் 206 எலும்புகள் இப்படி பலவகை பணிகளை செய்கின்றன, அவைதான் இரத்தம் உருவாக காரணமான மஞ்சையினை உருவாக்கி காக்கின்றன
ததிசி முனிவர் முதுலெலும்பை ஆயுதமாக விட்டு சென்றார் என்பதும் ,சகுனி தன் முன்னோர்களின் எலும்பை ஆயுதமாக கொண்டிருந்தான் என்பதும் சக்தியினை வழி வழி வந்த பலத்தினை சொல்வது
எலும்பின் இன்னொரு வடிவம்தான் சங்கு, இதனாலேதான் சிவன் கங்காளமுர்த்தி என எலும்போடு இருப்பது போல் விஷ்னு பகவான் சங்கோடு இருக்கின்றார்
எப்படி மானுடன் பிறக்கும் போது எலும்பும் உருவாகி அவன் இறந்தபின்பு அது எஞ்சுகின்றதோ, அப்படி சங்கு பூச்சு உருவாகி அது வளர்ந்து அழிந்தபின்னும் சங்கு அழிவதில்லை
சங்குதான் அந்த உயிருக்கு வடிவம், அந்த உயிருக்கு காவல், அதன் ஆதாரம் எல்லாம். அப்படி மானிட உயிர்க்கு பெருமாளே காவல் அவரே ஆதாரம் என சொல்லத்தான் சங்கை அவர் கையில் கொடுத்தார்கள்
கடலில் சங்கு கடைசியில் எஞ்சுவது போல் சம்சார சாகரத்தில் எலும்பு மிஞ்சும் என்பதை காட்டவே சங்கு இங்கு பகவான் கையின் அடையாளமாயிற்று
அப்படியா மகா சிறப்பானது எலும்பு, அதன் அதிபதி தேவி மகேஸ்வரி, அதனாலே வெண்மை நிறமான எலும்பினை அவளுக்கு கொடுத்தார்கள்
எலும்பு என்றால் உறுதி, பலம். அன்னை எலல உறுதியும் பலமும் தருவாள் எதையும் தாங்கும் சக்தி தருவாள் என்பதற்காக அவளுக்கு வாகனமாக நந்தியினை வைத்தார்கள்
நந்தி பலமானது, கடுமையாக உழைக்க கூடியது. அன்னையினை வழிபட்டால் உழைக்கும் சக்தி எந்த பெரும் சுமையினையும் தாங்கி செல்லும் சக்தி கிடைக்கும் என்பதை சொன்னார்கள்
ஆம் , அன்னை மகேஸ்வரியின் வழிபாட்டில் ஆயிரம் தத்துவங்கள் உண்டு, லவுகீகமாகவும் சூட்சுமமாகவும் நிறைய உண்டு
லவுகீகமாக அன்னையினை வழிபட வழிபட எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் நோய்கள் லவுகீக வாழ்வில் தீரும், அவளுக்கான வழிபாட்டை சரியாக செய்தால் எலும்பு நோய்கள் தீரும்
எலும்பு சம்பந்தமான நோய்களே தலைமுதல் கால்விரல் வரை ஏதோ ஒரு உருவில் வந்து மானிடரை முடக்கும், அவளை வேண்ட வேண்ட அவள் எலும்பு நோய்களை தீர்த்து முழு சக்தி தருவாள்
எந்த பணி, எந்த தொழில் ,எந்த கலையாக இருந்தாலும் அதன் அடிப்படை வடிவம் சரியாக வர அவள் முழு அருள் செய்வாள், அதனால் தொட்டது எல்லாம் அவள் அருளால் வாய்க்கும்
உழைக்கும் முழு பலத்தை எருதுபோல் உழைக்கும் பெரும் பலத்தை, களைப்பில்லாமல் சளைப்பில்லாமல் உழைக்கும் பெரும் பலத்தை அவள் கொடுப்பாள்
பெண்கள் அவளை வழிபட சொல்ல காரணம் நிறைய உண்டு, இந்துமதம் அதை சரியாக செய்தது
பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் வடிவம், அவர்களை கொண்டே ஒரு குடும்பம் வடிவம் பெறும், பெண்கள் சரியில்லா குடும்பம் நல்ல வடிவம் நல்ல கோலம் பெறா, அது அவமான கோலமாகிவிடும்
குடும்பம் சரியாக அமைய, நல்ல வடிவில் அமைய பெண்கள் அவளை வழிபடுதல் அவசியம்
குடும்ப சுமையினை தாங்கி, குடும்பத்தின் முக்கிய ஆதாரங்களை காத்து எலும்பு செய்யும் அனைத்து காரியங்களையும் குடும்பத்துக்கு செய்பவர்கள் பெண்கள், அதனால் அந்த அன்னையின் அருளில் எலலா பலமும் அவர்கள் பெறுவது அவசியம்
அன்னையினை வழிபட்டால் பெண்களுக்கு பொறுப்பும், சுமைதாங்கும் சக்தியும், குலம் தளைக்க உழைக்கும் சக்தியும் அதிகரிக்கும், அவள் அருளால் அவளை வணங்கும் குலம் வலிமைபெறும்
ஆண் என்பவன் பெண்ணுக்கு கொடுப்பது ஒருதுளி விந்துதான் , அந்த விந்துவினை அழகிய உருவமாக்கி பெற்றேடுக்கும் சக்தியும் வரமும் பெண்ணுக்குத்தான் உண்டு
குழந்தையாக பிறக்கும் மானுடரின் உடல் ஏழு தாதுக்களாலும் வளரவேண்டும் நல்ல உருவில் நல்ல சக்தியில் வளர்க்க வேண்டும் அதற்கு சப்த கன்னியரின் அருள் வேண்டும்
இதுதான் மகேஸ்வரி தேவியினை வழிபடும் தத்துவம்
அந்த அன்னைக்கு எல்லா ஆலயத்திலும் இடம் உண்டு , கிரமங்களில் எலும்புமாலை மண்டையோட்டு மாலை அணிந்தவ்ள், கொற்றவை சாயல் தெய்வமெல்லாம் இந்த மகேஸ்வரிதான்
அந்த வடிவைத்தான் , அந்த தாத்பரியத்தைத்தான் கிராம பகக்ங்களில் வேறுவடிவில் கொண்டாடுகின்றார்கள்
இந்த அன்னைக்கான ஆலயம் சோழநாட்டின் கும்பகோணம் அருகே சப்த கன்னியரின் ஸ்தலங்களுக்கான வரிசையில் சக்கரமங்கை ஆலயம் அருகே உண்டு
அது அரியமங்கை எனும் ஊரில் இருக்கும் ஆலயமாகும், அது “ஹரி மங்கை” என அழைக்கபட்ட இடம் பின் அரியமங்கை என மருவிற்று
இங்கிருக்கும் “ஹரி முக்தீஸ்வரர்” ஆலயம் மிக பிரசித்தமானது
ஒரு சாபம் காரணமாக விஷ்ணுவினை பிரிந்த அலர்மேல் மங்கை இங்கு வந்து சிவனை வணங்கி தன் சாபம் தீர்ந்தாள்
அப்படி மகேஸ்வரி தேவி சிவனை வழிபட்டு சிவன் தலையில் கங்கை பொங்கும் கோலத்துடன் அவரை தரிசித்து தன் சாபம் நீங்க பெற்றாள்
அந்த அரியமங்கை ஆலயம் மகேஸ்வரி தேவிக்கு உகந்தது, அங்கே வழிபட வழிபட வழிபட அவள் அருள் பெருகும்
அந்த ஆலயம் தேவார வைப்புஸ்தம, சப்த கன்னியரில் இரண்டாவதாக உள்ள தேவிக்கு நவராத்திரி காலங்களில் இரண்டாம் நாள் மிக விமரிசையான வழிபாடுகள் நடக்கும்
ஹரி எனும் விஷ்ண்வும், மங்கை எனும் மகாலட்சியும் வழிபட்ட இடம் என்பதால் அவர்களுக்கு சிவன் வரமருளிய இடம் என்பதால் அது “ஹரி மங்கை” அந்த சிவன் “ஹரி முக்தீஸ்வரர்” என்றானார்
இந்த கோவிலின் தீர்த்தம் சத்திய கங்கா தீர்த்தம் அல்லது ஹரி தீர்த்தம் என போற்றபடும், இங்கு மகேஸ்வரி வழிபட்ட போது சிவனின் திருக்கரங்களில் இருந்து வழிந்த நீரால் உருவான தீர்த்தம் இது
இந்த கோவிலின் முதல் சன்னதி பெருமாளுக்கும் மகாலட்சுமிக்குமானது
இரண்டாவது சன்னதி ஆயுர் தேவிக்கானது, மகேஸ்வரியினை ஆயுர்தேவி என இங்கே அழைகின்றார்கள்
ஆந்த ஆயுர் தேவி பிரபஞ்சத்தின் ஆட்சி சக்தியாகவும், பராசக்தியின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறார் – உலகளாவிய மற்றும் அனைத்து வியாபித்துள்ள சக்தி, மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றின் ஆதி உயிர் சக்தி அவள்
ஆயுர் தேவி ர வழிபாடு சத்ய / கிருத யுகத்தின் போது நடைமுறையில் இருந்தது. ஆயுர் தேவியின் உருவம் ஆகமங்கள் மற்றும் புராணங்களில் எழுதப்பட்டுள்ளது,
இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அபூர்வம்
அவளுடைய ஏழு கைகளில் ஏழு முனிவர்கள் தனித்தனியாக அமர்ந்திருக்கிறார்கள், எட்டாவது இடத்தில் கர்கினி தேவியும் மற்றொரு ரிஷியும் அமிர்த பானையில் ஒன்றாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்
இந்த எட்டு கைகளும் “கர பீடங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவளது ஒன்பதாவது கரம் அபய ஹஸ்தத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றது.
இந்த அன்னைதான் மகேஸ்வரி, அவளை வழிபடுதல் எல்லோருக்கும் நன்று, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது
அந்த ஆலயத்தில் எலும்பு சம்பந்தமான நோய்கள் எது இருந்தாலும், கை கால்கள் முதுகுவலி கழுத்துவலி கபால சிக்கல் என எதுவென்றாலும் திரும்
காதுக்குள்ளும் எலும்பின் ராஜ்ஜியம்தான் உண்டு, மிக சிறிய எலும்புதான் காதின் கேட்கும் சக்தியினை தாங்கி நிற்கின்றது, அதே சாயல் மூக்கிலும் உண்டு, நாக்குக்கு அடியிலும் உண்டு
அந்த நுண்ணிய எலும்புகளின் பிரச்சினைகளை கூட இந்த ஆலய வழிபாடும் தரிசனமும் சரிசெய்யும்
இங்கு வழிபட்டால் வாழ்க்கையின் உடலில் எலும்பு கொடுக்கும் சிக்கலெல்லாம் தீரும் உடல் பலமாகும்
வாழ்க்கையின் உருவம், வடிவம் மாறும், தொழில் ஒழுங்கான வடிவம் பெறும், பெண்கள் வழிபட்டால் அவர்கள் குடும்ப நலனும் குடும்பமும் குடும்ப உறவும் முழு வடிவம் பெறும் எல்லாம் பூரண வடிவினை எட்டும்
நல்ல அழகான வடிவத்தை எல்லா வகையிலும் அன்னை தருவாள்
முடிந்தவர்கள் அந்த அரியமங்கை தலம் சென்று அவளை வணங்கலாம், ,முடியாதவர்கள் வீட்டிலே அவளை நினைந்து வணங்கலாம், அருகிருக்கும் ஆலயத்திலும் சென்று வணங்கி நலம்பெறலாம்
அவளுக்கு பாலில் வைத்த வெண்மையான பொங்கலும், புளியோதரையும் நைவேத்தியங்கள்
பவளமல்லி மலர்கள், பிச்சிப்பூ, மரிகொழுந்து ஆகியன தூவி வழிபாடு செய்தல் நலம்
அவளுக்கான ஸ்லோகம் இதோ
“சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா”
அவளுக்கான மந்திரம் இதோ
“ஓம் மாம் மாஹேச்வர்யை நம ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம்” இதை சொல்ல சொல்ல எல்லா வகையிலும் அது தொழில், குலம், சொந்தம், நிர்வாகம், வீடு என எதெல்லாம் உருவமின்றி வடிவமின்றி ஒழுங்கின்றி இருக்குமோ அதெல்லாம் ஒழுங்கு பெறும்
அவளுக்கான காயத்திரி மந்திரம் இதோ, இதை தினமும் சொல்ல சொல்ல எலும்புகள் பலம் பெறும், குடும்பமும் தொழிலும் நல்ல வடிவம் பெறும், உறுதியான கடுமையான உழைப்பினை தடையின்றி செய்ய முடியும்
முக்கியமாக எதையும் சுமக்கும் பெரும் பலம் மனதாலும் உடலாலும் வாய்க்கும்
““ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”
என்பது அவளின் காயத்திரி மந்திரம், இதை சொல்ல சொல்ல ஆக்ரோஷம் கோபம் நிதானமின்மை எல்லாம் அழிந்து எருது எந்த களைப்பும் வன்மமும் இன்றி உழைப்பது போல உழைக்கும் மனநிலை மட்டும் வாய்க்கும்
“அருள்மழை பொழியும் சுடர் மணி விழியே
ஆலவாய் கூத்ர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே
வைகை தலைவியே சரணம் தாயே”