காளிதாசனின் சாகுந்தலம் : 03
“பாகனே , தன்னுள் இருக்கும் இறைவனை கண்டு அடைந்த முனிவர்கள் இருக்கும் இந்த குடிலை நான் சென்று அடைந்து, என்னை இழந்து இறைவனை அறிய முயல போகின்றேன்” என விடைபெற்ற துஷ்யந்தன் முனிவரின் குடில் நோக்கி சென்றான்
இது துறவியரின் பூங்காவனம், துறவுநெறி சுரங்கம், இந்த இடத்துக்கு வந்ததே என் நல்வினை என்றபடி குடில் படியில் காவ்லைத்த அவன் ஒரு மாற்றம் உணர்ந்தான்
ஆம், அவன் தன் வலது கண்ணும் வலது தோளும் துடிக்க கண்டான், அது நல்ல சகுனம் என்பது சாஸ்திரம் அறிந்த அவனுக்கு தெரிந்த ஒன்று
“என்ன இது? என் அறநெறி அறிந்த கண்கள் துடிக்கின்றதே, நீண்ட என் வலது தோளும் துடிக்கின்றதே?அப்படியானால் இங்கே எனக்கு ஏதோ பெரிய அதிர்ஷ்டம் கிடைக்க போகின்றதா?
பால்கடலை கடைந்த தேவர்கள் பெற்றது போல அமிர்ந்தமோ பெருஞ்செல்வமோ கிட்டிடுமோ? இந்த குடில் முனிவர்கள் சாகா வரத்தை அருள்வார்களோ?” என்றவன் குடிலின் கதவருகே நின்று அது தாழிடபட்டிருக்கின்றதா இல்லையா என சோதிக்க கையினை நீட்டினான்
அப்போது அந்த மங்கையரின் குரல் கேட்டது, “இவ்வழி வாருங்கள், இப்படி வாருங்கள்” என தேவதையின் குரல்போல் ஒரு குரல் ஒலித்தது
அமைதியான மண்டபத்தின் இனிய வீணை இசைபோல, காட்டின் நிசப்தத்தில் அக்குரல் அவனை ஈர்த்தது
துஷயந்தன் திரும்பினான், அமுது போன்ற ஒலி, இனிய இசை ஒலிபோல் வந்து காதில் விழுகின்றதே. யார் அவர்கள்? எந்த கருவியும் இசைக்கமுடியாத, எந்த பறவையு பாடமுடியாத அற்புத குரலை கொண்டவள் யார்?
அதோ யாரோ வருகின்றார்கள், நான் இந்த மரத்தின் பின்னால் இருந்து காண்பேன் என தனக்குள் சொன்னவன் மரத்தடியே சென்று மறைந்து கொண்டான்
ஒரு அரசனுக்கே உரிய எச்சரிக்கை அவனை அப்படி செய்ய சொன்னது, அவன் ராஜபயிற்சியின் வித்தை அது, அறியா இடத்தில் புதிய மானிடர்முன் அவசியமற்று சிக்கிவிடகூடாது என்பது அரசனுக்குரிய பாலபாடம்
அப்படி மறைந்துகொண்டான் துஷ்யந்தன்
அந்த குடிலுக்கு பொறுப்பன பெண்கள் அங்கே மின்னுகின்ற பொற்கொடி போல வந்தாகள், அவரவர்க்கு ஏற்றபடி குடங்களில் நீர் எடுத்து செடிகளுக்கு நீருற்ற வந்தார்கள்
துஷ்யந்தன் உற்று பார்த்தான், பார்த்தவன் சிலையானான் , கிளிகூட்டம் கனியேந்தி வந்தது போல் அவர்கள் குடத்தோடு நடந்து வந்தார்கள்
துஷ்யந்தன் உற்றுபார்த்தான் தன்னை மறந்தான், அந்த அமைதியான வனத்தின் பசுமையான குளுமையும் மெல்ல தழுவும் காற்றின் சுகமும், மலர்களின் மணமும் அவனை இன்னும் மயக்கின
அழகான சிறிய கவிதை ஒன்று நடப்பது போல், சாஸ்திரபடி முழுமையான சிற்பம் ஒன்று உயீர்பெற்று நடப்பதுபோல் அவள் வந்தது கொண்டிருந்தாள்
மர ஆடையினை திருத்தமாய் உடுத்தி, சிகையினை அழகாக கட்டி, தொடுத்த அழகான மலர்மாலைகளை மார்பிலும் இடுப்பிலும் சூடிகொண்டு, டக்கும் மலர்தோட்டம் போல் அவள் வந்துகொண்டிருந்தாள்
பூமி மேல் முழு நிலா நடந்து வருவது போல் அவள் வந்தாள், அவளோடு நட்சத்திரங்கள் நடந்துவருவது போல தோழியர்கள் வந்தார்கள்
துஷ்யந்தன் தன்னை மறந்து சொல்ல தொடங்கினான்
“நடுவில் வரும் பெண்ணின் அழகுக்கோ உவமை சொல்லத்தான் யாருமில்லை, ஆனால் கூட வரும் பெண்களெல்லாம் திலோத்தமை ஊர்வசி போல் இருக்கின்றார்கள்
மன்னவன் நான் என் அரண்மனை மாடத்தில் வளர்க்கும் கொடிகளை விட இந்த வனத்தின் கொடிகள் அழகு, கொடிகள் மட்டும் அழகில்லை அரண்மனை மங்கையரைவிட அழகான மங்கையர் இங்குதான் இருக்கின்றார்கள்
இவளால் இந்த கானகமே அழகு, உலகின் அலாதியான அழகெல்லாம் இங்கே கொட்டிகிடக்க, அரண்மனையில் என்ன அழகை கொண்டிருக்கின்றேன் நான்? இனியும் நான் பெருமைபட என்ன இருக்கின்றது?
என் கர்வம் இவளை கண்ட நொடி ஒழிந்தது
ஆசைகளை வென்ற துறவிகள் இருக்குமிடத்தில் பலகோடி நிலவினை வெல்லும் பூக்களின் அழகோடு இவள் நடக்கின்றாள்
இதோ மரகிளையில் தொங்கும் கனியினை பார்வையால் சுவைப்பது போல் அவள் அழகை பார்வையால் ரசிப்பேன்”
சாகுந்தலை பூமியில் நடக்கும் நிலவுபோல் ஜொலித்தபடி நடந்துவந்தாள், செடிகளுக்கு அவள் நீருற்ற முயன்றபோது தோழியரில் ஒருத்தி சொன்னாள்
“சாலிந்தலையே ,இந்த செடிகள்மேல் உன் தந்தைக்கு அன்பு அதிகம்தான் இல்லையென்றால் அன்னம்போன்ற நடையும், மயில்போன்ற சாகையும் கொண்ட உன்னை , கார்கூந்தல் கொண்ட கட்டழகு பெட்டகமான உன்னை இப்படி செடிகளுக்கு நீரூற்ற அனுப்புவாரா?”
மரத்தின் பின்னால் நின்றிருந்த துஷ்யந்தன் செவிகளில் விழுந்த வார்த்த்தை முகத்தில் வெளிச்சமாய் வந்தது
“ஓ.. அவள் பெயர் சாகுந்தலை, உலகில் உவமையே சொல்லமுடியா அப்பெண்ணின் பெயர் சாகுந்தலை, என் அரண்மனையில் இல்லாத அழகு பொக்கிஷத்தின் பெயர் சாகுந்தலை, என் அகந்தை அழித்தவள் ஒஎயர் சாகுந்தலை, சாகுந்தலை என்ன அழகான ” என சிலிர்த்துகொண்டான் துஷ்யந்தன்
மரத்தின் மேல் ஒரு அணில் துள்ளிகுதித்தது, அதையும் பார்த்துகொண்டான்
அங்கே தோழி தொடர்ந்தாள்
“மல்லிகொடிக்கு நீர்வார்க்கும் சகுந்தலையே, மல்லிகையிலும் உன் மேனி மென்மை அல்லவா? மணம் வீசும் மல்லிகைக்கும் அதைவிட நறுமணம் வீசும் உன் மணத்தையும் ஒப்பிட்டால் காட்டில் இலகற்று ஓடும் காட்டாறுக்கும் தெளிந்து நிலத்தில் ஓடும் ஆறுக்குமான வித்தியாசம் அல்லவா?
அப்படிபட்ட உன்னை, மெல்லிய மல்லிகையின் இதழையும் தோற்படிப்பவளை , மல்லியினை விட இனிய மணம் கொண்ட மேனியளை இப்படி நீர் ஊற்ற விடலாமா?, இதை உன் தந்தை கன்வர்முனி ஏன் இபபடி செய்தார்?”
மரத்தின் பின்னால் இருந்து “ஆஹா…இவை என் கண்களின் கேள்விகள் அல்லவா?” என சொல்லிகொண்டான் துஷ்யந்தன்
சாகுந்தலை தொடர்ந்தாள்
“அதெல்லாம் இல்லை , என் தந்தை சொன்னார்தான் ஆனால் இந்த மலர்செடிகள் என் சகோதரி போன்றவர்கள், அதனால் நானே விரும்பி வந்து நீரூற்றுகின்றேன். அவைகள் பூத்து நிற்கும் கோலத்தை விட அழகான காட்சி எது?
உடன்பிறந்தவள் மகிழ்ச்சியாக வாழ்கின்றாள் என்றால் அதைவிட சகோதரிக்கு மகிழ்ச்சி எது?, மூத்த சகோதரி தாய்க்கு சமம் அல்லவா?”” என்றாள்
துஷ்யந்தன் திடுக்கிட்டான்
“என்ன? இவள் இமயம் போன்ற புக்ழும் ஆற்றலும் பெற்ற கன்வரின் மகளா?, ஆனால் நான் ஷத்திரியன் அல்லவா/
ஷத்திரியனாக பிறந்ததற்கு முதல் முறையாய் வருந்துகின்றேன்
ஆனாலும் அந்த கன்வமுனி ஏன் இப்படி செய்தார், அழகின் மென்குடம் நீர்குடம் சுமக்கலாம? , ஞானமில்லா காரியத்தை முனிவர் செய்துவிட்டாரோ? யாரிடம் என்ன வேலையினை சொல்லவேண்டும் என்பதை கூட அவர் எண்ணிபார்க்கவில்லையோ?
விறகுக்காக வளர்த்த மரத்தை நீல கண்கள் போன்ற குவளை மலர் இதழை கொண்டு வெட்ட முயல்வதா? அது அடுக்குமா?
தவபூஜை செய்ய மலர்கள் வேண்டும்தான், அதற்காக பொன்னின் மலர் போல் இருக்கும் இவளையா நீருற்ற சொல்வது? இந்த கன்வர்க்கு எதை செய்யவேண்டும் என தெரியாமல் போனது எப்படி? துறவியானால் எல்லாம் மறந்துவிடுமா என்ன?” என்றவன் கொஞ்சம் நிதானித்தான்
அவளை உற்றுபார்த்தான், இடுப்பில் இருந்து அவள் குடத்தை உயர்த்தும் அழகு அவன் உடலில் இருந்து உயிரை பிரிப்பது போல் அவனுக்கு இருந்தது
அவன் தன் துடிக்கும் தவிக்கும் மனதிடம் மயங்கி சொன்னான்
“ஏ மனமே அவளை பார்
நீர்கொண்ட குடம் அவள் இடுப்பில் இருக்கின்றது, அமுத குடங்கள் இரண்டு அவள் மார்பு கச்சைக்குள் இருக்கின்றது
அழகான இரு குடங்கள் பின்னால் இருக்கின்றது
காட்டுக்குள் ஒரு கவிதையாய் அவள் நடப்பதை பார், காணகிடைக்கா அழகை பார்”
சொன்னவ சொக்கி நின்றான், தன்னை மறந்தான்
அவன் அவளில் கரைந்துகொண்டிருக்க, அங்கே செடிக்கு நீரூற்ற குனிந்த சாகுந்தலை மெல்ல கத்தினாள்
“அனுசுயையே என் தோழியே இங்கே வா, இந்த பிரியம்வதை என்னை வதைத்துவிட்டாள்
என்னுடைய இளமையான மார்புகளை ,மதயானையின் மந்தகத்தை இறுக்குவது போல் என் மார்பகங்களை இறுக்கி கட்டிவிட்டாள், அவள் செய்த காரியம் எனக்கு வலியாகின்றது,இந்த கச்சையினை கொஞ்சம் நெகிழசெய்து கட்டிவிடுவாயா??
அனுசூயை அப்படியே அவளுக்கு தளர்த்திவிடும் போது பிரியம் வதை சொன்னாள்
“சாகுந்தலையே, என்னை ஏன் திட்டுகின்றாய்? இதற்கு நான் எப்படியம்மா பொறுப்பாவேன்?
உன் அழகான தனங்கள் பிஞ்சு பெரிய காயாக மாறுவது போல் பெரிதாகிவிட்டதால் இந்த நிலை உனக்கு வந்தது என்பதை மறந்துவிட்டாயோ
நீ என்னை திட்டாமல் உனக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் உன் இளமையினை அல்லவா திட்டியிருக்க வேண்டும்? அதனிடம் சொல்லம்மா, என்னை ஏன் வசைபாடுகின்றாய்”
தோழியர் சட்டென சிரிக்க, புன்னகைத்து சிலிர்த்து கொண்ட துஷ்யந்தன் தன்னுள் சொல்லிகொண்டான்
“ஏ அறிவுள்ள பெண்ணே, நீ மிக சரியாக சொன்னாய்
அவள் மார்பில் அணிந்திருக்கும் மரவுரி, அவள் மேனியினை தொட்டதால் பெருமைபெற்றது. அந்த பெருமையில்தான் அது அந்த கற்பனைக்கும் எட்டாத அழகுடைய மார்பகங்களை மறைத்திருக்கின்றது, அது கர்வம் கொண்ட மரவுரி
அதன் அகந்தை பெரியது
மின்னும் பவளம் போன்ற மலைகளின் அழகை அழுக்கான மேகம் மறைப்பது போல அது அவள் அழகை மூடிகொண்டிருக்கின்றது
உயிரை உடல் உள்ளே மறைப்பது போல அவள் அழகை அந்த மரவுரி ஏன் மூடிகொண்டிருக்கின்றது?
காலமெல்லாம் பிரியாத இமைகளும்தான் கண்களை காக்கின்றது ஆனால் மறைத்து கொண்டா இருக்கின்றது?
இந்த மரவுரி அந்த இமைகளை விட பெரிய காவலா செய்கின்றது, இல்லையே, ஆனாலும் அதற்கு அவ்வளவு அகங்காரம், அழகான பெண்ணை தழுவியிருக்கும் கர்வம் அதற்கு
மலரும் அழகிய மொட்டின் தடித்த புற இதழ்கள் மெல்லிய உள் இதழ்களை நெருக்கி அழுதுவது போல் அல்லவா அந்த மரவுரி கச்சை அவளுக்கு சிரமம் கொடுக்கின்றது..
கதிரவனின் அழகான வெளிச்சத்தை எழும் கரும்புகை மறைப்பது போல் அல்லவா அங்கே அந்த ஆடை அவள் அழகை மறைக்கின்றது.
தான் இதுவரை காணாத இனி காணமுடியாத அழகி அவள் என இயற்கை அவள் அழகுக்கு கீரிடம் சூட்ட விரும்பிற்று
அவளுக்கு ஒரு கிரீடம் போதாதென இரு கிரீடம் சூட்ட விரும்பிற்று, அதனை தலையில் சூட இடமில்லை என்பதால் மார்பில் இரு கிரீடமாக சூடிற்று
ஆ… அதுவல்லவா அழகு…அதுதானே பேரழகு.. அதுவும் இரட்டை பேர் அழகு
இப்படிபட்ட அழகியின் உடலை அந்த மரவுரி ஆடை சூழ்ந்திருக்கின்றது, ஆனாலும் கான்கத்தில் வேறு என்ன வழி? பாவம் அவள்தான் என்செய்வாள்?
அவள் தன் அழகிய மேனியினை சுற்றி அந்த ஆடை அணிந்திருக்கும் கோலம் பூவும் நாறும் சேர்துகட்டபட்ட மாலைபோல் என்ன ஒரு அழகு
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும், இவளோடு சேர்ந்த மரபட்டையும் ஜொலிக்க்கும்
அய்யோ என் மனமே , கச்சை கட்டிவந்த இவள் மேனி அழகை என்சொல்வேன்?
நெல்லுக்குள் உமிபோல் புடைத்து நிற்கின்றது என்பேனா? நிலாவின் மேடுகள் போல் அழகுற உயர்ந்திருக்கின்றது என்பேனா?
வார்த்தையும் உவமையும் வராமல் நான் தடுமாறுகின்றேனே…
நிலாவில் பள்ளம் தெரிந்தாலும் அழகு குறையுமோ, தங்கநகையிலே பழுது இருந்தாலும் ஜொலிப்பு குறையுமோ, இல்லை.
அவ்வாறே இவள் ஆடையால் அவள் அழகு குறைவதே இல்லை
தேவலோக அமிர்தத்தின் சுவை அதனை மண்பானையில் வைத்தால் குறையுமோ?, பவளம் போல் ஜொலிக்கும் மலைசிகரத்தை மூடுபனி மூடினால் அழகு குறையுமோ?
ஆ என்ன அழகானவள் இவள்…
மயக்கும் அழகின் தாயகம் போல் அல்லவா அந்த கொங்கைகள் மயக்குகின்றன. ஆனால் அறிவை மாயை மறைப்பது போல அவள் அழகை அந்த ஆடை மறைக்கின்றது
ஓளிமிகுந்த தாமரைப்பூவினை மயிர்கொத்து போல நீண்டிருக்கும் நீர்பாசி மறைத்தாலும் அதன் அழகு கெடுமோ கெடாது, இயற்கையான அழக்கு எல்லாமே ஒப்புக்கு அணிகலன் அல்லவா?”
அவன் அவளை கண்டு வியந்து தனக்குள்ளே பேசிகொண்டிருக்கும் போதே சாகுந்தலை தன் தோழியிடம் சொல்கின்றாள்
“தோழியே, மேகம் போன்ற கருநிறமும், பவளம் போன்ற சிவப்பும் பச்சை பசேல் என பசுமையும் ஒரு சேர கலந்து தெரியும் அதோ அந்த மாமரத்தின் கொழுந்து என்னை நோக்கி, என் அருகே வா , வா என அழைக்கும் குரல் உனக்கு கேட்கின்றதா
எனக்கு கேட்கின்றது, நான் அதன் அருகில் செல்வேன்” என சொல்லி சென்றாள்
சென்றவள் அந்த மரத்தடியில் நின்று அதை தொட்டு நிற்கும் போது தோழி பிரியம் வதை சொன்னாள்
“சாகுந்தலையே, நீ அந்த மரத்தினை தொட்டு நிற்கும் காட்சி அழகான பொற்கொடி ஒன்று மரத்தை தழுவி படர்ந்து நிற்பதை போல் இருகின்றது”
சகுந்தலை சிரித்தாள், மறைந்திருந்து அதை கேட்ட துஷ்யந்தன் ஆனந்த புலம்பலில் சொன்னான், அந்த மரத்தை மெல்ல தன் கையால் குத்தியபடி சொன்னான்
“பெண்ணே, நீ சரியாக சொன்னாய், நீ பேசுவது எவ்வளவு இனிய மொழி
அமுதம் சொட்டும் இவள் இதழ்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? மஹாலட்சுமி வாழும் தாமரை இதழுக்கு ஒப்பிடமுடியுமா?
சொர்க்கத்தில் அமிர்தம் ஊற்றி வளர்க்கபடும் கற்பக மரத்தின் கிளையில் துளிர்க்கும் பொன்னிற கொழுந்து தளிருக்கு ஒப்பிடுவேனா?
அதெல்லாம் கூட இவள் உதட்டின் அழகுக்கு ஈடாகாதே, அய்யோ இவள் என்னை மகிழ்ச்சி எனும் கடலில் ஆழத்தில் அமிழ்த்துகின்றாள்
அவளின் கீழ் உதடு அந்த இளந்தளிர்போல் எவ்வளவு மென்மையாய் இருக்கின்றது, அவள் தோள்கள் மெல்லிய கம்பு போல் இருக்கின்றன, அங்கமெல்லாம் பொங்கும் அழகும் இளமையும் ஒரு கொடி ஒன்று கொம்பினை சுற்றிய காட்சியினைத்தானே தருகின்றது
இவள் அழகு மலர்களின் குவியல், அழகின் களஞ்சியம்
அவள் தலையிலும் உடலை சுற்றி அணிந்திருக்கும் மாலையில் உள்ள மலர்கள், செடியில் இருந்து செத்து பிரிந்து இவளை தொட்டு மீண்டும் உயிர்பெற்று நிற்கும் அதிசயத்தை என்னால் காணமுடிகின்றது, பூக்களுக்கும் உயிர்கொடுத்த அதிசயம் அவள்
அதனாலே அவை கூடுதல் மணம் வீசுகின்றன, அந்த மணத்தை அவை அவள் உடலில் இருந்தே அவை பெற்றுகொண்டிருக்கின்றது
காட்டில் உள்ள மல்ர்களில் எவை இந்த முனிவர்களை போல் தவம் செய்ததோ அவை மட்டும் அவள் உடலில் பூக்கும் பாக்கியம் பெற்றிருக்கின்றன
அய்யோ, அவள் உடலின் மேல் அந்த பூக்கள் காட்டும் அழகென்ன, கொட்டும் மணமென்ன, வீசும் ஓளிதான் என்ன?
அவன் சொல்ல சொல்ல அவன் மனம் மயங்கியது அவன் தன்னிலை மறந்தான், தான் யார் என்பதையும் மறந்தான் , அவள் அவனை நாகம் போல் வளைத்து ஆக்கிரமித்திருந்தாள்
அங்கே தோழி சொன்னாள்
“சாகுந்தலையே அந்த மாமரத்தில் படர் நினைக்கும் வனதோசினி எனும் மல்லிகொடி, உன்னால் வளர்க்கபட்ட மல்லிகொடி அந்த மரத்தை சுற்றும் அழகினை பார், அது நீயே அக்கொடிக்கு மணவாளன் கொடுத்தது போல் அல்லவா தெரிகின்றது”
சாகுந்தலை சிரித்து சொன்னாள் “அப்படி இருந்தால் என்னைவிட மகிழ்பவள் யார்? இந்த கொடியும் இந்த மரமும் என் சிந்தையினை ஈர்க்கின்றன
மரமோ புதிய தளிர்விட்டு இளமையோடு நிற்கின்றது, இந்த மல்லி மயக்கும் மணம் கொடுக்கும் மலர்களுடன் அதன் மேல் படர நினைக்கின்றது, இந்த காட்சியில் நான் என்னையே மறக்கின்றேன்”
கேட்டுகொண்ட அனுசுயை சொன்னாள், “பிரியம் வதை அவள் மரமும் கொடியும் பற்றி சொன்னதாகவா நினைக்கின்றாய், இல்லை இல்லை. இவளுக்கும் திருமண ஏக்கம் வந்துவிட்டது அதை மறைமுகமாக சொல்கின்றாள்”
துடிப்பாக அதை தொடர்ந்து சொன்னாள் பிரியம்வதை “நிச்சயமாக இந்த கொடிக்கு மரம் போல் தனக்கானவன் யாரோ என தேடுகின்றாள்”
சாகுந்தலை மெல்ல நாணி சொன்னாள் “அதெல்லாம் உன் மனதின் விருப்பம், நேரம் பார்த்து வெளிபடுத்துகின்றாய்”
அவள் சொல்லும் போது அவள் முகத்தை பார்த்து, நாணிய முகத்தை பார்த்து துஷ்யந்தன் சொன்னான்
“மாலைநேர சூரியன் சிணுக்குவதை போல் அந்த முகத்தில் என்ன ஒரு அழகான நாணம். நிலவும் வெட்கபடும் என இப்போதல்லவா தெரிகின்றது”
(தொடரும்..)