மதுரை சித்திரைத் திருவிழா
இந்திய இந்து விழாக்களில் பிரசித்தியானதும், தமிழக இந்து விழாக்களில் மாபெரும் கூட்டம் கூடுவதுமான அந்த மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு மிக உற்சாகத்துடன் கொண்டாடபடுகின்றது, இன்று கொடியேற்று விழா
மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல, மதுரை உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று கிரேக்கத்தின் ஏதென்ஸ், இத்தாலியின் ரோம், அரேபியாவின் பாக்தாத் , இஸ்ரேலின் ஜெரிக்கோ, சிரியாவின் டாமாஸ்கஸ், எகிப்தின் எல்காப், எஸ்னா சீனாவின் பிஜிங் போன்ற நகரங்களை விட மிக பழமையானது
இந்தியாவின் காசி புண்ணியநகர் போல மிக மிக தொன்மையான ஒன்று, அந்த ஆலய விழா இராண்டு காலம் கொரோனாவால் தடைபட்டது
அங்கு திருவிழாக்கள் தடைபடுவது புதிது அல்ல, வரலாற்றில் களபிரர் காலம், புத்த சமண ஆட்சியின் இந்துவிரோத காலம், ஆப்கானிய சுல்தானிய கொடுங்காலம் , ஆங்கிலேயரின் போர்காலம் என பல இடங்களில் அது தடைபட்டுத்தான் மீண்டது
தமிழ் பொதிகையில் பிறந்தாலும் மதுரையில்தான் வளர்ந்தது, தமிழும் இந்துமதமும் அங்குதான் நடைபயின்றன
காஞ்சி போன்றவை பின்னால் உருவான நகரங்கள், மதுரை என்பது இந்துக்களுக்கும் தமிழுக்கும் தாய்வீடு
அந்த பழமையான மதுரையின் சித்திரை திருவிழாவின் நினைவுகள் எப்பொழுதும் சுகமானவை
மதுரையின் வரலாறு திருவிளையாடற் புராணத்தில் 49 வது படலமாக திருவாலவாயான படலத்தில் இருந்து தொடங்குகின்றது
அதுவரை நான்குமாடக்கூடல் என் அழைக்கபட்ட அந்த ஊர் அதுலகீர்த்திப் பாண்டியனுக்கு மகனான கீர்த்தி பூசண பாண்டியன் காலத்தில் பெரும் ஊழியினை சந்தித்தது
2004ல் நடந்த கடற்கோள் போல, அதற்கு முன்பே பூம்புகார் கடலில் மூழ்கியதை போல ஒரு பெரும் இயற்கை பேரிடர் அப்பொழுது நடந்தது, அந்நேரம் பாண்டியநாடு பெரும் அழிவினை சந்தித்தது
அந்த அழிவில் இருந்து பாண்டிநாட்டை மீட்க சிவனே வந்தார், அவரே சந்திரகுல பாண்டியர்களை தோற்றுவித்து சேகர பாண்டியனை மன்னனுமாக்கினார், அப்பொழுது பாம்பு ஏந்திய சித்தன் வடிவில் வந்ததால் ஆலம் எனும் விஷம் கொண்ட வாயினை குறிக்கும் வகையில் ஆலவாய் நாதன் என பெயரும் பெற்றார்
அவர் பெயரால் அது ஆலவாய் ஆலயமாகி அந்த ஊருக்கு திரு ஆலவாய் என பெயர் வந்தது, ஆலவாய் என்பது பல இடங்களில் சிவாலயத்தை குறிக்கும் பெயர், கேரளாவின் இன்றைய அலுவா கூட ஆலவாய் எனும் சிவன் பெயரை கொண்டதே
அப்படிபட பெருமையினை கொண்ட அன்று ஆலவாய் நாதன் ஆலயம் என்றும் இன்று மீனாட்சியம்மன் ஆலயம் என அழைக்கபடும் அந்த ஆலயம் பிரசித்தியானது, பெரும் புகழும் மங்கா அடையாளங்களும் தனித்துவ வரலாறும் கொண்டது
அந்த சிவாலயத்தில் தொடக்கத்தில் சித்திரை மாத திருகல்யாண விழா இல்லை, அது மாசியில் தேரோட்ட திருவிழா, பங்குனியில் உத்திர திருவிழா என திருவாரூர், சிதம்பரம் போலத்தான் இருந்தது
பங்குனி உத்திரம் அன்று திருபரங்குன்றத்திலும் விமரிசையாக இருந்தது
சித்திரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அன்று விஷேஷம் ஏதுமில்லை
உண்மையான விஷேஷம் மதுரைக்கு வட கிழக்கில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகர் மலையில் நடந்து கொண்டிருந்தது, வைணவம் அன்று சைவத்துக்கு சற்றும் குறையாமல் வளர்ந்திருந்தது
திருமாலிருஞ்சோலை, அழகர்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் அந்த அழகிய வைணவத்தலம் புராதனமான வரலாற்றை உடையது.
இந்தக் கோவிலில் உறையும் சுந்தரராஜப் பெருமாள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர். ‘சுந்தரத் தோளுடையான்’ என்று ஆண்டாள் இவரை அழைக்கிறார்.
பரிபாடலில் இந்த அழகர் மலை பற்றிய குறிப்புகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில் உண்டு
‘திருமால் குன்ற வழியை” என்ற வரி அதனை சொல்கின்றது, அங்கு ஒரு சிற்றாறு ஓடி கொண்டிருந்தது அதன் பெயர் சிலம்பாறு
அந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கெல்லாம் அழகர்தான் குல தெய்வம். அவர்களால் கள்ளழகர் என்று அன்போடு அழைப்படுபவர் இவர்.
கிராம தேவதையான கருப்பண்ண சாமி அங்கு பதினெட்டாம்படி கருப்பராக காவலுக்கு நிற்பார், முதல் பூசை எந்நாளும் அவருக்கே
அந்த உற்சவ மூர்த்தியான சுந்தர ராஜப் பெருமாள், அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னால் செய்யப்பட்டவர். இப்போது நாம் சுத்தத் தங்கம் என்று சொல்லும் பொன் பத்தரை மாற்று, அதாவது பத்து பங்கு தங்கத்திற்கு அரைப்பங்கு செம்பு சேர்த்துச் செய்யப்பட்டது. .
ஆம் அவர் பெயரில் மட்டும் அழகர் அல்ல, மலையில் மட்டும் அழகர் அல்ல சிலையிலும் அழகர், கள் வடியும் பூ போன்ற கள்ளழகர்.
அழகர் ஏன் ஆற்றில் இறங்குகின்றார் என்றால் அதற்கும் ஒரு புராண கதை உண்டு
இங்கேயுள்ள சிலம்பாற்றில் சுதபஸ் என்னும் முனிவர் நீராடிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த துர்வாசரைக் கவனியாது இருந்துவிட்டதால் அவரைத் தவளையாகுமாறு துர்வாசர் சபித்துவிட்டார்.
அவர் சாப விமோசனம் வேண்டவே, வைகையாற்றில் தவம் செய்யுமாறும் அங்கே அழகர் பெருமான் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்றும் கூறிச்சென்றார். அதன்படியே வைகையாற்றில் தவம் செய்துகொண்டிருந்த முனிவருக்கு அழகர் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றின் கரையில், மதுரைக்கு வடமேற்கில், சமயநல்லூருக்கும் சோழவந்தானுக்கும் இடையில் உள்ள, தேனூர் என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதற்காக மலையிலிருந்து அழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் வரை வருவார். அச்சமயம் அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் அழகரைச் சந்திக்கப் புறப்பட்டு வருவார்கள். கள்ளர் வேடமணிந்து அழகரை வழிபடுவார்கள்.
ஆம் மீனாட்சி அம்மனுக்கு மாசி , பங்குனியில் விஷேஷம். அழகருக்கு சித்திரையில் விஷேஷம், 13ம் நூற்றாண்டு வரை இவ்வழக்கம்தான் இருந்தது.
12ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மிக பெரிதாக எழும்பினான், அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல பாண்டிய வம்சத்தின் கடைசி பெரும் ஜோதி அவன்
ராஜராஜசோழனின் சாதனையினை அவன் மிக எளிதாக சமன் செய்தான், சேர சோழ பாண்டி நாட்டை அடக்கி, ஈழம் தாய்லாந்து கடாரம் என வென்று இமயம் வரை கொடிநாட்டிய பெரும் அரசு அவனுடையது
ஆதித்த கரிகாலன் மதுரைக்குள் புகுந்து சுந்தரபாண்டியன் தலையினை வெட்டியதற்கும் பின் ராஜராஜ சோழன் பாண்டியரை முழுக்க அடக்கியதற்கும் அவனே பழிவாங்கினான்.
அப்பொழுதுதான் திருச்சி பாண்டியரின் கட்டுபாட்டில் இருந்தது, சோழர்கள் கப்பம் கட்டிகொண்டு தஞ்சையில் அடங்கி இருந்தனர்
அவன் காலத்துக்கு பின்பே அவன் வாரிசுகள் சண்டையிட்டு அதில் ஒருவனை ஒருவன் பழிவாங்க டெல்லி மாலிக்காபூரை அழைத்து வந்து மதுரையினை நாசமாக்கினர்
அதிலும் ஒரு பாண்டியன் எழும்பி மாலிக்காபூரை விரட்டி அடித்தான் அல்லது மாலிக்காபூர் காலி செய்த மதுரையினை ஆளமுயன்றான்
ஆனால் பாண்டிய நாடு ஐந்து துண்டுகளாய் வாரிசு சண்டையில் சிதற அது பின் வந்த டெல்லி துக்ளக் கோஷ்டிக்கு வசதியாயிற்று, திருச்சி அப்பொழுது பாண்டியர் வசம் இருந்ததால் அங்கு பாய்ந்தான் துக்ளக்
ரத்த சரித்திரமும் எக்காலமும் இந்துக்கள் மறக்க முடியாத கொடூர காலமான திருவரங்க படுகொலையும் கொள்ளையும் அப்பொழுது நிகழ்ந்தது
அது மதுரையிலும் நிகழ்ந்தது, பின் மதுரையிலும் நிகழ்ந்து சுமார் 40 ஆண்டு காலம் மதுரை ஆப்கானியரால் சிதைக்கபட்டது
அதன் பின் நாயக்கர்கள் வந்து சுல்தான் படைகளை விரட்டி அடித்து பாண்டியன் ஆண்ட பகுதியெல்லாம் அவர்கள் ஆண்டார்கள் திருச்சி தஞ்சை மதுரை என எல்லாம் அவர்கள் கைக்கு வந்தது
இந்துமதம் தழைத்தது
இதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு, நாயக்கர்கள் திருச்சி திருவரங்க படுகொலைகளை கண்டு மனம் வெதும்பிய வைணவர்கள், அரங்கனின் சிலையினை மறுபடி ஸ்தாபிப்பதே அவர்கள் படையெடுப்பின் நோக்கம்
அதை வெற்றிகரமாக செய்தபின் அவர்கள் மனம் திருச்சி திருவரங்கம் பக்கமே சுற்றிற்று, மதுரை அவர்களுக்கு உவப்பானது அல்ல
இதனால் பெருவாரி நாயக்கர்கள் திருச்சியில்தான் இருந்தார்கள், அதில் மறுபடி டெல்லி சுல்தான் பாமினி சுல்தானின் கோல்கொண்டா அல்லது பிஜப்பூர் சுல்தானிய வாரிசுகள் திருவரங்கம் வந்துவிட கூடாது எனும் எச்சரிக்கையும் இருந்தது, வைணவ பாசமும் பக்தியும் இருந்தது
இந்த வம்சத்தில் 16ம் நூற்றாண்டில் வந்தவர் திருமலை நாயக்கர், அன்னார் எல்லாரையும் போல் திருச்சியில்தான் இருந்து ராஜபரிபாலனம் செய்து கொண்டிருந்தார்
இதில் அவருக்கு பல சிக்கல்கள் இருந்தன, முதலில் மதுரை தஞ்சை நாயக்கள் உள்மோதல் இரண்டாவது ராமநாதபுர பாண்டிய மன்னர்கள், வள்ளியூர் தென்காசி பாண்டியரின் மிரட்டல் இப்படி நிறைய இருந்தது
மூன்றாவது அவரும் ஒருவித சளிநோயால் அவதிபட்டார்
இதெல்லாம் எண்ணி அவர் கவலையுற்று தூங்கியபொழுதுதான் கனவில் சிவனே வந்து அவரை மதுரைக்கு சென்று அரசு செலுத்த சொன்னார்
அந்த கனவு வந்ததில் இருந்து அவன் பூரண சுகம் பெற்றதும் அவன் நம்பிக்கையினை உறுதிபடுத்திற்று
அந்த கனவுக்கு பின்பே மதுரைக்கு வந்தார் திருமலையார், அதன் பின்பே அந்த நாயக்கர் அரண்மனையெல்லாம் கட்டபட்டன
மதுரையில் அப்பொழுது இந்த மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகிகளும் அவர்களை இயக்கிய மடமும் மன்னரை சந்தேகமாக பார்த்தன காரணம் மன்னர் ஒரு வைணவர்
இவ்வளவுக்கும் மன்னர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பெரும் தேரும் இன்னும் என்னவெல்லாமோ அளித்தார், ஆனால் அங்கிருந்த நிர்வாகம் மன்னனின் தலையீட்டை விரும்பவில்லை
அங்கு ஏதோ மறைக்கபடுவதை உணர்ந்த மன்னன் நிர்வாக குளறுபடிகளை கண்டறிந்தான், இதனால் ஒருவித மோதல் முற்றிற்று
பின் மன்னர் எடுக்கும் முயற்சி எல்லாம் குழப்பட்டன மாசி திருவிழாவுக்கு அரசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை பின் சித்திரை திருவிழாவுக்கு மக்கள் முகம் திருப்பினர்
திருமலை நாயக்கன் மிக சிறந்த நிர்வாகி , பெரும் ஆற்றலும் அறிவும் படைத்தவன் தென்காசி வள்ளியூர் பாண்டியர்களை அவர்கள் பக்கம் சில நீராதார திட்டங்களை செய்து அவர்கள் மக்கள் மூலமாகவே அடக்கி வைத்த நுட்பமான ஆட்சியாளன்
அவன் மிக அழகான திட்டமிட்டான்
ஏன் மாசி திருவிழா பங்குனி உத்திரம் மற்றும் அழகர் கோவில் சித்திரை விழா என தனி தனியாக கொண்டாட வேண்டும், எல்லா நிகழ்வையும் சித்திரை புத்தாண்டு தொடங்கி அந்த பவுர்ணமி வரும்பொழுதே வைக்கலாமே எனும் திட்டமாயிற்று
விளைவு மாசி திருவிழா பங்குனி உத்திரமெல்லாம் சித்திரைக்கு மாற்றபட்டு ஒரே விழாவாயிற்று
தேனூர் பக்கம் ஆற்றில் இறங்கிய அழகர் மதுரை வண்டியூருக்கு மாற்றபட்டார்
அம்மன் சன்னதி எதிரே புதிதாக வசந்த மண்டபமும் சகல வசதிகளுடன் உருவாக்கபட்டது
இன்னும் சைவரும் வைணவரும் ஒற்றுமையாய் கொண்டாட பல வழிகளை செய்தான் மன்னன், அப்படியே திருபரங்குன்றம் முருகனும் கொண்டாட்டத்தில் சேர்க்கபட்டார்
பின் அன்றைய மிக சிறு சமூகமாக இருந்த இஸ்லாமியரும் கொண்டாட்டத்தில் சேர்க்கபட்டனர், அதற்கு திருவரங்கன் சிலை மேல் தீரா பாசம் கொண்டு மிக இளம் வயதிலே செத்தவளும், திருவரங்க ஆலயத்தில் இன்றும் அந்த கதையினை சொல்லி நிற்பவளுமான சுராதானி எனும் துலுக்க நாச்சியார் கதையும் சேர்க்கபட்டது
சித்திரை திருவிழாவில் துலுக்க நாச்சியாரின் பக்திக்கும் மரியாதை செலுத்தபட்டது, திருவரங்கநாதன் மேல் அவள் கொண்ட தீராகாதல் விழாவில் அங்கீகரிக்கபட்டது
இதெல்லாம் செய்து வைத்தான் அந்த மன்னன் திருமலை நாயக்கன்
அந்த திருவிழாவின் எட்டாம் நாள் அவனுடையது , அன்று காலை மேள தாளங்களும் அவன் சேனையும் அணிவகுக்க யானைமேல் கோவிலுக்கு வருவான் மன்னன்
வந்து அன்னையிடம் இருந்து செங்கோலை பெறுவான், ஆம் மீனாட்சி பிரதிநிதியாக மதுரையினை ஆள்கின்றேன் என எல்லோருக்கும் அறிவித்தான் அந்த பக்தி மிக்க மன்னன்
மன்னன் கலந்து கொள்வதால் எல்லா சிற்றரசர்களும் குறிப்பாக ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி மன்னர்களும் கலந்து கொள்ளுதல் வழக்கமாயிற்று
தென்பாண்டி மன்னர்களும் கலந்து கொண்டனர்
இப்படி மிக பிரசித்தியாக தொடங்கபட்ட அவ்விழா அதே உற்சாகத்துடன் இன்றளவும் கொண்டாடபடுகின்றது
அதில் திருமலை நாயக்கனின் முயற்சி நிச்சயம் மாபெரும் வெற்றி,
இன்று சைவர் வைணவர் முருகபக்தர் இஸ்லாமியர் என எல்லோரும் கொண்டாடும் மிகபெரிய பண்டிகை அது
ஒரு நல்ல இந்து அரசன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும், அவனின் திட்டங்கள் எவ்வளவு தீர்க்க தரிசனமாக இருக்க வேண்டும் என்பதற்கும் திருமலை நாயக்கன் பெரும் எடுத்துகாட்டு
இந்தியாவின் மிகபெரிய திருவிழாவில் ஒன்றும், இந்துக்களின் தொன்மைமிக்க ஆலயமும், காசிக்கு நிகரான பழமையும் புனிதமும் கொண்ட மதுரையில் இந்த வருடம் சித்திரை விழா உற்சாகமாக கொண்டாடபடுகின்றது என்பது மகிழ்ச்சியான விஷயம்
தமிழகம் எவ்வளவு உறுதியான இந்து பூமி என்பதும், தமிழக முன்னோர்கள் எப்படியான இந்து வாழ்வு வாழ்வு வாழ்ந்தவர்கள் என்பதற்கு சான்று பிரமாண்ட ஆலயங்களும் தேர்களும் திருவிழாக்களும்
அதுதான் இன்றுவரை தமிழகத்தின் இந்துபெருமையினை பறைசாற்றிகொண்டிருக்கின்றன, தமிழன் ஒரு இந்து என்பதை தீர்க்கமாக சொல்லிகொண்டிருக்கின்றன
அந்த விழா கண்ணுக்குள் வரும் பொழுதெல்லாம் தொன்மை மிக்க மதுரையும் சிவனும் அவரின் திருவிளையாடலும் தமிழ் சங்கமும் இன்னும் பல பெருமைகளும் நினைவுக்கு வரும்
எல்லா தமிழ் புலவர்களும் அவர்தம் அழியா பாடல்களும் நினைவுக்கு வரும்
சம்பந்தர் முதல் மூர்த்தி நாயனார் வரை சைவம் தளைக்க அரும்பாடுபட்ட நாயன்மார்கள் நினைவு வரும்
இன்னும் ஏகபட்ட நினைவுகளும் பெருமையும் மதுரை ஆலயம் என்றதும் அலைமோதும், அப்படியே இந்த விழாக்களை ஒரே விழாவாக்கிய திருமலைநாயக்கன் நினைவும் வரும்
மதுரை பாண்டிய மண்டல மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மிக மிக புரானதமான பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய திருவிழாவினை கொண்டாடும் பாக்கியம் உலகில் எந்த இனத்துக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் தமிழ் பேசும் இந்துக்களான அவர்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றது
பாரத நாட்டின் பெரும் இந்து பண்டிகைகளில் ஒன்றான இந்த பெரும் விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவிப்பார் என தமிழக இந்துக்கள் நம்புகின்றார்கள்,
அவரும் நிச்சயம் வாழ்த்துவார், வாழ்த்த வேண்டும்
சரி, பூம்புகார் காலத்தில் இருந்து பிரிட்டிசார் காலம்வரை பெரும் அடையாளம் பெற்ற மதுரை ஏன் இன்னும் வளராமல் அப்படியே இருக்கின்றது என்ற கேள்விக்கெல்லாம் விடை இல்லை
ஆற்றங்கரைகள் வாழ்ந்த காலத்தில் அது வாழ்ந்திருக்கின்றது, பின் துறைமுகங்கள் எழும்பிய காலத்தில் அது தன் இடத்தினை தவறவிட்டது இது உலகமாற்றம்
எனினும் அதன் வளர்ச்சி கொஞ்சமல்ல நிறையவே பின்னடைந்தது நிஜம், இட்லிகடை, பரோட்டா கடை, கறி தோசை தவிர சொல்லிகொள்ளும் அடையாளமில்லை
அதனை வளர்க்க சரியான தலமைகள் இல்லை திராவிடத்தால் அது புறக்கணிக்கபட்டது என வருத்தங்கள் ஏராளம்
இனியாவது அந்த மதுரை செழித்து வளரட்டும்
பாண்டிய வம்சம் கொண்டாடிய அந்த பெருவிழா, பாண்டிய முதல் செழியன் முதல் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் வரை மிக மிக கம்பீரமாக நடந்த விழா, அவர்களால் ஆலயம்கட்டி தேர்செய்து கொண்டாடபட்ட விழா அது
பின் ஆப்கானிய படையெடுப்புக்கு பின் நாயக்கர்களால் தொடரபட்டது
பெருவாழ்வு வாழ்ந்த இனத்தின் அடையாளம் அது, உலகம் வியக்க சிவபக்தியிலும் அன்னை மீனாட்சியின் அருளிலும் பாண்டிய இந்து மக்கள் வாழ்ந்த மாபெரும் கவுரவத்தின் அடையாளம் அது
தென்பாண்டி மக்களின் மாபெரும் பெருமை அது , யாருக்குமில்லா பெருமை எங்களுக்கு இந்துவாக உண்டு என கம்பீரமாக கொண்டாட தயாராகின்றது அந்த வாழ்வாங்கு வாழ்ந்த இனம், இனி வாழப்போகும் இந்து பெரும் இனம்.