வேலுதம்பி தளவாய்
பாரதம் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்களை கொடுத்தது அதில் சேரநாடு எனும் கேரளநாட்டு வீரர்களும் இருந்தார்கள், கேரளம் தொடக்கத்தில் இருந்தே சுதந்திர நாடாக ஆப்கானியரோ இதர வெளிநாட்டவரோ ஆள அனுமதிக்கா பகுதியாகத்தான் இருந்தது,
கேரள மன்னர்கள் அவ்வளவு கவனமாக இருந்தார்கள்
இதனால்தான் மொகலாய ஆட்சியோ பிஜப்பூர் ஆட்சியோ அங்கு காலூன்றவில்லை அப்படியே அங்கு காலூன்ற முயன்ற போர்ச்சுகீசியன் வாஸ்கோடகாமாவும் அங்குதான் கொல்லபட்டான்
அப்படிபட்ட கேரளாவில் பின்னாளில் குழப்பத்தை ஏற்படுத்தியவன் திப்பு சுல்தான், வடக்கே மராட்டிய இந்து பேரரசு வலுத்திருந்ததால் அவன் தன் படையினை தெற்கேதான் நடத்தினான் கேரளம் அவனால் பாதிக்கபட்டபொழுது பிரிட்டிசார் வழக்கம் போல் கேரளமக்களுக்கு உதவ வந்து பின் கேரள சமஸ்தானங்களையெல்லாம் வளைத்தார்கள்
அப்பொழுது பெரும் கிளர்ச்சியெல்லாம் ஏற்பட்டன எத்தனையோ பேர் மதம் காக்க நாடுகாக்க தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்
அவர்களில் முக்கியமானவன் வேலுதம்பி தளவாய்
அவனின் வாழ்வும் போராட்டமும் மருதுபாண்டியரின் வீரபோருக்கு சற்றும் குறையாதது
1780ல் திருவிதாங்கூர் மகாராஜா தர்மராஜா கார்த்திகை திருநாள் என்பவரிடம் வெறும் 16 வயது வீரனாய் சேர்ந்தவன் அந்த வேலுதம்பி
அவன் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த தலகுளத்தில் 1765ல் பிறந்தார், அந்நாளில் “சென்பகராமன்” எனும் பட்டம் அரச விருதாக வழங்கபடும். அந்த பட்டத்தை பெற்ற வம்சத்தில் வந்தவன் வேலுதம்பி, திருவாங்கூர் அரசில் படைவீரர்களாக இருந்த நாயர்கள் (நாயகர்கள்) வம்சத்தில் வந்தவன் அவன்
களரி முதல் யானை ஏற்றம் வரை அவன் எளிதாக தேர்ந்தான், எல்லா வீர கலைகளையும் கற்று மாவீரனாக உருவாகியிருந்தான், வர்மகலை உள்ளிட்ட எல்லாமும் தெரிந்திருந்தது
மன்னர் தர்மராஜா ராமேஸ்வரத்தில் தன் பொருளை பறிகொடுத்தபொழுது அதை 3 நாளில் மீட்டு வந்தவன் எனும் பெருமையில் அவனுக்கு நல்ல பதவி அரண்மனையில் கிடைத்தது, காரியக்காரர் எனும் அதிகாரியானான்
மிளகு சந்தணம் கிராம்பு இன்னும் பலவகை பொருளால் திருவாங்கூர் சமஸ்தானம் வளம்கொழித்த காலம் அது, பிரிட்டிசார் உரிய வாய்ப்புக்காக காத்திருந்த காலமது
அப்பொழுதுதான் அதாவது 1789ல்தான் திப்பு சுல்தான் திருவாங்கூர் மேல் படையெடுத்து பெரும் அழிவினை ஏற்படுத்தினான் அவனின் முரட்டுபடையினை சமாளிக்க பிரிட்டிசாரிடம் மன்னன் உதவி கோர அப்பொழுதுதான் பிரிட்டிசார் உள்ளே வந்து திப்புவினை விரட்டி அடிக்க உதவினர்
பின் வழக்கம் போல பெரும் செலவும் கப்பமும் கோரினர், திருவாங்கூர் அரசு முடிந்தவரை சமாளித்தது
கால்வைக்கும் இடமெல்லாம் யாரையாவது வளைத்து போடுவதும் அவர்கள் மூலம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி அதில் தங்களை நிறுத்தி கொள்ளும் பிரிட்டிசார் திருவாங்கூர் சமஸ்தானத்திலும் அதனையே செய்தது
அப்பொழுது தர்மராஜா கார்த்திகை திருநாள் எனும் மன்னர் இறந்து பலராம வர்மா குலசேகரப் பெருமாள் எனும் மன்னன் அரியணைக்கு வந்தான் அவனுக்கு வயது 15
இந்த 15 வயது சிறுவனை தன் விருப்பத்துக்கு ஆட்டிவைத்தான் தளவாய் (தளபதி)ஜெயந்தன் சங்கரன் என்பவன்
ஜெயந்தன் சங்கரன் என்பவன் பிரிட்டிசாருடன் ரகசியமாக கைகோர்த்தான் பிரிட்டிசாருக்கு அதிக கப்பம் கட்ட மன்னனை கோரினான், விவரம் அறியா மன்னனும் சிக்கினான், விளைவு கடும் வரிவிதிப்பு வந்தது
முதன் முதலாக பெரிய பெண்களுக்கு அதாவது கேரள வழக்கில் முலை பெண்களுக்கு வரிவிதிக்கபட்டது, இந்த முலைவரி அப்பொழுதான் அறிமுகமானது
இப்படியெல்லாம் மக்களை வதைத்து ஜெயந்தன் காட்டாட்சி நடத்தினான் மக்கள் மடிய பிரிட்டிசாருக்கு லாபம் கொளுத்தது
இந்த காலத்தில்தான் மதமாற்றம் பெருகிற்று, அப்பொழுதுதான் அய்யா வைகுண்டர் போன்ற அவதாரமெல்லாம் வந்து மதமாற்றங்களை தடுத்து இந்து தர்மம் காத்தார்கள்
இந்த கொடுமைகள் நடந்தபொழுது வேலுதம்பி மாவேலிக்கரா பக்கம் அதிகாரியாய் இருந்தான் அவனிடம் கூடுதல் வரிகேட்டு கொடுமைபடுத்தினான் ஜெயந்தன் சங்கரன்
இந்த அட்டகாசத்தை பொறுக்கமுடியா வேலுதம்பி அய்யா வைகுண்டர் பலமாய் இருந்த தெற்குபக்கம் அதாவது இரணியல் நாகர்கோவில் பக்கம் வந்து மக்களை திரட்டி பெரும் எதிர்ப்பு தெரிவித்தான், 1799ல் இந்த புரட்சி நடந்தது விவரம் அறிந்த மன்னனும் ஜெயந்தனை நாடுகடத்திவிட்டு ஐயப்பன் செண்பகராமன் பிள்ளை என்பவரை தளபதியாக்கினார்
வேலுத்தம்பியை மிளகு காரியக்காரி என உயர்த்தினார், மிளகு என்றால் மலையாளத்தில் செல்வம் நிதி என பொருள், அவ்வகையில் அவன் நிதி அதிகாரியானான்
நாட்டில் அவன் நிர்வாகத்தில் செல்வம் கொழித்தது , கொழித்த செல்வம் பிரிட்டிசார் கண்களை உறுத்தியது
1800ல் அங்கு அதாவது அப்பகுதியின் பிரிட்டிஷ் கண்காணிப்பாளராக வந்தான் மெக்காலே, இவன் வரிவிதித்து சுரண்டுவது ஒருபக்கம் கிறிஸ்தவ மதம் பரப்பி மக்களை தங்கள் அடிமைகளாக மாற்றுவது ஒரு பக்கம் என பெரும் அட்டகாசம் செய்தான்
இதை மிக கடுமையாக எதிர்த்தான் வேலுதம்பி அப்பொழுது கட்டபொம்மன் தம்பி பிரச்சினை மற்றும் இதர இடங்களில் எதிர்ப்பு இருந்ததால் பிரிட்டிசார் கவனம் அங்கேதான் இருந்தது
மெக்காலே தந்திர திட்டம் செய்தான், 1804ல் திருவாங்கூர் சமஸ்தானம் நிதிநெருக்கடியில் சிக்கியபொழுது வேலுதம்பி தன் வீரர்களுக்கு சம்பளத்தை குறைத்தான், அந்த விஷயத்தை கொண்டு வீரர்களை தூண்டிவிட்டு கலகம்செய்தான் மெக்காலே
ஆனால் பிரச்சினை வெறும் வீரர்கள் கலகம் என்றானது, இதை அடக்க மெக்காலே தானே வந்து நல்லவன் போல் காட்டிகொண்டு இன்னும் அதிக கப்பம் கோரினான், வேலுதம்பிக்கு வெறுப்பே மிஞ்சிற்று
மெக்காலே இன்னும் ஆடினான் தனக்கு தோதான அதிகாரி ரிங்கல்டூப் என்பவனை கிழக்கு திருவாங்கூர் அதாவது இன்றைய நாகர்கோவில் கன்னியாகுமரி பக்கம் நியமித்து மதமாற்றத்தை வளர்த்தான்
பிரிட்டிசாரை பொறுத்தவரை ஆயுதம் எடுத்து இந்திய மன்னர்களை வீழ்த்துவதை விட மதத்தை பரப்பி மக்களை குழப்பி அரசனை வீழ்த்துவது இன்னொரு ஆயுதமாயிற்று, தங்கள் மதம் எனும் வகையில் மக்களை எளிதாக வசபடுத்தவும் முடிந்தது
மயிலாடியில் ரிங்கல்டூப் தேவாலயம் கட்ட முயன்றபொழுது வேலுதம்பி பகிரங்கமாக எதிர்க்க மெக்காலேவுக்கும் வேலுதம்பிக்கும் மோதிற்று
மெக்காலே அடாவடிகள் தொடர மதராஸ் கோட்டைக்கே கடிதம் எழுதினார் மன்னன்ர், விளைவு மெக்காலே வேறுபகுதிக்கு மாற்றபட்டான் அதே நேரம் வஞ்சகமான பிரிட்டிஷ் ஆளுநர் ஒரு கோரிக்கை வைத்தான் அது வேலுதம்பியினை அரச பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது
மன்னனுக்கும் வேறு வழி தெரியா நிலையில் வேலுதம்பி நீக்கபட்டான் ஆனால் மக்களும் ராணுவ ஆதரவும் இருந்ததால் அவனுக்கென ஒரு படை உருவாயிற்று எனினும் மன்னன் ஆதரவு அவனுக்கு இருந்தது பல கோட்டைகள் அவன் வசம் இருந்தன
திருவாங்கூரில் செய்த குழப்பத்தை கொச்சி சமஸ்தானத்திலும் செய்தான் மெக்காலே அங்கும் ஒரு தளபதி இந்த அட்டகாசத்தை கண்டு எழும்பினான் அவன் பெயர் பாலியத்அச்சன்
இவரும் வேலுதம்பியும் சேர்ந்து கொச்சியில் இருந்த ஆங்கிலேய படைகளை தாக்க முடிவெடுத்தனர், பிரெஞ்ச் உதவியுடன் 1808ல் பெரும் போர் வெடித்தது, போரில் மெக்காலேவினை கொலைவெறியுடன் தேடினான் வேலுதம்பி அந்த போரில் பிரிட்டிசாருக்கு தோல்வி என்றாலும் சுரங்கபாதை வழியாக கடலுக்கு தப்பி கப்பலில் ஏறி சென்னைக்கு ஓடினான் மெக்காலே
கொச்சி திருவாங்கூர் பக்கம் பிரிட்டிசார் விரட்டபட்ட நிலையில் “குண்டறை அறிவிப்பு” எனும் பெரும் பிரகடனத்தை செய்தான் வேலுதம்பி
அது கொல்லம் அருகே உள்ள ஊர், அங்குதான் தன் அறிவிப்பை செய்தான் வேலுதம்பி அது மருதுபாண்டியரின் மலைகோட்டை பிரகடனத்தின் முன்னோடி
“நம் நாட்டிற்கு வந்த அந்நியர்கள் நாட்டை ஆள முயற்சிப்பதும், நமது ஆலயங்களை கொள்ளையடித்து கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்ற முயற்சிப்பதும், நம்மை அடிமையாக்கி அதிக வரி வசூலித்து சித்ரவதை செய்வதையும் தடுக்க ஆங்கில கம்பெனிக்கு எதிராக ஆயுத போர் புரிய வாருங்கள்
நம் விடுதலையினை நாமே அடைவோம்” என முரசறைந்தான்
பிரிட்டிசார் நெல்லையில் இருந்து கொடியவன் செயின்ட் லோகர் என்பவனை அனுப்பினார்கள் அவன் வள்ளியூர் வழியாக அந்நாளைய திருவாங்கூர் எல்லையான ஆரல்வாய்மொழி கணவாய் கோட்டையினை தாக்கி முன்னேறினான் , தொடர்ந்து கோட்டார் இரணியல் என முன்னேறினான்
ஆனால் வேலுதம்பி உதயகிரி கோட்டையிலும் பத்மநாபபுரம் கோட்டையிலும் லோகருக்கு பெரும் சவால் கொடுத்தான், அவனை வெல்லமுடியா பிரிட்டிஷ் அரசு மன்னனுக்கு நெருக்கடி கொடுக்க வேறு வழியின்றி மன்னனும் அவனை கைவிட்டான்
ஆங்கிலபடைகள் தீவிரமாக தேட கிளிமானூர் கோட்டையில் தஞ்சமடைந்தவன் இனி பெரிய போராட்டம் நடத்தமுடியாது என்பதை உணர்ந்து “என் போராட்டத்தை வருங்கால மக்கள் அறிந்து கொள்ள இந்த வாள் சாட்சியாக இருக்கட்டும்” என ஒப்படைத்துவிட்டு மண்ணடி பகவதி கோவிலுக்கு சென்றான்
அவனை அங்கே அவன் தம்பியுடன் பிரிட்டிசார் சுற்றிவளைக்க தன் தம்பியிடமே தன்னை கொல்ல சொன்னான் வேலுதம்பி ஆனால் அவன் தம்பி மறுத்த நிலையில் கோவில் சூலாயுததத்தால் வயிற்றை கிழித்து வீரசாவினை தழுவினான்
அவன் சாவுக்கு பின்பே பிரிட்டிசார் நிம்மதி அடைந்தான், வேலுதம்பி வீழ்ந்த பின்பே மயிலாடியில் தேவாலயம் கட்டபட்டது இன்னும் பல வகையான மதமாற்றங்கள் வேகமாக வளர்ந்தன, எவ்வளவோ மாறிற்று
வேலுதம்பியின் வீடு அழிக்கபட்டது, அவன் வாளை தேடியும் பிரிட்டிசாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை, வேலுதம்பி கிறிஸ்தவ எதிரி சாதி வெறியன் என்றெல்லாம் கதைகட்டபட்டு அவன் புகழ் மறைக்கபட்டது
இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
இந்திய சுதந்திர போராட்டத்தில் அவனுக்கு மிகபெரிய பங்கு உண்டு கொச்சி முதல் ஆரல்வாய்மொழி வரை பிரிட்டாரை ஓட விரட்டி பெரும் வெற்றி பெற்ற அவன் வஞ்சகத்தால் வீழ்த்தபட்டான்
பிரிட்டிசாருக்கு திப்பு சுல்தானும் வெறிகொண்டு இந்திய செல்வத்தை கொள்ளையடிக்க தேடியபொழுதுதான் பெரும் செல்வம் பத்மநாபசாமி கோவிலில் பாதுகாக்கபட்டது அதைத்தான் நாம் பார்க்கின்றோம்
அதெல்லாம் அந்நாளைய இந்திய செல்வத்தின் ஒரு துளியே என்றால் எவ்வளவு செல்வம் அந்நியரால் கொள்ளையடிக்கபட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளமுடியும்
இந்திய செல்வத்துக்கும், இந்துமதத்துக்கும், இந்து மக்களுக்கும் காவல் இருந்த அந்த பெருவீரன் சுதந்திரம் அடையும் காலம் வரை கண்டுகொள்ளபடவில்லை
சுதந்திர இந்தியாவில் மலையாளிகள் அவனை கொண்டாட தொடங்கினார்கள், கிளிமானூர் கோட்டையில் இருந்து அவன் வாள் பத்திரமாக மீட்கபட்டது
ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அந்த வாளை தேசிய அடையாளம் என சொல்லி டெல்லி அருங்காட்சியகத்தில் வைத்தார், இன்றும் வருடாவருடம் அது உதயகிரி கோட்டைக்கு கொண்டுவரபட்டு வணங்கபடுகின்றது
கேரள அரசு திருவனந்தபுரம் சட்டமன்ற வளாகத்தில் அவனுக்கு சிலை நிறுவி உள்ளது, இன்னும் எவ்வளவோ அடையாளம் அவனுக்கு உண்டு
இரணியல் தலகுளத்தில் அவன் வீடும் இப்பொழுது புதுபிக்கபட்டிருக்கின்றது
அவன் மன்னர் குலம் அல்ல, ஆனால் மன்னரும் செய்ய தயங்கிய மாபெரும் சாகசங்களை செய்து பிரிட்டிசாருக்கு சிம்ம சொப்பனமாகி சுமார் 20 ஆண்டுகாலம் அங்கே இந்துமதத்தையும் இந்து மக்களையும் காத்துவிட்டுத்தான் வீழ்ந்தான்
நேற்று (மே 6 ) அவனுக்கு பிறந்த நாள்
மண்ணடி பகவதி ஆலயத்தில் அவன் செத்துகிடந்தபொழுது தன் பக்தனை காக்கா தெய்வம் என அந்த அம்மனை பரிகசித்து மதமாற்றத்தை வேகமாக வளர்த்தனர் பிரிட்டிஷார்
ஆனால் அவன் இந்நாட்டை விட்டு சென்றுவிட்டான், அவன் ஆட்சி அகன்றுவிட்டது. ஆனால் இன்றும் என்றும் புகழுடன் அங்கே கம்பீரமாக நிற்கின்றான் வேலுதம்பி, அந்த பக்கம் இன்றும் இந்துமதம் சக்தியாய் எழும்பி நிற்கின்றது
ஆக யாருக்கு வரலாற்றில் வெற்றி என்றால் நிச்சயமாக வேலுதம்பிக்குத்தான்
மொகலாயமும் வீரசிவாஜியின் மராட்டிய அரசும் இங்கு பெரும் மோதலில் ஈடுபட்டபொழுது சிறிய சமஸ்தானங்களில் பிரிட்டிசார் எப்படியெல்லாம் புகுந்து குழப்பினார்கள், ஒரு வலுவான பாரத இந்து அரசு இருந்திருந்தால் பிரிட்டிசார் இங்கு கால்வைத்திருக்க முடியுமா?
என எல்லோர் சிந்தையினையும் கேள்வி கேட்க வைக்கும் பெரும் வரலாறு அவனுடையது
மதமாற்றத்தை பிரிட்டிசார் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதையும், இங்கே அரசுகளிலும் சமூகங்களிலும் எப்படியெல்லாம் குழப்பம் விளைவித்து இந்தியாவினை குழப்பம் மிகுந்த சமூகமாக்கினான் என்பதையும் வேலுதம்பியின் வாழ்வே நூலகமாக சொல்லும்
இந்துமதத்துக்கும் இத்திருநாட்டுக்கும் செய்யும் தியாகம் ஒருகாலமும் வீணாகாது, மரணத்தை வென்று அவனை அந்த தியாகம் காலமெல்லாம் வாழவைக்கும் என்பதற்கு சான்றாக இன்றும் கேரள மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அந்த சுத்தமான இந்து மாவீரன்.
அவன் இன்றைய தமிழகத்தின் ஆரல்வாய் மொழி வரை வந்து போராடினான், நாட்டை மதத்தை காக்க போராடினான்
ஆனால் அங்கெல்லாம் அவனுக்கு நினைவிடமில்லை ஆனால் மதமாற்றிகளுக்கு கோவில்களே உண்டு என்பதில் தெரியும் இந்நாட்டின் சிந்தனைவோட்ட வீழ்ச்சி
பிரிட்டிசாருக்கு எதிரான தேசிய போரில் ஐயா வைகுண்டர் எப்படி மதமாற்றத்தை தடுத்தாரோ அந்த அளவுக்கு தன் வாளால் பிரிட்டிசாரை எதிர்த்து நின்று நிலைத்தவன் அந்த வேலுதம்பி தளவாய்
எக்காலமும் அவன் புகழ் அய்யா வைகுண்டரை போல் நிலைத்திருக்கும்.