காளிதாசனின் ரகுவம்சம் : 09

திலீபன் நிலம் பார்த்து நின்று சிங்கத்துக்கு இரையாகத் தயாரான நேரம் அவன் மேல் சிங்கம் விழவில்லை. மாறாக, பூமழை பொழிந்தது, தேவலோக மலர்களெல்லாம் வீழ்ந்தன‌.

அவன் அதிசயித்தபோது ‘குழந்தாய்” என்றொரு வார்த்தை அவன் காதில் விழுந்தது. அமிர்தத்துக்கு ஒப்பான அந்த இனிய குளிர்ந்த மொழிகளைக் கேட்டு அவன் நிமிர்ந்தபோது சிம்மத்தை காணவில்லை. நந்தினி மட்டும் நின்றுகொண்டிருந்தது, தன் தாயினைக் காண்பதுபோல் அதனைக் கண்டான் திலீபன்.

ஆச்சரியம் அடைந்த அவனிடம் அந்த நந்தினி பேசிற்று, “சாந்தமான என் மகனே, உன் குருபக்தியினைச் சோதிக்கவே நான் அந்த மாய சிங்கத்தை உருவாக்கினேன், சோதனையில் நீ வென்றுவிட்டாய். நான் வசிஷ்டரால் காவல் செய்யப்படுபவள், அதனால் யமனே என்னிடம் நெருங்கமுடியாது எனும்போது இந்த விலங்குகள் எப்படி என்னை அணுக முடியும்?

நற்குணம் அனைத்தும் கொண்டவனே, உன் குருபக்திக்காக மட்டுமல்ல, என்மேல் நீ கொண்ட அன்பிற்காகவும் மிகவும் மகிழ்கின்றேன். அதனால் நீ கேட்கும் வரத்தைத் தர சித்தமாயிருக்கின்றேன், என்னால் பால் மட்டும் தரமுடியும் என எண்ணாதே, யாரும் தரமுடியா வரத்தை தனித்துத் தரும் சக்தி எனக்கு உண்டு” என்றது.

தன்னை அண்டி வந்த யாகர்களுக்கும் அகதிகளுக்கும் அள்ளி அள்ளி கொடுத்த திலிபனின் கை அங்கே யாசகனாய் நந்தினி முன் நீண்டு நின்றது, அவன் கேட்டான் “என் வம்சத்தை விருத்தி செய்யும்படி அளவற்ற புகழுடையவனும், எல்லையற்ற பலமுடையவனும், களங்கமற்ற அறிவுடையவனுமான ஒரு மகன் சுதக்ஷனை மூலம் எனக்கு வேண்டும், அந்த ஒரு குறையினைத் தவிர வேறு எல்லாமே எனக்கு நிறைவாய் இருக்கின்றது”

நந்தினி அவனுக்குப் பதில் மொழிந்தது, “என் அன்பிற்கு பாத்திரமானவனே, உன் குறை நீங்க இலையால் ஒரு குவளை செய்து என் பாலை கறந்து அருந்து, நீ கேட்டது கிடைக்கும்”

அவன் பணிந்து சொன்னான், “தாயே, உன் கன்று குடித்தது போக, முனிவரின் ஹோமத்துக்குத் தேவையானது போக எஞ்சியதை நான் அவரின் அனுமதியுடன் பருகுவேன், அதுவே முறையானது. மன்னன் தன்னால் பாதுகாக்கப்படும் பூமியின் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை பெற்றுக்கொள்வதுபோல் நானும் அங்கே பெற்றுக்கொள்வேன்”

அவனின் மிகப் பொறுப்பான கடமை கலந்த பதிலில் மகிழ்ந்த நந்தினி உற்சாகமாக தபோவனம் நோக்கிச் சென்றது, அவனும் அதனைப் பின் தொடர்ந்தான்.

அரசர்களுக்கெல்லாம் அரசகுருவாக விளங்கும் அவனின் பூரண சந்திரன் போன்ற முகமலர்ச்சியும், அவன் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடும் இதழ் கொடுத்த ஆனந்தமும் நல்லதொரு விஷயம் நடந்ததை எல்லோரும் அறியும்படி தெரிந்தது, அவன் வனத்தில் நடந்ததை மொழியால் சொன்னது மறுமுறை சம்பவத்தைச் சொன்னது போலிருந்தது, அவன் நடந்ததையெல்லாம் குருவிடம் முதலிலும் சுதக்ஷனையிடம் அடுத்தும் சொல்லிவிட்டு நந்தினியினை மீண்டும் வணங்கினான்.

மிக் உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தவனும் சாதுக்களிடம் தனி அன்பு கொண்டவனுமான திலீபன், கன்றுக்கும் ஹோமத்துக்கும் எஞ்சியது போக நந்தினி தனக்குக் கொடுத்த பாலை கலனில் ஏந்தினான். அது அவன் மனம்போலவும் அவன் புகழ்போலவும் வெண்மையாயிருந்தது, அதனைத் தன் குருவிற்கு நன்றி சொல்லிவிட்டு வான்நோக்கி நீர் அருந்தும் சேவல் போல் அருந்தினான்.

அவனி.ன் விரதமும் அதனால் அவன் அடைந்த முழுப் பலனையும் உணர்ந்த வசிஷ்டர் மிக மகிழ்ந்து மறுநாள் காலை அவனையும் அவன் மனைவி சுதக்ஷனையினையும் ஹோம குண்டத்தின் அருகில் வைத்து பூஜைகள் பல செய்து மிகுந்து ஆசீர்வதித்து அவர்கள் அரண்மனைக்குச் செல்ல வாழ்த்தினார்.

திலீபன் தன் மனைவி சுதக்ஷனையுடன் ஹோம குண்ட அக்னியினை வணங்கி, பின் குருவினை அவரின் பத்தினி அருந்ததியோடு வணங்கி, நந்தினியினை அதன் கன்றோடு சேர்த்து வணங்கி அருளோடு கூடிய விடைபெற்றான்.

சுதக்ஷனையுடன் அவன் தன் ரதத்தில் ஏறிச சென்றான், இனிய சத்தத்தை தாளம் போல் கொடுப்பதும், அசைவுகள் ஏதுமில்லாமல் செல்லும் அந்த ரதம், மனதில் ஓடும் தேர்போல் அலுங்காமல் குலுங்காமல் சென்றது.

அவன் தன் நகரத்தை அடைந்தபோது சிலகாலமாக அவனைக் காணாததால் தவித்த மக்கள் திருப்தியே இல்லாத அளவு உதயகால சந்திரனைப பார்ப்பது போல் பார்த்து மகிழ்ந்துகொண்டே இருந்தார்கள், சந்திதிக்காக விரதம் இருந்து இளைத்த உடலுடன் புதிய உற்சாகத்துடன் வந்த அவனைத் தீராக் கண்களுடன் பார்த்து வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள்.

இந்திரனுக்குச் சமமான செல்வமும் பலமும் கொண்ட திலீபன் தன் உயர்ந்த கொடிபறக்கும் தன் அரண்மனையினை அடைந்தான், தன் மாபெரும் ராஜ்ஜியத்தின் சுமையினை ஆதிசேஷன் பூமியினைச் சுமப்பது போல் தன் பராக்கிரமான தோள்களில் மீண்டும் தாங்கிக் கொண்டான்.

பிரம்மனின் மகனான அத்ரி மகரிஷியின் கண்களில் இருந்து விழுந்த நீரை திக் தேவியர் எடுத்து ஆகாயத்திடம் கொடுத்தனர். அத்துளிகள் ஒன்றாகி அழகான சந்திரனானது, சிவனின் நெற்றியில் இருந்து விழுந்த பொறிகளை அக்னி தேவன் கங்கையிடம் கொடுக்க சுப்பிரமணி சுவாமி உருவானார்.

அப்படியே நந்தினியின் அருளால் சந்திரனை போன்ற அழகனும் சுப்பிரமணியனைப் போன்ற வீரனுமான மகனைப் பெற்றெடுக்கும்படி சுதக்ஷனைக் கர்ப்பம் தரித்தாள், அந்தக் கர்ப்பம் திக் பாலகர்கள் எனும் இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டுபேரின் அம்சத்தோடும் இருந்தது.

(தொடரும்..)