அகத்தியர் திருமகள் துதி : 06
அகத்தியர் திருமகள் துதி : 06
“செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும்
எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.”
அழகான சிவந்த தாமரை மலரின் மகரந்தம் போன்ற பொலிவுடன் ஒளிரும் திருமமளே, நீல கடலால் சூழபட்ட இந்த உலகத்தின் இருள் அகற்றும் சூரியனாய் நிற்ளே, சந்திரனின் ஒளியாய் இருப்பவளே
தேவர்களை மகிழ்விக்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே, வனமோ மலையோ நிலமோ நீ எங்கிருக்கின்றாயோ அங்கே செலவமெல்லாம் கூடும்”
என்பது பாடலின் பொருள்
அன்னை ஞானவடிவினள், அருளை அறிவினை செல்வத்தை தருபவள், விரிந்த மலர் தேன் கொடுப்பது போல ,அன்னை எல்லா வகை ஐஸ்வர்ய்த்தையும் தருபவள்
அவள் என்றும் இளமையானவள் என்பதை அன்றுமலர்ந்த தாமரைபூ என குறிப்பால் சொல்கின்றார் அகத்தியர்
அவள் இந்த உலகுக்கு ஒளியானவள் , சூரியனும் சந்திரனும் போல பெரும் ஒளி கொடுப்பவள்
அவள் தேவர்களின் யாக நெருப்பாக இருக்கின்றாள், அவள் உலகை காக்கும் மகாலட்சுமியாகவும் இருக்கின்றாள், வனமோ மலையோ நிலமோ அவள் இருக்குமிடமெல்லாம் செல்வம் சேரும் இடமாகும் என்பது பாடலின் பொருள்
அன்னை ஞானமும் அறிவுமாய் இருக்கின்றாள், சூரிய சந்திரனின் இயக்கமாய் இருகின்றாள் என தொடங்குகின்றார் அகத்திய முனி
அதாவது அவளே ஒளி அவளே வெளிச்சம், அவளே ஞானஒளிமட்டும் அன்றி உலகை இயக்கும் பெரும் ஒளி
அவள் இங்குமட்டுமல்ல வானலோகத்திலும் தேவரின் அக்னியாக இருக்கின்றாள், அக்னி என்றால் தேவர்களின் சக்தியினை சொல்வது, அது ஒளிமட்டுமல்ல சக்தியும் கூட
அக்னிதான் தேவர்களுக்கான அவிர்பாகத்தை கொடுக்கும், அக்னிதான் தேவர்களின் இயக்கம் அதை சொல்லி அன்னை மானுடர்க்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் இயக்கும் சக்தி என்கின்றார்
அடுத்த்து அன்னை பூமியினை காக்கும் பூங்கொடி என்கின்றார். பூங்கொடி என்பது இங்கே பூமியினை காக்கும் கொடி என பொருளாகின்றது
இந்த பூமியின் எல்லா வளமும் அது நிலவளம், நீர்வளம் மலைவளம் என எல்லா வளமாகவும் அவளே இருக்கின்றாள் என்பதை சொல்வது, பூமியின் இயக்கம் அன்னை என்கின்றார்
இன்னும் அவள் இருக்கும் மலையும் வனமும் நிலமும் எல்லா ஐஸ்வர்யமும் கொண்டிருக்கும் என்கின்றார்
வனம் என்பது அன்னை குடியிருக்கும் ஆலயங்கள், கடம்பவனம் என மதுரைக்கு பழைய பெயர் உண்டு, இன்னும் ஏகபட்ட வனங்களில் அன்னைக்கு ஆலயங்கள் உண்டு
அவளால் அந்த வனங்களே வணங்கபடும் ஆலயங்களாயிற்று, அவளை தேடி சென்றுதான் வனங்களில் வணங்கி அதனை ஆலயமாக்கினார்கள் மக்கள்
அன்னைக்கு “கடம்ப கானனவாசா” என்றொரு நாமம் லலிதா திரிசதியில் வருகின்றது, அதாவது அன்னை கடம்பவனத்தில் வாசம் செய்பவள் என பொருள்
லலிதா சஹஸ்கரநாமம் அவளை “கடம்ப வாசினி” என்கின்றது
அதைத்தான் நீ இருக்கும் வனம் எப்போதும் செல்வம் பெற்று வாழும் சிறப்பாக வாழும் என்கின்றார் , இது பூலோக வனம் மட்டுமல்ல எல்லா உலகின் வனமும் சேர்ந்தது
அன்னையாலேதான் வனங்கள் பல ஆலயங்காயின பெரும் பெரும் காவலை சிறப்புக்களை பெற்றன
அப்படியே அவள் இருக்கும் மலை அது பர்வத மலை முதல் எல்லா மலையும் பெருமை மிக்க தலங்களாயின பெரும் பெரும் ஆறுகளும் வளமும் கொண்டதாயின
அன்னை குடியிருக்கும் மலைஆலயங்களை பாருங்கள், கைலாசம் முதல் எல்லா புண்ணிய மலைகளை, வைஷ்ணவ தேவி ஆலயம் முதல் எல்லா மலைகளையும் நினைத்தால் அது தெளிவாகும்
அன்னை இருக்கும் நிலங்களும் வளம்பெறும் அவள் இருக்கும் வீடோ நிலமோ ஆலயமோ மகா மகா பெரிய பெரிய செல்வங்களை பெரும் என அவள் புகழை பாடுகின்றார் அகத்திய மாமுனி
அன்னை சூரியனனுக்கும் சந்திரனுக்கும் இடையில் சக்தியாய் இருப்பவள் என்பதை சகஸ்கர நாமம் “பானுமண்டல மதியஸ்தா” என்றும் “சந்திரமண்டல மதியகா” என சொல்கின்றது
அன்னை பெரும் போகத்தை தன் செல்வம் மூலம் கொடுப்பதால் அவளுக்கு “மஹா போகா” எனும் பெயரும் உண்டு
அன்னைபற்றி மஹாலஷ்மி அஷ்டகம் சொல்கின்றது, அது இந்த பாடல் வரிகளை பிரதிபலிக்கின்றது
“திருமகளே உன்னருளால் அக்னிதேவன் வாயுதேவன்
சூரியதேவன் வசுக்கள் இந்திரன் பிரகஸ்பதி
வருணன் ஏனைய தேவர்களும் சுகந்தரும்
வளங்கள் யாவையும் பெற்றுச்சுவைக்கின்றனர்.
குளிர்நிலவாய் தெய்வங்களின் ஆற்றலாய் விளங்கி
ஆதவனாய் ஒளியூட்டும் தலைவி திருமகளே
சந்திர சூர்யாக்கினி மூவரின் ஆற்றலின்
ஆற்றலான மகா லட்சுமியே உனை ஆராதிக்கிறேன்”
அன்னையால் அக்னிதேவன், வாயுதேவன், சூரிய தேவன், வசுக்கள், இந்திரன் பிரகஸ்பதி, வருணன் என எல்லோரும் அருளை பெற்று வாழ்கின்றார்கள்
சூரியனின் சக்தி நீ, நிலவின் வெளிச்சம் நீ. சூரியன் சந்திரன் அக்னி எனும் மூன்றின் சக்தி நீ என அந்த சக்தியாய் நிற்கின்றாள்
சந்திர வித்யா” என அன்னைக்கு ஒரு நாமம் உண்டு, சந்திரன் அன்னையினை வழிபட்டே தன் சக்தியினை பெற்றான் வித்தையினை பெற்றான் என்பது ஐதீகம்
அக்னி பகவான் அன்னையிடமிருந்தே தன் சக்தியினை பெறுகின்றான், நெருப்பின் சக்தி அவளே அவ்வகையில் அவளுக்கு “வஹ்ஹி மண்டல வாசினி” என ஒரு பெயர் உண்டு
அடுத்து குபேரனை சொல்கின்றார், குபேரனின் எல்லா வளத்துக்கும் செல்வத்துக்கும் அன்னையின் கடாட்சமே காரணம் அதை அன்னையின் திருநாமம் “ராஜராஜார்ச்சிதா” என சொல்கின்றது
ராஜ ராஜன் என்றால் குபேரன் என பொருள், அன்னை குபேரனால் அர்ச்சிக்கபடுபவள் என அதன் பொருள் உண்டு
சிந்தாமணி கிருதிகை என அம்ப்பிகை அமர்ந்திருக்கும் மணிகிருகம் எனும் பிரகாரத்தை தன் பரிவாரங்களுடன் குபேரன் சுற்றிவந்து வணங்குவான் என்பது லலிதா சஹஸ்கரநாமம் சொல்லும் வரி
அப்படிபட்டவள் அன்னை
கந்தர்வ லோகத்தின் கந்தர்வர்கள் அன்னையினை வணங்குவார்கள் அதனால் “கந்தர்வ சேவிதா”, நாகலோகத்தார் அவளை வணங்குவார்கள் அதனால் அவள் “நாக வர்ஷினி”
மனிதர்கள் எனும் மனுக்கள் அவளை வணங்குவதால் அவள் “மனு வித்யா”
தேவர்களோடு தேவகணங்களும் துதிப்பதால் அவள் “தேவர்ஷ்கண சங்காத ஸ்தூபமானத்ய வைபவா” எனவும் அவள் அழைக்கபடுவாள்
ஞானிகள் அவளை வணங்குவதால் அவள் “புதார்ச்சிதா” , நல்லவர்கள் அவளை வழிபடுவதால் “சிஷ்ட பூஜிதா,”
வேத அந்தணர்கள் வணங்குவதால் அவள் “த்விஜ ப்ருந்த நிவேஷிதா”
அரம்பையர் எனும் தேவமங்கையர் வணங்குவதால் அவள் “ரம்பாதி வந்திதா”, இந்திராணி தொழுவதால் அவள் “புலேம ஜார்ச்சிதா”
லோப முத்திரை அருளியதால் “லோப முத்தார்ச்சிதா”
மூன்று உலகமும் வணங்குவதால் அவள் “திரிஜெகத் வந்த்யா”
அறுபத்தி நான்கு கோடி யோகினிகள் அவளை புகழ்வதால் அவள் “மகா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கண சேவிதா”
ஒரு ஸ்லோகம் உண்டு, ஸ்ரீ வித்யா உபாசகர்கள் என்னென்ன பலன்களை பெறுவார்கள், யாரெல்லாம் மிக சிறந்த பலனை அன்னையினை வழிபட்டு அடைந்தார்கள் என்பதை சொல்லும் ஸ்லோகம் அது
“மனு சந்த்ர குபேரச்ச லோபாமுத்ரா ச
மன்மத அகஸ்திர் அக்னி ஸூர்யச்ச இந்த்ர
ஸ்கந்த சிவஸ் ததா க்ரோதபட்டாரகோ
தேவ்யா த்வாதசா மீ உபாசகா”
சிவபெருமான், முருகபெருமான், இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, குபேரன், மன்மதன், மனு, அகத்தியர், அகத்தியர் மனைவி லோபமுத்ரா, துர்வாசர் என பன்னிரெண்டு பேர் அன்னையினை வழிபட்டு அழியா இடம் அடைந்தவர்கள் என்பது பொருள்
இவர்கள் அனைவரும் ஸ்ரீ வித்யா உபாசனை செய்த்வர்கள் அதனால் அழியா புகழ் பெற்றார்கள் பெரும் சக்தி பெற்றார்கள் என்பது புராண செய்தி
அபிராமி அந்தாதி பாடல் ஒன்றும் இந்த வரிகளை சொல்கின்றது
“”ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே””
இந்த வரிகளைத்தான் கனகதாரா ஸ்ஸோத்திமும் சொல்கின்றது
“இளமையான அன்னையினை புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன்,சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன்,முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்” என பொருள்
“உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும்
வேடிக்கையாய்க் கொடுக்கும்
முரணைவெற் றிக்கொண்ட விஷ்ணுவிற் குப்பெரும்
ஆனந்தம் தந்துநிற்கும்
நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல்
நளினமாய்த் தோன்றிநிற்கும்
நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது
கணமேனும் பொழியட்டுமே
செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம்
பெற்றிடச் செய்யும்தாயே
பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத்
தருகின்ற கமலநயனீ
அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள்
அஞ்ஞானம் நீக்குபவளே
செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே
என்னையே என்றுங்காப்பாய்”