பன்னிரு ஆழ்வார்கள் : 04 திருமழிசை ஆழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 04 திருமழிசை ஆழ்வார்.
“இடங்கொண்ட கீர்த்திமழிசைக் கிறைவனி ணையடிப்போ
தடங்குமி தயத்திராமா நுசனம் பொற்பாதமென்றுங்
கடங்கொண்டி றைஞ்சுந்திருமுனிவர்க் கன்றிக்காதல் செய்யா
திடங்கொண்ட ஞானியர்க் கேயடியேனன்பு செய்வதுவே”
‘நாராயணன்படைத்தான் நான்முகனை
நான்முசனுக் கேரார்சிவன் பிறந்தானென்னுஞ்சொல்- சீரார்
மொழிசெப் பிவாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப்பரனடியேவாழ்த்து”
ஆழ்வார்களில் நாலாவதாக போற்றப்படும் இந்த ஆழ்வாரின் வாழ்வும், அவர் அடைந்த மகா சித்த நிலையும், அந்த பக்தியின் சித்தநிலையால் அவர் நீண்டு வாழ்ந்து அருளிசெய்த பாசுரங்களும் மகா ஆச்சரியமானவை.
திருமூலர் போலவே நீண்ட வாழ்வும் ஆயுளும் பெற்று 4700 ஆண்டுகள் அவர் இப்பூமியில் வாழ்ந்து இன்னும் யோக நித்திரையால் கும்பகோணத்தில் அமர்ந்திருக்கின்றார்.
ஆழ்வார்களில் முதல் மூவர் அயோ நிஜர்கள், அதாவது மானிடப் பிறப்பு அற்றவர்கள், நான்காவதான இவர் மனிதரில் உயர்ந்த யோகியும், தேவ கன்னிகையும் கூடிப் பெற்ற தேவ ரிஷி அம்சம்.
அவரின் வரலாற்றை தொடர்ந்து பார்க்கலாம்.
துவாபர யுகத்தின் முடிவு காலங்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் அவதரித்த காலங்களில்தான் இவரின் அவதாரமும் நடந்தது, அது பரம்பொருளின் சித்தப்படியே நடந்தது.
பார்கவ முனிவருக்கு சிறந்த இடத்தில் தவம் செய்ய ஆசை வந்தது, அந்த ஆலோசனையினை சக முனிவர்களான புலஸ்தியர், அங்கிரஸ், பிரம்மவருடி என பலரிடம் சொன்னார். ஆனால், யாருக்கும் பூமியில் தவம் செய்ய சிறந்த இடம் எது என முடிவுக்கு வரமுடியவில்லை.
இதனால் பிரம்மனிடமே கேட்க முடிவு செய்தார்கள், பிரம்மனும் ஒன்றுமறியாதது போல் விசாரித்தான். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு இடங்களை சொன்னார்கள், யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.
பிரம்மன் தேவலோக சிற்பியான மயனை அழைத்தான், அப்படியே தேவலோக தராசும் கொண்டுவரப்பட்டது.
“மயனே, பூமி முழுக்க முனிவர்கள் சொன்ன ஐம்பது கோடி இடங்களை ஒரு தட்டிலும் , நாம் சொல்லும் திருமழிசை எனும் புண்ணிய ஷேத்திரத்தை ஒரு தட்டிலுமாக வைத்து அளப்பாய்” என்றார்.
மயன் அப்படியே செய்ய தராசு திருமழிசை பக்கம் சாய்ந்தது, தவம் செய்ய சிறந்த இடம் திருமழிசை.
காஞ்சிபுரம் பக்கம் இருக்கும் அந்த திருமழிசைதான் தவம் செய்ய சிறந்த இடம் என பிரம்மனாலே பெரும் முனிவர்களுக்கு சொல்லப்பட்ட இடம்.
மழிசை என்றால் பூமிக்கே ஆதாரம் எனப் பொருள், இந்தப் பழம்பாடல் அந்த ஊரின் வரலாற்றை சொல்கின்றது, பிரம்மன் சொன்ன தீர்ப்பை சொல்கின்றது.
“உலகுமழிசையுமுள்ளுணர்ந்து தம்மிற்
புலவர் புகழ்க்கோலாற்றூக்க – வுலகுதன்னை
வைத்தெடுத்தபக்கத்தும்மா நீர்மழிசையே
வைத்தெடுத்தபக்கம் வலிது”
இப்படியான திருமழிசைக்கு தவம் செய்ய வந்தார் பார்கவ முனிவர், அவரின் தவம் நீண்டது, பொதுவாக யார் தவம் செய்தாலும் அதை சோதிப்பது இந்திரனின் இயல்பு.
அவன் செல்வம், ஐஸ்வர்யம், தங்கம், செல்வாக்கு, பெண்கள் என பல வகையில் சோதிப்பான். அவனின் கடைசி கட்ட ஆயுதம் தேவ கன்னியர்கள்.
இது இந்திரனின் விருப்பமோ பொறாமையோ அல்ல, ஆசையினை வென்றவர்கள் பற்றற்றவர்களே ஞானநிலை அடைய முடியும், முழு கர்மாவும் தீர்ந்தவர்களே யோகநிலை அடைய முடியும் எனும் வகையில் பகவானின் பணியாள் அந்த இந்திரன்.
அப்படி அவன் எல்லா வகையிலும் சோதித்து பார்த்தான். முடியவில்லை. ரம்பை, ஊர்வசி, மேனகை என அனுப்பிபார்த்தான். அப்போதும் பார்கவ முனிவரை அவனால் அசைக்க முடியவில்லை.
கடைசியில் கனகாங்கி எனும் அதி தேவதையினை அனுப்பினான், அவள் மோகினி அம்சம் கொண்டவள், அவளிடம் வீழ்ந்தார் பார்கவ முனிவர்.
ஒரு விஷயம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும். பரம்பொருள் ஒரே ஒரு காட்சியில் பல விஷயங்களை ஞானமாக செய்துமுடிக்கும், மானிட கண்களுக்கு அது புரியாது.
விஸ்வாமித்திரர் மேனகையிடம் வீழ்ந்தார் என்றால் அது அவர் வீழ்ச்சி அல்ல, அவர் வம்சமே பரதனாக வந்து பரத கண்டத்தை ஆளவேண்டும் எனும் பகவானின் திட்டம் அது.
பெண் என்றால் பெண் ஆசை மட்டுமல்ல, பெண்ணால் உருவாகும் சந்ததி ஆசையினையும் அந்த கர்மாவினையும் சேர்த்து அவர்கள் நீக்கி ஞானம் பெறும் இடம் அது.
விஸ்வாமித்திரருக்கு அதுதான் நடந்தது. அவர் பெண்ணாசை, பந்தபாசம் என எல்லாம் அறுத்துவிட்டு சென்றார், பார்கவ முனிக்கும் அதே காட்சி நடந்தது.
அப்படி பிறந்த பிள்ளை பிண்டமாய் பிறந்தது. அது தைமாதம் மக நட்சத்திரமன்று அவதரித்தது.
தன் கடமை முடிந்ததும் கனகாங்கி தேவலோகம் சென்றாள், பார்கவ முனிவருக்கு அப்பிண்டத்தை ஒரு மூங்கில் காடுகள் நிரம்பிய இடத்தில் இட உத்தரவு வந்தது.
அப்படியே அந்தப் பிண்டத்தை ஒரு மூங்கில் மரத்தடியில் வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். அந்த பிண்டம் ஏன் உலகுக்கு வந்ததோ அக்காரியத்தை செய்யும்படி திருமகளே வந்தாள்.
அவள் அங்கிருக்கும் அதாவது திருமழிசையில் இருக்கும் ஜெகநாதன் ஆலயத்தில் நாதனுடன் அமர்ந்திருப்பவள், அவளே நேரில் வந்தாள்.
காரணம் பிறந்திருப்பது திருமாலின் திருவாழி எனும் சக்கராயுத அம்சம், அது இடைவிடாமல் பகவானின் அருளை தன் ஆற்றலால் போற்றி காக்கும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
அன்னை தன் கையால் அப்பிண்டத்துக்கு நீர் தெளித்தாள், அவளால் ஆசீர்வதிக்கபட்டதும் அப்பிண்டம் குழந்தையாய் மாறிற்று. அன்னையே அதன் பசிதீர்த்தாள், பின் அவ்விடம் விட்டுவிட்டு அரூபமாய் நின்று காத்தாள்.
அக்காட்டில் மூங்கில் வெட்டச் சென்ற திருவாளன் என்பவன் அக்குழந்தையினைக் கண்டான். அவன் பெரும் பக்தன். ஆனால், வாரிசு இல்லாமல் தவித்து வந்தான், அவன் தன் மனைவி பங்கயச்செல்வியிடம் இது பகவான் நமக்கு கொடுத்த குழந்தை என கொண்டு சேர்த்தான், அக்குழந்தை அங்கே வளர ஆரம்பித்தது.
அது தெய்வீக குழந்தையாகவே வளர்ந்தது. பெரும் முனிவரின் யோகசக்தியும், தேவலோக அதிதேவதையும் கலந்து பெற்ற குழந்தை, அன்னை திருமகளே பால்புகட்டிய குழந்தை என்பதால் அது வேறு உணவு எதையும் ஏற்கவில்லை.
இப்பிறப்பிற்கு தேவையான எல்லா சக்தியும் பெற்றுவந்தது போல் அது உண்ணாமலே வளர்ந்தது, எதுவும் அதற்கு தேவைப்படவில்லை.
காற்றிலும் சூரிய ஒளியிலுமே அது தனக்கான சக்தியினை பெற்றுக்கொண்டது, அப்படியே வளர ஆரம்பித்தது.
பெற்றெடுக்கா அன்னையான பங்கயச்செல்வியிடம் வந்த பாலையோ அவள் வீட்டில் வளர்ந்த மாட்டுப்பாலையோ எந்த உணவையுமே அக்குழந்தை தொடாமலே வளர்ந்தது, வளர வளர அழகும் தேஜஸும் கொண்ட குழந்தையாய் இருந்தது.
குழந்தை பாலகனாகி பாலகன் குமரனாகும் பருவமும் வந்தது. ஆனாலும், உணவு ஏதும் அவசியமில்லாதபடி குமரன் வளர்ந்துக்கொண்டிருந்தான்.
அவன் அழகும், வசீகரமும், தெய்வீக தன்மையும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவனை தரிசித்தால் நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பல இடங்களில் வந்தது. எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்து செல்லத் தொடங்கினார்கள்.
இந்த அதிசய குமரனை காணப் பலர் வந்தார்கள், அப்படி வந்த வயதான வேளாளனும் அவன் மனைவியும் வந்திருந்தார்கள், அவர்கள் தங்கள் அன்பின் மிகுதியால் காய்ச்சிய பாலை கொண்டுவந்தார்கள்.
அதுவரை ஏதும் தொடாத குமரன் அவர்களை உற்றுப்பார்த்து அவர்களின் பூர்வ ஜென்ம விதி அவர்கள் பகவானுக்கு செய்யும் கைங்கர்யம், ஆனால் குழந்தையின்றி தவிக்கும் நிலை எல்லாம் நொடியில் உணர்ந்து அந்தப் பாலை கொஞ்சம் குடித்துவிட்டு மீதியினை அவர்களுக்கு கொடுத்தான்.
அதுவரை வாழ்வில் எதுவும் உண்ணா குமரன் முதல் முறையாக பாலை அருந்தினான், அவர்களுக்கும் கொடுத்தான்.
அந்தப் பாலை குடித்ததும் அந்த வயதானவர்களின் மூப்பு நொடியில் மறைந்தது , அவர்கள் இளம்பருவம் பெற்றார்கள், அதனை அவர்கள் உள்பட யாராலும் நம்பமுடியவில்லை.
குமரன் புன்னகைத்தான். அவர்கள் இளமை அவர்களுக்கு கிடைத்ததும் நம்பமுடியா அதிசயத்துடன் அவனை வணங்கி விடைபெற்றார்கள், அவர்களுக்குப் பிறந்த குழந்தையே கனிகண்ணன்.
அக்குழந்தை குமரன் தந்த குழந்தை, அதனால் அவனுக்கு சீடனாக அனுப்பவதே அதன் எதிர்காலம் எனச் சொல்லி, குமரனுக்காய் அதனை வளர்த்தார்கள்.
குமரனுக்கு அந்தப் பாலை குடித்தபின் ஆத்ம ஞானத் தேடல் அதிகமாயிற்று, இயல்பிலே ரிஷியின் குமாரர் என்பதால் அது பஞ்சில் நெருப்பு போல் எரிய ஆரம்பித்தது.
அவர் பின் பல பல வழிகளில் ஞானம் தேட ஆரம்பித்தார். இயல்பிலே அது அதிசய குழந்தை என்பதால் பெற்றோரும் அவனுக்கு வணங்கி வழிவிட்டார்கள்.
அக்காலத்தில் பல விதமான ஞானமார்க்கங்கள் இருந்தன. சமணம், லோகாயுதம் எனப் பல இருந்தன.
லோகாயுதம் என்பது இந்தியாவில் அன்றிருந்த ஒரு ஞானத்தத்துவ பிரிவு.
அக்கால இந்தியாவில் பல மார்க்கங்கள் இருந்தன, துவாபர யுக முடிவிலே அவை இருந்தன. சமணம் எல்லோரும் அறிந்தது, ஷன்மார்க்கம் எனும் இந்துக்களின் ஆறுபிரிவும் எல்லோரும் அறிந்தது.
இந்த லோகாயுதம் என்பது ஒருவகை நாத்திகம், அதாவது தெய்வம் இல்லை சம்பிரதாய சடங்கு அவசியமில்லை, வேதங்களோ யாகமோ வழிபாடோ வேண்டாம், இன்பமாய் இருத்தலே உலகப் பிறப்பின் நோக்கம்.
உலக ஆதாயங்களை அனுபவிக்கவே மானுடன் பிறந்திருக்கின்றான் என்பதே லோகாயுதம் என்றாயிற்று.
ஆம். இன்றைய நாத்திக கூட்டத்தின் சாயல் அன்றே இருந்தது, இங்கு எதுவும் புதிதல்ல எல்லாமே இருந்ததுதான், அது சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கும் , இந்த பூமியினை இயக்கும் சூட்சுமம் அது.
இன்றிருக்கும் நாத்திகம் போல அன்றிருந்த கொள்கையின் பெயர் லோகாயுதம், சாணக்கியன் இதனை தன் அர்த்த சாஸ்திரத்தில் சொல்கின்றான்.
யோகம், சாங்கியம் மற்றும் லோகாயுதம் என்கின்றான்.
இப்படி எல்லா வழிகளிலும் ஞானம் தேடித் தேடி அலைந்தார் அந்த பார்கவ குமாரர், அவருக்கு ஞானத் தேடல் இருந்தது, தேடினால் கிடைக்கும் எனும் சிந்தையும் இருந்தது.
ஆனால், நல்ல குரு இல்லை, வழிகாட்டி இல்லை. அதனால் அவரே எல்லா வகையிலும் முட்டி மோதிக் கொண்டிருந்தார்.
(இதைத்தான் சிலர் சிவவாக்கியார்தான் திருமழிசை ஆழ்வார் என்கின்றார்கள்.
அப்படி இருக்க வாய்ப்பு குறைவு அல்லது இல்லை. சிவவாக்கியார் மிகப்பெரிய ஞானி, ஒரு நிறைவினை தன் ஞானத்தால் அடைந்துவிட்டவர்.
முழு நிறைவு அடைந்துவிட்ட ஒருவருக்கு புதிதாக தேட அவசியம் இராது, தன்னை அறிந்தவருக்கு தன்னில் இறைவனை கண்டவருக்கு இன்னொரு தேடல் தேவையில்லை.
அதனால் சிவ வாக்கியராக நிறைவும் ஞானமும் பெற்றவர் அது போதாது எனத் தேடி திருமழிசை ஆழ்வாராக உருவாகியிருக்க வாய்ப்பில்லை.
அவர் வேறு, இவர் வேறு என்பதே நிஜம்)
சிறுவயதிலே ஞானம் தேடி அலைந்த ரிஷிகுமரார் பல மதங்களுக்குள் நுழைவதும் அங்கிருக்கும் நூல்கள் தத்துவங்களை கசடற படிப்பதும் பின் அது தனக்கு நிறைவில்லை என வெளியேறுவதும் தொடர்ந்தது.
இதனால் நிறைய அனுபவமும் இறைவன் பற்றிய கருத்துக்களும் கிடைத்திருந்தன, மற்றவர்களை விட மேம்பட்ட ஒரு அறிவு இருந்தது. ஆனால், அதுவே குழப்பமும் கர்வமுமாக அவரை ஆக்கிவைத்தது.
மிக மிக குழம்பிய நிலையில் மேற்கொண்டு தேடலில் இருந்தார்.
பொதுவாக அவர் அதிகம் கற்றதால் பலவிதமான அறிவுகள் எல்லா மதத்தில் இருந்தும் இருந்ததால் அவர் யாரிடமும் பேசவும் மாட்டார், அவரிடம் யாரும் பேசவும் மாட்டார்கள்.
இந்நிலையில்தான் வழிதவறிய மான்போல் அலையும் அவரை, கடலில் பொழியப் போகும் மேகம் போல திசைமாறி சென்ற அவரை நல்வழிப்படுத்த முனைந்தனர் முதல் ஆழ்வார்கள் மூவரும்.
ஆம். அவர்கள் அப்போது பூமியில் இருந்தார்கள். அவர்களில் பேயாழ்வார் இவரை ஆட்கொள்ள சித்தமானார், இவரே வலிய அவரிடம் சென்று வாதம் செய்யும்படி ஒரு காட்சி நடத்தினார்.
அதன்படி பேயாழ்வார் ஒரு செடியினை தலைகீழாக நட்டுவைத்தார், அதன் வேர் மேல் பக்கம் இருந்தது, பலமுறை அற்று கட்டப்பட்ட ஒரு கயிற்றில் ஒரு ஒட்டை குடத்தில் நீர் இறைத்து இந்தச் செடிக்கு ஊற்றுவது போல் செயல்களை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த குமாரர் இவரை நோக்கி நகைத்தார், “எனய்யா உமக்கு பித்து பிடித்துவிட்டதா, வேர் இல்லாச்செடி, அதற்கு எப்போதும் அறுந்து விழும் கயிற்றில் ஓட்டை குடத்தை கட்டி நீர் இறைத்து இது என்னய்யா கோமாளித்தனம்” என நகைத்தார்.
அப்போது பேயாழ்வார் மெல்லச் சொன்னார், “அன்பரே, என் மனதின் பித்தம் விஷயம் அல்ல, தெய்வத்தை தேடுகின்றேன் என நீ செய்யும் பித்தம் இதைவிட மோசமானது.
நீ சென்ற மார்க்கமெல்லாம் வேர் இல்லாதவை, வேர் இல்லாச் செடி வளராது. இதோ இந்த செடிக்கு நீர் ஊற்றுவதை போலத்தான் நீ செய்து கொண்டிருந்தாய்.
அதுவும் ஒருவழி இல்லாமல் பல வழிகளுக்கு சென்றாய். இந்த முடிச்சு போட்ட கயிற்றைப்போல செய்தாய். அர்த்தமில்லா வாதங்களை ஒட்டை குடம் போல் செய்தாய்.
சொல், நீ செய்தது பித்தமா? இல்லை நான் செய்வதா?
குமாரருக்கு வியர்த்துவிட்டது. இவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது என்பதை அறிந்து அவரிடம் மென்மேலும் பேசினார், அது ஒரு வைணவ தத்துவ வகுப்பாக மாறிற்று.
“தெய்வத்தை நீர் கண்டுள்ளீரா?” என இவர் கேட்க “திருகோவிலூரில் எம்பிரானை தரிசித்தவன் நான்” என இவர் சொல்ல அப்படியே பணிந்தார் குமாரர்.
அந்த இடத்தில்தான் திருமழிசை ஆழ்வார் உருவானார், பேயாழ்வாரை தன் குருவாக ஏற்றவர் உடனே நாராயணனின் பக்தனாக மாறினார்.
“அன்பனே, மரங்கள் தோன்றுவதற்கு விதை காரணமாக இருப்பதுபோல் சத்துவ குணம் உடைய பொருள் எதுவோ அதுவே உலகத்து எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் காரணமாகின்ற முதற் பொருள் ஆகும் .
அந்த முதற்பொருளே பகவான் நாராயணன், அம்முதற் பொருளை உணர்ந்து, அடைந்து, வீடு பெறுதலே ஞானத்தின் பயன் ஆகும். அதை அடைவாய் அதை நோக்கி எல்லோரையும் அழைத்தும் செல்வாய்” என அவருக்கு ஆசி கூறி முழு வைஷ்ணவராக்கினார்.
பேயாழ்வாரை சந்தித்த அந்த தருணம் முதல் தன் ஞானத் தேடல் பகவான் நாராயணனே என்பதை உணர்ந்து அப்போதிருந்து அவனை தியானிக்கத் தொடங்கினார் திருமிழிசை ஆழ்வார்.
இதனைப் பாடலாகவும் பாடிவைத்தார்.
“”சாக்கிய ங்கற்றோஞ்ச மண்கற்றோஞ் சங்கரனா
ராக்கிய வாகம நூலாராய்ந்தோம் – பாக்கியத்தாற்
செங்கட் கரியானைச்சேர்ந்தோம் யாந்தீதிலமே
யெங்கட் கரியதொன்றில்”
என தான் பலவகை மார்க்கங்களில் பல சாஸ்திரங்களை தேடிவிட்டு கடைசியில் வைணவரான கதையினை சொல்கின்றார்.
பேயாழ்வார் எனும் மூன்றாம் ஆழ்வாரே நான்காம் ஆழ்வாரை இனம் கண்டு அழைத்து வந்தார்.
இதன்பின் பெருமான் இருக்கும் ஆலயமாக செல்லத் தொடங்கியவர் முதலில் திருவல்லிக்கேணி ஆலயம் அருகே இருக்கும் “கஜேந்திர சரஸ்” எனும் பொய்கை பக்கம் சுமார் 700 ஆண்டுகள் தவமிருந்தார்.
யோகம் அவருக்கு கைகூடிற்று, திருவல்லிக்கேணி நாதனை போற்றுவதும் அவனை நினைந்து தியானிப்பதுமாக பெரிய தவத்தில் ஈடுபட்டார்.
தவம் என்றால் சோதனைகள் வரும், சோதிப்பவர்கள் வருவார்கள், அப்படி முதலில் வந்தவர் கொங்கண சித்தர்.
கொங்கண சித்தர் ரசவாத வித்தைகளில் தேர்ந்தவர், அவரிடம் உள்ள மூலிகை உருண்டையினை நீரில் கரைத்து இரும்பின் மேல் ஊற்றினால் அது தங்கமாகிவிடும், அப்படி ஒரு ரகசியத்தில் தேர்ந்திருந்தார், இதனால் கர்வமும் இருந்தது.
அவ்வழி வந்தவர் ஏதோ தவ வலிமை ஒன்றின் ஈர்ப்பு தெரிய இவரிடம் வந்தார்.
ஏதோ ஒன்றை இவர் தேடுவதாக நினைத்தவர் தன் வலிமையினை காட்ட ஒரு குளிகையினை கொடுத்து, “முனிவரே உமக்கு நாம் ஒரு சகாயம் செய்ய நினைக்கின்றோம், இதோ இரு குளிகைகள் தருகின்றேன், நீர் எவ்வளவு பெரிய இரும்பின் மேல் இதனை கரைத்து ஊற்றினாலும் அது தங்கமாய் மாறும்.
உமது தவக்கோலத்துக்கு என் காணிக்கை” என இரு குளிகைகளை முன்வைத்தார்.
பதிலே பேசாத திருமழிசை ஆழ்வார் தன் கொண்டை ஊசியினை கழற்றி அவரின் கமண்டலம், தண்டம் எல்லாம் தொட்டார், உடனே எல்லாம் பொன்னாயிற்று.
அதிர்ந்தார் கொங்கண முனி. நாமோ இரும்பை தங்கமாக்கும் ரவசாதம் தெரிந்தவர், இவரோ எல்லாம் தங்கமாக்கும் மகா வித்தை தெரிந்தவர், இவரிடம் விளையாடிவிட்டோமோ என அஞ்சி மன்னிப்பு கோரினார்.
திருமழிசை ஆழ்வார் ஒரு பார்வை பார்த்தார் கமண்டலமும் தண்டமும் இயல்பு நிலைக்கு வந்தன. “எல்லா ரசவாதமும் எனக்கும் தெரியும். ஆனால், நான் தேடுவது செல்வத்தை அல்ல, செல்வத்தில் எல்லாம் பெரும் செல்வமான நாராயணனை , நீயும் அப்படியே தேடு” எனச் சொல்லி வாழ்த்தினார்.
கொங்கணரை போல இன்னொரு சித்தர் அப்பக்கம் வந்தார், அவர் பெயர் சுக்திகாரன், இந்த சித்தர் புலியினை வசப்படுத்தி அதன் மேல்தான் வருவார், யார் என்ன கேட்டாலும் அருள்வார்.
அப்படியானவர் அப்பக்கம் வரும்போது ஒரு ஈர்ப்பு அலையினை கண்டார், பிரபஞ்சத்தில் கலந்த சித்தர்களால் இன்னொரு சித்தரின் தியானத்தை எளிதாக மனதால் அறியமுடியும்.
அப்படி ஒரு ஈர்ப்பு இப்பக்கம் இருப்பதை அறிந்தவர், யார் இந்த முனி என கண்டுகொள்ள இவரிடம் வந்தார், வந்தவர் தன் கையினை நீட்டினார், அதில் ஒரு பட்டாடை இருந்தது.
அதை திருமழிசைஆழ்வாரை நோக்கி வீசி, “ரிஷியே இதை உடுத்திக்கொள்ளும், ஏன் அரையாடையுடன் இருக்கின்றீர், இதோ என் காணிக்கை , இதை அணிந்தால் நீர் ஜொலிப்பீர்” எனச் சொன்னார்.
அவன் சொல்லிமுடிக்குமுன் நவரத்தின கல் போல் ஜொலித்தார் திருமழிசை ஆழ்வார், சுத்திகார சித்தர் அரண்டே போனார்.
பின் புலியில் இருந்து இறங்கியவன் ஒரு மாணிக்க மாலையினை வரவழைத்து பிரார்த்தனை செய்ய அதையாவது பெற்றுகொள்ளும்படி சொன்னான்.
திருமழிசை ஆழ்வார் தன் துளசி மாலையினை கழற்றினார், அது வைரமாலையாக ஒளிவீசிற்று, அவர் சொன்னார், “அன்பனே எனக்கு மாணிக்கமும் கல்லும் மண்ணும் எல்லாமும் ஒன்றுதான், நான் இதையெல்லாம் கடந்த நிலையில் எம்பெருமானை தேடிக்கொண்டிருக்கின்றேன், இதெல்லாம் எனக்கு அவசியமில்லை, மரத்தின் முன் மாணிக்கத்தை போட்டால் என்ன பலன்.
அது தன்போக்கில் வான் நோக்கி வளரும், என் தேடல் வேறப்பா, நீயும் அந்த பரமனைதேடு” எனச் சொல்லி அனுப்பிவைத்தார்.
அந்தச் சித்தனும் அஞ்சி பின்வாங்கி சென்றார்.
இதெல்லாம் என்ன சொல்கின்றது என்றால் துவாபர யுகமுடிவில் இப்படி மாய வேலைகள் செய்யும் சித்தர்கள் இருந்தார்கள், அவர்கள் தங்கள் தவ வலிமையில் இப்படி சித்துவேலைகளை செய்து தங்களை பெரியவர்களாக காட்டிக்கொண்டார்கள்.
சில நல்ல விஷயம் செய்தாலும் இப்படி லௌகீக விஷயங்களை தேடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களை விட பலநூறுமடங்கு சக்தி கொண்டவராக இருந்தாலும் லௌகீக இன்பங்கள் எல்லாம் தள்ளி பரமனே முக்கியம், பரந்தாமனே முதல் செல்வம் என வாழ்ந்து கொண்டிருந்தவர் திருமழிசை ஆழ்வார்.
இப்படி இரு சித்தர்களுடன் அவர் சோதனை நிறையவடையவில்லை, கடைசியில் அவரை சோதிக்க பரமசிவனே வந்தார்.
ஆழ்ந்த தியானத்தில் இருந்த அவரிடம் வந்த சிவன் “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” எனக் கேட்டார், அவர் சிவம் என அறிந்திருந்தும் திருமழிசை ஆழ்வார் தான் பகவான் நாராயணனை காண தவம் இருப்பதாக சொல்லி அவர்போக்கில் இருந்தார்.
நக்கீரரிடம் செய்த வாதங்களை திருமிழை ஆழ்வாரிடமும் சிவபெருமான் காட்டினார், “பக்தனிடம் வந்துவிட்டு என்னால் ஒன்றும் கொடுக்காமல் போகமுடியாது, ஏதாவது ஒன்றை கேள்” என்றார்.
“ஊசியுடன் வரும் நூலை போல் வரும் இந்த பிறப்பை வெட்டிவிடமுடியுமா, இந்த ஊசியில் இருந்து நூலை வெட்டிவிடமுடியுமா?” என்றார் திருமழிசை ஆழ்வார்.
சிவனுக்கு அவரின் பதிலின் அர்த்தம் புரிந்தது, அதாவது பெருமாளை தரிசிக்காமல் இவர் பிறவி முடியாது, அதனால் இப்போது இவருக்கு பிறவி முடிப்பு செய்யமுடியாது என்பதை அறிந்து புன்னகைத்தார்.
ஆனாலும், சிவன் அல்லவா? கொஞ்சம் விளையாடினார், “பார்கவன் குமாரனே, எம்மை பரிகசிப்பாயோ நாம் முக்கண்ணன், நாம் நெற்றிதிறந்தால் எவராயினும் பஸ்பமே, மன்மதன் நிலைக்கு நீ ஆளாகிவிடுவாய்” எனக் கோபத்தில் சொன்னார்.
“எம் பெருமானை தரிசிக்காமல் உம் அக்கினி கூட எம்மை நெருங்காது” எனச் சொல்லிவிட்டு கண்களை மூடிகொண்டார், சிவன் அவரை சோதிக்கும் பொருட்டு நெற்றிக்கண்ணை திறந்தார்.
அந்த அக்னி அவரை சுடவில்லை, அவரின் பக்தியின் உச்சத்தை கண்டு நெகிழ்ந்த சிவபிரான், “என் நெற்றிக்கண்ணுக்கும் அசையாத உனக்கு காலில் ஒரு கண்ணை என் ஆசீர்வாதமாய் தருகின்றேன்” என் சொல்லி வாழ்த்தி விடைபெற்றார்.
ஆம். சிவனே வந்து சோதித்தவர் திருமழிசை ஆழ்வார், சிவனே வந்து சோதித்ததால் அவர் “பக்திசாரார்” என அழைக்கப்பட்டார்.
இப்படி எல்லா சோதனைகளையும் அவர் வெற்றியாக திருவல்லிகேணி குளத்த்ருகே அமர்ந்து கடந்தார், 700 ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தார்.
துவாபர யுகத்தில் மக்களின் ஆயுள் அதிகம், அதனாலும் யோகத்தில் மிகப் பெரிய நிலையினை இவர் எட்டியிருந்ததாலும் இதெல்லாம் சாத்தியம்.
பின் தன் திருபயணத்தை தொடர்ந்தவர் ஒரு மலை குகையில் தவமிருந்தார், அப்போது அவரின் மேனி அக்னி பழம் போல் சிவந்தது.
அவ்வழி வந்த முதாலாழ்வார் மூவரும் அந்த தேஜஸை கண்டு பணிந்தனர், அந்த மூவரோடு நால்வராக சிலநாட்கள் அவர் அளவாளாவினார், பகவானை பற்றி நிறைய பரிமாறிகொண்டார்கள்.
பெருமாளுக்காக வாழ்ந்த அந்த நால்வருடன் அரூபமாய் வந்து பகவானும் நின்றதை அவர்கள் அறிந்தும் கொண்டார்கள்.
அடிக்கடி தெய்வ தரிசனம் தெரிவதும், தெய்வக் குரல் கேட்பதும், இறைவனோடு நண்பன் போல் பழகுவதும் அவர்களுக்கு எளிதாயிற்று.
பின் கொஞ்சகாலம் திருமழிசை வந்து தங்கியிருந்தார், பின் வழிபயணமாக செல்லும் போது திருமண் எங்கே எடுத்து இடுவது என சிந்தித்தார், அப்போது பெருமான் அவரிடம் திருவெஃகா குளத்தருகே உள்ள துளசி செடியில் திருமண் எடுக்கச் சொன்னார்.
அப்படி வந்தவர் அந்த திருவெஃகா கோவிலிலே தங்கிவிட்டார், அப்போதுதான் முன்பு அவரால் பால் கொடுக்கப்பட்ட பெற்றோர்கு பிறந்த கனிகண்ணன் பெற்றோர் சொல்லிவிட்டு மறைந்தபடி இவரிடம் சீடராக வந்து சேர்ந்தார்.
இருவரும் அந்த திருவெஃகா பெருமாளை போற்றி வணங்கி பாடி திருப்பணி திருவழிபாடு செய்து வந்தனர், அங்கும் 700 ஆண்டுகாலம் அவர் இருந்ததாக வரலாறு சொல்கின்றது.
இந்த வேளையில்தான் ஒரு வயதான மூதாட்டி அங்கே ஆலயபணி செய்துவந்தாள், அவளின் வயதான மூப்பினால் தளர்ச்சியுற்றவள் அடிக்கடி வேலை செய்யமுடியாமல் தளர்ந்தாள்.
இதுவரை அவள் செய்த பெருமாள் பணிக்கும், இன்னும் செய்யவேண்டிய கடமைக்கும் அப்படியே முன் ஜென்மத்தில் அவளுக்கு இருந்த புண்ணியத்துக்கும் சேர்த்து அவளை அழகிய இளம்பெண்ணாக மாற்றினார் திருமழிசை ஆழ்வார்.
மாற்றியவர் அங்கே அருகே இருந்த வனத்தில் ஆழ்ந்த தவநிலைக்கு சென்றார், கனிகண்ணன் மட்டும் ஆலயப் பணிகளை அன்றாடம் செய்தான்.
அப்பெண் பெரும் அழகியானதை அறிந்த மன்னன் அவள் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்துகொண்டு ராணியாக்கினான், கோவில் வேலை செய்து கொண்டிருந்த ஏழை மூதாட்டி திருமழிசை ஆழ்வார் அருட்பார்வையால் ராணி என்றானாள்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு இளமை அப்படியே இருந்தது. மன்னனோ மூப்படைய ஆரம்பித்தான், அவன் தானும் இளமையினை மீட்க வேண்டி கனிகண்ணனிடம் வந்து தன்னையும் அவன் குருநாதர் திருமழிசை ஆழ்வாரிடம் சொல்லி இளைஞனாக்க கோரினான்.
ஆனால், கனிகண்ணன் மறுத்தான், தன் குருநாதர் செப்புவித்தைகாரர் அல்ல, இந்த மூதாட்டிக்கு பகவான் உத்தரவுப்படி அவர் இளமையினை திருப்பி கொடுத்தார், அப்படி உமக்கு உத்தரவு வந்தால் தானே செய்வார்.
நீர் மன்றாட வேண்டியது எம்பெருமானிடமே அன்றி எம்மிடம் இல்லை என தைரியமாக சொன்னான்.
ஆனால், மன்னன் விடுவதாக இல்லை, அவர் வேண்டாம் நீர் உம் வாயால் எம்மை வாழ்த்திபாடினாலே நான் என் இளமையினை திரும்ப பெறுவேன், பாடும் என வேண்டினான்.
நாராயணனை பாடும் வாயால் மானிடரை பாடமாட்டேன் என்றான் கனிகண்ணன்.
மன்னனின் வேண்டுதல் இப்போது கட்டளையாயிற்று, உத்தரவுமாயிற்று. ஆனால், கனிகண்ணன் பகவானை பாடும் வாயால் மன்னனை பாடமாட்டேன் என உறுதியாய் இருந்தான்.
“மன்னனும் தெய்வமும் ஒன்று என அறியாதவனே மன்னனை பற்றி பாடு” என நிர்பந்திக்கபட கனிகண்ணன் பாடினான்.
“ஆடவர்கள் எங்ஙன் அகல்வார் அருள்சுரந்து
பாடகமும் ஊரகமும் பாம்பணையும் – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்றார் பொழிற்கச்சி மாண்பு”
இப்படி தன்னைப் பாடாமல் பெருமாளை பற்றி பாடியவன் மேல் ஆத்திரம் கொண்ட மன்னன், ” உன்னை வெட்டிபோட எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அடியாரை கொல்லக்கூடாது என்பதால் திமிர் நிரம்பிய உன்னை நாட்டை விட்டு விரட்டுகின்றேன், உடனே வெளியேறு” என்றான்.
அதன்படி தவத்தில் இருந்த தன் குருநாதர் திருமழிசை ஆழ்வார் முன் சென்று, ‘மன்னனே சொல்லிவிட்டான் இனி நான் வேறுநாட்டுக்கு செல்கின்றேன்’ எனக் கிளம்பினான் கனிகண்ணன்.
அவன் கிளம்புவதை அறிந்த திருமழிசை ஆழ்வார் நேரே அந்த ஆலய சன்னதிக்கு சென்றார், தன்னால்தான் இந்த நிலை உண்டாயிற்று, தன்னாலே கனிகண்ணன் அரசகோபத்தை சம்பாதிக்கின்றான் என்பதை உணர்ந்தவர் பகவான் முன் பாடினார்,
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
வெறுமனே கனிகண்ணன் போகின்றான் அவனோடு நானும் போகின்றேன், எங்களோடு நீயும் வா, எனச் சொல்லி பாடிவிட்டு கிளம்பினார்.
என்ன ஆச்சரியம்? அந்த விஷ்ணுவும் பாம்புபடுக்கையினை சுருட்டிக் கொண்டு அவர்பின்னால் சென்றார், கோவிலில் எதுவுமில்லை. யாருமில்லை.
மூவரும் நடந்து சென்று ஒரு இடத்தில் இரவில் தங்கினார்கள். ஓர் இரவில் அவர்கள் இருந்த இடமே ” ஓர் இரவு இருக்கை” , “ஓர் இருக்கை” என்றாகி இப்போது ஓரிக்கை என அழைக்கப்படுகின்றது.
நடந்ததை கேள்விப்பட்ட மன்னன் அதிர்ந்தான். காரணம், அந்த விஷ்ணுசிலை இருவர் தூக்கி செல்லும் படியானது அல்ல, பெரும் யானையும் வலிமையும் வேண்டும்.
இன்னொன்று அது உடைக்கப்பட்டு எடுக்கப்பட்ட அடையாளமே இல்லை, ஒருவன் தூங்கி எழுந்து பாயையினை சுருட்டி எடுத்து சென்றது போல் இருந்தது, இன்னும் பெருமாள் பாம்பணையினை சுருட்டி கொண்டு அவர்களோடு நடந்ததை பார்த்த சாட்சிகளும் இருந்தார்கள்.
நடந்த தவற்றை எண்ணி ஓடோடிய மன்னன் அவரைப் பணிந்து மன்னிப்பு கோரி மீண்டும் திருவெஃகா வரக் கெஞ்சினான், அதன்படி பெருமாளை நோக்கிப் பாடினார் திருமிழிசை ஆழ்வார்.
“”கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
அவ்வளவுதான் அந்தப் பெருமாள் பழையபடி திருவெஃகாவில் குடியேறி முன்புபோல் சயனிக்கத் தொடங்கினார், திருமழிசை அழ்வார் சொன்னபடியெல்லாம் கேட்டதால் அவர் “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்றானார்.
அப்பெயர் இன்றும் நிலைத்துவிட்டது.
இப்படி திருவெஃகாவில் 700 வருடம் தங்கியிருந்து பெரும் காரியங்களை பெருமாளுடன் செய்தவர் திருமழிசை ஆழ்வார்.
பின் அங்கிருந்து கும்பகோணம் செல்ல அவருக்கு உத்தரவு வந்தது. கும்பகோணம் நோக்கி செல்லும் போது பெரும்புலியூர் எனும் ஊரில் அவர் தங்க நேர்ந்தது. வழமைபோல் உஞ்சவிருத்தி செய்து கொண்டும், யோக முனிக்குரிய சாங்கிய வாழ்வில் ஒரு புள்ளியும் குறையாமல் அங்கும் தன் சன்னியாசம் காத்தார்.
அவர் சக்தி பற்றி முன்பே கண்டோம். அவரால் தங்கமழை பெய்விக்கமுடியும், யாரும் செய்யாதபடி ஒருவன் இளமையினையே திருப்பி கொடுக்கமுடியும், அவ்வளவு பெரும் சக்தி கொண்டவர் ஒரு பக்தனின் ஒரு அடியாரின் தர்மம் எதுவோ அதன்படி யாசகம் பெற்று வலம் வந்து கொண்டிருந்தார்.
ஒரு இடத்தில் யாகம் நடந்து கொண்டிருந்தது, அங்கிருந்த வேத விற்பன்னர்கள் இவர் யாரோ வேதம் அறியாதவர், அசுத்தமானவர் இங்கே அவர் வந்தால் தீட்டு என விரட்டிவிட்டார்கள்.
அவரின் அருமையினை அறியாதவர்கள் ஆணவத்தில் அந்த பெரும் தவறை செய்தார்கள்.
ஆழ்வாரும் அதுபற்றி கொஞ்சமும் கலங்காது தன் போக்கில் நகர ஆரம்பித்தார். ஆனால், வேதம் ஓதி யாகம் செய்தவர்களுக்கு மந்திரம் தடைபட்டது, எதில் விட்டோம் எதில் இருந்து தொடங்க வேண்டும் எனக் குழம்பினார்கள்.
அப்போது யாக நெருப்பில் இருந்து ஒரு குரல் கேட்டது “வந்த விருந்தினரை அவமானப்படுத்தினால் இப்படித்தான் நிகழும், அவரை அழைத்து வந்து கௌரவம் செய்யுங்கள்”
அவ்வளவுதான் அவரைத் தேடினார்கள், அதே நேரம் பெரும்புலியூர் விஷ்ணு கோவிலில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
சூரியன் இருக்கும் திசையெல்லாம் திரும்பும் சூரியகாந்தி மலர்போல, ஆழ்வார் செல்லும் திசையெல்லாம் பகவானின் முகம் திரும்ப ஆரம்பித்தது.
ஒரு பக்கம் இதன் காரணம் புரியாமல் தெய்வகுற்றம் என பக்தர்கள் அலறி அடித்து ஓடிக் குழம்ப, இன்னொரு பக்கம் ஆழ்வாரை தேடி அந்த வேத விற்பன்னர்கள் ஓடினார்கள்.
கடைசியில் அவரை ஒரு தெருவில்கண்டு பணிந்தார்கள். ஆழ்வார் புன்முறுவல் செய்தார். அவரை அந்தணர்கள் பணிந்த நேரம் விஷ்ணுபெருமான் முகமும் முன்புபோல் இயல்பாயிற்று.
அதன் பின் அவரை ஊர்வலமாக அழைத்துவந்து யாக குண்டத்தில் வைத்து கொண்டாடினார்கள். அழ்வார் அங்கு கருப்பு நெல் ஒன்றை பிளந்து காட்டினார், அதில் எந்த மந்திரத்தில் அந்தணர்கள் பூஜையினை நிறுத்தினார்களோ எதில் தொடங்க வேண்டுமோ அந்த மந்திரம் இருந்தது.
அதனைக் கண்ட அந்தணர்கள் அதில் இருந்து மந்திரம் சொல்லத் தொடங்கினார்கள், அவரை முக்கிய ஆசனத்தில் அமர வைத்து கொண்டாடினார்கள்.
ஆனால், அங்கும் சில எதிர்ப்புகள் இருந்தன, இவன் மாயக்காரன் மந்திரவாதி, அந்த மாய மந்திரம் செய்பவனை யாக சாலையில் வைத்துக் கொண்டாடுவதா?
ஊர் பெயரோ அடையாளமோ இல்லாதவனை யார் எனத் தெரியாதவனை இப்படி கொண்டாடுவதா? இவனுக்கு என்ன தகுதி உண்டு ?
எனப் பெரும் குரல்கள் எழுந்தன. சிசுபாலன் கிருஷ்ண பரமாத்மாவினை அவமானப்படுத்தியது போல் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
அவர்களைக் கண்டு புன்னகைத்த ஆழ்வார், தான் மாய மந்திரவாதி அல்ல, இவர்களை மயக்க வந்தவனும் அல்ல ,நான் யார் என்பதை நீயே சொல் பகவானே என்றபடி பாடினார்.
“”அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்மை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே”
என உளமுருகப் பாடியபோது அவரின் திருமேனியில் பெரும் ஜோதி எழும்பி அந்த ஜோதியில் பகவான் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் சயன கோலம் எல்லோருக்கும் தெரிந்தது.
கூட்டம் அப்படியே மெய்மறந்து அவர் காலில் விழுந்து பணிந்து கதறி அவர் பகவானின் பக்தர், அவரைத் தவிர யாகத்தின் பலனை பெற உரிமையுள்ளவர் யாருமில்லை எனச் சொல்லி அவருக்கே எல்லாம் கொடுத்தது.
அங்கிருந்து பல ஆலயங்களுக்கு சென்று மங்கள சாசனம் செய்தார்.
திருவரங்கம், அன்பில், திருப்பேர் நகர், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல்,.திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெஃகா,திருவெவ்வுளூர்(திருவள்ளூர் ), திருவேங்கடம் எனப் பல ஆலயங்களுக்கு சென்று பகவானை வழிபட்டு மங்கள சாசனம் செய்தார்.
பின் திருப்பாற்கடல், துவாரகை, பரமபதம் எனும் வைகுண்ட தலங்களுக்கும் பாடினார்.
தன் அந்திம காலத்தில் குடந்தை அதாவது கோவில்கோபுர கலயக் குடங்கள் அதிகம் உள்ள குடந்தையில் கழிக்க அவருக்கு உத்தரவு கிடைத்தது, குடந்தை என்பதே இன்றைய கும்பகோணம்.
அந்த கும்பகோணத்தில் சார்ங்கபாணி கோவிலுக்குச் சென்று பாடி மங்கள சாசனம் செய்தார், அங்கே பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருந்தார்.
அவரைப் பாடினார் ஆழ்வார்.
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே”
அதாவது மிகுந்த களைப்பால் இப்படி உறங்குகின்றாயோ எம்பெருமானே, இப்படி நீ உறங்கிவிட்டால் எங்களை யார் காப்பது? எழுந்து பேசு என் பகவானே எனப் பாடினார்.
இப்பாடல் பாடப்பெற்றதும் பகவான் மெல்ல எழுந்து பாதி படுத்த நிலையில் காட்சியளித்தார், அந்த கோலம் இப்போதும் உண்டு.
முழு சயன கோலத்தில் இருந்த பெருமான் ஆழ்வார் பாடியதற்காக கொஞ்சம் எழுந்து காட்சியளித்தார்.
அந்த சாரங்க பாணி ஆலயத்தில்தான் தான் எழுதிய எல்லா ஏடுகளையும் எல்லா பாடல்களையும் பகவான் முன் வைத்தார்.
அவற்றில் பிறக்க இருக்கும் கலிகாலத்துக்கு எது தேவை, எவை எல்லாம் காக்கப்பட வேண்டும் என்பதை பகவானே முடிவு செய்யும்படி பிரார்த்தித்தார்.
அதன்படி பகவான் கட்டளைப்படி எல்லா ஏடுகளையும் காவேரியில் எறிந்தார், கலியுகத்தில் எது காக்கப்படவேண்டுமோ அந்த ஏடுகள் மட்டும் திரும்பி வந்தன.
அவைதான் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த கும்பகோணத்திலே முழு தியானத்தில் இறங்கினார் ஆழ்வார், சுமார் 2300 வருடங்கள் அவர் அங்கே தவமிருந்தார்.
கலியுகம் பிறக்கும் நேரம் அவர் யோக நிஷ்டையின் உச்சத்தில் இருந்தார். கலியுக கொடுமைகளில் இருந்து தன்னையும், பகவானையும் காக்கும் பொருட்டு அவர் அங்கேதான் நிலை கொண்டிருக்கின்றார்
அவர் இன்னும் மரிக்கவில்லை, வைகுண்டம் ஏகவில்லை. மாறாக, கலியுகத்தில் அவர் பூமிக்கு கீழ் தவக்கோலத்தில் இருக்கின்றார். அவர் தவமிருக்கும் இடத்தின் மேல்தான் சன்னதி கட்டப்பட்டுள்ளது.
துவாபர யுகத்தில் அவதரித்தவர் . கலியுகத்தின் தொடக்க காலத்தில் வைணவம் காக்க பெரும் அஸ்திபாரமிட்டு காவல் இருந்து சுமார் 4700 வருடங்கள் வாழ்ந்துவிட்டு இப்போது யோக நிஷ்டையில் இருக்கின்றார்.
அவர் இன்னும் தவக்கோலத்தில் இருக்கின்றார், இனி கல்கி அவதாரம் வரும்போது பகவானை தரிசித்துவிட்டு அவரோடுதான் வைகுண்டம் செல்வார்.
அதுவரை அவரின் தவம் தொடரும்.
அவரின் தவ வாழ்வு மகா பெரிது, சுமார் 4700 வருடம் இப்பூமியில் நடமாடியிருக்கின்றார், யோக சித்துக்களில் மகாபெரியவரான அவர் ஒரு வருடத்துக்கு ஒரு மூச்சுதான் விடுவார், அந்த அளவு ஞான சித்து அவரிடம் உண்டு.
இப்போதும் மண்ணுக்கு அடியில் அவர் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கின்றார். அந்த சன்னதியில் அவர் உண்டு.
அவர் கலியுகத்தின் காவல் தெய்வமாகிவிட்டார், அவர் சன்னதியில் சென்று வழிபட்டால் பகவானின் அருளில் கலிகால கொடுமையும் வலியும் பெரிதாக தெரியாது. பெரும் ஆறுதல் கிட்டும்.
அவரை நம்பி பணிவோர்க்கு எல்லா நலனும் அருளும் கொடுக்க அவர் காத்துக் கொண்டிருகின்றார். இன்றும் அவர் அங்கே தவக்கோலத்தில் அருள் பாலித்து கொண்டே இருக்கின்றார்.
அவரின் சன்னதி கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் வடக்கில் சாத்தார தெருவின் தென் முனையில் உள்ளது. அங்குதான் திருமழிசை பிரான் திருக்கோவில் அமைந்துள்ளது.
அங்கு அவர் பூமிக்கு அடியில் தவம் செய்யும் இடத்தின் மேல் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அது சமாதி அல்ல, அவர் இன்னும் சமாதி ஆகவில்லை, கல்கி பகவான் வருமளவும் அவர் அங்கே யோக நிஷ்டையில் இருகின்றார். கலி காலத்தில் மக்களை காத்தபடி அமர்ந்திருக்கின்றார்.
கலியினை அழிக்க பகவான் அவதாரமாய் வரும்போது அவரும் எழுந்து ஒளிவீசி வருவார், பகவானின் சக்கரத்தின் அம்சமான அவர் பெருமளவில் அந்த பெரும்போரில் பெரும் சக்தியாய் எழுந்து பிரகாசிப்பார்.
கலி அழிய அவர் போராட்டமும் உண்டு, அதுவரை பகவானின் சக்கரமாக பக்தர்களை காத்து நிற்பார். கலிகால காவல் சித்தரும் ஆழ்வாரும் அவர்தான், அவரை அண்டினால் முழு பலன் இந்த கலிகாலத்தில் நிச்சயம்.
கும்பகோணம் செல்வோர் அவரின் சன்னதியினை காணத் தவறாதீர்கள், பகவான் நாராயணன் பெயரை சொல்லி அவரிடம் மன்றாடினால், மனமுருக மன்றாடினால் எல்லா நலன்களும் கிடைக்கும், உங்கள் கஷ்டமெல்லாம் தீரும்.
கும்பகோணம் செல்பவர்கள் அவர் சன்னதிக்கு சென்று அவரை நினைந்து வழிபடுங்கள். ஒரு விளக்கு ஏற்றிவைத்து அவர் பாசுரம் பாடி வழிபடுங்கள். எல்லா நலனும் அடைவீர்கள். இது சத்தியம்.
முடியாதவர்கள் வீட்டில் இருந்தே அவரை நினைந்து, அவர் பாசுரம் பாடி பகவானை வணங்கினால் எல்லா நன்மைகளும் பூர்த்தியாகும், பகவானின் அருள் வெள்ளமாக ஓடும்.
அவரின் வரலாறு எப்படி நீண்டதோ அப்படி அவரின் பாசுரங்களும் அவற்றின் அர்த்தமும் ஆழமானவை, அந்த நான்முகன் திருவந்தாதி பாடலும், திருசந்த விருத்தம் பற்றியும் அடுத்துக் காணலாம்.
திருமழிசை ஆழ்வாரின் பாடல்களும், போதனைகளும் அவர் பகவான் விஷ்ணுவின் அருளால் செய்த யோக சித்து அதிசயங்களும் ஏராளம்.
அவர் 4700 ஆண்டுகள் பூமியில் இருந்து போதித்தார். பின், தவக்கோலத்தில் இப்போது பூமிக்கு அடியில் கும்பகோணத்தில் அமர்ந்திருக்கின்றார்.
அவர் எழுதியவை எத்தனையோ லட்சம் என்றாலும் கலியுககத்துக்கு எது தேவையோ அதை மட்டும் பகவான் காவேரி ஆற்றில் மீட்டுக் கொடுத்தார்.
அவ்வகையில் நான்முகன் திருவந்தாதி, திருசந்த விருத்தம் ஆகிய இரண்டும்தான் பகவானால் அனுமதிக்கப்பட்டு இப்போது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
அவர் கொடுத்த அற்புதமான பாசுரங்கள் சிலவற்றைக் காணலாம். அது மகா முக்கியமானது.
“பூநிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?”
அதாவது பெருமானே, பூமியில் உள்ள குணங்கள் ஐந்துமாய் இருக்கிறாய், நீரிலுள்ள உள்ள குணங்கள் நான்குமாய் இருக்கிறாய். நெருப்பில் உள்ள குணங்கள் மூன்றுமாய் இருக்கின்றாய், பலமிக்க காற்றில் இரண்டு குணங்களாய் இருக்கிறாய் ஆகாயத்திலே ஒரு குணமாய் இருக்கிறாய்.
(இது கொஞ்சம் கவனிக்கவேண்டிய இடம்
பூநிலாய ஐந்துமாய் — பூமியின் ஓசை, தொடுகை, உருவம், சுவை, மணம் என்ற 5 குணங்களாகவும்
புனற்கண் நின்ற நான்குமாய் — நீருக்குரிய ஓசை, தொடுகை, உருவம், சுவை என்ற நான்கு குணங்களாகவும் (பொதுவாக நீருக்கு மணம் கிடையாது)
தீநிலாய மூன்றுமாய் — நெருப்புக்குரிய ஓசை, தொடுகை, உருவம் (சுவை, மணம் இல்லை) என்ற மூன்று குணங்களாகவும்
சிறந்த கால் இரண்டுமாய் , கால் என்றால் காற்று, காற்றின் ஓசை, தொடுகை என்ற இரு குணங்களாகவும் (உருவம், சுவை, மணம் இல்லை)
மீநிலாயது ஒன்றுமாகி ,அண்டவெளி ஆகிய ஆகாயத்தின் ஒலி என்கிற ஒரே குணமாகவும் (உருவம், சுவை, மணம் இல்லாததோடு, அண்டவெளியைத் தொடுகையாலும் உணர இயலாது)
இப்படி உயிர் பொருள்களுக்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் ஆத்மாவாக இருந்தும் அவற்றின் குணங்களான ஞானமின்மை, துக்கம், பெருத்தல், சுருங்குதல் முதலிய உண்மை அடையாமல் இருக்கும் தன்மையை நினைக்க வல்லவர் யாவர்? என்பது பொருள்.
“ஆறுமாறு மாறுமாய் ஓரைந்துமைந்தும் ஐந்துமாய்
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோ சையாயஐந்தும் ஆயஆய மாயனே”
எம்பெருமான் ஆறு கர்மங்களுக்கும் தலைவன்; அச் செயல்களை மேற்கொள்ளத்தக்க ஆறு பருவங்களுக்கும் தலைவன்; ஆறு வழிகளிலும் ஐந்து வேள்விகளாலும் ஐந்து ஆகுதிகளாலும் ஆராதிக்கத்தக்கவன்; ஐந்து அக்னிகளை உடலாக கொண்டவன்; மிக்க அதிசயத்தை உடைய ஞானம் விரக்திகளாய் இருக்கிற இரண்டையும் அளிக்க வல்லவன் .
(பிராமணருக்கு கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்து கொடுத்தல், {கொடை} ஈதல், {தானம்} ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷத்திரியருக்கு கற்றல், வேள்வி செய்தல், ஈதல், காத்தல், போர் செய்தல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கர்மங்கள் உண்டு. வைசியருக்கு கற்றல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏருழவு செய்தல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு கற்றல், முன்னர்ச் சொன்ன மூவகையினருக்கும் தொண்டாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாத்தல், வேள்வி செய்தல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு.
இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள்.
ஷண்மார்க்கம் என்பது இந்துமத தத்துவம். கௌமாரம், கணபதி, சக்திவழிபாடு, சைவம், வைணவம், சூரியன் என ஆறு வழிகளில் வழிபடலாம் என்பது பொருள்.
ஆறுவழிகள் என்றாலும் இவற்றின் வேதமும் யாகமும் ஒன்றே அதை அடுத்து சொல்கின்றார், கடவுள் வேள்வி , பிரம வேள்வி, பூத வேள்வி , மானிட வேள்வி , தென்புலத்தார் வேள்வி என ஐந்து வேள்வி உண்டு.
ஆகுதிகள் ஐந்து வகை உண்டு, ஐந்து அக்னிகள் உண்டு.
அவற்றுக்கு சாதனமான தர பக்தி, பரஞானம், பரம பக்திகளாகிய மூன்றையும் அழிக்க வல்லவன். இப்படி ஞான பக்தி, பலம்,செல்வம் வீரியம், தேஜஸ் என்கின்ற ஆறு குணங்களுக்கும் தலைவன். மேலும், அப்பெருமான் பாவ சம்பந்தம் அற்றவன்; கிழத்தனம் அற்றவன்; மரணமற்றவன்; சோகமற்றவன்; பசியற்றவன்; தாகமற்றவன்; அடியார்களுக்கு ஏற்ற குணம் விபூதிகளை உடையவன் .
வேறு வேறு வகையான ஞான வழிகளை உண்டாக்கினவன்… உண்மை ஞானிகளுக்கு மெய்யன், அல்லாதவர்களுக்கு பொய்யன். சுவை, ஒலி, ஊரு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்துமான கோபால குலத்தில் வந்து அவதரித்த மாயவனே எனப்பொருள்.
“சொல்லினால் தொடர்ச்சிநீ சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்கவந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே”
அதாவது எம்பெருமானே வேதத்தாலே ஏகாந்திகளுக்கு உறவை உண்டு பண்ணுபவன். நீ
ஸ்ருதி ஸ்மிருதிகளிலே அடையக்கூடிய தெய்வமாகிய சொல்லப்படும் தேவதைகளுக்கு அந்தர ஆத்மா.
நீ கொடுத்த வேதத்தாலே அளவிட்டறியப்படாது வெளிப்படுகின்ற பரஞ்சோதியும் நீயே.
நீ கொடுத்த வேதத்தாலே உலகை நீ படைக்க உன் நாபி கமலத்தில் வந்து தோன்றிய பிரம்மா முதலியோர் சப்தங்களை கொண்டு சுருக்கமாகவாவது உனது திருக்கலியாண குணங்களை பேசவும் வல்லரோ?
“ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனைகாத்து மைஅரிக்கண் மாதரார் திறத்து, முன்
ஆனைஅன்று சென்றுஅடர்த்த மாயம் என்ன மாயமே? “
அதாவது எம்பெருமானே நீ கஜேந்திர ஆழ்வானை காத்து அருளினாய்; அதன்றியும் இடையர் குலத்துக்கு ஒரு பிள்ளையாய் அவதரித்து குவலையா பீடம் என்ற யானையை கொன்றாய்; பசுக்களை மேய்க்கிறாய் ;
பசுக்களின் நெய்யை அமுது செய்கிறாய்.
இந்திரன் கல்மலை பொழியும் பொழுது கோவர்தன மலையை கொண்டு பசுக்களை காத்தாய். மையால் அலங்கரிக்கப்பட்டு செவ்வரி படர்ந்த கண்களை உடையவன் ஆன நப்பின்னை பிராட்டியாருக்காக முன்பொருநாள் எருதுகள் ஏழையும் கொன்ற ஆச்சரியம் என்ன ஆச்சரியம்?
(புரிந்து கொள்ளமுடியாத அற்புதங்களை செய்பவன் நீ என்பது பொருள்)
“நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞாலம் ஏனமாய்,
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால்வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்,
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.”
அதாவது இராமவதாரத்தில் காட்டில் நடந்த திருவடிகள் துன்புற்றனவோ? பூமிதேவியானவள் தன்னை பாதுகாப்பவரை காணாமல் நடுங்கிய பொழுது பெரிய திருவிக்கிரமனாய் அவதரித்து அவளை அண்டப்பித்தல் இருந்து குத்தி எடுத்து திருமேனி குலுங்கிய கலைப்போ?
நீர் பெருக முடியாதபடி தடையாய் இருக்கும் அரிய பெரிய மலைகளையும், பாலைவன முதலிய அறிய வழிகளையும் வேகத்தாலே கடந்து கொண்டு வருகின்ற திரு காவிரியினுடைய கரையில் உள்ள திருக்குடந்தையிலே கண் வளர்ந்தருளுகிற காரணத்தை எழுந்து அருளிச் செய்ய வேண்டும். கேசவனே உனக்கு மங்களம் உண்டாகட்டும்.
“இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ
அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே? “
அதாவது பிறந்தவுடன் இறத்தல் , நூறு வயது இருந்து முடிதல் இவை இரண்டினுள் ஒன்றல்லாமல் மேன்மக்களான பிரம்மன் முதலிய தேவர்களும் இந்நிலத்திலே சிரஞ்சீவியா இருந்து வாழ முடியாது என்பதை கண்ணாலே பார்க்கிறோம்.
அப்படி திருவடி ஆகிற தாமரைப் பூவை சிந்தித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் பரமபதம் சென்று அங்கு நித்தியசூரிகளோடு சேர்ந்து இருக்காமல் இருப்பது ஏனோ?
தொண்ணூற்று ஆறு பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி என்று அழைக்கப்படும் பிரபந்தத்தை அருளிச்செய்தார். “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்குவதால் இதற்கு “நான்முகன் திருவந்தாதி” என்று திருநாமம்.
இந்த ப்ரபந்தம் அந்தாதி க்ரமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எம்பெருமான் மீது கொண்ட அன்பினால் இந்த தொண்ணூற்றாறு பாசுரங்களை ஆழ்வார் அருளிச் செய்தார்.
“பாலில் கிடந்ததுவும் பண்டுஅரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர்அறிவார்?
ஞாலத்து ஒருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை யான்அறிந்தஆறு?
அதாவது எம்பெருமான் திருப்பாற்கடலில் சயனித்தருளும் அழகையும், திருவரங்கம் பெரிய கோயிலில் பொருந்தி வாழ்வதையும் முன்பொருகால் ஆலந்தளிரில் பள்ளி கொண்ட விதத்தையும் யார் அறியவல்லார்?
இப் பூமியில் வந்து அவதரித்த சிறந்த புருஷனாயும் நித்யசூரிகளுக்கு பிரதியட்க்ஷமாக அனுபவிக்க தகுந்த பொருளையும் எல்லாவற்றுக்கும் காரணமாக முதலில் படைக்கப்பட்ட நீர் தத்துவத்தில் கண் வளரும் அரும்பெரு பொருளாய் இருக்கின்ற எம்பெருமானை அடியேன் அறிந்த விதம் என்னே?
“வாழ்த்துக வாய்காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் சூழ்த்த
துழாய் மன்னுநீள்முடி என் தொல்லைமால் தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து”
அதாவது திருத்துழாய் மாலை பொருந்தி இருக்கப்பெற்ற நீண்ட திருமுடியை உடையவனும், என்னிடம் நெடுநாளாக அன்பு உடையவனுமான எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும் விடாமல் கைகூப்பி தியானம் செய்து தலையால் வணங்கி மலர்களைக் கொண்டு போற்றுங்கள். உங்களுடைய வாய் அவனை துதிக்கட்டும்.
கண்கள் அவனையே சேவிக்கட்டும். காதுகள் அவன் சரிதங்களையே கேட்கட்டும்.
“அடிச்சகடம் சாடி அரவாட்டி யானை
பிடித்துஒசித்துப் பேய்முலை நஞ்சுஉண்டு வடிப்பவள
வாய்ப்பின்னை தோளிக்கா வல்ஏற்று எருத்துஇறுத்து
கோபின்னும் ஆனான் குறிப்பு”
அதாவது எம்பெருமான் அடியாரை காத்தருள வேண்டும் என்கின்ற திருவுள்ளத்தினால் திருவடியால் சகடாசரணை ஒழித்தும், காளியநாகத்தை வாலை பிடித்து ஆட்டி கொழுப்பை அடக்கியும், குவளையா பீடம் என்னும் யானையைப் பற்றிக் கொண்டு கொம்பை முறித்து ஒழித்தும் பூதனை என்னும் பேச்சினுடைய தனத்தில் தடவி இருந்த நஞ்சை அமுது செய்து அவள் உயிரை மாய்த்தும், பவளம் போன்ற வாயையும் தோளையும் உடையவளான நப்பின்னை பிராட்டியாருக்காக கொடிய எருதுகளுடைய முசுப்பை முறித்தொழித்தும் தன்னுடைய தலைமையை நிலை நிறுத்திக் கொண்டான்.
“கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகைஅறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு.”
அதாவது திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்து அருளுகின்ற ஆச்சரிய பூதனாய் திரு காவேரி கரையான கபிஸ்தலத்திலே திருக்கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானுடைய ஸ்ரீ சூக்தியாகிய சரம ஸ்லோகம் என்னுடைய நெஞ்சிலே பதிந்திருக்கின்றது.
ஆன பின்பு மரண பயம் அணுகாமலும், கொடிய பாவங்கள் அணுகாமலும், கெட்ட விஷயங்கள் ஒன்றும் அணுகாமலும், இருக்கத்தக்க உபாயத்தை அறிந்தவன் ஆவேன்.
இப்படி உருக்கமான பாடல்களை அன்றே பாடிவைத்தவர் திருமழிசை ஆழ்வார், பின்னாளைய பாடல்களெல்லாம் இவர் அடியெடுத்து கொடுத்ததே.
அவர் பாடல்களின் சுருக்கம் இப்படித்தான் அமையும்.
இந்த உலகிலே நமக்கு பற்றிகொள்ளவும், ஆதாரமாய் கொண்டு வாழவும், தாரகம் எனும் முழு பலமாய் நம்பிக்கையாய் இருப்பது பகவானே, அவனை தவிர எதுவும் முழு நம்பிக்கை ஆதாரம் இல்லை.
உலகில் காணப்படும் எல்லாவற்றிலும் அந்த பகவான் உண்டு. அவனின் ஆதாரம் உண்டு, அவனை நேரடியாக காணமுடியாதே தவிர உலகில் ஒவ்வொரு பொருளிலும் காணலாம்.
பகவானின் அவதார ரகசியங்களை அவன் இயக்கத்தை யாரும் அறிய முடியாது, அவன் யாருக்கு அதை காட்ட விரும்புவானோ அவர்களுக்கு அவசியமானதை தெரிவிப்பான். மற்றபடி, மானிட சமார்த்தியத்தால் அறிவால் அவனைக் காண முடியாது.
அவன் பாற்கடலில் நித்திய சயனத்தில் இருந்தாலும் பக்தர்களின் குரலை கேட்டுவிட்டால் அவன் அந்த பாற்கடலையும் பாம்பணையினையும் ஒரு தூசாக தள்ளிவிட்டு அடியார்களை காக்க ஓடிவருவான். அவன் அன்பு அத்தகையது.
பகவானே, உன் செயல்களை நினைக்க நினைக்க ஆச்சரியமே மிஞ்சுகின்றது, அவ்வளவு மேன்மையானன் நீ.
அந்த திருப்பாற்கடலின் மேல் நீ பள்ளி கொள்கின்றாய், அதன் உச்சியில் இருக்கின்றாய். ஆனால், உலக நன்மைக்காக அந்த கடல் கடையப்படும்போது ஆமைவடிவாய் அந்த கடலின் அடிக்குச் சென்று தாங்குகின்றாய்.
ஆக பெரிய அளவு உயர்ந்திருப்பவனும் நீ, அடிமட்டம் வரை உன்னை தாழ்த்திக்கொள்பவனும் நீ.
பகவானே, உன் மிக அரிய குணங்களை நாங்களோ, தேவர்களோ, நித்திய ஸூரிகளோ அறிய முடியாது, அன்னை பிராட்டியர் ஒருத்தி மட்டும் அறிந்திருக்கலாம்.
உன்னை அண்டியவர்களுக்கு உன் பக்தர்கக்கு ஏற்படும் இடையூறுகளை போக்க நீ எந்த நிலைக்கும் செல்வாய். அரசனாய் பிறந்து அரக்கரை கொல்வாய் அல்லது வாமனாய் பிறந்து பிச்சையும் எடுப்பாய்.
எப்படி உயர்ந்த அன்பு உன்னுடையது?
உன் பிறவிகளில் நீ ஏற்றதாழ்வை பார்த்ததில்லை, உன்னை அண்டியவர்களின் நிலை, ஏற்றதாழ்வு குறித்து நீ கொஞ்சமும் தயங்குவதுமில்லை யோசிப்பதுமில்லை , அன்பு ஒன்றே உன் பிரதானம்.
பகவானே, உன் பேரன்பை எப்படி சொல்வேன்?, நீ தேவர்களை ரட்சிக்கின்றாய் , பிராட்டியாரை உன் அருகே வைத்திருக்கின்றாய், பெரும் பெரும் சக்திமிக்கவர்களை உன்னோடு சேர்க்கின்றாய்.
அப்படியே அற்ப மானிடப் பதர்கள் ஒருவர் கூட உன்னிடம் வராமல் போய்விடக் கூடாது என ஓடி ஓடி வந்து அணைத்துக் கொள்கின்றாய், இப்படிப்பட்ட அன்புக்கு நான் என்ன வார்த்தை சொல்வேன்?
பகவானே, உன் அன்புகுரியவர்களை காக்க நீ அவர்களை போல் அவர்களுடன் பிறந்து வளர்ந்து பழகுகின்றாய். அதே நேரம் உனை கொஞ்சமும் எண்ணாத மக்களையும் உன் அன்புகுரியவர்போல் அணைத்துக் கொள்கின்றாய்.
பகவானே, உன் கருணையால் கிடைத்த இந்த வாழ்வை , உன் கருணையால் கிடைத்த இந்த பூலோக வாய்ப்பை பெரிதென கருதாது, பயன்படாத காரியங்களை செய்யும் மக்களையும் அவர்கள் அறியாமையினையும் நீ பொருட்படுத்தாமல் அவர்களை தேடி வந்து உன்னோடு சேர்க்க, உனக்கு உகந்தவர்களாக மாற்ற கருணை கொண்டவனாக நிற்கின்றாய், உன் அன்பை நான் என்ன சொல்லமுடியும்?
பாம்பணை மேல் படுத்திருக்கும் ஐயனே, பூமியில் பிறந்தும் உன்னை அறியாமல் இருந்த காலங்கள் வீணாணவையன்றோ, வரும் காலமாவது வீணாய் போகாதபடி உன்னை எல்லோரும் அறிந்துகொள்ளும் வழியினை இந்த மக்களுக்கு சொல்வாய்.
பகவானே, பிறவிக் கடலில் தத்தளிக்கும் இம்மக்களை படகுபோல் இருந்து நீ கரையேற்றுயாயாக, உன்னை நம்பும் பக்தர்களுக்கு நீ மச்சமாய் வந்தது போல் வந்து காப்பாயாக.
பகவானே, நான் உன்னை பற்றிகொண்டேன், உன் பாதம் பற்றிவருவதே ஞானமானது என்பதை அறிந்தேன், அந்த நிலைக்கு எல்லோரும் வர விரும்புகின்றேன், உன் பாதங்களை பற்றிகொள்ள மக்களை அழைப்பதும் என் கடமையாயிற்று.
அந்த கருநீல கடல்வண்ணன் அன்பிற்கு எளியவன், மானுட ஆயுளோ கர்பத்திலே முடியும், இல்லை பிறந்து ஒருநாளில் முடியும், அவனோ அழிவில்லாதவன்.
பிரம்மன் முதலான தேவர்களும் பதினான்கு உலகங்களும் அவனில் தோன்றி அவனிலே முடிவார்கள். எல்லாவற்றுக்கும் அவனே தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றான்.
இதை அறிந்தும், தாங்கள் அழியகூடியவர் என அறிந்தும் மானுடர் அவனை பற்றிபிடிக்காமல் அவன் பக்கம் வராமல் அவர்கள் இன்னும் பகவான் பாதம் பணியாமல் இருப்பதும் ஏனோ?
மானுடர் இப்படி அறியாத வகையில் அவர்கள் போக்கில் சென்று லௌகீகத்தில் அவர்கள் உழன்று இழக்கக் கூடாத ஆத்மாவினை இழந்து நரகத்தில் வீழவிடுவதை தடுப்பது நம் கடமையாகின்றது, அதுவே நம் தர்மமுமாகின்றது.
மானிடர்களே, அந்த பரமபதத்தை அடையுங்கள், அவனே உங்களுக்கு உபாவன், அவனே உங்களுக்கு பலமும் அடைக்கலமுமானவன், அவனே உங்கள் பயன், அவனை சரணடையுங்கள்.
முக்குணங்களின் சேர்க்கையால் ரஜஸ், தமஸ் எனக் குணம் கொண்ட தேவதைகளை வழிபட்டு ஏதேதோ சக்தி பெற முயலும் மக்களே, சத்வ குணத்தில் மூழ்கி அந்த பகவானை அடைவதே நித்திய பேரின்பம் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை?
அந்த தேவதைகளை நீங்கள் வசியம் செய்தால் அவற்றின் வரங்களை பெற்றாலும் அவற்றை பராமரிப்பதும் அவற்றுக்கு வேண்டியன செய்தலும் எவ்வளவு கடினம்? அவைகளால் உங்களுக்கு நித்திய பேரின்பம் தரமுடியுமா? அந்த சக்தி அவைகளுக்கு உண்டா?
நிலையில்லா வாழ்வில் சிலநொடி மகிழ்வை அவை தரும், அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை பெரிது. மக்களே அது மின்னலென மறைந்தும் போகும் நீர்குமிழி மாயை போன்றது, அதனால் நிலையானதும் அன்பானதும் உங்கள் மேல் எப்போதும் வாஞ்சையானவனுமான பகவான் பாதம் நாடுங்கள்.
அந்த தேவதைகளால் உங்கள் பிறவிகளை கடைந்தேற வைக்கமுடியாது. பகவானே உங்களை சம்சார சாகரத்திலிருந்து கடக்க வைக்கும் வல்லமை கொண்டவர் என்பதை உணருங்கள்.
பரமனை நம்பி பணிந்தவர் அழிந்ததுண்டா, அதைச் செய்யாமல் தேவதைகள் பின்னால் பிற தெய்வம் பின்னால் சென்றுவரம் பெற்றோர் வாழ்ந்ததுண்டா, பானாசுரன் போன்றோரின் முடிவென்ன மாந்தர்களே?
மோட்சம் அடைய பகவானை பணிதல் ஒன்றே வழி, அவன் காலடியில் தலைசாய்த்து , அவனுடைய நாமங்களை சொல்லி, அவனை பற்றி தியானித்தலே பிறவிக்கடலை கடந்து மோட்சம் அடையும் ஒரே வழி, மற்றது எல்லாம் வீணே.
கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என எல்லாவற்றின் முடிவும் அவனே எனும்போது முன்னமே அவனை பற்றிகொள்ளல் நலம்.
தொழிலால் சம்பாதித்து அதனை கொட்டி பரமனை தேடும் கர்மயோகம், புலன்களை அடக்கி செய்யும் பக்தியோகம் எல்லாம் அவனை அடைய உதவி செய்யும். அந்த உதவியில் அவனை முழுக்க உணர்ந்து அடைதல் வேண்டும்.
பரமாத்மாவான அவனை, சர்வாந்தர்யாமியான அவனை சாஷ்டாங்கமாய் வீழ்ந்து நமஸ்காரம் செய்தால் முழு மனதோடு அவனை பற்றிகொண்டால் மட்டும் முக்தி பெறலாம்.
மாந்தர்களே, இந்த நிலையற்ற உலகை பற்றி ஏன் சிந்திக்கின்றீர்கள்? புண்ணியாத்துமாக்கள் வாழும் அந்த வைகுண்டத்தை பற்றி சிந்தியுங்கள்.
அவனைப் பற்றி பணியாதவர்களுக்கு அங்கு அனுமதியில்லை, அவதாரம் செய்து உங்களை காக்க வந்த அவன் கருணையினை எண்ணிப்பாருங்கள்.
பாற்கடலை விட்டுவிட்டு அவதாரமாக இங்கு வந்து உங்களுக்காக அவன் எவ்வளவு இன்னலுற்றான், எவ்வளவு பாடுபட்டான் என்பதை கணமேனும் சிந்தியுங்கள், அவன் பெரும் கருணையினை உணர்வீர்கள்.
தாழ்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களை தேடி வந்து அவர்களோடு மாடுமேய்த்து காடெல்லாம் திரிந்து அலைந்து பாடுபட்ட அவன் அன்பை நினையுங்கள், அவன் ஏன் உங்களைத்தேடி வந்தான் என்பதை சிந்தியுங்கள், அவன் அன்பை உணர்வீர்கள், அவனே மோட்சத்துக்கான ஒரே வழி.
உங்கள் வாழ்வும் தொழிலும் ஆசையும் இன்னும் லௌகீக காரியம் எல்லாமும் எல்லா காலத்திலும் பயன்படாது என்பதை உணர்ந்து திருமலை நாதனிடம் அடைக்கலமாகிவிடுங்கள். அதுவே உன்னதமானது.
பர வியூக விபவ முதலிய நிலைமைகள் வேறு தேசத்திலும் வேறு காலத்திலுமே பயன்படக்கூடியவை .
இந்த வாழ்வு துயரகடல் என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள், கவலை அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் இக்கடலில் இன்பம் என்பது ஒருகாலமுமில்லை. அப்படி வந்தாலும் நிலைக்காது.
அதனால் நித்திய பேரின்பம் தரும் பகவானை தேடி நில்லுங்கள், அவனே எக்காலமும் ஆனந்தமாக வைத்திருப்பவன், அவனை அடைய முயலுங்கள்.
பகவானே, நாங்கள் முக்குணங்களின் கலவையால் மாயைக்கு அடிமையாய் இருக்கின்றோம், அதனின்று மீளும் வழி தெரியவில்லை, பக்தியில் மனம் செல்லாமல் வீழ்ந்துகிடக்கின்றது, அன்று பசுக்களை மேய்க்க வந்த கோபாலனே எங்களுக்கும் நல்லவழி காட்டி எங்களை காப்பாயாக, உன் தாமரை திருவடியில் எங்களை சேர்ப்பாயாக.
பகவானே நாங்கள் வலுவற்றவர்கள். ஏன் இப்படி வீழ்ந்து கிடக்கின்றோம் என்பதை கூட அறியமுடியா சக்தியற்றவர்கள், கம்சனின் சிறையில் இருந்து எல்லோரையும் விடுவித்த நீ எங்களையும் பிறவிசிறையில் இருந்து விடுவிக்க வருவாயாக.
நீ தேவாதி தேவர்களால் வணங்கப்பெறுபவன், பதினான்கு லோகங்களும் உன் கண் அசைவில் ஆடுகின்றன, பகவானே உனக்கு எல்லாமும் இருக்கின்றது.
ஆனால், அற்ப மானிடருக்கு உன்னை தவிர யார் உண்டு?, நீயேதான் நீ மட்டும்தானே எங்கள் அடைக்கலம்.
பகவானே, அசோகவனத்தில் சீதை இருந்தபோது அவள் அழைத்தா நீ சென்று மீட்டாய்? இல்லை அல்லவா? நீயாக தேடி சென்றுதானே மீட்டாய், அப்படி எங்களை இந்தப் பிறப்பில் இருந்து நீயே மீட்டெடுப்பாய்.
பகவானே, எங்களை நாங்களே காப்போம் எனும் மாய அகங்காரத்தில் எங்களை தள்ளாதே, எங்களுக்கு உன்னை தவிர வேறுயாருமில்லை என உன்னை சரணடைந்தோம்.
பகவானே, நாங்கள் மானுடரென நீ தேடாமல் இருக்கலாம் அது உனக்கொரு காரணம், அற்ப மானிடரால் உனக்கு ஆகவேண்டியது எதுவுமில்லை.
ஆனால், எங்களுக்கு உன்னை தவிர யார் உண்டு? நாங்கள் அஞ்ஞானி நீ ஞானவான், நாங்கள் அழியக்கூடிய பாவிகள். நீயோ அழிவற்ற நித்தியாளன்.
நீ சர்வேஸ்வரன். நாங்களோ பதரிலும் மோசமான சருகுகள், அதனல் உன்னிடம் சரணடைய எங்களுக்கு எல்லா காரணமும் உண்டு.
பகவானே, உன் தாமரை திருவடி வந்தோம் “அஞ்சாதே, நான் உனக்கான காரியமெல்லாம் செய்வேன்” என எங்களுக்கு உறுதிமொழி கொடு.
பகவானே, நாங்கள் இப்படி கோருகின்றோம் என்பதால் இந்த ஒருவார்த்தை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடாதே, எங்களை ஒதுக்கிவிடாதே.
உன் எல்லையற்ற பேரழகை, உன் அளவற்ற ஆனந்தத்தை நாங்கள் முழுவதுமாய் உணர்ந்து அனுபவிக்கும்படி எங்களுக்கு கருணைகாட்டு, உன்னில் எங்களை கரைத்துவிடு.
எங்களின் எல்லா மாய மயக்கங்களில் இருந்து எங்களை திருப்பி உன்னோடு நாங்கள் எப்போதும் நிலைத்திருக்க இரக்கம் காட்டும் எம்பெருமானே.
எம் பெருமானே இது உனக்கு கடினம் இல்லையே, இந்த உலகம் உனக்கு கட்டுப்பட்டது, இங்கு உனக்கு எதிரிகள் என யாருமில்லை, அனந்த சயனத்தில் இருந்து கொண்டே பிரபஞ்சத்தை இயக்குபவன் நீ.
எல்லா படைப்புக்களும் எல்லா குணங்களும் உனக்கு கட்டுப்பட்டவை, அப்படியான எம்பெருமானே எந்த இடையூறும் வராமல் உன்னில் நான் நிலைத்திருக்க வழி செய்.
பகவானே, லௌகீக மயக்கத்தில் இருந்து என்னை மீட்டு உன்னோடு சேர்த்துகொள், அதன் பின் நீ என்னை தள்ளிவிட்டாலும் விரட்டினாலும் நான் உன்னை பிரியேன், உன் காலடியில் கிடப்பேன், உன்னை விட்டு பிரிய எனக்கு தெரியாது.
பெருமானே, உன் திருவடியில் நிலைத்து நிற்க எனக்கு வரமருள்வாய்.
பகவானே, ஆதிஷேஷன் உன்னை சுமக்கின்றான், உன் மார்பில் அன்னை இருக்கின்றாள், உன் கரங்களிலே ஆயுதங்கள் இருக்கின்றன.
நான் அந்த இடத்தை கோருவேனா? என்னால் முடியுமா? அது அல்ல என் ஆசை, உன் காலடியின் ஒரு தூசாக என்னை வைக்க கருணை காட்ட மாட்டாயா?
பெருமானே, நான் என் எல்லா பாரங்களையும் உன்னிடத்தில் வைக்கின்றேன். என் மனச்சுமை, கவலை, பிறவிப்பிணி எல்லாம் உன்னிடம் வைக்கின்றேன். என் கர்ம வினையால் நான் அடைந்த எல்லாச் சுமைகளையும் உன் பாதமே வைக்கின்றேன், அதுதவிர எனக்கு என்ன வழி உண்டு எம்பெருமானே?
பகவானே, ஐம்புலன்களும் உன்னை மட்டும் நோக்கவும் சிந்திக்கவும் வரமருள்வாய், இந்த தேகம் அழிந்தாலும் உன்னில் வந்து சேர எனக்கு உறுதி கொடு எம்பெருமானே.
எம் பெருமானே, எனக்கு சிவலோக அதிபதி பாக்கியம், பிரம்மலோஹ அதிபதி பாக்கியம் வேண்டாம், காலமுள்ள அளவும் சொர்க்கத்தில் இந்திரன் பதவி கிடைத்தாலும் வேண்டாம்.
எனக்கு உன்னோடு கூடியிருக்கும் பாக்கியம் மட்டும் போதும், அந்த வரம் ஒன்றைமட்டும் எனக்கு தா, என் வேண்டுதல் அதுதான்.
பகவானே, முன்பிருந்த முனிவரும், யோகியரும், அடியார்களும் எப்படி உன்னைத் தேடி நாடி உன்னையே தியானித்து உன்னை அடைந்தார்களோ அந்த வரிசையில் என்னையும் சேர்த்துகொள்ள வரமருள்வாய், என் பிரார்த்தனை மன்றாட்டும் அதுதான்.
பகவானே, நான் பல பிறப்புக்களை எடுத்தவன் , அஞ்ஞானியான என்னிடம் நல்ல தன்மையும் இல்லை, மோட்சம் அடைய செய்யும் காரியம் எதுவுமில்லை. இந்த வீணான பிறவியிடம் நீயே வந்து உன் ஞான ஒளியினை வீசினாய், நீயே உன்னை வழிபடவும் பற்றிகொள்ளவும் தூண்டினாய்.
எம்பெருமானே, நீயே என்னை ஆட்கொண்டு உன் வடிவத்தை உன் அழகான தோற்றத்தை என்னிடம் இருந்து பிரிக்கமுடியாதபடி ஆட்கொண்டாய், இனி என் மனதில் இருந்து நொடிப்பொழுதும் நீ நீங்கமாட்டாய்.
பெருமானே, உன்னாலே என் ஆத்மா மாயைகளை அழிந்தது, என் கர்மங்கள் அழிந்தன, முக்குணங்களும் உன்னால் ஒழிந்தன, உன்னாலே நான் மோட்ச பாக்கியமும் பெரும் ஆனந்த நிலையும் அடைந்தேன்.
உன் அருளாலே அஞ்ஞானியும் வீணான பிறப்புமாக பிறந்து வந்த நான் மோட்சபாக்கியம் பெற்றேன்.
திருமழிசை ஆழ்வாரின் பாடல்களும், போதனைகளும் அவர் பகவான் விஷ்ணுவின் அருளால் செய்த யோக சித்து அதிசயங்களும் ஏராளம்.
அவர் 4700 ஆண்டுகள் பூமியில் இருந்து போதித்தார். பின், தவகோலத்தில் இப்போது பூமிக்கு அடியில் கும்பகோணத்தில் அமர்ந்திருக்கின்றார்.
அவர் எழுதியவை எத்தனையோ லட்சம் என்றாலும் கலியுககத்துக்கு எது தேவையோ அதை மட்டும் பகவான் காவேரி ஆற்றில் மீட்டுக் கொடுத்தார்.
அவ்வகையில் நான்முகன் திருவந்தாதி, திருசந்த விருத்தம் ஆகிய இரண்டும்தான் பகவானால் அனுமதிக்கப்பட்டு இப்போது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
அவர் கொடுத்த அற்புதமான பாசுரங்கள் சிலவற்றை காணலாம். அது மகா முக்கியமானது.

இப்படி மகா உருக்கமான தத்துவமாக அன்றே பாடிவைத்தார் திருமழிசை ஆழ்வார். அவரின் பாடல்களை பின்பற்றியே எல்லா ஆழ்வார்களும் அடியார்களும் பின்னாளில் பாடினார்கள்.
எல்லா வைஷ்ணவ பாடல்களிலும் அவர் காட்டிய பாசுர இலக்கண விதி உண்டு. அவர் பாசுரங்களே அடிதளம்.
ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இவரை நினைந்து இவர் பாசுரங்களில் ஒன்றை பாடினால் கூட பெரும் பலன் கிடைக்கும்.
அவரின் வாழ்வும் தவமும் சிலிர்க்கவைக்கும் விஷயம். இன்றும் அவர் கல்கி பகவானை காண கும்பகோணத்தில் தவம் செய்துக் கொண்டிருக்கின்றார்.
நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் என்ற இரண்டு பிரபந்தங்கள் அவர் கொடுத்தது. ஸ்ரீமன் நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருக்க வேண்டும், அவனே மோட்சத்துக்கான வழி என்பதில் அவர் உறுதியாக இருந்து போதித்தார்.
மக்கள் இவ்வுலகில் துன்பப்படுகிறார்கள். அவர்கள் எம்பெருமானை துதிப்பதற்கு ஒரு பிரபந்தத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அவாவுடன் சம்சாரிகள் மீது கொண்ட கருணையினால் இந்த பிரபந்தங்களை அருளினார்.
அந்த கருணையும், அன்பும் அவருக்கு எப்போதும் உண்டு, அவரை நினைந்து பரமாத்மாவினை வணங்கினால் எல்லா பிரார்த்தனையும் நிறைவேறும். கர்மம் அழியும். மோட்சபாக்கியம் கிட்டும்.
“அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே.
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே.
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே.
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே.
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே.
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே.
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே.
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே”
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்.