பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அட்ட வீரட்டானத் தலங்கள் 4

திருப்பறியலூர் – இளங்கொம்பனையாள் சமேத தக்ஷபுரீஸ்வரர் சிவபெருமானின் அட்டவீராட்டான தலங்களில் நான்காம் தலம் திருப்பறியலூர். தேவாரம் பாடப்பெற்ற இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் இந்த தலத்தினை பாடித்தான் அந்த பதிகத்தை தொடர்ந்தார். “கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்திருத்த முடையார் திருப்பறி யலூரில்விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே” என்பது அந்த பாடல். திருநாவுக்கரசர் தன் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை இங்கு பாடினார். “தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 3

திருவதிகை – திரிபுரசுந்தரி சமேத வீரட்டானேஸ்வரர் சிவபெருமான் அகங்காரம் கொண்டோரை தோற்கடித்து அவர்களின் அகங்காரங்களை அழித்த தலத்தில் முக்கியமானது திருவதிகை தலம். திரிபுரம் எரித்த சிவனின் பெருமையினை சொல்லும் தலமாக, அந்த சம்பவத்தின் மிக முக்கிய அடையாளமாக, இங்குதான் அந்த காட்சி நடந்தது என தேர்வடிவில் நிறுவபட்ட ஆலயம் அது ஆம், தேர்வடிவில்தான் அது அமையபட்டிருக்கும், சிவபெருமான் ஒரு தேரில் இருந்துதான் அந்த திரிபுரத்தை எரித்தார் என்பது புராணம் அப்படியே வில்லும் பாணமுமாக அந்த திரிபுரம் எரித்த […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 2

திருக்கோவிலூர் – பெரியநாயகி சமேத அந்தகாசுவர மூர்த்தி சிவபெருமானின் அட்ட வீரட்டானத் தலங்களில் இரண்டாம் தலம் திருக்கோவிலூர். அந்த தலம் விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றோரம் அமைந்திருக்கும் தலம், அங்கிருக்கும் சிவன் பெயர் அந்தகாசுவர மூர்த்தி இது தேவாரம் பாடபட்ட தலம், அட்ட வீரட்டானம் எனும் வீரபத்ர ருத்ரகோல சிவனின் இரண்டாம் முக்கியத் தலம், மகா சிறப்பானது. “கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறுங் கால்நிமிர்த்திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீகுரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 1

திருக்கண்டியூர் – ஸ்ரீ மங்களநாயகி சமேத பிரம்மசிரகண்டீஸ்வரர் பொதுவாக கார்த்திகை மாதம் என்பது அதர்மத்தை அழிக்க வந்த, மாயைகளை அழிக்க வந்த அவதாரங்களுக்கான மாதம். இதனாலே கார்த்திகை மாதம் முருகப்பெருமான் வழிபாடுகள் அதிகம் உண்டு, சுவாமி அய்யப்பன் சாஸ்தாவின் வழிபாடும் அதிகம் உண்டு. பிரம்மா, விஷ்ணு இருவரின் அகங்காரத்தை திருவண்ணாமலையில் சிவபெருமான் அழித்தார் என்பதால் கார்த்திகைதீப கொண்டாட்டமும் உண்டு. அப்படியான கார்த்திகை மாதம் முழுக்க அதர்மக்காரர்கள், அதர்மம் பெருக மூலக் காரணமான மாய மயக்கங்கள், அகங்காரங்கள் ஆகியவற்றை […]

திருமுருகாற்றுப்படை : 02

இரண்டாம் பத்து வரிகள் “மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிகணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்கோபத் தன்ன தோயாப் பூந்துகில்பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பினாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி,துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதி” இனி பாடலின் பொருளைக் காணலாம். “மால்வரை நிவந்த சேண் உயர் வெற்பில்” அதாவது வானம் வரை உயர்ந்து வளர்ந்த பெரும் மூங்கில்களை கொண்ட எனப் பொருள். அடுத்து “கிண்கிணி கவை இய ஒண் […]

திருமுருகாற்றுப்படை : 01

முதல் பத்து வரிகள் “உலக முவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளிஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கைமறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழைவாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்திருள்படப் பொதுளிய பராரை மராஅத்துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்” திருப்பரங்குன்றத்தையும் அங்கிருக்கும் முருகப்பெருமானையும் பற்றி நக்கீரர் பாடும் பாடலின் முதல் பத்து வரிகள் இவை. முதல் வரிகள் இப்படிப் பிரிந்து வருகின்றன‌. “உலகம் உவப்ப […]

திருமுருகாற்றுப்படை முகவுரை

முருகபெருமான் வழிபாட்டில் மிக மிக பழமையான நூல் திருமுருகாற்றுபடை. தமிழ் இலக்கண மரபில் ஆற்றுபடை என்பது ஒரு மரபு, மிகுந்த துயரில் நம்பிக்கையற்று போன ஒருவனை ஆற்றுபடுத்தி அமைதிபடுத்தி நம்பிக்கை கொடுத்து நல்வழி நடத்தும் மரபில் பாடபடும் இலக்கியங்களுக்கு ஆற்றுபடை என பொருள் இது பெருமபாணராற்றுபடை, சிறுபாணராற்றுபடை, கூத்தராற்றுபடை என பல உண்டு. இப்படி முருகபெருமானை பாடி வழிநடத்தும் பாடல்தான் திருமுருகாற்றுபடை ஒருவகையில் அறுபடை வீடுகள் என்பதே ஆற்றுபடுத்தும் கோவில்கள்தான், அந்த ஆற்றுபடை எனும் ஆலயங்கள்தான் அறுபடை […]

ரத்தன் டாடா

இன்று (28/12) டாடா குழுமங்களின் தலைவரும் இந்தியாவின் மகா முக்கிய பொருளாதர தூணும், பெரும் வரி கட்டுபவரும் ஏகபட்ட சமூக சேவைகளை துளி சர்ச்சைகள் வராமல் செய்பவருமான ரத்தன் டாடாவின் பிறந்தநாள். ரத்தன் டாடாவின் பிறந்த நாள் என்பது தனிபட்ட வகையில் அவருக்கு வாழ்த்தும் பிரார்த்தனையும் தெரிவிக்கும் நாள் என்றாலும் பல உண்மைகளை சொல்லும் நாளும் அதுவேதான். இந்தியாவில் பிரிட்டிசார் காலத்திலே தொழில்சவால் விட்ட ஜேஆர்டி டாட்டாவின் கனவினை இன்று ரத்தன் டாடா 100 மடங்கு வேகத்தில் […]

திருபாய் அம்பானி

இந்துஸ்தானம் அக்காலத்தில் இருந்தே வியாபார பூமி, அதன் ஆற்றின் கழிமுகங்களும் துறைமுகங்களும் பண்டைய காலம் தொட்டே வியாபாரத்தில் சிறந்திருந்தன‌ அந்த வணிகத்தில் பல இந்துஸ்தான இனங்கள் முத்திரை பதித்தன, நகரத்தார் எனும் தமிழக செட்டியார்கள் அதனில் முக்கியமானவர்கள், பூம்புகார் அவர்களின் கோட்டையாக இருந்தது அங்கிருந்து கிழக்காசியா, ஆப்ரிக்கா, செங்கடல் என எங்கெல்லாமோ அவர்கள் கப்பல்கள் சுற்றின‌ அந்த இந்துக்களின் ஆதிக்கம் பூம்புகாரின் கடற்கோளுக்கு பின் சுருங்கிவிட்டது, வேறு இடங்களுக்கு வியாபாரம் நகர்த்தபட்டாலும், கிழக்காசிய நாடுகளுடன் பெரும் வியாபார […]

உலகம் எங்கும் பரவியிருந்த சநாதன ஞானம் – சாலமோன் அதற்கு ஒரு சான்று

இந்திய யூத தொடர்புகள் வரலாற்றில் மிக மிகப் பழமையானவை. யூத இனம் அன்றே அறிவைத் தேடிய இனம். எங்கெல்லாம் எதெல்லாம் சிறந்ததோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த இனம். அப்படிபட்ட இனம் அன்று பெரும் கலைகள், விஞ்ஞானம், மெய்யியல், ஆன்மீகம், தியானம் என பெரும் ஞானபூமியாக இருந்த ஹிமாசலத்துக்கு குறிப்பாக காஷ்மீரத்துக்கு அடிக்கடி வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காஷ்மீரத்து இந்து ஞானம் மேற்காசியாவில் அலை மோதியது. இந்த தொடர்ச்சிதான் இயேசு பிறந்தபோது மூன்று இந்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications