பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேவி மஹாத்மியம் : 05 / 13 – தேவி துதி (அபராஜித ஸ்துதி)

“முப்பத்து முக்கோடி தேவர்களால் சூழப்பட்டவளும், ஜயத்தை விரும்பும் பக்தர்களால் ஆராதிக்கப்பட்டவளும், தனது ஒளியால் மூவுலகங்களிலும் இருளை அகற்றுபவளும், தனது கடைக்கண் பார்வையால் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குபவளும், தீயனவற்றை தூசு போல சுட்டெரித்து ஒளிர்பவளும், கரங்களில் சங்கு, சக்கரம், வாள், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, சிரசில் பிறைசந்திரனை சூடியவளும், மூன்று கண்களையுடையவளும், சிங்கத்தின் மீது அமர்ந்தவளுமான ஜயா என்ற பெயருடைய துர்க்கையை நான் தியானிக்கிறேன்” வீரியம் மிக்கவனாயினும் துராத்மாவாகிய அம்மஹிஷாசுரனும் அவ்வசுரச்சேனையும் தேவியால் அழிக்கப்பட்ட பின் தேவேந்திரனும் […]

தேவி மஹாத்மியம் : 04 / 13 – மஹிஷாசுர வதம்

// தேவி மஹாத்மியத்தின் நான்காம் அத்தியாயம் அதாவது மகிஷாசூர வதத்தை படிப்போரின் குடும்ப வினை தீரும், ஜென்ம சாபம் தீரும், பித்ரு சாபம், கடன் தொல்லை, தீரா பரம்பரை சிக்கல் எல்லாம் தீரும், எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை நவராத்திரியின் ஐந்தாம் நாளில் இதனை படிக்கலாம், நிச்சயம் பலன் உண்டு // அன்னை துதியினை முதலில் சொல்ல வேண்டும், அதனை சொல்லி அவளை வணங்க வேண்டும் “ஓம்,ஆயிரம் கோடி உதயசூரிய செங்கிரணங்களின் ஒளியால் ஜொலிப்பவளும், தாமரை மேல் […]

தேவி மாஹாத்மியம் : 03 / 13 – மஹிஷாசுர சைன்ய வதம்

தேவி மஹாமித்யம் சொல்லும் முதல் பகுதி மகா காளிக்கானது, அடுத்த பகுதி மஹா லட்சுமிக்கானது, அந்த மஹாலட்சுமிதான் மகிஷாவர்த்தினியாக அவதரித்து மகிஷனை சங்காரம் செய்தாள் அவள் ஆவேசமான நிலையில் துர்க்கை,அமைதியான நிலையில் மஹாலஷ்மி, அவள் சிந்திக்கும் நிலையில் சரஸ்வதி என அவளுக்கு பல வடிவங்கள் உண்டு அமைதியாக இருக்கும் மஹாலட்சுமி எப்படி ஆவேசமாக உருவாகி மகிஷ படைகளோடு மோதினாள் என்பதை மகாமித்தியத்தின் இரண்டாம் பகுதி சொல்கின்றது இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் எல்லா தேவர்களும் தங்கள் சக்தியினை வழங்கி […]

தேவி மாஹாத்மியம் : 02 / 13 – ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி

“தேவி மாஹாத்மியம்” நூலிலிருந்து சாரமான ஏழு ஸ்லோகங்களை எடுத்து “ஶ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ” என வகுத்துள்ளார்கள். ஆம், ஸ்ரீ தேவி மாஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால், ஸ்ரீ தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம். அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு, ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் […]

தேவி மஹாத்மியம் 01 / 13 : மதுகைடப வதம்

மார்க்கண்டேய மஹரிஷி கூறினார் “எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார். முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான். நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த பொழுது கோலாவித்வம்சிகள் எனப்பட்ட க்ஷத்திரிய குல எதிரி […]

தேவீ மாஹாத்ம்யம் 00 / 13 – முகவுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடபடும் ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே , இதன் பிரதான தெய்வம் வராஹி தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி, சியாமளா நவராத்திரி, இங்கு சியாமளையே பிரதானம் பங்குனி மாத […]

மகாளய பட்ச அமாவாசை திதியும் தர்ப்பணமும்

முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வது என்பது இந்துக்களின் வழக்கமான ஒன்று, வேறு எந்த மதத்திலும் இல்லாத இந்த சிறப்பு இந்துக்களுக்குத் தான் உண்டு. தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது எனப் பொருள். இறந்த முன்னோர்களின் ஆத்மாவினை திருப்தி செய்து அவர்களுக்கு வேண்டியன செய்தல் என்பது இந்துக்களுக்கு ரிஷிகள், முனிவர்கள் போதித்த வழிமுறை. இங்கு ஏகப்பட்ட சூட்சுமங்கள் உண்டு. நுணுக்கமான அறிவியல் உண்டு, மிக அபாரமான ஆன்மீக தத்துவமும் உண்டு. இறந்த முன்னோர்களுக்கு ஏன் தர்ப்பணம் கொடுத்து திருப்தி செய்யவேண்டும் […]

ஆத்திச் சூடி

ஆத்திச் சூடி : 01 ஆத்தி மரம் இந்து மரபில் முக்கியமான பங்குடையது. அந்த மலரின் பூவினை சிவபெருமான் விரும்பி அணிவார் என்பது ஐதீகம். அம்மரம் பல சிவத் தலங்களில் தலவிருட்சமாகவும் உண்டு. ஆத்திமரமே ஆர் மரம் எனப்பட்டது, இந்த ஆர் மரங்கள் நிறைந்திருந்த பகுதிகள்தான் ஆரப்பாக்கம், ஆரப்பாளையம், ஆரூர் (திருவாரூர்), ஆற்காடு என்றானது. இந்த ஆத்திப் பூவினை அணிந்த சிவனுக்கு சமர்ப்பணமாக ஒளவையார் பாடிய தமிழ்ப் பாடல்தான் “ஆத்திச் சூடி”. தமிழ் மொழியினை உருவாக்கியவர் சிவபெருமான்; […]

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் புனிதமானது, அது விஷ்ணு வழிபாட்டுக்கு மிகச் சிறந்த மாதம், மார்கழி போலவே அப்போது சொல்லவேண்டிய மந்திரங்களும், வழிபாடுகளும் உண்டு. அதனில் முக்கியமானது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் “விஷ்ணு சஹஸ்ர நாமம்” பாடும் பெரும் வழிபாடு. அது இந்துக்களின் வழமையாய் இருந்தது, இன்றும் உண்டு, என்றும் தொடரவும் வேண்டும். இந்த வழிபாடு மகாபாரத காலத்திற்கு முன்பே இருந்தது, யார் இதனை தொகுத்தார்கள்? யார் இதனை பாடி பகவான் நாமத்தை பாடலாக, ஸ்லோகமாக தந்தார்கள் என்பதற்கு […]

கந்தர்வ குரலோன் – எஸ்.பி. பால சுப்பிரமணியம்

கலைகள் என்பது தெய்வத்தின் வரம் எனச் சொல்லும் இந்துமதம், சில கலைஞர்களுக்கு கந்தர்வர்களின் அனுகிரகம் இருப்பதாக தன் ஞானத்தால் சொல்லும் அந்த அனுகிரஹம் பெற்றவர்கள் தொடும் கலை சிறக்கும், காலத்துக்கும் அவர்கள் நிலைப்பார்கள், எது மாறினாலும் அவர்களுக்கு கொடுக்கபட்ட வரம் மாறாது, அந்த கலை மாறாது. வாழும் காலமட்டும் அந்த கந்தர்வ அருள் அவர்களோடு இருக்கும், அந்த சக்தி அவர்களை பெரும் உச்சத்தில் வைத்து பெரும் ஜனவசியமும், மக்கள் அபிமானமும் கொண்டு நிறுத்தி வைத்திருக்கும். மிக சிலருக்கே […]