ஆச்சார கோவை : 06 “எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறுஅத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும் தெற்றெனநன்கு அறிவார் நாளும் விரைந்து’ எச்சில் என்பது உணவு உண்டு கழுவாத கை முதல், இயற்கை உபாதைகள் கழிந்து சுத்தபடுத்தாத உடல், இன்னும் பல வகை கழிவுகளால் அசுத்தமான நிலை என கருதபடும் முக்கியமாக சிறுநீர், மலம். ஆண்-பெண் உடல் உறவின்போது வெளிப்படும் விந்து, நாதப் பசைகள், வாயில் வரும் கோழை என்பவை கருதபடும் இந்த எச்சிலோடு எதையெல்லாம் […]
கேசவராம் பலிராம் ஹெட்கேவர்
எக்காலமும் அந்நியருக்கு எதிர்ப்பை கொடுத்துகொண்டே இருக்கும் இந்துஸ்தானம் மொகலயாயரை தொடர்ந்து அதே எதிர்ப்பை வெள்ளையனுக்கும் இந்தியா காட்டி கொண்டே இருந்தது, ஆனால் தன் சாதுர்யமான தந்திரத்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அவன் அதை அடக்கி கொண்டே இருந்தான் அவனை எதிர்ப்போரை மக்களிடம் இருந்து தனிமைபடுத்தி வீழ்த்துவது அவன் தந்திரொபாயங்களில் ஒன்று, ஆச்சரியமாக இந்திய மக்களும் பெரும் எதிர்ப்பினை திரண்டு காட்டவில்லை, கட்டபொம்மன் முதல் பலர் தூக்கிலிடபடும் பொழுதெல்லாம் தேசமெங்கும் ஒரு ஒற்றுமையான எதிர்ப்பு இல்லை 1857 முதல் விடுதலைபோர் […]
மானிட உடல் இயக்கத்தையும் அது பெற வேண்டிய பயிற்சிகளையும் இந்துஞானியர் சொன்னது போல் இன்னொருவர் சொன்னதில்லை உடலின் அமைப்பினையும் இயங்குமுறையினையும் மிக சூட்சுமமாக சொன்னவர்கள் இந்து சித்தர்கள், அவர்களில் ஒளவையாரும் திருமூலரும் தனித்து நின்றார்கள் இந்த உடல் நலமாக இருக்கவும் அதற்கான சக்திகளை முறையே பெறவும் யோக கலைகளை போதித்தது இந்துமதம், யோகத்தால் உடலை பேணி அந்த நலத்தால் தியானம் செய்து இறைவனை அடைதல் என்பது அதன் அடிப்படை ஒரு காலத்தில் இந்துக்களின் வாழ்வியல் யோகாவின் அடிப்படையாகவே […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 14
“முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம்கற்றன மென்று களியற்க – சிற்றுளியாற்கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்கொல்லுலைக் கூடத்தி னால். இப்பாடல் “முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதும் கற்றனம் என்றும் களியற்க, சிற்றுளியால் கல்லும் தகரும்ம் தகரா கனங்குழாய் கொல் உலை கூடத்தினால்” என பொருள் விளங்க பிரியும் இந்த உலகில் எல்லாம் கற்றவர் என யாருமில்லை, அப்படி கற்றுவிட்டதாக கருதி கர்வம் கொள்ள கூடாது, பெரும் பாறையும் கொல்லன் உலையில் செய்யபட்ட சிறு உளியால் தகர்ந்து போகும் என்பது […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 05
“காயக் கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல்” இக்குறள் “காய கிலேசம் உணர்ந்த பயனன்றே ஓயா உணர்வு பெறல்” என பிரிந்து பொருள்தரும் காயம் என்றால் உடல், கிலேசம் என்றால் தீரா கவலைகள் என பொருள்இந்த உடலானது சதாகாலமும் மாறிகொண்டே இருந்து ஒரு காலம் அழிந்துவிடும் என்ற சிந்தனையின் பயனே இறையுணர்வு பெற்ற நிலை என்பது குறளின் பொருள் இந்த உடல் அழிந்துவிடும் அது நிலையற்றது, நிலையான பரம்பொருளை உணர்ந்து அடைவதே நிரந்தரமானது எனும் உணர்வு […]
ஆச்சார கோவை 05
“எச்சிலார் தீண்டார் பசு, பார்ப்பார் தீ தேவர்உச்சந் தலையோடு இவை என்ப யாவரும்திட்பத்தால் தீண்டாப் பொருள்” எச்சில் கையினாலோ, துடைப்பம் போன்றவற்றாலோ யாரும் தொடகூடாதவை பசு, வேதம் ஓதும் அந்தணர்கள், நெருப்பு, தெய்வ சிலைகள், மானிட உச்சந்தலை என ஐந்து விஷயங்களை ஆச்சாரம் என ஆச்சார கோவை சொல்கின்றது இவை ஐந்தும் புனிதமான விஷயங்கள் என்பது பாடல் சொல்லும் விஷயம், அக்கால மரபில் இவையெல்லாம் மிக புனிதமானவைகளாகவும், வலுவான சத்தியம் செய்யும் அளவு உயர்ந்த இடத்திலும் கொண்டாடபட்டன […]
ஒரு காலத்தில் வெள்ளையருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சொல்லும் காங்கிரசார் இப்பொழுது ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் ராகுலுக்கு ஆதரவாக பெரும் போராட்டம் நடத்திகொண்டிருப்பது தேசத்தின் அவமானங்களில் ஒன்று ராகுல் மிகபெரிய ஊழல் குற்றசாட்டில் சிக்கியிருக்கின்றார், அவர்மேல் முறையான விசாரணை நடக்கின்றது, அந்த விசாரணை கூடவே கூடாது என காங்கிரசார் போராடுவதெல்லாம் எந்த அளவு அந்த இயக்கம் சீர்கெட்டு நாசமாயிற்று என்பதற்கான சாட்சிகள் ராகுல் மேலான குற்றசாட்டை மறைக்க அக்னிபாத் விஷயத்தையும் கையில் எடுக்கின்றார்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தல், […]
செஸ் ஒலிம்பியாட்
பிரதமர் மோடி சர்வதே செஸ் ஒலிம்பியாட்டின் சுடரை நேற்று ஏற்றியுள்ளார் உலக சதுரங்க போட்டி பேரவை செஸ் ஒலிம்பியாட் எனும் மாபெரும் செஸ் போட்டியினை இந்திய தமிழகம் மாமல்லபுரத்தில் நடத்துகின்றது, 44வது செஸ் ஒலிம்பியாட் இது, பெரும்பாலான விளையாட்டுக்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இதற்கான ஜோதி ஒலிம்பிக் தீபம் போல் ஏற்றபட்டு 75 நகரங்கள் வழியாக மகாபலிபுரத்தை வந்தடையும், அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொள்வார் சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, அக்கால பாரதத்தில் அரசர்கள் அதிகம் […]
இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்டம் உலகளவில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது, மோடி அரசின் மாபெரும் வெற்றியாகவும் தேசத்தை அவர் வலுபடுத்தியிருக்கும் விதமாகவும் பார்க்கபடுகின்றது உலகெல்லாம் கொரொனா காலத்தின் விளைவுகள் மோசமாக தெரிய தொடங்கியிருக்கும் காலமிது, ஒவ்வொரு நாடும் பெரும் சவால்களை சந்தித்து கொண்டிருக்கின்றது, பெரும் வேலை இழப்புக்களும் பொருளாதார சவால்களும் ஒவ்வொரு நாட்டையும் சூழ அடிக்கின்றது இந்நிலையில் உக்ரைன் யுத்தம் உணவுபொருள் விலையேற்றத்தை கொடுத்து நிலமையினை இன்னும் சிக்கலாக்குகின்றது ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தில் தடுமாறுகின்றது, மாபெரும் வல்லரசுகள் […]
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 13 “கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோ ரணிகலம் வேண்டாவாம் – முற்றமுழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரேஅழகுக் கழகுசெய் வார்” இவ்வரி “கற்றோருக்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணி கலம் வேண்டாவாம் முற்ற முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே அழகுக்கு அழகு செய்வார்” என பிரிந்து பொருள் தரும் கற்றோருக்கு கல்வியே அழகு சேர்க்கும் அணிகலன் அது அன்றி இதர அணிகலன்கள் தேவையில்லை, முழுவதும் அழகு பூண்ட […]