பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 09

துஷ்யந்தன் அந்த கானகத்தின் ஆசிரமத்தை அரக்கரிடம் இருந்து காக்க வந்துவிட்டான் என்றதும் அந்த தவகுடில் மகிழ்ந்தது, மீண்டும் தர்ப்பை புல் சேகரித்தனர், யாக குண்டம் எழுப்பினர் எங்கும் உற்சாகம் கரைபுரண்டது அப்போது தர்ப்பைபுல் அறுக்க தயாரான பெண் சொன்னாள் “எவ்வளவு வியப்பு?, எவ்வளவு மகிழ்ச்சி?, வல்லாளன் வில்லாளன் துஷ்யந்தனே வந்து நமக்கு காவல் இருக்கின்றான், வலிமையின் மாட்சிக்கு சிகரமான அவனே வந்தபின் நம் பயம் எங்கே போயிற்று? முன்பு இந்த அரக்கரை கண்டால் புலிகண்ட மான்கூட்டம் போல் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 08

பாகனும் துஷ்யந்தனும் பேசிகொண்டிருக்கையில் ஏவலாள் வந்து மன்னனை வணங்கி இருமுனிவர்கள் அவனை தேடி காண வந்த செய்தியினை சொல்கின்றார்கள் காலத்தை கடத்திடாமல் அவர்களை உடனே வரசொல் என்ற மன்னன், அவர்கள் வந்ததும் எழுந்து வரவேற்றான் அவன் அழகையும் தோற்ற பொலிவினையும் கண்ட முனிவர் இன்னொருவரிடம் சொன்னார் “இவர் தேஜஸ் சூரியன் போல் தகதக்கின்றது ஆனால் கண்குளிர பார்க்கும் நிலவு போல் சுடர்விடுகின்றது தவயோகத்தில் நிறைந்து பழுத்த கணல் போன்ற மேனிகொண்ட முனிவர்க்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அதிகம், வேறுபாடு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 07

வேட்டையினை நிறுத்திய துஷ்யந்தன் தொடர்ந்து சொல்கின்றான். “கொடிய காட்டுத்தீ புயல் காற்றோடு சேர்ந்து சுற்றி வளைத்து எரிப்பதைப் போல, வேட்டைக்காக எந்த உயிரையும் தப்ப விடாதபடி காட்டை வளைத்த நம் படைகள் அதனை கைவிட்டு அமைதியாக திரும்பட்டும். சிங்கத்தின் கம்பீரம் போல் மாட்சிமை மிக்கவர்களும், சினம் தவிர்த்தவர்களுமான தூய துறவிகள் வாழுமிடம் இது. அவர்கள் கோபத் தீயினை மூட்டும் வண்ணம் எந்த செயலும் செய்ய கூடாது தளபதியே. துறவிகள் சினம் கொள்ளாதவர் போல் சாந்தமே உருவானவர்களாக தோன்றினாலும், […]

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி நிறைவுக் குறிப்பு

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி என இரண்டையும் இன்று நிறைவு செய்துவிட்டோம் திருமுருகாற்றுபடை தமிழின் ஆதி முருகபக்தி இலக்கியம், அருணகிரிநாதரின் பாடல்கள் பிந்தியவை. நக்கீரரே காலத்தால் மூத்தவர் அவ்வகையில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தலத்தை நினைந்து அல்லது அங்கு செல்லும் போது படிக்கவேண்டிய பாடல் இது, மிக்க பலன் உண்டு நல்ல பலன்களை தரும் அது கோர்வையான பாடல் என்பதால் 317 அடிகளையும் ஒரே பதிவு அல்லது சில பதிவுகளில் தரமுடியவில்லை நீண்டுவிட்டது, தொடர்ந்து வருபவர் கவனித்திருக்கலாம் […]

காளிதாசன் சாகுந்தலம் : 06

(இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனை தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்று தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா அக்காலத்தில் காட்டின் மிருகங்களை கட்டுபடுத்தி மக்களை காக்கவேண்டியது அரச கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்கு செல்வார்கள், அந்த பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்த தவசிகள் குடிலுக்கு வந்து […]

திருமுருகாற்றுப்படை : 20

301 முதல் 317 வரையான கடைசி வரிகள். ஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உதிர ஊகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்றுநன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியாவாழை முழுமுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்கோழி வயப்பெடை இரியக் கேழலொடுஇரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்னகுரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்றுஇழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை […]

இசைஞானியின் ஆன்மீகத்தேடல்

வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்குமான முதல் முறுகல் முதல்மரியாதை படம் வெளிவந்து அதற்கு தேசிய விருது கிடைத்ததில் தொடங்கிற்று விஷயம் ஒரு பத்திரிகையில் இளையராஜா எழுதிய தொடருக்கு வந்தது இளையராஜாவின் வார்த்தைகளுக்கு தேன் தடவி கொடுப்பது நான் என வைரமுத்தர் எங்கோ சொல்ல, இளையராஜா சீற வெடித்தது யுத்தம் “மெத்தை வாங்குனேன் தூக்கத்த வாங்கல” இதெல்லாம் வரியா? இசை இல்லாமல் எடுபடுமா என இளையராஜா சொல்லியதாக வைரமுத்து காதுக்கு போக வைரமுத்தர் உறும தொடங்கினார் இந்த காலகட்டங்களில் நடந்த ஒரு […]

ஒரு சிறு குறிப்பு

ஒவ்வொரு நெல்லையனுக்கும் தாமிரபரணி, அகத்தியர், நெல்லையப்பர், திருசெந்தூர் நாதன், கொற்கை, ஆதிச்சநல்லூர், நின்றசீர் நெடுமாறன், குமரகுருபரர், நம்மாழ்வார், ஜடாவர்ம சுந்தரபாண்டியன், கட்டபொம்மன், புலித்தேவன், வாஞ்சிநாதன் , வ.உ.சி என பெரும் கர்வமான அடையாளங்கள் உண்டு அந்த ஞானகர்வ பாரம்பரியத்தில் வந்த எங்கள் பாரதிக்கும் மகத்தான இடம் உண்டு அவன் எங்கள் பெருமை, அவனின் நினைவுகளே எப்போதும் எம்மை வழிநடத்தும், அவன் எங்கள் ஞானகாற்று, தேச கங்கை நதி அவனை எப்படி நாம் மட்டம் தட்டுவோம்? பாரதி எம் […]

ஸ்வாமி சின்மயானந்தா

19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது கல்வியில் மாற்றம் […]

எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் இசைஞானியும்

ஒரு சித்தனை இன்னொரு சித்தனேதான் அடையாளம் காண முடியும், இனம் இனத்தோடு என்பது அதுதான் பாலகுமாரனின் நினைலவலைகளில் இளையராஜாவினை பற்றிய வரிகளில் ஒன்று “இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க நீ எம்மான். கரகரவென்று கண்ணில் நீர்வழிய நான் உட்கார்ந்திருந்த நிகழ்ச்சியும் நடந்தது. அது இளையராஜாவின் “ஹௌவ் டு நேம் இட்” கேசட் வெளியீட்டின் போது. எனக்கு இசையில் ஞானம் கிடையாது‌ காதுகள் மட்டுமே உண்டு. தேர்ச்சி கிடையாது. கொஞ்சம் பயிற்சி உண்டு. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications