பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அகத்தியர் திருமகள் துதி : 06

அகத்தியர் திருமகள் துதி : 06 “செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும்எழில்மேனித் திருவே வேலைஅங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய்வெண்மதியாய் அமரர்க் கூட்டும்பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியேநெடுங்கானில் பொருப்பில் மண்ணில்எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம்சிறந்தோங்கி இருப்ப தம்மா.” அழகான சிவந்த தாமரை மலரின் மகரந்தம் போன்ற பொலிவுடன் ஒளிரும் திருமமளே, நீல கடலால் சூழபட்ட இந்த உலகத்தின் இருள் அகற்றும் சூரியனாய் நிற்ளே, சந்திரனின் ஒளியாய் இருப்பவளே தேவர்களை மகிழ்விக்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே, வனமோ மலையோ நிலமோ […]

அகத்தியர் திருமகள் துதி : 05

அகத்தியர் திருமகள் துதி : 05 “மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித்தனிபுரக்கு மன்னர் தாமும்கல்வியினில் பேரறிவில் கட்டழகில்நிகரில்லாக் காட்சி யோடும்.வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்வாகைபுனை வீரர் தாமும்அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்அருள் நோக்கம் அடைந்து ளாரே” அதாவது மிக மிக செழுமையான பூமியினை பெற்று ஆட்சி செயும் அரசர்களும், மாபெரும் கல்வியாளர்களும், அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்குவோரும், மிக திறமையான படையினால் பகைவர்களை வெற்றி கொள்வோரும் தாமரை முகட்டில் இருப்பவளும் அழகிய அணிகலன்கள் அணிந்தவளுமான‌ அன்னையின் அருள் பெற்றவர்கள் ஆவர் […]

அகத்தியர் திருமகள் துதி – 04

அகத்தியர் திருமகள் துதி ” 04 “மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்செந்துவர்வாய் மயிலே மற்றுன்கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்உலகமெலாம் காவல் பூண்டான்படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவிமதிபுனைந்த பரமன் தானும்துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ” இப்பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும். “ம‌டல் கமலம் நறும் முகட்டில் அரசிருக்கும்செந்தூர் உவர்வாய் மயிலே உன்கடைக்கண் அருள் படைத்து அன்றோ மணிவண்ணன்உலகெல்லாம் காவல் பூண்டான்படைத்தன் நான் முககிழவன் பசுகுழலிமதியனைந்த பரமன் தானும்துடைத்தன் நின் பெரும் சீர்த்தி எம்மன்னோரால்எடுத்து சொல்லல் மாற்றோ’ […]

அகத்தியர் திருமகள் துதி : 03

அகத்தியர் திருமகள் துதி : 03 “கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்திசெழுங்கமலக் கையாய் செய்யவிமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன்தனையீன்ற விந்தை தூயஅமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள்அவதரித்தோய் அன்பர் செஞ்சத்திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரேஎனவணக்கஞ் செய்வான் மன்னோ…..” இப்பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும். “கமலை திரு அமரும் மார்பன் மனை கிழத்திசெங்கழு கமலம் கையாய் செய்ய‌விமலை பசங்கழை குழைக்கும் வேனிலோன்தனை ஈன்ற விந்தை தூய‌அமுத கும்ப மலர் கரத்தாய் பார் கடலுள்அவதரித்தோய் அன்பர் செஞ்சத்துதிமிர் அகன்றிட உள்ளிருக்கும் செஞ்சுடரேஎன வணக்கம் […]

அகத்தியர் திருமகள் துதி : 02

அகத்தியர் திருமகள் துதி : 02 “கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்பொகுட்டிலுரை கொள்கைபோலமழையுறழுத் திருமேனி மணிவண்ணன்இதயமலர் வைகு மானே…முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பேகரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீரஅருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “கொழுது இசை அளி முரலும் தாமரை மென்பொகுட்டில் உரை கொள்கை போல‌மழையுற உழு திருமேனி மணிவண்ணன்இதயமலர் வைகும் மானேமுழுது உலகும் இனிது ஈன்ற‌ அருள் கொம்பேகர கமலம் முகிழ்ந்தெங்கு நாளும்கழி பெருங்காதலில் தொழுவோர் வினைதீர‌அருள் கொழிக்கும் கமலக்கண்ணாய்.” தாமரையின் பொகுடு எனும் […]

அகத்தியர் திருமகள் துதி : 01

அகத்தியர் திருமகள் துதி : 01 “மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்உயிரொழிய முனிவு கூர்ந்தபூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்அகன்மார்பில் பொலிந்து தோன்றித்தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லாபுரத்தினிது சேர்ந்து வைகும்பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்குறுமுனிவன் பழிச்சு கின்றான்.” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “மூவுலகம் இடர் இயற்றும் அடல் அவுணர்உயிர் ஒழிய முனிவு கூர்ந்த‌பூவை உறள் திருமேனி அருள் கடவுள்அகன்ற‌ மார்பில் பொலிந்து தோன்றிதேவர் உலகினும் விளங்கும் புகழ் கொல்லாபுரத்தின்இனிது சேர்ந்து உவகும்பவை இருதாள் தொழுது பழமறை தேர்குறுமுனிவன் பழிச்சு கின்றான்.” இனி பாடலின் […]

அகத்தியர் திருமகள் துதி – முன்னுரை.

அகத்தியர் திருமகள் துதி – முன்னுரை. முப்பெரும் தேவியரில் மகாலட்சுமி ஒன்று எனச் சொல்லபட்டாலும், “தேவி மஹாத்மியம்” எனும் நூல் மகாலட்சுமியின் பெருமைகளைத் தெளிவாக அழுத்தமாக எடுத்துரைக்கின்றது. மஹாலட்சுமியினை வணங்காமல் ஒரு காரியம் முழுமை அடையாது, புத்தி முக்தி இரண்டும் ஒருசேர அருள்பவள் அன்னை என்பது அவளுக்கான சிறப்பு, அவளே பூமாதேவி எனும் வகையில் பூமியில் பிறந்துவிட்ட எல்லோரும் அவளை வணங்காமல் முழு பலன்களை அடைந்துவிடமுடியாது, இந்தப் பூலோகம் அவளுக்கானது. அப்படியான அன்னை மஹாலட்சுமிக்கு இத்திருநாட்டில் பல […]

அபிராமி ஆலயங்கள் 05 : வாணாபுரம் பாணபுரீஸ்வரர் ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 05 : வாணாபுரம் பாணபுரீஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோவிந்தபுரத்தில் இருந்து வடக்கே சில நூறு மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம், இதன் வரலாறு ராமாயண காலத்தில் இருந்தே தொடங்குகின்றது. ராமபிரான் வனவாசத்தின் போது சிவபூஜைக்காக உருவாக்கிய தலம் இது, அவர் தன் பித்ரு கடனுக்காக சில பூஜைகளைச் செய்ய வேண்டி இந்த லிங்கத்தை ஸ்தாபனம் செய்து தன் அம்பால் அருகிருக்கும் தீர்த்தத்தை உருவாக்கினார், ராமபிரானின் பாணம் உருவாக்கிய […]

அபிராமி ஆலயங்கள் 04 : மேல்மருத்துவகுடி ஐராவதேஸ்வரர் அபிராமி அன்னை ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 04 : மேல்மருத்துவகுடி ஐராவதேஸ்வரர் அபிராமி அன்னை ஆலயம். அபிராமி அன்னை ஆலயங்களில் நான்காம் ஆலயமான இந்த ஆலயம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது, தேவாரம் வைப்பு தலமான இந்த ஆலயத்தின் வரலாறு இந்திரனிட்ம இருந்து தொடங்குகின்றது. இந்திரன் பவனிவரும்போது துர்வாசர் சிவனுக்கு அர்ச்சனை செய்த மலர்மாலை ஒன்றைக் கொடுத்தார். அதை மிக ஏளனமாக பெற்றுக்கொண்ட இந்திரன் அதைத் தன் வெள்ளையானை மேல் வைத்தான், அதுவும் அலட்சியமாக அந்த மாலையினை இழுத்துப்போட்டுவிட்டு தன் போக்கில் சென்றது, […]

அபிராமி ஆலயங்கள் 03 : கொழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 03 : கொழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம். “திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளிதேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறைகொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்குருகாவூர் வெள்ளடை குமரி கொங்குஅண்டர் தொழும் அதிகைவீரட்டானம்ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்கயிலாயநாதனையே காணலாமே” இப்பாடல் அப்பர் சுவாமிகளால் பாடப்பட்டது, இங்குக் கூழையூர் கூடல் தலம் எனச் சொல்லப்படும் தலமே இந்தக் கொழையூர் அகத்திஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்திருக்கின்றது இந்த அபிராமி ஆலயம், தேவார வைப்பு தலமான இந்த ஆலயத்தின் வரலாறு அகத்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications