பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 03

“பாகனே , தன்னுள் இருக்கும் இறைவனை கண்டு அடைந்த முனிவர்கள் இருக்கும் இந்த குடிலை நான் சென்று அடைந்து, என்னை இழந்து இறைவனை அறிய முயல போகின்றேன்” என விடைபெற்ற துஷ்யந்தன் முனிவரின் குடில் நோக்கி சென்றான் இது துறவியரின் பூங்காவனம், துறவுநெறி சுரங்கம், இந்த இடத்துக்கு வந்ததே என் நல்வினை என்றபடி குடில் படியில் காவ்லைத்த அவன் ஒரு மாற்றம் உணர்ந்தான் ஆம், அவன் தன் வலது கண்ணும் வலது தோளும் துடிக்க கண்டான், அது […]

சப்த கன்னியர் – 08

சாமுண்டி – ஏழாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் முதலில் தோன்றியவளும் அதிசக்திவாய்ந்தவளுமானவள் இந்த சாமுண்டி, இவள் அதிசக்தி மிக்கவள் மிகபெரிய வடிவாய் எல்லா வகையிலும் காவல் இருப்பவள் இந்த தேவி பற்றி குமர குருபரர் சொல்கின்றார் அதாவது “கடகளிறு உதவு கபாய் மிசைப்போர்த்தவள்” மத யானை தந்த தோல் ஆகிய நிலை அங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள். அதாவது அன்னை யானை வடிவில் வந்த அசுரனை அழித்து தோலை போர்த்திக் கொண்டவள் என்பது பொருள், இக்காட்சி […]

சப்த கன்னியர் – 07

இந்திராணி – ஆறாம் கன்னிதெய்வம் “க‌டிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்” என அவளை குமரகுருபரர் சொல்கின்றார், அவள் எப்போதும் மணக்கும் மலர்மாலை அணிந்த இந்திரனின் சக்தி என்கின்றார். சப்த கன்னியரில் ஆறாம் தேவி இந்த இந்திராணி. இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டி அருள் வழங்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும், ஐந்தரி எனும் பெயரையும் கொண்டவள், இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும், தேவேந்திரனின் […]

சப்த கன்னியர் – 06

வராஹி தேவி – ஐந்தாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் ஐந்தாம் தேவி இந்த வராஹி. வராகம் என பகவான் விஷ்ணு அவதாரம் எடுத்து உலகை மீட்டது வராக புராணம் சொல்லும் பெரும் வரலாறு அந்த வராக பெருமானின் பெண் வடிவமாக அவதரித்தவள் இந்த அன்னை இவள் மற்ற சப்த கன்னியரில் இருந்து இவள் கொஞ்சம் வித்தியாசமானவள், அதி உச்ச பலசாலி மிருக பலம் கொண்டவள் அதே நேரம் கனிவும் அன்பும் நிரம்பிய மனம் கொண்டவள் லலிதாம்பிகையின் படைத்தலைவி […]

சப்த கன்னியர் – 05

வைஷ்ணவி தேவி – நான்காம் கன்னிதெய்வம் “கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்” என குமரகுருபரர் இந்த தேவி பற்றி சொல்கின்றார். அதாவது, கடலை கல்லால் நிரப்பி பாலம் கட்டிச் சென்றவள் என்கின்றார். ராமனின் சக்தியாக இருந்தவள் இவளே என்பது அதன்பொருள். அவ்வகையில் இவள் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி என்கின்றார் குமரகுருபரர். அன்னையின் புராணமும் அதைத்தான் சொல்கின்றது, அன்னை விஷ்ணுவின் மார்பில் இருந்து வெளிபட்டாள் என்பது அவளின் அவதார குறிப்பு. “ஸஹஸ்ர பாஹும் புருஷம் புராணம்சயாநம் அப்தௌ லலிதா […]

திருமுருகாற்றுப்படை : 16

( 248 முதல் 260 வரையான வரிகள்) “வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபடஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறேஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர் பயந்த ஆறமர் செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரைமலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!இழையணி சிறப்பின் பழையோள் குழவி!வானோர் வணங்குவில் தானைத் தலைவ!” இனி பாடலின் பொருளைக் காணலாம். பாணனுக்கு முருகப்பெருமானின் அறுபடை […]

சப்த கன்னியர் – 03

மகேஸ்வரி – இரண்டாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினை காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தபட்டதா? யாரோ இடைசெருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களை காணலாம் சப்த கன்னியர் வழிபாடு இங்கு கால காலமாக உண்டு, சிறிய கோவில்களின் தெய்வமாக கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டை சொல்கின்றது “மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்வேழம் என்ற கொடி ஏழுடைச்சோதி மென் […]

சப்த கன்னியர் – 04

கௌமாரி தேவி – மூன்றாம் கன்னிதெய்வம் கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல், அவ்வகையில் இந்த கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினை குறிப்பவள். “கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” என குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகபெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதை சொல்கின்றார். சப்த கன்னியரில் முன்றாம் தேவியான இந்த அன்னை முருகபெருமானின் சக்தி, அந்த ஸ்கந்தனின் இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி. அவள் முருகனின் அம்சம் […]

சப்த கன்னியர் – 02

பிராம்மி – முதல் கன்னிதெய்வம் இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார […]

சப்த கன்னியர் – 01 முன்னுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாக கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை என கொண்டாடுவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications