பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சத்ரபதி சாம்பாஜி : 04

சத்ரபதி சாம்பாஜி : 04 ஹம்பிராவ் காதில் அந்தச் சிப்பாய் தகவலைக் கூறியதும் முன் சென்று கொண்டிருந்த சாம்பாஜியினை வேகமாகப் பின்னுக்கு அழைத்த ஹம்பிராவ் ராஜாராமை திரும்பப் போகச் சொன்னார், சாம்பாஜி உள்ளே இழுக்கப்பட்டு சேனைகளின் கடும் காவலில் வைக்கப்பட்டான். சட்டென சில உத்தரவுகளைப் பிறப்பித்தான் ஹம்பிராவ். யாருக்கும் எதுவும் முதலில் புரியவில்லை, சாம்பாஜிக்கும் குழப்பமே மிஞ்சிற்று. எல்லாம் உறுதி செய்தவன் சாம்பாஜியிடம் ரகசியமாய்ச் சொன்னான், “என் தங்கை மொகலாயருக்குத் தூது அனுப்பியிருக்கின்றாள், சென்றவனைப் பிடித்துவிட்டோம் என்றாலும் […]

சத்ரபதி சாம்பாஜி : 03

சத்ரபதி சாம்பாஜி : 03 டெல்லியினை அடைந்த ஔரங்கசீப் செங்கோட்டையில் தன் அரச மண்டபத்தில் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான். ஒவ்வொரு துறையாக விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது ஜோத்பூர் அரசு செய்யும் பெரிய கலகம் பற்றியும் நாடெல்லாம் எழுந்திருக்கும் புதிய நெருக்கடி பற்றியும் அவனிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆம், அவன் ஜிசியா வரியினை மீள விதித்து மீண்டும் இந்துக்களையும், சீக்கியரையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருந்தான். ஜிசியா வரிகுறித்து சிவாஜி வரலாற்றில் மிக ஆழமாகப் பார்த்திருந்தாலும் இங்கும் அதனைச் சுருக்கமாகப் […]

சத்ரபதி சாம்பாஜி : 02

சத்ரபதி சாம்பாஜி : 02 ஔரங்கசீப்பின் முன் நின்றிருந்த உசேனிடம் சொல்லத் தொடங்கினான் ஔரங்கசீப், “இப்போது அந்தக் கலகக்காரன் சிவாஜி அரசில் வாரிசு போட்டி வந்திருக்கும், அதுதானே” என்றவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். உசேனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக ரகசியமாக திரட்டப்பட்ட தகவல், அதுவும் அரண்மனை கோட்டைகள் தாண்டி மக்களிடம் கூட வராத தகவல் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்பது, அவன் பார்வையிலே அதைப் புரிந்துகொண்ட ஔரங்கசீப் சொன்னான். “என்ன பார்க்கின்றாய், அரசனுக்கு ஆயிரம் கண்களும் இரண்டாயிரம் […]

சத்ரபதி சாம்பாஜி : 01

சத்ரபதி சாம்பாஜி : 01 ஹம்பிராவ் மோதி மிகுந்த குழப்பத்தில் அமர்ந்திருந்தான். சாளரத்துக்கு வெளியே அடிக்கடி வெறித்தபடி பார்த்திருந்தான். அவன் முன் தங்கை சோயுர்பாய் கண்களில் ஆசை மின்ன எதிர்பார்ப்பு மின்ன அமர்ந்திருந்தாள். ராய்காட் கோட்டையின் ஆலோசனை அறையில் அவர்கள் அப்படி எதிர் எதிரே அமர்ந்திருக்க வெளியே தாராபாயும் ராஜாராமும் இன்னும் சில அரண்மனை குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ராஜாராமுக்கு வயது பத்து, தாராபாய்க்கு வயது ஆறு. இருவருக்கும் ஏற்கனவே மணம் நிச்சயக்கப்பட்டிருந்தது, பருவவயது தாண்டியதும் அவர்கள் […]

சத்ரபதி சாம்பாஜி – முன்னுரை.

சத்ரபதி சாம்பாஜி – முன்னுரை. நாயன்மார் புத்தகத்தை அடுத்து வீரசிவாஜி புத்தகம் தயாராகும். தமிழில் சிவாஜியினைப் பற்றி சுமார் இரண்டாயிரம் பக்கம் கொண்ட புத்தகம் அதுவாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது. வீரசிவாஜியின் வாழ்வு இருபதுகோடி பக்கம் எழுதினாலும் தீராத அற்புத காவியம், அவன் வாழ்வில் அக்கால இந்தியா, ஔரங்கசீப், சீக்கியர், நாயக்க மன்னர்கள், மொகலாயரிடம் உறவாக சிக்கிய ராஜபுத்திரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஆப்கானிய எல்லை போர்கள், மொகலாயர் செய்த அத்தனை அட்டகாசங்கள், போர்ச்ச்கீசியரின் வஞ்சகங்கள் , பாமினி சுல்தான் கோஷ்டிகள், […]

பஞ்சவன சிவதலங்கள்.

பஞ்சவன சிவதலங்கள் – முன்னுரை. தென்னாடு கொண்ட சிவனே போற்றி என்பது கயிலாயத்துக்கு தெற்கே உள்ள நிலத்தினைச் சொன்னாலும் தென் பகுதியான தமிழகத்தில் சிவனுக்கான ஆலயங்கள் மிக அதிகம். அவை வகைபடுத்தப்பட்ட முறையும் அதிகம். பஞ்ச ஆரண்ய தலம், நவ கைலாயம், அட்ட வீராட்டானம், சப்த விடங்கர், நவபுலியூர், பஞ்ச சபைகள் என எத்தனையோ வகைகளில் சிவாலயங்கள் வகைபடுத்தப்பட்டன. ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் தத்துவங்களைக் கொண்டவை, சிவன் ஒவ்வொரு வடிவிலும் வந்து போதித்து நின்ற திருத்தலங்கள் அவை. […]

நரசிம்மர் ஆலயங்கள்.

நரசிம்மர் ஆலயங்கள் 01 : சிங்கம்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் ஆலயம். ஆவணிமாதம் விஷ்ணுவிற்கானது, விஷ்ணு வழிபாடு பல வகையில் உண்டு. அது வாமன ஜெயந்தி முதல் பல வடிவில் உண்டு, தசாவதரமும் கொண்டாடப்படும் மாதமும் இதுவே. அவ்வரிசையில் நரசிம்ம வழிபாடும் பிரசித்தி, மிக மிக உக்கிரமான ஆனால் மிக‌ப் பலமான அவதாரம் அந்த நரசிம்ம அவதாரம். இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் ஞானமானவை. அர்த்தமுள்ளவை. அம்மதம் ஒன்பது வகையான விலங்குகளை இறைவனின் வாகனமும் வடிவமுமாக்கிற்று, அதில் ஒன்று […]

மாரியம்மன் ஆலயங்கள்.

மாரியம்மன் ஆலயங்கள் : 01புன்னை நல்லூர் மாரியம்மன். அம்பாளே இந்த உலகின் ஆதி சக்தி. நித்திய பரிபூரண சக்தி. இந்தப் பிரபஞ்சம் முழுக்க அவள் ஆட்சியே. அப்படியானவள் சில இடங்களில் தன்னை உரிய காலத்தில் உரிய வடிவில் வெளிபடுத்துவாள். அதற்குப் பூர்வ ஜென்ம பலன் அவசியம். சில கர்மத் தொடர்பு அவசியம். அப்படியானவர்களுக்குத் தன்னை வெளிபடுத்தும் அன்னை அவர்கள் பொருட்டு எல்லா மக்களுக்கும் அருள் வழங்குவாள். அப்படி அவள் அருளாட்சி நடக்குமிடம் சோழநாட்டின் புன்னை நல்லூர் மாரியம்மன் […]

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள்.

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள் – முன்னுரை. கார்த்திகை மாதம் என்பது கர்ம தொடர்புடையது, கர்மத்தைச் சரியாக முடிக்க ஒரு வைராக்கியம் வேண்டும், கூடவே உக்கிரமான வேகமும் வேண்டும், இதனாலேதான் கார்த்திகை மாதம் ருத்ர அம்சமெல்லாம் கொண்டாடப்பட்டது. காலபபைரவர், யமன் போன்ற தெய்வங்களெல்லாம் இம்மாதத்தில் கொண்டாடப்பட்ட ரகசியம் இதுதான், கார்த்திகை என்பது மாதங்களில் எட்டாம் மாதம், எட்டு என்பது எப்போதுமே ஒரு சமநிலை அல்லது பழையன முடிந்து புதியன பிறப்பதைச் சொல்லும், புதிய படைப்பினைச் சொல்லும் கர்கம் முடித்துப் […]

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார். ஆழ்வார்களில் வித்தியாசமானவரும், ஏதோ ஒரு வகையில் கடைசிவரை பகவானுக்கு கைங்கரியம் செய்வேன், ஏதோ ஒருவழியில் செய்வேன் என செய்து நின்றவரும் அப்படியே வைகுண்ட பாக்கியம் பெற்றவருமான அந்த திருமங்கை ஆழ்வாரின் வாழ்வு சுவாரஸ்யமானது. பெரும் மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் வாழ்வு எப்படி ஒரு ஆழ்வாராக, பெருமாளின் அதிதீவிர பக்தனாக வாழ்ந்து பாசுரங்களை கொட்டிச் சென்ற பெருவாழ்வாக, எக்காலமும் ஆழ்வார்களில் மகா முக்கியமானவராக இடம்பெற்றது என்பது ஒவ்வொரு இந்துவும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications