பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜிஞ்ஞாஸு – திரு. நரேந்திர மோடி

மோடி தந்தி டிவியில் பேசும் போது தான் ஜிஞ்ஞாஸுவாக இருந்தபோதே தமிழகத்துக்கு வந்தேன் என ஒரு வரி சொன்னார். அது என்ன என தந்தி டிவி நெறியாளர்களும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை. ஆனால் அந்த சொல் சாதாரணமானது அல்ல‌. அதைப் புரிந்து கொண்டால் மோடியின் மிக ஆச்சரியமான அதிசயமான பின்னணி புரியும். பகவத்கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு, அது இப்படிச் சொல்லும். “சதுர்விதா பஜன்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ‌ர்ஜுன |ஆர்தோ ஜிஞ்ஞாஸு ரர்தார்தீ ஞானீ ச […]

கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு

2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே […]

இன்றிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றார் மோடி.

“அம்மா மதுரை மீனாக்ஷி அருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் எனையே ஆதரித்து அல்லல் களைந்தே காப்பாற்று அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன்சக்திவாழ்வைத் தந்து வளம் தந்து வாழ்க்கைக் கடலின் கரையேற்று தில்லை சிதம்பரம் பத்தினியே நெல்லையில் வாழும் பத்தினியே திருவடி மலரினைத் தொழுதிடுவேன் திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று ஓங்காரப் பொருள் நீதானே உலகம் என்பதும் நீதானேகாணும் இயற்கைக் காட்சிகளும் காற்றும் மழையும் நீதானே அம்மா தாயே உனைவேண்டி அழுதிடும் என்னைத் தாலாட்டிஅன்புடன் ஞானப் பாலூட்டி அகத்தின் […]

தீனதயாள் உபாத்யாய்

இன்று உலகின் மிகப்பெரிய கட்சி பாரதீய ஜனதா கட்சி (பாஜக), மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமும் அதுதான். பலமான இந்தியாவினை உருவாக்கி, இனி அவர்களை அசைக்கவே முடியாது, இனி எதிரிகளே அவர்களுக்கும் தேசத்துக்கும் இல்லை எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பலமான பாஜக இன்று ஆட்சியில் இருக்கலாம், மகா அசுரபலத்துடன் அது விஸ்வரூபமெடுத்து நிற்கலாம். இன்னும் 100 ஆண்டுக்கு அசைக்கமுடியா பலத்தை அது பெற்றிருக்கலாம். ஆனால் அதன் தொடக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது, சுருக்கமாகச் சொன்னால் அப்படி […]

குடியரசு தினம்

“தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” எனும் பாரதியின் நிரந்தரமான வரிகளுடன் தேசம் தன் 75ம் ஆண்டு குடியரசு தினவிழாவினைக் கொண்டாடுகின்றது. 1947ல் தேசம் சுதந்திரம் பெற்றாலும் இந்தியாவுக்கான சட்டதிட்டங்கள் என்ன? எப்படியான ஆட்சிமுறை நம்முடையது என விதிகளை வகுக்க மூன்று ஆண்டுகள் சட்டமியற்றி 1950ல் இதே நாளில்தான் இந்திய குடியரசு என அறிவித்தோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு எனும் பெயருடன், உலகின் மாபெரும் ஜனநாயக தேசம் எனும் கவுரவத்துடன் […]

நாதுராம் கோட்சே

//ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா? 5 கோடி இஸ்லாமியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை// ———————————- அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய […]

சுதந்திர இந்தியாவின் முதல் சங்கி, பூரண இந்து – ராஜாஜி

அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி. அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி. லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறா. அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசப்பணி என பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான். பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகப்படுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்தது அந்த மாமனிதனே. […]

ராமனை மீட்ட விஸ்வாமித்திரர் – அத்வாணி

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர். ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர். சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு. லால் கிருஷ்ண அத்வாணி. கராச்சியில் பிறந்தவர். தேசப்பிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசப்பற்றாளர். இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார். சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை, நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை. நாடு ஒன்றே அவரின் மூச்சானது. […]

சி. சுப்பிரமணியம்

சுதந்திர இந்தியாவில் எவ்வளவோ மாமனிதர்கள் இருந்தார்கள். கூரிய அறிவாளிகளும், தியாகிகளும் தன் வாழ்வை நாட்டுக்கும் மக்களுக்கும் கொடுத்துச் சென்ற உத்தமர்கள் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். அதனால் அடையாளம் தெரியாமலேயே மறைக்கப்பட்டார்கள். அப்படி ஒரு பெரும் பிம்பம் மறைக்கப்பட்டது, அவரின் புகழ் மறைக்கபட்டது, அவருக்கான இடத்தை பின்னாளில் வாஜ்பாய் கொடுத்தாலும் காங்கிரஸ் கடைசிவரை கொடுக்கவில்லை. இன்றும் அவரை நினைவு கூற யாருமில்லை என்பதுதான் சோகம். சி.சுப்பிரமணியம் – தமிழகமும், தேசமும் மறக்கமுடியா மனிதர் அவர். காமராஜர், […]

இரும்பு மனிதன் – சர்தார் வல்லபாய் பட்டேல்

இது ஒரே இந்துஸ்தானாக இருந்த தேசம். அதனை மொகலாயம் சிந்து நதி தொடங்கி கன்னியாகுமரி வரை தன் ஒற்றை ஆட்சியில் வைத்திருந்தது. இங்கு எப்போதும் ஒரு பேரரசு இருப்பதும் அதற்கு சிற்றரசுகள் வரிகட்டுவதும் வழமையாய் இருந்தது. அப்படித்தான் 16ம் நூற்றாண்டில் மொகலாயம் உச்சத்தில் இருந்தது. அதை எதிர்த்து பெரும் போர் தொடுத்து இனி இங்கு இந்து அரசு, ஒரே இந்துப் பேரரசு என எழும்பினான் வீரசிவாஜி. ஆனால் காலம் அவனுக்கு கருணை காட்டவில்லை. எனினும் அவன் எழுப்பிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications