பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி : 77

நாச்சியார் திருமொழி : 77 ( பாசுரம் 10.3) ஆண்டாளுக்கு மீண்டும் மீண்டும் கண்ணனின் நினைவு அலைமோதிற்று. அவளின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் குடிகொண்டிருக்கும் அந்தக் கண்ணனின் நினைவுகளும், அவளின் சிந்தை முழுக்க நிரம்பிய அந்த மாயவனின் எண்ணங்களும் அவளுக்குள் மீண்டும் மீண்டும் அலைமோதிக் கொண்டே இருந்தன‌. காதல் கொண்ட மனம் கொண்டவனைத் தவிர வேறேதும் நினைப்பதில்லை, முட்டைகளை அடைகாக்கும் பறவைபோல் அவன் நினைவுகளை அவள் நெஞ்சுக்குள் வைத்து காத்துக் கொண்டிருந்தாள். அவன் இனி எப்போது வருவான் […]

நாச்சியார் திருமொழி : 78

நாச்சியார் திருமொழி : 78 ( பாசுரம் 10.4) எப்போதும் கண்ணன் நினைவிலே இருக்கும் ஆண்டாள் கார்த்திகை மாத மழைக்காலத்தில் சிக்கிக்கொண்டாள், பொழியும் மழையும் சூரியன் காணா இதமான பொழுதுகளும், நட்சத்திரமும் நிலவும் காணா இருளில் மழையோடு வரும் குளிர்க்காற்றும் எல்லா உயிர்களையும் சிலிர்க்க செய்வது போல் ஆண்டாளையும் ஒரு ஏகாந்த மனநிலைக்குள் தள்ளியிருந்தது. எல்லா உயிர்களும் அதனதன் துணையுடன் இன்புற்றிருக்கும் அந்தக் கார்க்காலத்தில் மானும் மயிலும் எல்லா உயிரும் இணைந்திருக்கும் காலத்தில் தவளை செய்த பாக்கியம் […]

நாச்சியார் திருமொழி : 79

நாச்சியார் திருமொழி : 79 ( பாசுரம் 10.5) ஆண்டாளுக்கு மிகப் பெரிய குழப்பம் அதிகரித்தது, அப்படியே அது வருத்தமாயிற்று, அவளால் வெளியில் செல்ல முடியவில்லை. காரணம் கோவைக்கனி, முல்லை மலர் என எதைக் கண்டாலும் கண்ணன் நினைவு அவளை ஆட்டிவைத்தது, அதைக் கண்டு அவை அவன் நினைவில் மூழ்குவதும் அந்த மாயவன் வந்து அவளிடம் பேசிவிட்டு ஏங்க வைத்துவிட்டு செல்வதும் அதிலிருந்து அவள் வெளிவரமுடியாமல் அவன் நினைவில் போராடுவதும் அவளுக்கு மிகக் கொடிய துன்பமாயிற்று. அதனால் […]

நாச்சியார் திருமொழி: 80

நாச்சியார் திருமொழி: 80 ( பாசுரம் 10.6, 10.7) ஆண்டாள் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். வைகுண்ட ஏகாதசி கொண்டாட அந்த மார்கழியில் மக்களெல்லாம் காத்திருந்தனர், அவளோ கடும் குழப்பத்தில் இருந்தாள், அவளைக் கண்ணன் தன்னோடு சேர்ப்பதுமில்லை, அதே நேரம் விலகவிடுவதுமில்லை. அவளுக்குள்ளோ அச்சம் மிகுந்துகொண்டே வந்தது, அவள் எப்போதும் அவன் நினைவில் அவன் ஏக்கத்திலே நிறைந்திருக்க, அவனோ அவளை ஒரு விளையாட்டு பொருளாகக் கருதுகின்றானோ எனும் பெரும் கலக்கம் அவளுள் வந்தது. அந்தக் கலக்கம் கொஞ்சம் கொஞ்சம் […]

நாச்சியார் திருமொழி : 69

நாச்சியார் திருமொழி : 69 ( பாசுரம் 8.7, 8.8, 8.9) ஆண்டாள் எப்போதும் போல் கண்ணன் நினைவில் வாடிக் கொண்டிருந்தாள். ஒரு செடி நீருக்கு ஏங்குதல் போல் தரை வந்த மீன் நீருக்குத் துடிப்பதைப் போல் தவித்துக் கொண்டிருந்தாள், வேறு எந்தச் சிந்தனையுமே இல்லாதபடி ஒரே நினைவாய் அவன் அவளை முழுக்க ஆட்கொண்டிருந்தான். அவன் நினைவால் உருகிக்கொண்டிருந்த அவளுக்குக் காண்பவை எல்லாமே அவனை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன. வீட்டின் வெண்ணெய் பானை, பசுக்கூட்டம் முதல் உரல் […]

சிவ வாக்கியார் பாடல்கள்- 1 to 10

சிவ வாக்கியார் – முன்னுரை. இந்து ஞானமரபில் முக்கியமான சித்தர் சிவ வாக்கியார், திருமூலரைப் போல அவரின் பாடல்களும் காலத்தை வென்ற தத்துவப் பேழைகள். சிறிய பூசணிக்கொடி பெரிய காய்களைச் சுமப்பதுபோல் பெரிய பெரிய தத்துவங்களைச் சுருக்கமாக சொன்னவர் அவர், அந்த எளிமையும் தத்துவமும் மகா ஞானமானது. அவரையும் அவரின் பாடல்களையும் ஒவ்வொரு இந்துவும் அறிந்துவைத்தல் நலம், ஆகச் சிறந்த ஞானம் அவருடையது, அதனை நாத்திகம் எனச் சொல்லமுடியாது. அதெல்லாம் ஞான சிகரத்தின் மேலிருந்து பொழியப்பட்ட தத்வார்த்தங்கள், […]

நாச்சியார் திருமொழி : 81

நாச்சியார் திருமொழி : 81 (பாசுரம் 10.8) அந்த மழைக்காலப் பொழுதில் ஆண்டாள் வழக்கம் போல் மனதில் குழப்பத்துடன் கண்ணனை நினைத்தபடி அமர்ந்திருந்தாள், எல்லா உயிரும் மயங்கி தன் துணையுடன் மகிழும் அந்தக் கார் காலத்தில் கண்ணனின் நினைவு அவளுக்குள் அதிகம் வந்தது. அது அனலாய் அவளுக்குள் கொதித்தது, கொதித்த மனதுடனும் குழம்பிய சிந்தையுடனும் அவள் வானம் நோக்கினாள். சக்கரவாக பறவைகள் மழைநீர் அருந்த உற்சாகமாய்ப் பறந்து கொண்டிருந்தன, வானத்தில் கரிய மேகங்கள் யானைகளை போல் நகர்ந்து […]

நாச்சியார் திருமொழி : 82

நாச்சியார் திருமொழி : 82 (பாசுரம் 10(9)) ஆண்டாளுக்கு மனமெல்லாம் கண்ணன் நினைவாக இருந்தது. அவள் உயிரோடும் உணர்வோடும் கலந்த கண்ணனின் நினைவு அவளுள் அலை அலையாய் அடித்துக்கொண்டிருந்தது. இதயம் துடிக்கும் போதெல்லாம் அவன் நினைவும் சேர்ந்து சேர்ந்து அலையடித்துக் கொண்டே இருந்தது, கண்ணன் அவள் சுவாசமாய் இருந்ததால் அடிக்கடி பெருமூச்சு பெரும் காற்றாக வந்து கொண்டே இருந்தது. அவள் அதிகாலையில் வழக்கம் போல் எழுந்தாள். அதுவரை கனவில் இருந்த கண்ணனின் நினைவு இப்போது அவளோடு கண் […]

சரஸ்வதி அந்தாதி : 30

சரஸ்வதி அந்தாதி : 30 “பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “பெரும் திருவுருவும் சய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியை போற்றி எல்லா உயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும் இன்ப வேத பொருள் அருளும்திருந்திய செல்வம் தரும் அழியா பெரும் சீர் தருமே” இனி பாடலின் பொருளைக் […]

சரஸ்வதி அந்தாதி : 29

சரஸ்வதி அந்தாதி : 29 கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்யசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். கரியார் அகளமும் கண்ணும் கதிர்முலை கண்ணும் செய்ய‌சரியார் கரமும் பதமும் இதழ் அந்தவள் நறும்புரி ஆர்ந்த தாமரையும் திருமேனியும் பூண் பனவும்பிரியாத என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. பாடலை இனி கொஞ்சம் ஆழமாகக் காணலாம். “கரியார் அகளமும் கண்ணும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications