தசமஹாவித்யா – முன்னுரை.
தசமஹாவித்யா – முன்னுரை. நவராத்திரி காலங்களில் வணங்கப்பட வேண்டிய ஆதிபராசக்தியின் வடிவங்கள், அந்த மஹாலட்சுமியின் வடிவங்கள் பத்தும் முக்கியமானது, தசமஹா வித்யா என அவை இந்துதர்மத்தால் பெரிய இடத்தில் வைத்துப் போற்றப்படும் வழிபடப்படும் அம்மன் அம்சங்கள். இந்துமதம் தொன்மையானது, ஆழமானது மட்டுமல்ல அது முழு ஞானமுமானது, அதில் இல்லாத விஷயம் எதுவும் எங்குமில்லை, இங்கு இல்லாதது எங்குமில்லை எனும் அளவு அற்புதமான புதையல் அது. அம்மதத்தின் சிறப்பே அதனைப் புதையல் போல் தேடி தேடி அடையவேண்டும் என்பதே, […]