பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தசமஹாவித்யா – முன்னுரை.

தசமஹாவித்யா – முன்னுரை. நவராத்திரி காலங்களில் வணங்கப்பட வேண்டிய ஆதிபராசக்தியின் வடிவங்கள், அந்த மஹாலட்சுமியின் வடிவங்கள் பத்தும் முக்கியமானது, தசமஹா வித்யா என அவை இந்துதர்மத்தால் பெரிய இடத்தில் வைத்துப் போற்றப்படும் வழிபடப்படும் அம்மன் அம்சங்கள். இந்துமதம் தொன்மையானது, ஆழமானது மட்டுமல்ல அது முழு ஞானமுமானது, அதில் இல்லாத விஷயம் எதுவும் எங்குமில்லை, இங்கு இல்லாதது எங்குமில்லை எனும் அளவு அற்புதமான புதையல் அது. அம்மதத்தின் சிறப்பே அதனைப் புதையல் போல் தேடி தேடி அடையவேண்டும் என்பதே, […]

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் விழா

சித்ரா பௌர்ணமி பௌர்ணமிகளில் அது மகா முக்கியமானது. அந்த முழுநிலவு நாள் அன்று சில வழிபாடுகள் விசேஷமானவை. கண்ணகி கோவில் திருவிழா, கூவாகம் கோவில் அரவாணிகள் விழா அன்றுதான் நடக்கும். இதில் அந்த கூவாகம் விழா கொஞ்சம் கவனிக்க வேண்டியது, அது அரவாணிகளுக்கானது அரவாணிகளின் இன்றைய நிலை பரிதாபமானது, கொடூரமானது, நினைத்து பார்க்கவே கண்ணீர் பெருகும் மகா கொடுமையான வாழ்வு அது. உலகெல்லாம் எக்காலமும் அந்த தனி இனம் இருந்தது. மேற்காசிய பண்டை மதங்களில் கூட அதன் […]

மதுரை சித்திரைத் திருவிழா

இந்திய இந்து விழாக்களில் பிரசித்தியானதும், தமிழக இந்து விழாக்களில் மாபெரும் கூட்டம் கூடுவதுமான அந்த‌ மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு மிக உற்சாகத்துடன் கொண்டாடபடுகின்றது, இன்று கொடியேற்று விழா மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல, மதுரை உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று கிரேக்கத்தின் ஏதென்ஸ், இத்தாலியின் ரோம், அரேபியாவின் பாக்தாத் , இஸ்ரேலின் ஜெரிக்கோ, சிரியாவின் டாமாஸ்கஸ், எகிப்தின் எல்காப், எஸ்னா சீனாவின் பிஜிங் போன்ற நகரங்களை விட மிக பழமையானது இந்தியாவின் காசி […]

சித்திரை பவுர்ணமியும் முருகப்பெருமான் வழிபாடும்

பசுமலை, முக்குணம் மற்றும் ஈசூர் முருகன் ஆலயங்கள் சித்திரை பௌர்ணமி என்பது இந்துக்களுக்கு மகா விசேஷமானது, அது ஆகர்ஷன சக்திகள் சூட்சும சக்திகள் நிறைந்த நன்னாள். அந்நாளில் மலைமேல் இருக்கும் தங்களை தரிசித்தல் நன்று, முன்பு மலையில் இருக்கும் கண்ணகி தேவியின் ஆலய கொண்டாட்டமெல்லாம் அப்படித்தான் உருவானது, இன்றும் கேரள எல்லையில் அந்த கொண்டாட்டம் உண்டு சித்திரை பவுர்ணமி அன்று சித்தர்கள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடும் அவசியம், முருகப்பெருமான் இருக்குமிடமெல்லாம் சித்தர்களும் இருப்பார்கள் அதனால் அந்த வழிபாடு […]

சப்த கன்னியர் – 08

சாமுண்டி – ஏழாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் முதலில் தோன்றியவளும் அதிசக்திவாய்ந்தவளுமானவள் இந்த சாமுண்டி, இவள் அதிசக்தி மிக்கவள் மிகபெரிய வடிவாய் எல்லா வகையிலும் காவல் இருப்பவள் இந்த தேவி பற்றி குமர குருபரர் சொல்கின்றார் அதாவது “கடகளிறு உதவு கபாய் மிசைப்போர்த்தவள்” மத யானை தந்த தோல் ஆகிய நிலை அங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள். அதாவது அன்னை யானை வடிவில் வந்த அசுரனை அழித்து தோலை போர்த்திக் கொண்டவள் என்பது பொருள், இக்காட்சி […]

சப்த கன்னியர் – 07

இந்திராணி – ஆறாம் கன்னிதெய்வம் “க‌டிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்” என அவளை குமரகுருபரர் சொல்கின்றார், அவள் எப்போதும் மணக்கும் மலர்மாலை அணிந்த இந்திரனின் சக்தி என்கின்றார். சப்த கன்னியரில் ஆறாம் தேவி இந்த இந்திராணி. இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டி அருள் வழங்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும், ஐந்தரி எனும் பெயரையும் கொண்டவள், இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும், தேவேந்திரனின் […]

சப்த கன்னியர் – 06

வராஹி தேவி – ஐந்தாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் ஐந்தாம் தேவி இந்த வராஹி. வராகம் என பகவான் விஷ்ணு அவதாரம் எடுத்து உலகை மீட்டது வராக புராணம் சொல்லும் பெரும் வரலாறு அந்த வராக பெருமானின் பெண் வடிவமாக அவதரித்தவள் இந்த அன்னை இவள் மற்ற சப்த கன்னியரில் இருந்து இவள் கொஞ்சம் வித்தியாசமானவள், அதி உச்ச பலசாலி மிருக பலம் கொண்டவள் அதே நேரம் கனிவும் அன்பும் நிரம்பிய மனம் கொண்டவள் லலிதாம்பிகையின் படைத்தலைவி […]

சப்த கன்னியர் – 05

வைஷ்ணவி தேவி – நான்காம் கன்னிதெய்வம் “கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்” என குமரகுருபரர் இந்த தேவி பற்றி சொல்கின்றார். அதாவது, கடலை கல்லால் நிரப்பி பாலம் கட்டிச் சென்றவள் என்கின்றார். ராமனின் சக்தியாக இருந்தவள் இவளே என்பது அதன்பொருள். அவ்வகையில் இவள் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி என்கின்றார் குமரகுருபரர். அன்னையின் புராணமும் அதைத்தான் சொல்கின்றது, அன்னை விஷ்ணுவின் மார்பில் இருந்து வெளிபட்டாள் என்பது அவளின் அவதார குறிப்பு. “ஸஹஸ்ர பாஹும் புருஷம் புராணம்சயாநம் அப்தௌ லலிதா […]

சப்த கன்னியர் – 03

மகேஸ்வரி – இரண்டாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினை காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தபட்டதா? யாரோ இடைசெருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களை காணலாம் சப்த கன்னியர் வழிபாடு இங்கு கால காலமாக உண்டு, சிறிய கோவில்களின் தெய்வமாக கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டை சொல்கின்றது “மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்வேழம் என்ற கொடி ஏழுடைச்சோதி மென் […]

சப்த கன்னியர் – 04

கௌமாரி தேவி – மூன்றாம் கன்னிதெய்வம் கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல், அவ்வகையில் இந்த கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினை குறிப்பவள். “கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” என குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகபெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதை சொல்கின்றார். சப்த கன்னியரில் முன்றாம் தேவியான இந்த அன்னை முருகபெருமானின் சக்தி, அந்த ஸ்கந்தனின் இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி. அவள் முருகனின் அம்சம் […]