பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொங்கலும் உழவனும்

பொங்கல் காலத்தில் உழவன் சூத்திரன் அவனை ஆரிய பாசிசம் அடக்கி ஒடுக்கி வைத்தது, அவனுக்கு பூனூல் இல்லை அவனுக்கு வேதமில்லை அவனுக்கு எதுவுமில்லை , அப்படியான ஜாதி கொடுமைகளை இந்துமதமும் வைதீக ஆரிய பாசிசமும் புகுத்தின என சொல்லும் கும்பல் பல உண்டு அவைகள் வழக்கம்போல் சூத்திரன் உழவன் என பொங்கி கொண்டிருக்கின்றன‌ உண்மையில் ஏன் உழவனுக்கு பூனூல் இல்லை, சாஸ்திரமில்லை அவனுக்கு வேதங்களும் யாகமும் அவசியமில்லை என்றால் அவனுக்கு இச்சமூகம் கொடுத்த உயர்ந்த இடம் அப்படி […]

அனுமனும் தென்முனையும்

அனுமனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தென்முனை நினைவுக்கு வராமல் போகமுடியாது, ராமாயணமும் ராமகாதையும் அனுமனின் நினைவுகளும் தென்முனையோடு முழுக்க கலந்தவை. ஒரு வகையில் ராமாயணத்தின் திருப்பமே அங்குதான் ஆரம்பமாகின்றது, அதற்கான சாட்சிகள் அங்கு ஏராளம் உண்டு. உலகிலே ராமனின் குருவான விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு ஆலயம், ஒரே ஒரு ஆலயம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம், அதாவது கூடங்குள அணுவுலை சமீபமாக விஜயபதி எனும் ஊரில் உண்டு. அங்குதான் தாடகை அட்டகாசம் செய்தாள், அந்த இடத்தில் நடந்த […]

ஹனுமான்

மனு என்பது சமஸ்கிருத வார்த்தை, மனு என்பது மனிதனை குறிக்கும் சொல். கவனித்தால் உலகில் முதன் முதலில் மனிதனை குறிக்கும் சொல்லாக சமஸ்கிருதம் இருந்திருக்கின்றது, அது மனு என அழைத்ததில் இருந்துதான் man, men போன்ற வார்த்தைகளெல்லாம் வந்திருக்கின்றன‌. இன்னும் ஆழமாக நோக்கினால் மனித பண்பு என சொல்லபடும் Humane என்பதன் பொருள் மனித சாயல் என்பதாகும், அதாவது மனுசாயல். Human எனும் வார்த்தையினை கொஞ்சம் கவனித்தால் அது ஹனுமன் (Hanuman) என்பதை அழகாகத் தொடும். ஹனுமன் […]

சேந்தனாரின் திருவாதிரை திருப்பதிகம் “”பல்லாண்டு கூறுதுமே” – ஒன்பதாம் திருமுறை

இன்று பாடவேண்டிய திருப்பதிகமான “பல்லாண்டு கூறுதுமே” எனும் மார்கழி திருவாதிரை வழிபாட்டுகுரிய பாடல் எது என்பதை இதோ தருகின்றோம். இந்நாளில் இதனைப் பாடுதல் நலம். குழுவாக கூட்டமாகக் கூடிப் பாடுதல் இன்னும் நலம். திருச்சிற்றம்பலம் சொல்லித் தொடங்கலாம். “மன்னுக தில்லை வளர்கநம்பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்துபுவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன்அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. மிண்டு மனத்தவர் போமின்கள்மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடிஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் […]

திருவாதிரை – ஆருத்திரா தரிசனம்

ஆருத்திரா தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள். ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

சாஸ்தாவின் அறுபடை வீடு

கார்த்திகை மாதம் என்பது இந்துக்களுக்கு ஞானம் தேடும் மாதம், கூடவே ஆரோக்கியமும் தேடும் மாத, அக்கால கட்டத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் சில பலன்களை கொடுக்கும், அதை நுணுக்கமாக கண்காணித்து பல எற்பாடுகளை செய்தனர் இந்து ஞானியர் கார்த்திகை என்பது ஞானத்தின் தொடக்கம், அதனாலே முருகபெருமான் எனும் ஞானபண்டிதனை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள் அந்த கார்த்திகையில் பல வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள், கார்த்திகையில்தான் சூரசம்ஹாரம் நடக்கும் இன்னும் […]

மார்கழியின் சிறப்பு

இந்துமதம் என்பது விஞ்ஞானமும் ஆன்மீகமும் வானவியலும் மருத்துவமும் கலந்த ஒரு விசேஷமான ஞானமார்க்கம். ஒவ்வொரு காலநிலைக்கும் மனிதரை அது நலம்பெற வைக்கவும் அந்த நலத்தில் இறைவனை தேடவும் பல வழிகளை வைத்திருக்கின்றது, மார்கழி மாதமும் அதில் ஒன்று இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் […]

கந்த சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்

இன்று (13 / 11/ 2023) கந்த சஷ்டி விரதம் தொடங்குகின்றது, இந்துக்களின் தனிபெரும் அடையாளமாகவும் தமிழரின் தனிபெரும் தெய்வமாகவும் விளங்கும் முருகனுக்கு 6 நாள் நடக்கும் விரதம் இது. இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயபடி தீமை அழியும் பண்டிகையினை கொண்டாட விரதம் அவசியம். அப்படி நவராத்திரி விரதம் போல , தீபாவளிக்கு முந்தைய கேதார கவுரி விரதம் போல சூரசம்ஹாரத்துக்கும் அந்த விரத கடமை உண்டு. முருகனுக்கு ஆறு முகம் என்பது தெரியும், அதற்கு புராண கதையும் […]

ரம்பை திரிதியை

இந்துக்களின் பண்டிகையும் விரதகாலங்களும் ஆயிரமாயிரம் பொருள் கொண்டவை, ஒவ்வொரு மானிடருக்கும் ஏகப்பட்ட போதனைகளை தருபவை. மாந்தர்க்கு போதனைகள் நிரம்ப தரும் அம்மதம், வாழ்வின் ஆதாரமும் உலகை இயக்குபவர்களுமான பெண்களுக்கு ஏகப்பட்ட போதனைகளைத் தந்தது. சாவித்திரி விரதம் போன்ற ஏகப்பட்ட விரதம் மூலம் போதனைகளை சொன்ன அம்மதம், சீதா, திரவுபதி எனப் பலர் மூலமாக பல பாடங்களைச் சொன்ன மதம், பெண்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை தந்தது. புராணங்களில் நடந்ததும் அவதாரங்களில் நடந்ததும் மானிடருக்கு வழிகாட்டவே என்பதை மிக இயல்பாகச் […]

ஸ்ரீம‌ன் நாராயணீயம்

கார்த்திகை மாதம் 28ம் தேதி குருவாயூரில் அரங்கேற்றப்பட்டது. காலம் காலமாக ஒவ்வொரு காலத்திலும் அரும்பெரும் புனிதமான இந்து நூல்களை வழங்கிய இந்துமதம் 15, 16ம் நூற்றாண்டிலும் அற்புதமான நூல்களை, பக்தி வழிபாட்டு பாடல்களை, ஸ்லோகங்களை மக்களுக்கு கொடுத்தது. அக்காலகட்டத்தில் தான் அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி, அருணகிரிநாதரின் அழியா நூல்கள், குமரகுருபரரின் மகா பெரிய பக்தி நூல்களெல்லாம் வந்தன‌. அதே காலகட்டத்தில் கேரளத்தில் உருவான நூல்தான் “ஸ்ரீம‌ன் நாராயணீயம்” கேரளம் பரசுராமரால் உருவாக்கபட்டு மாவலி சக்கரவர்த்தியால் சிறப்புற ஆளபட்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications