தேவி மஹாமித்யம் : 07 / 13 – தூம்ரலோசன வதம்
த்யானம் – “நாகங்களின் தலைவனான நாகராஜனை குடையாகக் கொண்டவளும், தனது கொடி போன்ற மேனியில் விலைமதிப்பற்ற நாகரத்தினங்களாலான நாகாபரணங்களை அணிந்தவளும், சூரிய கதிர்களை போல் ஒளிரும் முக்கண்களை உடையவளும், ஜெபமாலை, அமிர்த கலசம், கபாலம் மற்றும் தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், தலையில் பிறை சந்திரனை சூடியவளும், தர்பையை ஆசனமாக கொண்ட பைரவரின் மடியில் அமர்ந்து காட்சியளிப்பவளுமான பத்மாவதி தாயை நான் தியானிக்கிறேன்” தேவி சும்பனுக்கு கூறிய பதிலை தூதன் சென்று தெரிவித்தான், தேவி தங்களை போருக்கு அழைத்தது […]