நாச்சியார் திருமொழி : 27
நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்… தோழியுடன் நீராட சென்றாள் ஆண்டாள், இப்பொழுதெல்லாம் கண்ணன் வருவதில்லை, அவள் ஆடையினை திருடுகின்றான் எனும் பழியினை அவன் தவிர்த்துவிட்டான், ஆண்டாளுக்கு அவன் வருவதில்லை என்பது சோகம் என்றாலும் வெளிகாட்டவில்லை எப்பொழுதும் கண்ணன் நினைவாக இருந்தவள் நீராடும் பொழுதும் அவன் நினைவினிலே நீராடினாள், சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள், கண்ணன் வருவான் என கண்கள் பூக்க பார்த்து கொண்டிருந்தாள், கரையில் இருந்த ஆடைகள் காணமல் போகாதா? அவனை நோக்கி பாடி […]