அபிராமி அந்தாதி 63
“தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்கூறும் பொருள் குன்றிற் கொட்டும் தறிகுறிக் கும்சமயம்ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே” இப்பாடலை புரிந்துகொள்ளுமுன் ஒரு பின்னணியினை நோக்க வேண்டும் இந்துஸ்தானத்தில் எக்காலமும் சமய சச்சரவுகள் உண்டு, என் மதம் பெரிது என சொல்லும் கூட்டமும் அவர்களால் சில சர்ச்சைகளும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதங்களும் இறைவனை நோக்கி இழுத்து சென்றாலும் யார் பெரியவர் […]